வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு கந்தசாமி குருக்கள் காலமானார்!!

கந்தசாமி குருக்கள்..

வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01.12.2021) காலமானார். கடந்த வாரம் (24.11) கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்,

அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளை பெற்று வந்தார். 73 வயதான கந்தசாமி குருக்கள் கொவிட் 19 க்கான தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் ஆபத்தான நிலையில் ஒருவார காலமாக சிகிச்சைகளை பெற்று வந்த கந்தசாமி குருக்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சீனப் பெண்ணை பாரம்பரிய முறைப்படி மணந்து கொண்ட தமிழர்!!

சீனப் பெண்..

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீனாவை சேர்ந்த காதலியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் கணேஷ் குமார்.

இவர் அமெரிக்காவில் பணிபுரிகிறார், இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஜிம்பு என்ற பெண்ணுடன் கணேஷ் குமார் காதலில் விழுந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கணேஷ் குமார் குடும்பத்தார் சூழ சென்னை பாலவாக்கத்தில் அவர்களின் திருமணம் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கொரோனா தொற்றால் மணப்பெண் வீட்டார் யாரும் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.

கணவர் கண் முன்னே மனைவி செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35).

இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் இருந்த சோனியா காந்தி, அவரது மகள் ஆகிய 2 பேரையும் காணவில்லை.

இதேபோல் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் ஆகியவையும் மாயமாகி இருந்தது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போ.லீசார் விசாரணை நடத்தினர்.

சுமார் 2 மாதங்களை கடந்த நிலையிலும் மாயமான தாய், மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு மோகன்ராஜ் மதுரை கோர்ட்டில் ஹேபியர் கார்பஸ் மனு தா.க்.க.ல் செ.ய்தார். இதையடுத்து தனிப்படை போ.லீசார் தீ.விர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் காதலனுடன் சோனியா காந்தி இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் கோவாவில் இருப்பதாக கிடைத்து விரைந்து சென்றார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பி வந்தனர்.

இதற்கிடையே டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து சுமார் 68 நாட்களுக்கு பிறகு, க.ள்.ள.க்காதலடன் சோனியா காந்தி, அவரது மகள் ஆகியோரை பிடித்து வந்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வி.சாரணைக்கு பிறகு கணவருடன் சோனியா காந்தி செல்வதாக கூறினார். அதன்படி கணவர் மோகன்ராஜ் உடன் சோனியா காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஒரு மாதத்துக்கு மேல் கணவர், பிள்ளைகளுடன் இருந்த சோனியா காந்திக்கு செல்போன் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறி உள்ளார்.

அவரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். உடனே பக்கத்து வீட்டில் போன் வாங்கி க.ள்.ள.க்.காதலனை வந்து அழைத்து செல்லுமாறு கூறி உள்ளார். குறிப்பிட்ட இடத்தில் க.ள்.ள.க்.காதலன் மனோஜ் தயார் நிலையில் இருந்துள்ளார்.

உடனே சோனியா காந்தி அவரது புல்லட்டில் ஏறி பறந்து விட்டாராம். இதையடுத்து மோகன்ராஜ் மீண்டும் கா.வல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

தனது மனைவி 2 பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாள். 12 பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்துடன் அவளை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

ஆகவே மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அழுது புலம்பி உள்ளார். போ.லீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். மோகன்ராஜியின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தான் மனோஜ். அன்பாக பழகி மனைவியை அபகரித்து சென்று விட்டார்.

அவரது பிடியில் இருந்த மனைவியை ரூ.10 லட்சம் செலவு செய்து மீட்டு வந்தேன். 2 மாதம் கூட ஆகவில்லை. மீண்டும் மனோஜ் அழைத்து சென்று விட்டார். ஆகவே அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தாருங்கள் என்று மோகன்ராஜ் காவல் நிலையத்தில் அ.ழுது புலம்பியுள்ளார்.

கார் விபத்தில் உயிரிழந்த மொடல் அழகிகளுக்கு வந்த கொலை மிரட்டல் : அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

கார் விபத்தில்..

இந்தியாவில் மிஸ் கேரள அழகிகள் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்.

இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார். அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆன்சி மற்றும் அஞ்சனாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாடல் அழகிகளின் காரை பின் தொடர்ந்த ஆடி கார் மர்ம நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

அவரின் பெயர் சைஜு தங்கச்சன் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், விருந்தில் பங்கேற்ற இவர் அந்த இளம் பெண்கள் இருவருக்கும் போதைப்பொருட்களை கொடுத்துள்ளார்.

அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டு இரண்டு அழகிகளும் காரில் சென்று விட்டனர். இதனால் கடுப்பான தங்கச்சன் அவர்களை காரில் பின் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தவறான நோக்கில் பெண்களை பின் தொடர்தல் மற்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சைஜு தங்கச்சனை கைது செய்தனர்.

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் மீண்டும் இரு வான் கதவுகள் திறப்பு!!

பாவற்குளம்..

வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் இரு வான் கதவுகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த வாரம் பெய்து வந்த கனமழையானது குறைவடைந்துள்ள போதும், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனாலும், தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருவதனாலும் பாவற்குளத்திற்கான நீர்வரத்து மீள அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் அரை அடி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இரு வான் கதவுகளும் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இரவு வேளை திறக்கபடும். குளத்தின் நீர் கொள்ளளவை பேணும் வகையில் குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. எனினும் நீர் வழிந்தோடும் பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் 10 பேர் எயிடஸ் நோயுடன் சமூகத்தில் நடமாடி வருகின்றனர் : தொற்றாளர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு!!

எயிடஸ்..

வவுனியாவில் 10 பேர் எயிட்ஸ் தொற்றுடன் சமூகத்தில் நடமாடி வருவதுடன், 29 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று (30.11.2021) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது. இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபட இருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 4142 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகள் இன்றி நோய்தொற்றுடன் 3700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டின் காலாண்டுவரை 29 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் இது வரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளார். அவர்களில் 16 பேர் ஆண்கள். அவர்களில் 12 பேர் மரணமடைந்துள்ளதுடன், வெளிநாடு சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இந்த வருடம் வவுனியாவில் மரணத்தை தழுவியிருந்தார்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கி வருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்த முடியும்.

எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல், நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல், ஒரு பால் உறவு, தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய் பரவுகிறது.

இலங்கையில் தற்போது குருதி மாற்றங்களின் போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியாவை பொறுத்தவரை 15 வயது தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது.

இங்கு நோய்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக விபச்சாரம் காணப்படுகின்றது. அத்துடன் 10ற்கும் மேற்ப்பட்டோர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடி வரும்நிலை காணப்படுகின்றது.

வேறு மாவட்டங்களில் இருந்தும் விபசார தொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனர். எனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்கள், இராணுவத்தினர், பொலிசார், மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு தெளிவுபடுத்தல்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

சாதாரணமாக குறித்த நோயை புதிய முறைகளின் அடிப்படையில் 10 நாட்களில் குருதியில் இனம் காணமுடியும். அந்த காலப்பகுதி என்பது எமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

ஏனெனில் அந்த காலத்திற்குள் மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதால் பலருக்கு நோய்தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது.

எச்.ஐ.வி வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் அது எயிட்ஸ் நோயாக மாறுவதற்கு 8 தொடக்கம் 10 வருடங்கள் எடுக்கிறது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது.

குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்க முடியும். ஒரு தடவையாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களாக அனுமதிக்கபடும் சிலருக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. தாமாகவும் சிலர் வருகைதந்து பரிசோதனையை மேற்கொள்கின்றனர். எனினும் அது குறைவாக காணப்படுகின்றது.

எனவே வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். அத்துடன் சுயமாக வீட்டிலிருந்து பரிசோதனை செய்யும் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் 200 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் ஏற்பட்ட கதி!!

ஒரு மாதத்திற்கு பின்னர்..

வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்டிருந்த இளைஞரை (கணவன்) நேற்று (29.11) வவுனியா பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன் கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தாங்கி விட்டு மனைவியை கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார். இது தொர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும தனது மனைவியை இதுவரை பொலிசார் மீட்டுத் தரவில்லை எனவும் பொலிசார் பக்கச் சார்பாகவும் அசமந்தமாகவும் செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த இளைஞன்,

கடந்த (27.10.2021) வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூன்று மணிநேர போராட்டத்தினையடுத்து பொலிசாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கு தொலைதொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை கீழே இறக்கினர்.

இந்நிலையில் தொலைத்தொடர்பு கோபுர அதி உயர் வலையத்தினுள் சென்றமை , தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி அதனை சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இளைஞன் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நேற்றையதினம் (29.11.2021) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுமையாக வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபா..

2021ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கையின் ரூபாய் பெறுமதி இழந்துள்ளது.

இதனடிப்படையில், ஸ்ட்ரேலிங் பவுணுக்கு நிகராக 6.3 வீதமாகவும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகராக 3.1 வீதமாகவும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.3 வீதமாகவும்,

யுரோவுக்கு நிகராக 0.9 வீதமாகவும் இலங்கையின் ரூபாய் பெறுமதி இழந்துள்ளது. இதனை தவிர ஜப்பான் யென்னுக்கு நிகராக இலங்கையின் ரூபாயின் பெறுமதியான 1.9 வீதமாக வலுவடைந்துள்ளது.

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடுகள்!!

சீரற்ற காலநிலை…

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருவதாக உதவி மாவட்ட செயலாளர் மகிந்தன் சபரிஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 63 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேரும் பாதிப்படைந்திருந்தனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்த நிலையில் இழப்பீட்டு கொடுப்பனவாக 2 இலட்சத்து 50,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்ட கொடுப்பனவாக 25,000 ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக பகுதியளவில் சேதமடைந்த 7 வீடுகளுக்குமான இழப்பீட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் முதல் கட்ட இழப்பீடாக 10,000 ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளுக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட மிகுதி இழப்பீட்டுத் தொகையும் விரைவில் வழங்கப்படும்.

மேலும், மழையினால் பாதிப்படைந்த 63 குடும்பங்களுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரண உதவித் திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு!!

முன்னாள் அரசியல் கைதி..

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று இன்று (29.11) வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) எதிர்வரும் முதலாம் திகதி காலை 9.30 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டிடம் நாரன்பிட்ட முகவரியில் 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் காதலால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!!

பொள்ளாச்சி..

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி, இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆ.யுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த இ.ள.ம்பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்கும் போது இருவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு பின்பு அந்தப் பெ.ண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதையறிந்த காவலர் நேசமணி அந்தப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

உனக்கு திருமணம் ஆனாலும் நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என்று மி.ர.ட்.டியதாக கூறப்படுகிறது. மேலும் காதலிக்கும் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட பெ.ண் அ.தி.ர்.ச்.சியடைந்துள்ளார்.

இதனையடுத்து இ.ள.ம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் கா.வல் நிலையத்தில் பு.கார் கொ.டுத்தார். பு.காரின் அடிப்படையில் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்த போ.லீ.சா.ர் தனிப்படை அமைத்து சென்னையில் இருந்த நேசமணியை கை.து செ.ய்.து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.

பின்னர் கா.வலர் நேசமணி மீது பெ.ண் வ.ன்.கொ.டு.மை ச.ட்டம் மற்றும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப ச.ட்.டத்தின் கீழ் வ.ழக்கு பதிவு செ.ய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சி.றை.யில் அடைத்தனர்.

நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது!!

மின்தடை..

நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், பெரும்பாலான பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இட்லிக்குள் இறந்து கிடந்த முழுத் தவளை : வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இட்லிக்குள்..

இந்தியாவில் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வாங்கி சென்ற இட்லியில் முழு தவளை இறந்து கிடந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாடாகுடி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை 8 மணிக்கு முருகேசன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இட்லி வாங்க சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் இருந்து இட்லிகளை பார்சலில் வாங்கிச் சென்றுள்ளார்.

பார்சலை நோயாளி பிரித்து இட்லியை சாப்பிட முயன்றபோது இட்லிக்குள் தவளை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அந்த ஹோட்டலுக்கு பார்சலை எடுத்துக்கொண்டு ஹோட்டல் உரிமையாளரிடம் முருகேசன் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர்கள் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை அவர்கள் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது பயங்கர வைரலாக பரவி வருகின்றது.

ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்தவர் ஸ்தலத்திலேயே பலி!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஊழியர்கள் தங்கியிருந்த ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (29.11.2021) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த (47 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பியதர்ஷன ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் : மீறினால் சட்ட நடவடிக்கை!!

டெங்கு..

வவுனியா நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் நகர் வாழ் மக்களுக்கு சுகாதார பிரிவினர் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் டெங்கு தொற்று தற்போது அதிகரித்து வருகின்றமையினால் வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில்,

டெங்கு பரவும் இடங்கள் காணப்பட்டால் அதனை உடனடியாக அகற்றுவதுடன் வீடு அல்லது வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவுள்ள வடிகான்களில் நீர் தேங்காத வண்ணம் பராமரித்தல் அவசியமாகும்.

தற்போது மாவட்டத்தில் நகரப்புறங்களில் டெங்கு நோயின் தொற்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. அதன் காரணமாக நகரபுறங்களில் வசிப்பவர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக டெங்கு காணப்படும் இடங்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

குறித்த மூன்று தினங்களில் பின்னர் சுகாதார பிரிவினரினால் மேற்பார்வைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் டெங்கு பெருகும் அபாயம் காணப்படும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித மன்னிப்பும் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு வெடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் : தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்!!

வெலிகந்த பிரதேசத்தில்..

வெலிகந்த பிரதேசத்தில் அண்மையில் தீ பற்றி எரிந்தமையினால் உயிரிந்ததாக கூறப்படும் பெண்ணின் தந்தை பல விடயங்களை ஊடகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

திம்புலாகல, பெலட்டிய பகுதியை சேர்ந்த 51 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் தந்தை, மகளின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் வெலிகந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தை கருத்து வெளியிடுகையில், “மகள் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். எனினும் அடுப்பு பற்றாமையினால் தீப்பெட்டியை தேடி தீப்பற்றற வைத்துள்ளார். அதன் பின்னர் வீடு தீப்பற்றியுள்ளது. அவ்வளவே எனக்கு தெரியும்.

முதலில் வெலிகந்த வைத்தியசாலைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அதற்கு பின்னர் பொலன்னறுவைக்கு அனுப்பி வைத்தார்கள். பொலன்னறுவை வைத்தியசாலையிலேயே மகளை பார்த்தேன். கேஸ் அடுப்பில் தீப்பற்றிவிட்டது அப்பா என்று மாத்திரமே மகள் கூறினார்.

எனது மகளின் முகம் முழுவதுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு அடுப்பு எரியாமையினால் தீக்குச்சியில் பற்ற வைக்க முயற்சித்து சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்று பொலிஸ் அதிகாரியிடம் வினவிய போது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.

எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது உடலில் தீ வைத்துக் கொண்டமையினாலேயே மரணம் ஏற்பட்டதாகவும், எரிவாயு கசிவினால் இந்த மரணம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.