அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல் : மூவர் பலி!!

அபுதாபி விமான நிலையம்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம் : பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!!

சுரேஷ் தர்மகுலசிங்கம்..

கடந்த மாதம் கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த (டிசம்பர் ) மாதம் 17ம் திகதி Dundas – Dixie சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுரேஷ் தர்மகுலசிங்கம், அருகில் உள்ள உணவகத்தில் தேனீர் வாங்கிக் கொண்டு அந்தச் சந்திப்பைக் கடந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் 2010ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, ​​2008-2012 Ford Escape SUV என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.

கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் வாகனத்தின் சாரதி, “பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல்” அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கடந்த மாதம் 24ம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தர்மகுலசிங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி (surveillance video)அல்லது dashcam காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது!!

கைது..

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.01.2022) காலை 8.00 மணியளவில் பல லட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் போதைப்பொருள் எடுத்துச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த பேரூந்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அதில் பணித்த நபர் ஒருவரின் பயணப்பொதியிலிருந்து 6.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றிய 6.5 கிராம் ஹெரோயினையும் சந்தேகநபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2 கிராமிற்கு மேலதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் குற்றம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடந்த காலங்களில் நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை கோர விபத்து : ஒருமாத குழந்தை உட்பட மூவர் பலி!!

கோர விபத்து..

அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருமாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் : நிபுணர் ஒருவரின் தகவல்!!

கொரோனா..

சர்வதேச அளவில் கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். வோஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் வைத்திய கலாநிதி குதுப் மஹ்மூத் (Dr Kutub Mahmoood) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோவிட் ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸாகும். எனவேதான் அது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது. இந்தநிலையில் கோவிட் தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும்.

இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் வெளியாக முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே அதன் பரவலைக் கட்டுப்படுத்த, மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குதுப் மஹ்மூத் கூறியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான நிலையில் இலங்கை : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

ஓமிக்ரோன்..

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் ஓமிக்ரோன் திரிபு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது விரைவாக பரவக்கூடியது. இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், இந்நோய் அதிகளவான மக்களுக்கிடையே பரவி வருகின்து. அதனால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனூடாக இந்த நேரத்தில் மற்றொரு அலை உருவாக சாத்தியம் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது.

கைகளை கழுவுதல், முறையான முகக் கவசம் அணிதல் மற்றும் தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் ஆகியன முக்கியமானவை.

அத்துடன், முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் போது மக்களிடையே காணப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்வதில் இல்லை. தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் மூலம் வெவ்வேறு நோய்கள் உருவாகக் கூடும் என்ற இன்று சமூகத்தில் வதந்திகள் பரவுகின்றன.

அவற்றை நம்பி ஏமாந்து விடாது பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூரு..

பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற 6 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், அவரது மகள் சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த ஒரு லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. லாரி மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமன்வி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, கண்முன்னே உயிரிழந்த தனது மகள் சமன்வியின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமன்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மஞ்சேகவுடா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை முந்திச்செல்ல முயன்ற போது,

எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியதாக லாரி டிரைவர் தெரிவித்து இருந்தார். மேலும், விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்த போலீசார், கைதான லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு மணி நேர மின்வெட்டுக்கு தயாராகுங்கள் : பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

மின்வெட்டு..

நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், மின் வெட்டை எதிர்பார்ப்பதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எதிர்வு கூறுகின்றார்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும், அதனால் நீர் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தல் ஆகிய காரணங்களினால், மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில்,

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவிக்கின்றார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப் பொங்கல்!!

மாட்டுப் பொங்கல்..

விவாசாயிகளுக்கு கைகொடுக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வவுனிழயாவிவ் கோமாதா வழிபாடும், மாட்டுப் பொங்கலும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.

தமிழ் மக்களின் பாராம்பரிய உழவர் திருநாளான தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கோமாதா வழிபாடும் மாட்டுப் பொங்கலும் இடம்பெறுவது வழமை.

விவசாய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமது மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டு பொங்கலும், கோமாதா வழிபாடும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் மாட்டுப் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மாடுகளை குளிக்கவைத்து, மாலை அணிவித்து, வடை மாலை, பொங்கல் என்பவற்றை செய்து மாட்டுக்கு படைத்தும், அதற்கு உணவளித்தும் வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியாவில் 250 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்பு!!

250 கிலோ கஞ்சா..

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் (15.01) வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் கஞ்சா மறைத்து கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. இதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வீடியோ Callல் திருமணம் : போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : சுவாரஸ்ய சம்பவம்!!

சுவாரஸ்ய சம்பவம்..

இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதனால் சிலரது திருமணம் வருடக்கணக்கில் தள்ளி போகின்றது.

இதையடுத்து தற்போது ஆன்லைன் திருமணம் பிரபலமாகி வருகின்றது. அந்த வகையில் கேரளாவில் Video Call மூலம் ஒரு திருமணம் நடந்துள்ளது. நிர்மல் என்பவர் நியூசிலாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கேரளாவில் வசிக்கும் கீர்த்தனா என்பவருடன் 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கீர்த்தனா ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனாவால் இவர்களது திருமணம் மூன்று ஆண்டுகள் தள்ளி சென்றுள்ளது.

இதற்கு மேல் காத்திருந்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த இந்த தம்பதி ஆன்லைனில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் Video Callல் திருமணம் நடந்துள்ளது.

போனை பெண்ணாக நினைத்து தாலி கட்டியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் சாட்சி கையெழுத்திட்டனர். இருவரின் திருமணம் நடந்து முடிந்த பிறகு தம்பதி தங்களது சந்தோஷத்தை ஆனந்த கண்ணீர் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி : நடந்த விபரீதம்!!

கொடைக்கானல்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர்,

சாமிகும்பிடுவதற்காக கோயிலுக்கு வந்த போது அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கோயிலில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,

கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இலங்கை தொடர்பில் கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கை தொடர்பில் கனடா

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில், கனேடிய அரசாங்கம் அந்நாட்டு பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மையமாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும்,மருந்து வகைகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமையானது சுகாதார சேவைகள் உள்ளிட்ட அடிப்படை பொதுச்சேவைகளை வழங்குவதில் நெருக்கடியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட வளங்கள் பாதுகாப்பு சூழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர், எரிபொருள் போன்றவற்றின் கையிருப்பினை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உள்நாட்டு ஊடகங்களை அடிக்கடி கவனிப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்வெட்டு : பெற்றோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள நடவடிக்கை!!

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையினால் மூடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) மீண்டும் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இனி கடன் அடிப்படையில் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியாது என முன்னர் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டிற்கு எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை முன்னர் தெரிவித்திருந்தது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் மற்றும் டீசல் தட்டுப்பாடு, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் நீர்மின் நிலையங்களுடனான நீர்மட்டம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் தினசரி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திலும் அண்மைக்காலமாக மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன. மேலும், மின்வெட்டுக்கான நேர அட்டவணையை மின் வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும்,, நேற்றையதினம் கால அட்டவணையை மீறி சில பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள அதிக்கூடிய வருமானம்!!

அதிவேக நெடுஞ்சாலைகள்…

2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிகூடிய வருமானம் பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டை விட 21 சதவீதம் அதிகூடிய வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 4.5 பில்லியன் ரூபாய் வருமானமும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏனையவற்றின் ஊடாக 4.3 பில்லியன் ரூபாய் வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடயே, 2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 38.6 மில்லியன் வாகனங்கள் பயண நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி!!

இக்கட்டான நேரத்தில் இலங்கை

ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலா பேரவை பெயரிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ (Kimali Fernando)தெரிவித்துள்ளார். “இது ஒரு பெரிய வெற்றி,” என்று அவர் கூறினார்.

இதேவேளை, கொவிட் தொற்றை அடுத்து பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தற்போது தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த மூன்று மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 11 நாட்களில் 31,688 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 22,771 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 44,294 பேரும், டிசம்பரில் 31,688 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.