வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர், தாமாக முன்வந்து பரிசோதனை செய்தோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகளின் ஒரு தொகுதி இன்று இரவு 9 மணிக்கு (12.11) வெளியாகின.

அதில் வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம், பூவரசன்குளம்,

அம்பலாங்கொடவல உள்ளிட்ட பகுதிகளிலேயே மாணவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வயது, இரண்டரை வயது, 5 வயது குழந்தைகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கிகிச்சைக்காக தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

கனடாவில் இளம் தாயொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

கனடாவில்..

கனடாவில் இளம் தாயொருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வழக்கில் குற்றவாளியாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரித்தானியரொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வழக்கில் சில திருப்பங்கள் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இளம் தாயார் மற்றும் 22 மாத குழந்தை ஆகியோர் திடீரென மாயமாகியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரித்தானியாவினை சேர்ந்த 36 வயதான Robert Leeming என்பவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமக்கு தொடர்பில்லை என குற்றவாளி தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்து வந்த நிலையில்,தற்போது தமது காதலியை வாக்குவாதத்தின் போது சுத்தியலால் தாக்கி, பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தமையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், குழந்தைக்கு என்ன ஆனது என்பது தமக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இதற்கமைய,கல்கரியில் இருந்து 70 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இருந்து தாயார் மற்றும் குழந்தை ஆகியோரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!

அமெரிக்கன் ட்ரீம் காா்..

அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின் மிக நீளமான கார் என்று 1986 இல் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கார், 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது. மிகவும் திறமை கொண்ட வடிவமைப்பாளரான ஜே ஓர்பெர்க் Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தான் தொலைக்காட்சி தொடரான ” கினைட்”-ல் பயன்படுத்தப்படும் பிரசித்தக் காரையும் வடிவமைத்தார்.

பல ஹொலிவுட் படங்களில் வரும் நவீன பல கார்களையும் அவா் வடிவமைத்தாா். எனினும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ”அமெரிக்கன் டிரீம் கார்” The American Dream ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு முறையான பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. பராமரிப்பின்மைக் காரணமாக சக்கரங்கள் மற்றும் காரின் ஜன்னல்கள் சேதமடைந்தன.

இந்தநிலையில் பெருமை வாய்ந்த இந்த ”அமெரிக்கன் ட்ரீமை” The American Dream மீட்டெடுக்கும் முயற்சியில் நியூயார்க்கின் ஒரு தொழில்நுட்ப கற்பித்தல் அருங்காட்சியகம் ஈடுபட்டது.

2019 இல் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக மறு சீரமைப்பு பணிகள் தடைப்பட்டன. தற்போது அந்தப்பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கன் டிரீம் காரின் சிறப்பம்சங்கள்: ”அமெரிக்கன் டிரீம் காா்” The American Dream 30.5 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது. 26 சக்கரங்களை கொண்டுள்ள இந்த நீளமான கரை இருபுறமும் இயக்க முடியும் இந்த காரின் முன் மற்றும் பின்புறத்தில் ஒரு ஜோடி வி8 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது நீளமான கார் மட்டுமல்ல, ஆடம்பர சொகுசு வாகனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், குளியல் தொட்டி, மினி-கொல்ப் மைதானம் உட்பட்ட வசதிகள் இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் தொலைபேசி வசதிகள் உள்ளிட்ட இன்னும் பல வசதிகளை உள்ளன.

இந்த கார் சினிமாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. எனினும் தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டொலர் முதல் 200 டொலர் வரையான கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று (12.11) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று (13.11) துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் அப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மக்கள் வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை : பணத்தை உடனடியாக செலுத்துங்கள் : சீன நிறுவனம் அதிரடி!!

சீன நிறுவனம் அதிரடி..

தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao Seawin Biotech Group Company Ltd நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை மக்கள் வங்கி புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த முடியாது என சீன நிறுவனத்தின் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமது நிறுவனம் சீனாவின் பிரதான பசளை நிறுவனத்தின் விலை மனு நடைமுறைகளுக்கு அமைய பசளை தொகையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசளையின் தரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்தால், இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையை அமைய சிக்கலை அதன் ஷரத்திற்கு அமைய நட்பான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எனினும் இதனை அடிப்படையாக கொண்டு பணம் செலுத்துவதை இடைநிறுத்த மக்கள் வங்கிக்கு எந்த உரிமையுமில்லை எனவும் பசளைக்கான பணத்தை மக்கள் வங்கி உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் Qingdao Seawin Biotech Group Company Ltd குறிப்பிட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளத்தில் இராணுவ வாகனம் பொதுமக்களினால் முற்றுகை!!

இராணுவ வாகனம்..

இராணுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இராணுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது.

வவுனியா புகையிரத வீதியூடாக முச்சக்கரவண்டியில் குறித்த பொதுமகன் (முச்சக்கரவண்டியின் சாரதி) வருகை தந்த சமயத்தில் குறித்த முச்சக்கரவண்டி முன்பாக சென்ற இராணுவ வாகனத்தினை முச்சக்கரவண்டி சாரதி முந்தி சென்றுள்ளனர். இதன் போது இராணுவத்தினருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அச் சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் இராணுவ வாகனத்தினை பின் தொடர்ந்து பண்டாரிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்தினை வழிமறித்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமகன் (முச்சக்கரவண்டியின் சாரதி) தெரிவித்தார்.

இராணுவத்தினரின் இச் செயற்பாட்டினை கண்டித்து பண்டாரிக்குளம் பகுதியில் பொதுமக்கள் இராணுவ வாகனத்தினை முற்றுகையிட்டிருந்தனர்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் இராணுவ வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் இராணுவ வாகனத்தினை பொலிஸார் விடுவித்திருந்தனர்.

மேலும் தாம் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மழைநீரில் உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய ரியல் ஹீரோ ராஜேஸ்வரி : யார் இவர்?

ராஜேஸ்வரி..

இறக்கும் தருவாயில் மழைநீரில் கிடந்த இளைஞரை தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி ஒரே நாளில் ரியல் ஹீரோவான ராஜேஸ்வரி குறித்த பல நெகிழ்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே கிடந்த அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவே மக்கள் நினைத்தனர். ]அவர் இரவிலிருந்து அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார்.

தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார். அவரை தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றியுள்ளார். உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரைத் தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன்.

முதலுதவி செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவர் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் ராஜேஸ்வரி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி கே.எச் சாலை அருகே இரவு ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது சாலையில் ஒரு மூதாட்டி பதற்றத்துடன் அழுதபடி இங்கும் அங்கும் திரிவதைப் பார்த்தார். அவரைக் கூப்பிட்டு என்ன பிரச்னை’ என்று கேட்டார்.

சகுந்தலா என்ற அந்தப் பெண்மணி, என் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறாள். தலைப்பிரசவம், பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வழி தெரியவில்லை. உதவிக்கும் யாருமில்லை என்று அழுதிருக்கிறார். ராஜேஸ்வரி உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னார்.

ஷீலாவின் வீடு இருந்தது, நம்மாழ்வார்பேட்டையில் ஆம்புலன்ஸ் வர முடியாத தெரு. உடனடியாக அந்தப்பெண்ணை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றிவந்த ராஜேஸ்வரி, ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸில் ஷீலாவை ஏற்றி அனுப்பிவைத்தார். அந்த இரவிலேயே ஷீலாவுக்கு சுகப்பிரசவம். அழகிய பெண் குழந்தை பிறந்தது. செங்குன்றத்தில் வசித்தவர் 20 வயது சுகன்யா.

அம்மா புற்றுநோயில் இறக்க, அப்பா தற்கொலை செய்துகொள்ள, தனது தங்கை 17 வயது பிரீத்தியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். விழித்திறன் குறைபாடுள்ள சுகன்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை சந்தித்து உதவி கேட்டார்.

ராஜேஸ்வரியும், அவருடன் பணிபுரியும் சக காவலர்களும் நண்பர்களும் இணைந்து சுகன்யாவுக்கு நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

வவுனியா பாவற்குளத்திலிருந்து பெரும்போக பயிர்ச்செய்கைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது!!

பெரும்போக பயிர்ச்செய்கை..

வவுனியா பாவற்குளம் பெரும்போகம் பயிர்ச் செய்கைக்காக நீர் வினியோகம் நேற்று (11.11) ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி எல்.பி.ஈஸ்வரன் தலைமையில் பாவற்குளத்தில் பெரும்போக நெற் செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.

வருடா வருடம் பெரும்போக நெற் செய்கைக்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் இந்த வருடம் 4ஆயிரத்து 134 ஏக்கர் பெரும்போகம் செய்ய விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார்.

பிரதேச நிர்ப்பாசன பிரிவு உதவியாளர் கஜமுகதாசின் ஏற்பாட்டில், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும், பூஜை வழிபாட்டுடனும் சம்பிரதாய பூர்வமாக பெரும் போகத்திற்கான நீர்வினியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட விவசாயதிணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலமான கணவன் கொலை!!

கொழும்பில்..

கொழும்பில் பிரபல சிகை அலங்கார நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம், எலயாபத்து பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அந்த பெண்ணின் சகோதரனுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பெண்ணின் தாய், குறித்த நபர் எங்கள் மகளுடன் வீட்டிற்கு வெளியே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென என்னை காப்பாற்றுங்கள் என மகள் கூச்சலிட்டார்.

உடனடியாக அந்த இடத்திற்கு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். சிறிது நேரத்தின் பின்னர் வெளியே சென்று பார்க்கும் போது சிகை அலங்கார உரிமையாளர் கீழே விழுந்து கிடந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட உயிரிழந்தமை தொடர்பில் சந்தேக நபரான பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பென்ஸ் ரக கார் ஒன்று பரிசாக வழங்கியதன் மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை : 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ!!

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமா்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது அவரால் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர் முன்வைத்த யோசனைகள் இதோ,

1) அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை

2) மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை

3) அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீா்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

4) அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக உயா்த்தப்படுகிறது.

5) அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.

6) முச்சக்கர வண்டிகளுக்கான அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது.

7) ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய திட்டம். இதற்கான 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது

8) புதிய வியாபாரங்களுக்கு 2022 இல் பதிவுக்கட்டணங்கள் அறவிடப்படாது

9) நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஓய்வூதியத் தகுதிக்காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

10) சேதனப்பசைளையை ஊக்குவிக்க கிராமசேவகர் மட்டத்தில் திட்டம் முன்னெடுக்கப்படும்.

11) வெளிநாட்டு முதலீடுகளை அதிகாிக்க, நிபந்தனைகளை தளா்த்துவதற்கு திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்படும்.

12 ) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வோருக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்படும்

13) அரச சேவையாளா்களுக்கான எாிபொருள் 5 லீற்றர்களால் குறைக்கப்படும். மாதாந்த தொலைபேசி கட்டணம் 25வீதத்தினால் குறைக்கப்படும்

14) கொவிட் காரணமாக வருமானத்தை இழந்த முச்சக்கர வண்டி உாிமையாளருக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

15) தனியாா் பேரூந்து உாிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

16) கோவிட் முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு

17) வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 மில்லியன் ஒதுக்கீடு

18) அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 மில்லியன் ஒதுக்க நடவடிக்கை

19) திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1000 மில்லியன் ஒதுக்க எதிர்பார்ப்பு

20) புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்கும் நோக்கம்

21) இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மையமாக மாற்றுவது எமது நோக்கம்

22) ஆடைக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்திய செய்ய நடவடிக்கை

23) மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிவு

24) வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

25) மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

26) சிறைக்கைதிகளின் நலன்களை மேம்படுத்த மேலதிகமாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

27) கா்ப்பிணி தாய்மார்களுக்கு 24 மாதங்களுக்கான போசனை பொதிகளுக்காக மேலதிகமாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

28) அரச சேவையாளா்களுக்கான உந்துருளிகள் வழங்கல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

29) ஆசிாியா்கள், அதிபா்களுக்கான வேதன முரண்பாட்டுக் கொடுப்பனவுகளை ஒரே தடவையில் வழங்குவதற்கு 30,000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

30) அரச சேவைகளில் பணியாற்றும் பட்டதாாிகளுக்கு 2022 முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அவா்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 7600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

31) சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிக்கப்படுகிறது.

32) 2000 மில்லியன் ரூபாவை வருடாந்தம் வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் ஒரு தடவையில் மாத்திரம் 25வீத வாியை செலுத்தவேண்டும்

33) வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வாகன குத்தகை நிறுவனங்களின் பெறுமதிசோ் வாி 15வீதத்தில் இருந்து 18ஆக அதிகாிக்கப்படுகிறது.

34) வெவ்வேறு காரணங்களால் காணாமல் போனவா்களின் குடும்பங்களுக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் உரை

ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.

2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்தின் அதிக செலவு – கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது

சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது.

உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.

வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும்.

வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீட்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.

ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளப்படுத்துகின்றனர்.

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் ஆடைத் தொழிற்சால ஊழியர்கள் 10 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர், தாமாக முன்வந்து பரிசோதனை செய்தோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (11.11) வெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேர் உட்பட மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கிகிச்சைக்காக தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

16 வயது சிறுவனால் நிகழ்ந்த கோர விபத்து : 17 வயது சிறுவன் உயிரிழப்பு!!

விபத்து..

நீர்கொழும்பில் 16 வயதான சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் உயிரிழந்துள்ளார். 16 வயது சிறுவன் ஓட்டிசென்ற சொகுசு கார் பல வாகனங்களில் மோதியதால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரியில் வசிக்கும் 17 வயதுடைய உயர்தர மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது தந்தை வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹாபாகே பிரதேசத்தில் நகை வியாபாரி ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை அவரது மகனே எடுத்துச் சென்றுள்ளதாகவும் விபத்து நடந்த இடத்திற்கு வந்த வர்த்தகர், அந்த வாகனம் தனது மகனால் கொண்டு வரப்பட்டது. என்பது தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் ஒற்றை சொல்லால் ஆத்திரமடைந்த கணவன் செய்த வெறிச்செயல்!!

மதுரை..

மதுரையில் குடும்ப தகரா.று காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் – மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆகிறது.

இதில் கணவர் சிவகுமார் ஓய்வுபெற்ற ரயில்வே சிக்னல் ஆபரேட்டராக உள்ளார். திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையிலும் இருவருக்கும் குழந்தைகள் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் மேரி குட்டி கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மேரி குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ.யிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் இருவருக்கும், 8 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று!!

கொரோனா..

ஆரம்பப் பிரிவுக்களுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வவுனியா மாவட்டத்தில் இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து சுயமாக அவர்கள் முன்வந்து மேற்கொண்ட அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்கள் என்பதுடன் தொற்றுக்குள்ளான மாணவர்கள் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர்.

எனவே, பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சுகாதார நடைமுளைறகளைப் முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

திருமணத்திற்கு முன் மிரட்டிய காதலியால் காதலனுக்கு நேர்ந்த கதி!!

மும்பை..

மும்பையின் கண்டிவிலி பகுதியில் வசிக்கும் 58 வயதான லக்ஷ்மண் கோகரே தனது மகன் அங்கித் கோகரே சார்கோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

அந்த அங்கித் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார் .இந்நிலையில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் உறவுப் பெண்ணான பிரகதி ஜோரைக் காதலித்த வந்தார்.

இந்த காதல் விவகாரம் அந்த அங்கித்தின் தந்தைக்கு தெரியவந்தது.அதனால் அவர் அந்த பெண்ணை காதலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தர், மேலும் அந்த பெண்ணுடன் இருக்கும் காதலை விடுத்து வேறு பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தினார்.

அதனால் அந்த அங்கித் திடீரென்று அந்த பெண்ணை விட்டு விலக ஆரம்பித்தார். இந்த காதலனின் செய்கையால் அந்த பெண் கடும் கோபமுற்று அந்த காதலன் அங்கித்தை மிரட்ட ஆரம்பித்தார்.

தன்னை உடனே கல்யாணம் செய்து கொள்ளவில்லையன்றால் அவரை கற்பழிப்பு புகார் கொடுத்து கம்பி எண்ண வைத்து விடுவதாக மிரட்டினார். இதனால் அந்த அங்கித் கடும் மன வேதனைக்குள்ளானார்.

அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் அந்த அன்கித்தின் தந்தை அந்த பெண் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீ.சார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் ஆசிரியை திடீரென உயிரிழந்தது ஏன்? வெளியான காரணம்!!

இளம் ஆசிரியை..

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு கோரி கடந்த 9ஆம் திகதி மாத்தறை கொட்டபொல தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கலந்து கொண்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட தெனியாய கன்னங்கர ஆரம்ப பாடசாலையின் ஆசிரியரான வருணி கன்னங்கர அசங்கா என்ற 27 வயதுடையவரே உயிரிழந்தார். தெனியாய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்க முன்னரே அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.