கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்பதை சட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்த முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்பது தொடர்பில் சட்டத்தின் விளக்கத்தை தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருந்ததாக அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
தமது இந்த கோரிக்கைக்கு இன்று சட்டமா அதிபரிடம் இருந்து பதில் கிடைத்துள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பொது இடங்களில் நடமாடுவதை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எவரும் நீதிமன்றத்துக்கு சென்றால் அதனை சவாலுக்கு உட்படுத்த அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 10 ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளும் இன்று (08.11) ஆரம்பிக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 6 மாதங்களின் பின்னர் கல்வி நடவடிக்கை ஆரம்பமான நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள விபுலானந்தாக் கல்லூரியும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 10 தொடக்கம் உயர்தரம் வரைலயிலான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமானது.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் வரவு அதிகரித்து காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மழைகாரணமாக சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவருக்கும் தெரியாத இந்த உடன்படிக்கையை அரசாங்கத்தினால் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால்.
பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும். எவ்வாறிருப்பினும், முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்புக்கு செல்லத் தயாரில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மிதிவண்டி-அரசு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் தனது நிலத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அவரின் மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிசாமி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான ராஜுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி அருகே உடன் பிறந்த சகோதரிக்கு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு, தனக்கு செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட விரக்தியில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பூட்டேற்றி ,கொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகள் வீணா (15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
வீணாவின் அக்கா ஆரதி என்பவர் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். அவருக்கு தந்தை ஐயப்பன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவி வீணா தனக்கு செல்போன் வாங்கித் த.ருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் செல்போன் வாங்கித் தருவதாக பெற்றோர்கள் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில், காணப்பட்ட வீணா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் வீணாவை கருங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று குழித்துறை அரசு ம.ருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் விலை 30 டொலர் வரையில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 23.30 டொலர் அதிகரித்துள்ளது.
அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1816.80 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் உயர்ந்த போக்கைக் காட்டும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வு வருவதாக கூறப்படுகின்றது.
விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செய்ய உறவினர்களுடன் சென்ற 5 ஆம் வகுப்பு சிறுமி திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் தேடி சிறுமியின் உடலை கண்டெடுத்தனர். 12 அடி ஆழ ஆற்றில் மண்ணில் சி.க்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சிக்கியுள்ளனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு அப்பெண்ணை போக்சோவில் சிறையில் தள்ளியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு – ராசாத்தி தம்பதிக்கு 15 வயதில் பரத் என்கிற மகனும் 13 வயதில் சாரதி என்ற மகளும் பாரதி என்ற மகளும் உள்ளனர்.
அதே தெருவில் கட்டிட வேலை செய்து செய்கின்ற பாலகிருஷ்ணன் லலிதா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அருகில் உள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பரத். உனக்கு 35 எனக்கு 15 என்ற கணக்கில் பரத்தும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருக்கிறது.
இத்தனை சின்ன வயதில் அத்தனை பெரிய பெண்ணுடன் என்ன பழக்கம் என்று பரத்தின் பெற்றோர் கண்டிக்கிறார்கள். ஒரே பகுதியில் இருந்தால் பழக்கம் தொடரும் என்று எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து பரத்தை படிக்க வைத்துள்ளனர்.
சித்தி வீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். ஆனாலும் லலிதாவுடன் அவர் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த இருபத்தி 26ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அப்போதுதான் லலிதாவும் காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத் காணவில்லை என்று அவரது தந்தை பாலகுரு புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருத்துவ மேரி என்பவர் பரத் – லலிதா இருவரையும் பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தனபால் பதிலளித்தபோது, இருவரையும் பூந்தோட்டம் ஊரில் இறக்கி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆட்டோ டிரைவர் தனபால் இடம் பெற்ற தகவலின் பேரில் போலீசார் இருபத்தி ஏழாம் தேதியன்று லலிதா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
பூந்தோட்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால் லலிதாவின் செல்போன் சிக்னல் என்னை வைத்து அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிய போலீஸார் முற்பட்டனர்.
அதன்படி வேளாங்கண்ணியில் சிக்னல் காட்டியதால் அங்கு சென்று தொடர் தேடுதலில் அவர்களை பிடித்துவிட்டனர். 6 நாட்களுக்கு பின்னர் இருவரையும் பிடித்துவிட்டு போலீசார், மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, வண்டியின் சாரதி முகத்தில் மிளகாய் தூளை தூவி தலையில் சுத்தியலால் தாக்கி, முச்சக்கரவண்டியை கொள்ளையிட்ட கணவன், மனைவி, மூன்று வயது ஆண் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டியில் இருந்து 32 அங்கு தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணனி, தண்ணீர் பம்பி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரான பெண் ஹோமாகமை பிட்டிபன சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளதுடன் பிட்டிபன புத்தக களஞ்சியத்திற்கு அருகில்,
குறுக்கு பாதை ஒன்றுக்குள் சென்று வழியில் சென்ற பெண்ணொருவரின் கையடக்க தொலைபேசியை பெற்று ஒருவரை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவன் எனக் கூறப்படும் நபர் வந்துள்ளார். அவர் வந்ததுடன் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண், சாரதியின் முகத்தில் மிளகாய் தூளை தூவியுள்ளார்.
அத்துடன் அந்த இடத்திற்கு வந்த நபர், சாரதியின் தலையில் சுத்தியலால் தாக்கி, அவரை அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டு விட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி மீகொட பிரதேசம் ஊடாக சென்று கொண்டிருந்த போது பொலிஸார் அதனை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.
கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அப்போது முச்சக்கர வண்டியை கைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவன், மனைவி மற்றும் பிள்ளையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து வீதியில் செல்லும் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டு, அவற்றின் பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றை ஹோமாகமை பொலிஸார் ஒரு மாதத்திற்கு முன்னரும் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். போதை பொருள் விலை அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஹெரோயின் பக்கட் ஒன்றின் விலை 3000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவர் ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் நேற்று (06.11) பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருகின்றார்.
இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது,
மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குட்பட்டு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சரியான முறையில் பயன்படுத்தினால் அது சாத்தியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கையால் தேங்காய் பால் பிளிந்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் செயற்பாடுகள் இன்று (07.11) முன்னெடுக்கப்பட்டன.
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் மூன்றாம் கட்டமாக தரம் 10, தரம் 11 மற்றும் உயர்தரம் ஆகிய மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நாளை (08.11) முதல் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, வவுனியா மாவட்டத்தில் உள்ள தரம் 10, தரம் 11 மற்றும் உயர்தர வகுப்புக்களையுடைய பாடசாலைகளில் பாடசாலை சமூகத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சூழலை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள்,
மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பாடசாலை சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன், மாணவர்களின் மேசை, கதிரைகள், வகுப்பறை கட்டடங்கள் என்பனவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டன.
வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் (07.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுதிட்டத்தை அண்மித்து காணப்படும் ஈயத் தொழிற்சாலையில் ஈயத்தை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆலையின் உள்ளே காணப்பட்ட உருக்கு கற்களை மாற்றீடு செய்வதற்காக மூவர் இணைந்து அவற்றை அகற்றியுள்ளனர்.
இதன்போது குறித்த ஆலையில் இருந்த உருக்கு கல் உடைந்து விழுந்தமையால் அங்கு பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அவரது தலையில் கல் விழுந்தமையினாலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு உதயராஜ் (வயது 38) என்பவரே மரணமடைந்தவராவார்.
அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்டாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், உயிரிழந்த பெண் இறுதியாக ரொஸானா என்ற பெண் மற்றும் அவரது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட ரொஸானா என்ற பெண்ணும் சூதாட்டத்திற்கு மிகவும் அடிமையாகிய ஒருவர் என தெரிவந்துள்ளது. ரொஸானா கொழும்பு சூதாட்டத்தில் நிலையத்தில் வைத்து தன்னிடம் இருந்த அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இறுதியாகி திருமண மோதிரத்தையும் அவர் இழந்துள்ளார்.
அவ்வாறு இழந்த மோதிரம் அடகு வைக்கப்பட்ட நிலையில் அதனை மீட்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதனை மீட்டு தருமாறு ரொஸானா, கொலை செய்யப்பட்ட பாத்திமாவிடம் வினவியுள்ளார்.
பாத்திமாவும் தீவிரமாக சூதாட்டத்திற்கு அடிமையாகியவராகும். சூதாட்டத்தில் தோற்று தங்க நகைகளை இழப்பவர்களின் பொருட்களை அடகில் மீட்டு வியாபாராம் நடத்தும் நடவடிக்கை ஒன்றை பாத்திமா மேற்கொண்டு வந்துள்ளார்.
ரொஸானாவின் கோரிக்கைக்கமைய பாத்திமா கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டிற்கு சென்று ரொஸானாவின் மோதிரத்தை அடகில் இருந்து மீட்டு சிறிய பணத்தை அவருக்கு வழங்கிவிட்டு மோதிரத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதற்கே பாத்திமா திட்டமிட்டுள்ளார்.
அடகில் இருந்த பொருளை மீட்பதற்காக ரொஸானா மற்றும் பாத்திமா ரொஸானாவின் சகோதரனுக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதற்கமைய அடகில் இருந்து மோதிரத்தை மீட்ட பின்னர் ரொஸானா, தேனீர் அருந்த வீட்டிற்கு வருமாறு பாத்திமாவை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று பாத்திமா மட்டக்குளியில் உள்ள ரொஸானாவின் வீட்டிற்கு வென்றுள்ளார்.
தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது ரொஸானாவின் சகோதரன் பின்னால் வந்து பாத்திமாவுக்கு தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் சடலம் வீட்டினுள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்னைறய தினம் இரவு வீட்டிற்கு வந்த ரொஸானாவின் கணவருக்கும் கொலை சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தி, அதனை வெளியே சொல்ல வேண்டாம் என ரொஸானா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர் சடலம் பை ஒன்றில் வைக்கப்பட்டு, சிறிய லொரி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின்சார உபகரணங்கள் உடைந்துள்ளதாகவும் அதனை பழுது பார்க்க கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறி லொறியில் மின்சார உபகரணங்களும் ஏற்றப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்றி செல்லப்பட்ட சடலம் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து ரொஸானாவின் சகோதரனினால் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு, சப்புகஸ்கந்த குப்பை மேட்டில் கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது. 29ஆம் திகதியே சடலம் குப்பை மேட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பாத்திமா உயிரிழந்த பின்னர் அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை ரொஸானா கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.