வவுனியா உட்பட 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!!

சிவப்பு எச்சரிக்கை..

அடுத்த 24 மணி நேரத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 18 மாவட்டங்கள் பின்வருமாறு பெயரிடப்பட்டுள்ளன.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

கொழும்பில்..

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி – சமித்புர பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்திற்கு அடிமையான பெண்ணிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மொஹமட் சஷி பாத்திமா மும்தாஸ் என்ற 42 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என, குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாத்திமா கடந்த 28ம் திகதி மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த தோழி ஒருவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். இந்நிலையில், பாத்திமா முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மோதர பகுதியில் சென்றதாக பாத்திமாவின் தோழி சித்தி ரோஷனா (36) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

எனினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​பாத்திமாவின் தோழி கூறியது முரண்பாடாக இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியதற்காக ரோஷனா மற்றும் அவரது கணவர் ஆனந்த பாபு ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், பாத்துமாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த தம்பதியினர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து கடந்த 29ம் திகதி லொறி ஒன்றில் எடுத்துச் சென்று சப்புகஸ்கந்த – மாபிம வீதியிலுள்ள குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றைய நபர் பாத்திமாவின் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சடலத்தை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து யாழ் வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனின் சாரதி திடீர் மரணம்!!

திடீர் மரணம்..

வவுனியாவிலிருந்து நோயாளர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிச் சென்ற வேனின் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் வவுனியா வீரபுரம் பகுதியை சேர்ந்த 61 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

வேனில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் திடீரென சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டவுடன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியமையால் வாகனத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கணவன் மற்றும் மாமனாரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கோவை…

விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், தனது கு.ழ.ந்.தை.யை கொ.ன்.று விடுவேன் என்று கணவன் மி.ரட்டுவதாக கூறி பா.திக்கப்பட்ட பெ.ண் கோவை மாநகர் கா.வல் ஆணையர் அலுவலகத்தில் பு.கார் அளித்துள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிசில் ஜேம்ஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மதுரை என்பவருடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு 2 பெ.ண் கு.ழ.ந்.தை.கள் உள்ளனர். தர்மதுரையின் தந்தை கோவை மாநகரில் கா.வல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படியிருக்க இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட மன க.சப்பால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தர்மதுரையின் ம.னைவி ஹிசில் கோவை மாநகர கா.வ.ல் ஆணையாளர் அலுவலகத்தில் பு.கா.ர் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது..

நான் என் க.ணவர் மற்றும் கணவர் வீட்டார் இ.ழை.க்கும் கொ.டு.மை.க.ளை தா.ங்.காமல் இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தை.க.ளு.டன் தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறேன். நான் கடந்த 2019ஆம் ஆண்டு என் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டும், வி.வா.க.ரத்து கேட்டும் நீ.தி.மன்றத்தில் வ.ழ.க்கு தொ.ட.ர்ந்துள்ளேன்.

இந்த நிலையில் எனது க.ணவர் எனக்கு தினமும் போன் செ.ய்.து ஜீவனாம்சம் தர மாட்டேன் என மி.ர.ட்.டி வருகிறார். அதேபோல தந்தையின் போ.லீ.ஸ் பதவியை பயன்படுத்தி க.ஞ்.சா வ.ழ.க்கு போடுவேன் எனவும் மி.ர.ட்.டினார்.

அதேபோல என்னைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்து என்னை ம.ன உ.ளை.ச்.ச.லுக்கு ஆளாக்கி வருகிறார். பணிபுரியும் இடத்திற்கு வந்தும் த.கா.த வா.ர்.த்தைகள் பேசுகிறார்.

இப்படி இருக்க நான் வேலைக்கு சென்றபோது அவரது நண்பர்களுடன் வந்து எனது தந்தை ஜேம்ஸ், அண்ணன், அண்ணி மற்றும் ஆறுமாத கை.க்.கு.ழ.ந்.தை என்று கூட பாராமல் அனைவர் மீதும் க.டு.மை.யா.க தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்ளார். கு.ழ.ந்.தையை க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.ன்.று வி.டு.வ.தா.கவும் மி.ர.ட்.டினார்.

எனது கணவரின் தந்தை போ.லீஸ் என்பதால் அவரை கை.து செ.ய்.யாமல் போ.லீ.சார் த.ய.க்.கம் காட்டுகின்றனர். எனவே கணவரின் தந்தை மீதும், கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பு.கா.ர் மனுவில் தெரிவித்துள்ளார்.

மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

பாத்திமா..

உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வது மிகவும் இயல்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. ஆனால் சிலர் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தவறு என கருதி மாந்ரீக அல்லது மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து விபரீத முடிவுகளை சந்திக்கின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நல்லுவயல் எனும் ஊரைச் சேர்ந்த அப்துல் சத்தார் மற்றும் சபீரா என்ற தம்பதியர் மூடநம்பிக்கை காரணமாக தங்களின் 11 வயது மகளுக்கு எமனாக மாறியிருக்கின்றனர்.

சத்தார் மற்றும் சபீரா தம்பதியரின் 11 வயது மகள் பாத்திமா அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பாத்திமாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார்.

ஆனால் பாத்திமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவளின் பெற்றோர் இருந்து வந்துள்ளனர். ஏனென்றால் அத்தம்பதியர், மத நம்பிக்கை மற்றும் மாந்ரீக சக்தி தங்களின் மகளை குணப்படுத்தும் என மூடநம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் பாத்திமாவின் உடல்நிலை நாளாக நாளாக மோசமடைந்தது, காய்ச்சலும் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு பேச்சு மூச்சின்றி இருந்ததால் வேறு வழியில்லாமல் பதற்றமடைந்த அவரின் பெற்றோர், சிறுமியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமி பாத்திமாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வாழவைக்க வேண்டிய பெற்றோரே அலட்சியமாக இருந்து சிறுமியின் உயிர் பறிபோக காரணமாக இருந்துள்ளனர்.

காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக முன்னதாகவே வந்திருந்தால் சிறுமியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சத்தார், சபீரா தம்பதியர் தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மூடநம்பிக்கையால் பாத்திமாவை கொலை செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமி பாத்திமாவின் மரணம் இயற்கைக்கு எதிரான மரணம் என குறிப்பிட்டு போலீசார் விசாரித்துவருகின்றனர்.

சத்தார், சபீரா குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் கடந்த ஆண்டு இதே போல உரிய மருத்துவம் பார்க்காததால் பலியானதாக ஊர்க்காரர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் சூட்கேஸிற்குள் பெண்ணின் சடலம் : 1500 இளம் பெண்களுக்கு நடந்தது என்ன?

இளம் பெண்கள்..

இலங்கையில் கடந்த சில மாதங்களாக 1500 பெண்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணப்பை ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கிடைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

காணாமல் போன அல்லது தகவல் கிடைக்காத நிலையில் உள்ள பெண்களுக்கு திருமணமானவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிலர் இரகசியமாக வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த பெண்கள் தொடர்பில விாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு : வெளியானது அறிவிப்பு!!

சீமெந்தின்..

நாட்டில் சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் கட்டுமாணத்துறை வெகுவாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகள் திறப்பதால் ஏற்படப் போகும் ஆபத்து : முழுமையாக முடங்கும் ஆபத்தில் இலங்கை!!

பாடசாலைகள்..

பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து பிள்ளைகளுக்கும் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்று அதகரித்துள்ளதாக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.

தற்போது வரையிலும் கோவிட் தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் உட்பட் சிறுவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் சிறுவர்களுக்கு மத்தியில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவிட் தொற்று பிள்ளைகளுக்கு இடையில் பரவினால் மீண்டும் ஜனவரி மாதமளவில் பாடசாலைகளை மூட நேரிடும். அது மாத்திரமின்றி நாட்டை முடக்க நேரிடும். இதனால் பெற்றோர் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை கட்டமைப்பை தொடர்ந்து நடத்தி செல்வதற்கு பெற்றோர் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேபோல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. அவர்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் பரவும். வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பரவும். இதனால் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவுடன் செயற்பட வேண்டும்.

மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அவசியமின்றி வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிட்டுள்ள சீனா: அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் சிக்கல்!!

மக்கள் வங்கி..

மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியை சீனா மட்டும் கறுப்புப் பட்டியலிட்டுள்ள நிலையில், சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பு குறித்து அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் விநியோகம் செய்யப்படும்போது நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இலகு தவணை முறையில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் ஆசிய நிறுவனங்கள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய அச்சம் வெளியிட்டுள்ளன.

மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் இடப்பட்டுள்ளமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் சர்வதேச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது இலகுவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் தொடர்பான பிரச்சினையினால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கை வந்த இரு இந்திய விமானப்படை விமானங்கள் : காரணம் என்ன?

இந்திய விமானப்படை விமானங்கள்..

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சரக்கு விமானங்கள் நேற்று முன்தினம் அதிகாலை நேனோ நைட்ரஜன் பசளை தொகையை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளன.

இதனடிப்படையில், ஒரு லட்சம் கிலோ கிராம் நேனோ நைட்ரஜன் பசளை ஏற்றிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இலங்கை விவசாயிகளுக்கு துரிதமாக நேனோ நைட்ரஜன் பசளை வழங்குவதற்காகவும் இந்த இந்திய விமானங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்திய விமானப்படை விமானங்களை இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ வரவேற்றார். அத்துடன் இந்திய விமானப்படை அத்தியவசியமான நேரத்தில் வழங்கி வரும் உடனடியான உதவிகளுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் : வெளியாகியுள்ள தகவல்!!

கட்டுப்பாடுகள்..

தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், பொது மக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணிப்பதால், எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டது போல் மக்கள் நடந்து கொள்வதாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடு இன்னும் ஆபத்தை விட்டு வெளியேறவில்லை. தொற்றுக்கள் எந்தநேரத்திலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்பதையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதே, வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அண்மைய நாட்களில் நடைபெற்ற விழாக்கள் மற்றும் திருமணங்கள் தொற்றுக்கள் சிறிதளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

16 நாட்களுக்குப் பிறகு நேற்று கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியமை தொடர்பிலேயே அவா் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பயணப் பொதியிலிருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் கணவன், மனைவி கைது!!

சப்புகஸ்கந்த..

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் பயணப்பொதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி – சமித்புர பகுதியை சேர்ந்த கணவன், மனைவியே கைது செய்யப்பட்டுள்ளனர். சடலத்தை கொண்டு செல்ல சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் முன்னர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பயணப் பையிலிருந்து சடலம் மீட்பு : காணாமல்போயுள்ள தங்க நகைகள் : அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்!!

சப்புகஸ்கந்த..

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி குறித்த விடயம் தொடர்பில் சப்புகஸ்கந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. உயிரிழந்த பெண் அணிந்திருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போயுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என தகவல் வெளியாகியிருந்தன.

அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டிலிருந்து மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதை அவரது உறவினர் ஒருவர் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும், சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மின்சாரம் இன்றி நாடு இருளடையுமா? விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

மின்சாரம்..

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல்வேறு தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, எதிர்வரும் தினங்களில் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக,

எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம், துறைமுகம், எரிபொருள், தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் விநியோகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

சொகுசுக் காரில் கொண்டு சென்று வீசப்பட்ட சடலம் : கொழும்பில் சம்பவம்!!

கொழும்பு..

கடந்த மாதம் 26ஆம் திகதி காலை வனவாசல பொசன்வத்தை பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த 40 வயதான மொஹமட் இர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பர்கள் குழுவினால் கடத்தப்பட்ட இவர், கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட அவர், வனவாசலை பொசோன்வத்தை பகுதிக்கு சொகுசு காரில் கொண்டு செல்லப்படும் காட்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களனி பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!!

மழை..

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மேகமூட்டமான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.