வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கும், ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு இன்று (10.11) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணப்பதற்கும் சுகாதரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை இரு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை கைது செ.ய்.த போ.லீ.சார் வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
6 வயது மகனான ஹரி ஹர தீபன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இவர்களது பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இரவு வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டு மாடியில் சிறுவன் ஹரிஹர தீபன் ம.ர்.ம.மா.ன முறையில் க.ழு.த்.த.று.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ன்.
தகவலறிந்து ச.ம்.ப.வ இடத்திற்கு சென்ற நத்தம் போ.லீ.ஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்அடார் இ.ற.ந்.த சி.றுவனின் உ.டலை கை.ப்பற்றி நத்தம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ச.ம்.பவ இ.டத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரடியாக சென்று வி.சா.ர.ணை செ.ய்.தார் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இ.ச்.ச.ம்.பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செ.ய்.து சி.று.வனை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த ம.ர்.ம நபர்களை தே.டி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சி.றுவனின் உறவினரான சந்திரசேகர் மகன் அஜய்ரத்தினம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்பவர் மீது போ.லீ.ஸாருக்கு ச.ந்.தேகம் ஏற்படவே அவரை பி.டி.த்.து வி.சாரணை செ.ய்தனர்.
அப்பொழுது சி.று.வனை கொ.லை செ.ய்.த ஒ.ப்.புக்கொண்ட அஜய் ரத்தினம் சில வாரங்களுக்கு முன்பு கொ.லை செ.ய்.யப்பட்ட சி.றுவனின் அக்காவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அஜய் ரத்தினத்தின் மீது கா.வல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பு.கார் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் ந.டத்திய வி.சாரணையில் சமூக வலைதளங்களில் பரப்பியது அஜய்ரத்தினம் என தெரியவந்தது. அப்பொழுது உறவினர்களின் அஜய் ரத்தினத்தின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக முன் வி.ரோ.த.ம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிஹர தீபனை அஜய்ரத்தினம் கொய்யாக்காய் தருவதாக கூறி அருகில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று இரு கைகளையும் பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
பின்பு எதுவும் தெரியாத போல் அங்கிருந்து சென்று விட்டார். ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து அவரது தாய் சென்று பார்த்தபோது க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கிடப்பதை பார்த்து க.த.றி அ.ழு.தா.ர்.
இதையடுத்து பொதுமக்கள் கா.வ.ல்.து.றை.க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொ.லை செ.ய்.த அஜய்ரத்தினத்தை கை.து செ.ய்.த போ.லீ.சா.ர் மேலும் இ.க்.கொ.லை வ.ழ.க்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போ.லீ.சார் வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை பெட்டிக்கடைக்குள் பெண் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டாா். ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சோ்ந்தவா் கணேசன்(45). இவரது ம.னை.வி இந்திராணி (42).
இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். மகள் மதுரையில் தனியாா் கல்லூரியிலும் மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனா் .
கணவன், ம.னை.வி இருவரும் வீட்டின் அருகே பெட்டிக்கடையில் ப.ல.ச.ர.க்கு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வியாபாரம் செய்து வந்தனா். திங்கள்கிழமை காலையில் இருவரும் கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளனா்.
பின்னா் கணேசன் கடைக்குத் தேவையான ப.ல.சரக்கு பொருள்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றுள்ளாா். இந்திராணி கடையில் இருந்த நிலையில் மா்.ம ந.பா் ஒருவா் கடைக்குள் புகுந்து அவரை க.ழு.த்.தை அ.று.த்.து.க் கொ.லை செ.ய்.து வி.ட்டு தப்பி ஓடி விட்டாா்.
இது தெரியவந்ததும் கணேசன் வந்து, ம.னை.வி இ.ற.ந்து கி.டப்பதைப் பாா்த்து அ.திா்.ச்.சி அ.டை.ந்தாா். தகவலறிந்து வந்த ராஜபாளையம் கா.வல் துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், கா.வல் ஆய்வாளா் மன்னா்மன்னன் ஆகியோா் ச.ட.ல.த்தைக் கைப்பற்றி,
ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உ.ட.ற்.கூ.று ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்திராணி எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டாா் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும்.
அவ்வாறில்லையெனில் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதைத் தவிர சுகாதாரத் தரப்பினருக்கு வேறு மாற்று வழி கிடையாது. இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரத் தரப்பினரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “தற்போதுள்ள நிலைமையை மிகவும் அபாயம் மிக்கதாகவே கருத வேண்டும். தற்போதுள்ள நிலைவரத்தின் உண்மை நிலையை அடுத்து வரும் வாரங்களிலேயே தெளிவாகக் காண முடியும்.
இதன்போது ஏற்படும் அபாயத்திலிருந்து மீண்டு மீண்டும் சுமுகமான நிலைமைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்குக் காணப்படும் ஒரேயொரு வழி சுகாதார விதிமுறைகளை முறையாகப் பேணுவது மாத்திரமேயாகும்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதோடு, நாளாந்தம் இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை சுமார் 500 ஆகவே காணப்பட்டது.
எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் ஏற்பட்ட சிறு அதிகரிப்பும் சிறந்த அறிகுறியல்ல என்பதை நாம் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தோம். அதற்கமையவே தற்போது நாளாந்தம் சுமார் 600 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இது தொடர்பில் சகல தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் பழைய நிலைமையை அடைவது மிகக் கடினமாகும். அவ்வாறானதொரு அபாய நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்று வழி கிடையாது” என்றார்.
நாட்டின் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப் பணம் செலுத்துகைக்கு வழங்கப்பட்ட சலுகைக் கால அவகாசம் எதிர்வரும் 14ம் திகதியுடன் பூர்த்தியாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியிலிருந்து இழைக்கப்பட்ட தவறுகளுக்கான தண்டப் பணம் செலுத்துவதற்கு இம்மாதம் 14ம் திகதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
14ம் திகதிக்குள் தண்டப் பணம் செலுத்தினால் தாமதக் கட்டணங்கள் எதனையும் செலுத்த வேண்டியதில்லை. எதிர்வரும் 14ம் திகதிக்கு பின்னர் தண்டப் பணம் செலுத்தினால் தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
நம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் இழைக்கப்பட்ட தவறுகளுக்கான அபராதத் தொகை வழமை போன்று 14 நாட்கள் தாமதக் கட்டணம் இன்றியும், 28 நாட்களுக்குள் செலுத்தினால் தாமதக் கட்டணத்துடனும் செலுத்த முடியும் எனவும், 28 நாட்கள் கடந்தால் தண்டப் பணம் செலுத்தும் படிவங்கள் பொறுப்பேற்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான காற்று மற்றும் இடி மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்களா விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் தாழமுக்க நிலைமை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் இது இலங்கையின் வடபகுதி கரையோரப் பகுதிகளை பாதிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தாழமுக்க நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணத்தில் 150 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலையிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் சாத்தியம் உண்டு என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
சிங்கபூரில் தமிழர் ஒருவருக்கு நாளைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம் 11 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருடைய மரண தண்டனைக்கு எதிரான இறுதி முயற்சிக்காக இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எனினும், அவர் சிறிது நேரத்தில் நீதிமன்றில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
இது எதிர்பாராத ஒன்று என்று கூறிய நீதிபதி ஆண்ட்ரூ பாங், இந்தச் சூழ்நிலையில் விசாரணையைத் தொடர்வது பொருத்தமாக இருக்காது என்றார். மரண தண்டனையை நாளை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
குற்றவாளிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மரண தண்டனையை அந்த நிலையில் நிறைவேற்றுவது சரியல்ல எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிரான விசாரணை பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது சகோதரனை மீட்க தொடர்ந்தும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாகேந்திரனின் சகோதரி சர்மிளா தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நான் தனியாக இருக்கும் நேரம், என் சகோதரனை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆனால் நாம் தைரியமாக இருக்க வேண்டும், தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் – எதுவும் நடக்கலாம்,” என்று கூறினார்.
2009ம் ஆண்டு, அப்போது 21 வயதான நாகேந்திரன் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஹெராயின் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
12 வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் நாளை தூக்கிலிடப்படவிருந்தார்.
எனினும், நாகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து மலேசிய அதிகாரிகளும் மனித உரிமைக் குழுக்களும் மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர். எவ்வாறாயினும், நாகேந்திரனின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், கார் ஒன்று கால்வாய்க்குள் விழுந்து ஐந்து பேர் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் 5 பேரின் உயிரையும் இளைஞன் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றிலிருந்து, மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுரை, ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அந்த வழியாக நேற்று மாலை லாடனேந்தல் மற்றும் திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மானாமதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்துள்ளது.
அப்போது கார் எதிர்பாரதவிதமாக கால்வாய்க்குள் விழுந்ததால், காரின் உள்ளே இருந்த 5 பேர் உயிருக்கு போராடியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக காருக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.
இதை அங்கிருந்த மக்கள் பலர் காப்பாற்ற முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த முத்துக்கிருஷ்ணன் (ஓட்டுனர்) என்பவர் உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த 5 பேரையும் தனித் தனியாக மீட்டார்.
முத்துகிருஷ்ணனின் துணிச்சலான இந்த செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பாராட்டினர். அதுமட்டுமின்றி அவரின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் ந.சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் கருணாநிதி, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துரைகளும் இடம்பெற்றன.
இதேவேளை, ஞாபகார்த்த சிலை அமைப்புக் குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (09.11) வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளாா்.
28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10.11.2021) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இருந்து பளை நோக்கிப் பயணித்த டொல்பின் ரக வாகனம், கைதடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று (09.11.2021) செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.
தற்போது கன மழை பெய்துவரும் நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் குடை சாய்ந்துள்ளது. வாகனத்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது மழை பெய்துவரும் நிலையில் வாகனங்களில் பயணிப்போர் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து அண்மையில் பயணப்பையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கணவன், மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த பிரதான சந்தேகநபர் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை பிரதான சந்தேகநபரிடமிருந்து, படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உலக்கை, சடலத்தை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் என்பவற்றை மீட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று சிறுமிகளும் வீட்டில் இருந்து வெளியேறியமைக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாமையால் அது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுமிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் 0777691868 இந்த இலகத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு : கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் தந்தை நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த மூன்று சிறுமிகளும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்கள் சம்பந்தமாக எந்த தகவலும் வீட்டுக்கு கிடைக்கவில்லை என தந்தை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், அவர்களின் உறவினர் முறை சகோதரியான சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் மூவரும் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் காலிமுகத் திடல் பகுதிகளில் காணப்பட்டுள்ளதாக அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுமிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் 0777691868 இந்த இலகத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்த சம்பவத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் பியர் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.