வவுனியாவில் திடீரென தீப்பற்றிய கடுகதி புகையிரதம்!!

புகையிரதம்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அணமித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (09.11) பிற்பகல் கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரத நிலையம் வவுனியா, தாண்டிக்குளத்தை அண்மித்த போது புகையிரதத்தின் கொட்பொக்ஸ் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.

இதனை அவதானித்த புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைந்தனர்.

இதனையடுத்து புகையிரதத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணித்தியாலய தாமத்தின் பின் குறித்த புகையிரதம் கொழும்பு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!

சூரன் போர்..

இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

மும்மலப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் நிகழ்வாக சூரன் போர் விளங்குகிறது.

இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்த சட்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போர் இடம்பெறுவது வழமை. அந்தவகையில் இன்று (09.11) செவ்வாய்கிழமை கந்த சட்டி விரத்தின் ஐந்தாம் நாளாகும்.

அந்தவகையில் அந்தணச் சிவாச்சாரியார்கள் புடைசூழ, மங்கள வாத்தியங்கள் முழங்க வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுகாதார விதிமுறைகளுடனும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடனும் ஆலய வளாகத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரர்களுடன் போர் செய்து அவர்களை வதம் செய்து, அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் பாதிப்பு : இயல்நிலை ஸ்தம்பிதம்!!

சீரற்ற காலநிலை..

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மழையின் தாக்கம் காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளத்து நீர்மட்டமும் உயர்வடைந்து வருகின்றது. இதனால் குளங்களின் கீழ் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா வடக்கு பகுதியில் மழை காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதடைந்துள்ளதுடன், 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடந்தும் பெய்து வருதானால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் வீதமும் குறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

பணிப்புறக்கணிப்பு..

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பிரிவினர் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் இன்று (09.11) காலை 7 மணி தொடக்கம் நாளை (10.11) காலை 7 மணிவரை குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள், கதிர்பட இயக்குனர்கள் உள்ளடங்கலாக நான்கு பிரிவினர் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளப் பிரச்சனை, மேலதிக கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துக்கள் பிரிவு என்பவற்றில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவோர் பல்வேறு சிரமங்களையும் எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள அபாயம் : சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

மகா ஓயா பெருக்கெடுத்துள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ,

ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளதாக நீர்பாசன திணைக்களத்தைக் கோடிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

எனவே குறித்த பிரதேசங்களில், மகா ஓயா ஆற்றின் அருகில் வசிப்பவா்கள், தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை களனி, களு கங்கை மற்றும் ஜிங் கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ளவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் தொடரும் கனமழை : பாடசாலைகளுக்கு விடுமுறை : அரசாங்க அதிபர் விசேட அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் (Kanapathipillai Mahesan) அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது. மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது” என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இரவு இரவாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தின் நிர்மாண பணிகள் : அதிரடியாக செயற்பட்ட இளைஞர்கள்!!

சட்டவிரோத கட்டிடத்தில்..

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள முஸ்ஸிம் மையவாடி வளாகத்தில் இரவு இரவாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தில் கட்டுமான பணிகள் இளைஞர்களின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த முஸ்ஸிம் மையவாடி வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வர்த்தக நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

எனினும் அதிகாரிகளின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கட்டிடத்தின் மீள் கட்டுமாண பணிகள் நேற்று முன்தினம் எவ்வித அனுமதியுமின்றி அரசியல் பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனை தடுத்து நிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்த போதிலும் அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அதன் பின்னர் சில இளைஞர்கள் ஒன்றினைந்து 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு மேற்கொண்டதின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கட்டுமாண பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.

அதன் பின்னர் முறைபாட்டினை மேற்கொண்டிருந்த இளைஞர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தினை பெற்றுச் சென்றிருந்தனர்.

இச் சம்பவம் இவ்வாறு இடம்பெற்றிருந்தமையினையடுத்து நேற்றையதினம் வவுனியா நகரசபையினரினால் குறித்த கட்டிடத்தின் நிர்மான பணிகளுக்கு தடையுத்தரவு நோட்டிஸ் ஒட்டப்பட்டது.

விரைவில் மீண்டும் நாட்டை மூட வேண்டிய நிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சுகாதார வழிகாட்டல்..

பொதுமக்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாவிட்டால், பாடசாலைகளையும், நாட்டையும் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 10 முதல் 13 வரையான தரங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பது அவசியமானதாகும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும். அவ்வாறின்றேல், இந்நிலைமை மீண்டும் மோசமாகினால், நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தற்போது மீண்டும் பாடசாலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் அது மாணவர்களைப் பாரிய அளவில் பாதிக்கக்கூடும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது உடை மற்றும் அலங்காரம் தொடர்பில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றார்களோ, அந்தளவுக்கு பொது இடங்களில் சுகாதார விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

தடுப்பூசி..

வவுனியாவில் சுகாதாரத் துறையினருக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னிலை பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

14 வயது சிறுமியை காதலித்த 17 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகம்..

வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கின் மகன் கோகுல்(17). இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 22ஆம் தேதி சிறுமி.யை கூட்டிக் கொண்டு கோகுல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் சென்னையில் சிறுமி இருப்பதை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து சாய்நாதபுரத்தில் வைத்து சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த கோகுல் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கோகுல் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை ராஜகுரு உட்பட 5 பேர் கைது செ.ய்யப்பட்டனர். இந்நிலையில்,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கை முறையாக விசாரிக்காத பாகாயம் போலீஸ் எஸ்.ஐ ரவி அரியலூர் காவல் நிலையத்திற்கும், எஸ்.ஐ பிரபாகரன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் புது மனைவிக்கு நடந்த விபரீதம் : அதிகாலையில் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

மும்பை..

புது மனைவி கை மணிக்கட்டு அ.று.க்கப்பட்டு நி.ர்.வா.ண நிலையில் இ.ற.ந்.து கி.ட.ப்பதை பார்த்து அவர் கணவர் போ.லீ.சில் பு.கா.ர் கொ.டு.த்துள்ளார்.

மும்பையின் விரார் பகுதியில் 24 வயதான பிரியா காம்ப்ளே என்ற பெண் அதே பகுதியில் வசிக்கும் அமர் காம்ப்ளே என்ற நபரை கடந்த அக்டொபர் 21ம் தேதி திருமணம் செ.ய்.து கொண்டார்.

அந்த பெண்னின் கணவர் அமர் காம்ப்ளே அங்குள்ள பாந்த்ராவில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த அமர் கடந்த வெள்ளியன்று தன்னுடைய புது மனைவியை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதை அதே பகுதியில் ஒளிந்திருந்து ஒரு சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .பிறகு மறுநாள் காலையில் வேலைக்கு போய் விட்டு அந்த கணவர் வீட்டினுள் நுழைந்த போது, அங்கே தன்னுடைய புது மனைவி கை மணிக்கட்டு அ.று.க்கப்பட்டு நி.ர்.வாண நிலையில் இ.ற.ந்து கிடப்பதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்தார்.

பின்னர் அந்த கணவர் அ.தி.ர்ச்.சி.யுற்று இது பற்றி அங்குள்ள போ.லீ.சில் பு.கா.ர் தந்தார் .போ.லீ.சா.ர் வழக்கு பதிந்து, அந்த இ.ற.ந்த பெ.ண்ணின் உ.டலை பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் அந்த பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா அல்லது கொ.லை செ.ய்.யப்பட்டு இ.ற.ந்.தாரா என்பது தெரிய வருமென்று போ.லீ.சார் கூறினார்கள். ஆனால் இ.ற.ந்த பெண்ணின் தாய் தன் மகள் கொ.லை செ.ய்.யப்பட்டதாக பு.கா.ர் அளித்துள்ளதால் அந்த கணவர் அ.தி.ர்.ச்.சியில் உ.றை.ந்துள்ளார்.

வீடுகளில் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா..

நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகாித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.

வீட்டு அடிப்படையிலான சிகிச்சை மருத்துவக் குழுவின் தலைமை நிபுணரான வைத்தியா் -மல்காந்தி கல்ஹேனா இதனை தொிவித்துள்ளார். இதுவரை வீடுகளில் பராமரிப்பில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 4000 ஆக உள்ளது.

இது இரண்டு வாரங்களுக்கு முன்னா் சுமார் 3,000 ஆக இருந்தது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். இந்த நிலைமை, சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள், உாியமுறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்

வவுனியா ஒமந்தையில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுப்பு!!

டெங்கு ஒழிப்பு..

வவுனியா ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர் எம்.ரஞ்சன் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தில் கோவிட் -19 தொற்று தற்போது சற்று குறைவடைந்து வருகின்ற இந்நிலையில் டெங்கு நோயின் தாக்கம் மறுபக்கத்தில் அதிகரித்து வருகின்றது.

அதனையடுத்து ஒமந்தை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இடம்பெற்றிருந்தது.

டெங்கு நுளம்பு பெருகின்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அதனை சுத்தம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வாரங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்படும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்க மண்டலம்!!

தாழமுக்க மண்டலம்..

எதிா்வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (BOB) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு பகுதியில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத் தாக்கம் காரணமாக கடல் பகுதியில் கடும் மழை மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றா் வரை திடீரென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்பரப்பில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு இன்று (08) மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில் சந்திப்பு. மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நவம்பர் 08 மற்றும் 9 ஆம் திகதிகளில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பாழடைந்த வீட்டில் சிக்கிய மனித தலை : கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையா?

பாழடைந்த வீட்டில்..

படல்கும்புர – பஸ்ஸர பிரதான வீதியின் அழுபொத்த பிரதேசத்தில் மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 கிலோ மீற்றருக்கு தொலைவில் பாழடைந்த வீட்டில் இருந்து இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – வெல்லவீதி பிரதேசத்தில் பயணப்பையில் தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மற்றும் இந்த மனித தலைக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் படல்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவிக் கொட்டு..

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.11) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மழையுடன் கூடிய காலநிலையானது கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்றது. இதன் காரணமாக வவுனியா, தவசிகுளம் பகுதியில் காணப்பட்ட மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிகள் கூட்டில் இருந்து கலைந்து சென்று அப் பகுதியில் நின்றவர்கள் மீது கொட்டியதில்,

பார்வதி (வயது 66), இரத்தினசிங்கம் (வயது 66), மூர்த்தி (வயது 47) ஆகிய மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக் கூட்டில் இருந்து கலைந்து சென்ற குளவிகள் கொட்டியதில் அப் பகுதியில் நின்ற லயந்தன் (வயது 13) மற்றும் அருண்குமார் (வயது 31) ஆகிய இருவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இருவேறு இடங்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 5 பேரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.