வவுனியா நகரில் பிரபல நகை கடை ஒன்றில் நகை கொள்வனவு செய்வது போல் திருடிய பெண் கைது!!

திருட்டு..

வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் நகை திருடிய பெண் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (28.11) கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பசார் வீதியில் உள்ள பிரபல நகை ஒன்றில் வியாபார நேரத்தில் 4 பவுண் சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளமை தொடர்பில் அதன் உரிமையாளரால் கடந்த 11 ஆம் திகதி வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த நகை கடைக்கு சென்று அங்குள்ள சிசீடிவி வீடியோவை பார்வையிட்டதுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நகைக் கடையில் நகை கொள்வனவு செய்வதற்கு சென்ற பெண் போல் சென்ற ஒருவர் நகைகளை பார்வையிட்ட போது 4 பவுண் நகை ஒன்றை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவை பகுதியில் வசிக்கும் 31 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 4 பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் பரிதாபமாக பலியான இளம் பெண்!!

இளம் பெண்..

சிலாபம் – முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வேம்பு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

முந்தல் கோயில் சந்தி வில்பெத்த பகுதியை சேர்ந்த 24 வயதான குணரத்ன அபேசிங்க முதியன்சலாகே அஞ்சலி ருவன்திமா பியுமந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யுவதி தனது சகோதரன் மற்றும் தாயாருடன் நுவரெலியா பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுவதியின் வீட்டுக்கு மிக அருகில் கோயில் சந்தியில் இந்த விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டியை யுவதி சகோதரர் ஓட்டியுள்ளார்.
அவருக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேம்பு மரத்தில் மோதியுள்ளது.

விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யுவதியின் சகோதரரும் தாயும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த யுவதி வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் யுவதியும் சகோதரரும் தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!!

பிவிருத்தி உத்தியோகத்தர்கள்..

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29.11.2021) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட செயலக பிரிவில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற கூற்றை விளக்கிக்கொள், அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய வயதினை உயர்த்தாதே, தங்களால் நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் உத்தியோகத்தர்கள் நாங்கள் நாட்டிற்கு சுமையா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆறு வயது சிறுவனை கடத்திய புது மண தம்பதிகள் : விசாரணையில் சொன்ன காரணம்!!

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் ஷாலு சிங் என்ற 20 வயதான பெண், 21 வயதான விபின் ஹரிலால் அக்ரஹாரி என்பவரை தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்டார்.

அவர்களின் திருமணம் முடிந்த உடனேயே, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெ.ண்ணை கணவரிடமிருந்து பிரித்து நவி மும்பையில் உள்ள அவரது மாமா வினய் சிங் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

இதனால் கோ.பமுற்ற அந்த புது மண தம்பதிகள் தங்களை பிரித்தவர்களை பழி வாங்க ஒரு திட்டம் தீட்டினர். அதன் படி அந்த பெண்ணின் உறவினர் வினய் சிங்கின் ஆறு வயதான மகனை நவம்பர் 22ம் தேதி அந்த பெ.ண்னும் அவரின் கணவரும் க.ட.த்.தி சென்று விட்டனர்.

அதன் பிறகு பன்வெல் பகுதியைச் சேர்ந்த 39 வயதான வினய் சிங், கந்தேஷ்வர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் மற்றும் மருமகள் க.ட.த்.தப்பட்டது குறித்து பு.கா.ர் அளித்தார்.

அதன் பிறகு அந்த விபின் அந்த சிங்கிற்கு போன் செ.ய்து அவரின் மகனையும் மருமகளையும் விடுவிக்க 10 லட்ச ரூபாய் பணம் கேட்டார் .அதனால் அந்த நபர் பணத்தோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு செல்லும்போது ஒளிந்திருந்த போலீசார் அந்த சிறுவனை மீட்டனர்.

பின்னர் அந்த விபினை கை.து செ.ய்து விசாரித்த போது தாங்கள் இருவரும் சேர்ந்து செ.ய்த திட்டம் இது என்றதும் போ.லீ.சார் அந்த புது மண மக்களை கை.து செ.ய்.தனர்.

திருமணமான ஒரு வருடத்தில் இளம் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி பெயர் அபிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது.

இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பி.ர.ச்.சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிதா தன்னுடைய ஆனத்தூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவர் தட்சணாமூர்த்தி வீட்டிற்கு மறுபடியும் வந்துள்ளார். ஆனால், நேற்று மாலை அபிதா தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக, தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், அபிதா வீட்டிற்கு தகவல் தந்துள்ளனர்.

புகார் கணவர் வீட்டிற்கு போய் ஒரே நாளில் மகள் த.ற்.கொ.லை என்ற செய்தியை கேட்டதும், அபிதா குடும்பத்தினர் அ.தி.ர்ச்சி அடைந்தனர். அ.ல.றி.ய.டித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்று மகளின் ச.ட.ல.த்தை பார்த்து க.தறி க.தறி அழுதனர்.

பின்னர் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்களின் மகள் ம.ர.ணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணம், தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.படுத்தியதுதான் என்றும் அபிதாவின் பெற்றோர் பு.கா.ர் கொ.டு.த்தனர்.

வரதட்சணை திருமணம் ஆனதில் இருந்தே அபிதாவுக்கு வரதட்சணை கொ.டு.மைதான் நடந்ததாம். கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா,

கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் இவர்கள் எல்லாருமே வரதட்சணை கேட்டு அபிதாவை டார்ச்சர் செ.ய்தனர் என்று அந்த புகாரில் அபிதாவின் பெற்றோர் தெரிவித்ததன் பேரில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணையில் இ.றங்கினர். அபிதாவின் ச.ட.ல.த்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்யாணமாகி ஒருவருடம்தான் ஆகிறது என்பதால், கோட்டாட்சியர் வி.சாரணைக்காக வைக்கப்பட நேர்ந்தது. ஆனால், கோட்டாட்சியர் அமித் அங்கு வருவதற்கு காலதாமதம் ஆனதால், பெண்ணின் ச.டலம் நேற்றெல்லாம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படாமல், அந்த மார்ச்சுவரியிலேயே வைக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல் இதனால் ஆ.த்.திரமடைந்த அபிதாவின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திண்டிவனம் கோட்டாட்சியர் அமீத், செஞ்சி அரசு மருத்துவமனை பி.ணவறையில் வைக்கப்பட்டிருந்த அபிதாவின் உடலை மருத்துவக் குழுவினர்களுடன் ஆய்வு செ.ய்து வி.சாரணை மேற்கொண்டார். பின்னர் அபிதாவின் ச.ட.லம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதியில் தட்சிணாமூர்த்தியை போ.லீ.சார் கைது செ.ய்.துள்ளனர். த.ற்.கொ.லை.க்கு தூ.ண்டியதாகவும் அவர் மீது வ.ழ.க்.குப் பதிவு செய்தனர். இப்போது தட்சிணாமூர்த்தி ஜெயிலில் உள்ளார்.

மரண அறிவித்தல் : குமாரசிங்கம் நாகேஸ்வரன்!!

நெடுங்கரைச்சேனையை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் இன்று (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது வவுனியா பண்டாரிக்குளம் இல்லத்தில் நாளை (29.11) மதியம் 02.00 மணிக்கு இடம்பெற்று தகன கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
074 – 0277481
077 – 340 7253

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இலங்கைக்குள் வரும் ஆபத்து!!

ஒமிக்ரோன்..

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தென் ஆபிரிக்கா பிராந்தியம் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் என்ற கோவிட் வைரஸ் திரிபு இலங்கைக்குள் பரவும் ஆபத்து அதிகம் இருக்கின்றது.

இந்த ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்றால், வசந்தகாலம் முடிந்து போகும். இந்த புதிய வைரஸ் திரிபு மீண்டும், மீண்டும் தொற்றக் கூடியது என்பது மாத்திரமல்ல, சகல தடுப்பூசிகளையும் மீறி உடலில் தொற்றக் கூடிய வைரஸ் திரிபு.

இந்த வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவினால், அனைவரது வசந்தகாலமும் முடிந்து விடும். நாட்டுக்குள் வருவோருக்கு கோவிட் பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சு வழிக்காட்டல்களை வெளியிட்டுள்ளது.

அதனை உடனடியாக நிறுத்தி விட்டு, பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றதால், இலங்கை இம்முறை ஓய்ந்து விடும் எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலும் வெடித்து சிதறிய சிலிண்டர் : குழப்பத்தில் மக்கள்!!

சிலிண்டர்..

யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கந்தரோடைப் பிரதேசத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை, பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர்ச் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியிலிருந்தமையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

அடுத்தடுத்து நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பெரும்பாலானோர் எரிவாயு அடுப்புக்களை புறக்கணிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மரண அறிவித்தல் : குமாரசிங்கம் நாகேஸ்வரன்!!

நெடுங்கரைச்சேனையை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் இன்று (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது வவுனியா பண்டாரிக்குளம் இல்லத்தில் நாளை (29.11) மதியம் 02.00 மணிக்கு இடம்பெற்று தகன கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
074 – 0277481
077 – 340 7253

ஏழைகளுக்கு அடிமேல் அடி : உயரும் விலைகள், நீளும் தட்டுப்பாட்டுப் பட்டியல்!!

உயரும் விலைகள்..

நேற்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையினை 17 ரூபாவினால் அதிகரிக்கக் கோதுமை மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி இன்று முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று இரவு கூடிய போது கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்திருந்தனர்.

அந்தவகையில் , 450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ,கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பரோட்டா, ரோல்ஸ், மரக்கறி ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்மா, எரிவாயு, மரக்கறிகளுக்குச் சந்தையில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த பட்டியலில் தற்போது கோதுமை மாவும் இணைந்துள்ளது.

கொத்து ரொட்டி, பாணின் விலை 10 ரூபா அதிகரிப்பு!!

விலை அதிகரிப்பு..

இலங்கையில் கொத்துரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கும் அதிகரிக்கப்படவுள்ளது. நாளை திங்கட்கிழமை முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி கொத்து ரொட்டி 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளான முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் போன்றவற்றின் விலை 5ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன. இதேவேளை பாணின் விலையும் இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.  இலங்கையி்ல் ஏற்கனவே பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூசை தினமும் விழாவும்!!

ஆறுமுகநாவலரின் குருபூசை..

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூசை தினத்தினை இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களமும் வவுனியா குட்சைட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து நடாத்திருந்தனர்.

குறித்த நிகழ்வு ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மண்படத்தில் இன்று (27.11) காலை ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு நா.பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட அந்தன ஒன்றிய தலைவர் முத்து ஜெயந்திநாத குருக்கள் முன்னிலையில் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் அருந்ததி இரவீந்திரன் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி,

வரவேற்புரையினை வவுனியா நகரம் மற்றும் வடக்கு இந்து காலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா நடாத்தியதுடன் தலைமையுரையினை ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு நா.பிரபாகரக் குருக்கள் நடாத்தியிருந்தார்.

அத்துடன் சிறப்புரைகளை தமிழ்மணி அகளங்கன் மற்றும் வவுனியா செட்டிக்குளம் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் நடாத்திருந்தனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சு , நடனம் என்பனவும் இடம்பெற்றிருந்ததுடன் நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள் , ஆலய குருக்கள்கள் , சமய ஆர்வளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வளைக்காப்பு நிகழ்வில் மனைவியின் சகோதாரனால் நேர்ந்த பயங்கரம் : தெறித்து ஓடிய உறவினர்கள்!!

கடலூர்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய நெய்வேலியை சேர்ந்தவர் கர்ணன். இவர் வேறு சாதியை சேர்ந்த கவுசிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசாரின் அறிவுறுத்தலின் படி காதல் ஜோடி விருத்தாச்சலம் பெரியார் நகரின் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தினர். ஒரு வருடம் கடந்த நிலையில் கர்ணனின் காதல் மனவி கவுசிகா கர்ப்பமானதால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை சொந்த ஊரில் வைத்து நடந்த கர்ணன் முடிவு செய்தார்.

அதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் பெண்ணின் சகோதாரர் வினோத்தின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழ் பழைய நெய்வேலியில் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, அங்கு வந்த வினோத், தனது தங்கையை காதலித்து தங்களை மீறி வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற ஆத்திரத்தில், ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்றிருக்கும் தனது பெயரை வளைகாப்பு அழைப்பிதழில் எப்படி போடலாம்? என்று கேட்டு கர்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கர்ணனையும், கவுசிகாவையும் தாக்க முயன்றுள்ளார்.

இதனை பார்த்த கர்ணனின் நண்பர் சிலம்பரசன், குறுக்கே பாய்ந்து வினோத்தை தடுக்க முயன்றுள்ளார் அப்போது சிலம்பரசனுக்கு கத்தி குத்து விழுந்தது. வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். தகவல் அரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கத்தியுடன் தப்பிச்சென்ற வினோத்தை கைது செய்து , கத்தியையும் கைப்பற்றினர்.

தனது தங்கை வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததில் இருந்து கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், தன்னை மேலும் வெறுப்பேற்றும் விதமாக தனது தங்கைக்கு உள்ளூரில் வைத்தே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியதோடு,

அதில் பேச்சுவார்த்தையில்லாத தனது பெயரை அச்சிட்டு வீடு வீடாக கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தா.க்கியதாக வினோத் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு!!

உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்களின் உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு காணப்படுவதாக வைத்தியசாலை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் குற்றச்சாட்டினை முன்வைத்து உரிய அதிகாரிகளுக்கு மகஞர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஞரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாதிய உத்தியோகத்தர்களுக்கு உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்து.

மேற்படி இடமாற்றம் தொடர்பில் தாதிய சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த முறையற்ற விடுதி சுழற்சி தொடர்பான முறையீட்டுக்கு அமைவாக வைத்தியசாலை பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் விடுதி சுழற்சிக்காக ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அக்குழுவில் பிரதி பணிப்பாளர், பிரதம தாதிய பரிபாலகர், தாதியபரிபாலகர் விடுதி சகோதரி மற்றும் நிர்வாக அதிகாரி போன்றோர் உள்ளடக்கப்பட்டு விடுதி சுழற்சியானது சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டு,

அறிவிப்புபலகையில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி மேற்கொள்ளப்பட்ட விடுதி சுழற்சி உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அவ்வாறு இருப்பினும் இன்னும் சில தாதியர்கள் முன்னறிவிப்பின்றி தாதிய பரிபாலகரினால் விடுதி சுழற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முறையற்ற செயலை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என குறிப்படப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய மகஞர்கள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை செயலாளர் மற்றும் பணிப்பாளர் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வற்புறுத்தியதால் நடந்த திருமணம் : 2 ஆம் நாளே மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

மதுரை..

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் சோளவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும், அதனால் கிளாடிஸ்ராணி கர்ப்பமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சில நாட்களாகவே காதலன் ஜோதிமணி, காதலியிடம் சரியாக பேசாமலும் அவரை திருமணம் செய்ய மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கிளாடிஸ்ராணியில் கர்ப்பம் குறித்து வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஜோதிமணியை மிரட்டியுள்ளனர்.

இதனால் வேறுவழியின்றி காதலித்த பெண்ணான கிளாடிஸ்ராணியை ஜோதிமணி திருமணம் செ.ய்.து கொ.ண்டார். பின்னர் திருமணமான 2-வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொ.ல்.ல.ப்பட்ட நிலையில் முட்புதரில் ச.டலமாக கிடந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இ.றந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கணவருக்கு விருப்பமின்றி கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சொல்லபடும்நிலையில், அவர் மேல் சந்தே.கமடைந்த போலீசார், ஜோதிமணியை விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

தன்னுடைய விருப்பம் இல்லாமல் தனக்கு கிளாடிஸ்ராணியை கட்டாய திருமணம் செ.ய்து வைத்த விரத்தில் தான் மனைவியை கொ.ன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜ.ர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் ஜோதிமணியின் ஜாமின் மனுவை விசாரித்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் சோழவந்தான் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இன்று கையேழுத்திட காவல்நிலையம் வந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்ம கும்பல் அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.ட து.ர.த்தியுள்ளனர்.

ம.ர்.ம கு.ம்பலின் பிடியில் இருந்து உ.யி.ர்.பி.ழைத்தால் மட்டும் போதும் என்று ஓடிய ஜோதிமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ம.ர்.ம.கு.ம்.பல் தன்னை து.ர.த்தி வருவதாக கூறியுள்ளார்.

போலீசாரும் ம.ர்.மகு.ம்.பலை பி.டிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிசென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை து.ர.த்தி வந்த கு.ம்.பல், தன் ம.னைவியின் வீட்டார்கள் மூலம் அனுப்பட்ட கூ.லி.ப்.ப.டை கு.ம்.பலாக தான் இருக்கும் என போ.லீசார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இச்ச.ம்பவம் அப்பகுதியில் ப.ரப.ர.பபை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

பூஸ்டர் தடுப்பூசி..

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா நகர கிராம அலுவலகத்தில் வைத்தியர் அரங்கன் தலைமையில் இன்று (27.11) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றிருந்ததுடன் பலர் ஆர்வத்துடன் காலை நேரத்திலேயே பங்கேற்றிருந்தனர்.