இலங்கையில் ஃபைசர் தடுப்பூசிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்!!

ஃபைசர் தடுப்பூசிக்காக..

20 முதல் 30 அகவைக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் குறைந்த ஆர்வம் காட்டுவதற்கு, பாலியல் செயலிழப்பு போன்ற புராண நம்பிக்கைகளினால் அல்ல.

மாறாக அவர்கள் ஃபைசர் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட, இணைய வழி அமர்வு ஒன்றில் அவர் இதனைக் கூறினார், ஃபைசர் தடுப்பூசிக்கு பெரும் கேள்வி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதில் நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. மாறாக அது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஃபைசர் தடுப்பூசியை வழங்கல் செயற்பாடு, நிபுணர்களின் ஆலோசனைப்படி செய்யப்படவில்லை. ஃபைசர் தடுப்பூசியை யார் பெற வேண்டும் என்பது நிபுணர்களால் தீர்மானிக்கப்படவில்லை என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

-தமிழ்வின்-

அடுத்த மாதத்தின் பின் நாடு முழுவதும் மின்சார தடை?

மின்சார தடை?

அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மக்கள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் மின்சார தடை செய்து மக்களை சிரமத்திற்குள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாது. எனினும் தொடர்ந்தும் அதனை மேற்கொள்ள முடியாது.

மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு : சற்றுமுன் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

ஊரடங்கு..

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்றைய தினம், மீண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் முதலாம் திகதி அதாவது அக்டோபர் முதலாம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவின் மூலம் அறிவித்துள்ளார். இதன்படி அக்டோபர் 1 ஆம் திகதி (01.10.2021) அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்து!!

பொது முடக்கம்..

தற்போதைய முடக்கலை நீக்குவது பற்றிய ஊகங்கள் இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் சங்கம், ஒக்டோபர் ஆரம்பம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகளின் தியாகங்களை, முழு நாடும் பெறவேண்டும். எனவே, முடக்கல் நீடிக்கப்படும் போது நீண்ட கால ஆதாய விடயங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் காரணமாக, நோய் தீவிரமாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் இறப்பு விகிதம் திடீரென உயரக்கூடும்.

ஒரு நாடாக, தற்போதைய சிவப்பு மண்டலத்தில் இருந்து, பசுமை மண்டலத்திற்கு செல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு, இந்த முடக்கலை தீவிரமாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் கோரியுள்ளது.

வவுனியாவில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் கொரோனா தொற்றால் மரணமடைந்த 28 பேரின் சடலங்கள்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 28 பேரின் சடலங்கள் தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த மின் மயானத்தில் நாள் ஒன்றுக்கு 6 சடலங்களையே தகனம் செய்யக் கூடியதாகவுள்ளது. ஆனால், தற்போது வவுனியா உட்பட மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவடங்களில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதனால் சடலங்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்த 28 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய நான்கு தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கொரோனா தொற்றில் இருந்து விடபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (16.09) 03 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 03 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

தாண்டிக்குளம், வவுனியா நகர், பம்பைமடு ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.

இந்நிலையில் மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டில் சடுதியாக குறைவடைந்துள்ள கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (15.09) கோவிட் தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 57 பெண்களும், 61 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று முன்தினம் (14.09) கோவிட் தொற்றால் மேலும் 132 பேர் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உ.லுக்கிய 6 வயது சி.றுமி பா.லியல் ப.லாத்கார ச.ம்பவம் : தண்டவாளத்தில் ச.டலமாக கிடந்த கு.ற்றவாளி!!

இந்தியாவில்..

இந்தியாவில் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்திய 6 வயது சி.றுமி ப.லாத்காரம் செ.ய்யப்பட்டு கொ.ல்.லப்பட்ட ச.ம்பவத்தின் கு.ற்றவாளியை பொலிசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அ.திரடி திருப்பமாக அவன் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சி.றுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.

அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பா.லியல் வ.ன்கொடுமை செ.ய்து கொ.லை செ.ய்துள்ளார்.

விளையாட சென்ற மகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சி.றுமியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய வி.சாரணையில் சி.றுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது.

இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோ.தனை நடத்திய போது சி.றுமியின் உ.டல் ப.டுக்கையில் சுற்றி ம.றைத்து வைக்கப்பட்டிருந்தது க.ண்டுபிடிக்கப்பட்டது. ராஜு த.லைமறைவானதால் பொலிசார் தே.டுதல் வே.ட்டையில் ஈ.டுபட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அ.திர்வலையை எற்படுத்திய நிலையில் #JusticeForChaithra என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் தொடர்ந்து டிரண்டிங்கில் இருந்தது. பொலிசார் வி.சாரணையில் கூலி வேலை செய்துவரும் ராஜு,

ம.து அ.ருந்தி தினம்தோறும் ம.னைவியை அ.டித்து வந்ததால் மனைவியும் , அவரது தாயாரும் பிரிந்து சென்ற நிலையில், தனியாக வசித்து வந்த ராஜு, சி.றுமியை கொ.லை செ.ய்த பி.றகு த.லைமறைவானது தெரியவந்தது.

ராஜூ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்தார்.

இந்த நிலையில் கொ.டூரன் ராஜூ கன்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார், இந்த தகவலை அமைச்சர் கே.டி.ஆர் உறுதி செய்துள்ளார். அவர் இரயில் முன்னால் பா.ய்ந்து த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் தன்னை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் கூறியதால் எப்படியும் நாம் சி.க்கி விடுவோம் என ப.யந்து ராஜூ இம்முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எப்படியிருந்தாலும் உ.யிரிழந்த சி.றுமியின் ம.ரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டது என பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

திருமணமான 7 நாளில் மனைவியை கண்டு அதிர்ச்சியில் பேச்சு வராமல் வாயடைத்து நின்ற கணவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 7 நாளில் உ.யிரை மா.ய்த்துக் கொண்ட புதுப்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவருடைய மகள் அபிநயா என்கிற அன்பரசி (22). டிப்ளமோ படித்துள்ளார்.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் ராமராஜன் (31). சென்னை அப்பல்லோ மருத்துவமனை பார்மசியில் வேலை செய்து வருகிறார்.

அபிநயாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு தற்போது திருமணம் வேண்டாம் என அபிநயா மறுத்துள்ளார். இதற்கிடையில் அபிநயாவுக்கும்,ராமராஜனுக்கும் 7 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அபிநயா தனது கணவர் ராமராஜனுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு மறுவிருந்துக்கு வந்துள்ளார். நேற்று காலையில் அபிநயாவின் பெற்றோர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். ராமராஜன் வீட்டில் உள்ள அறையில் இருந்துள்ளார்.

அந்த அறையை அபிநயா வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் கடைக்கு சென்றிருந்த அபிநயாவின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அபிநயா தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.

ராமராஜன் இருந்த அறையின் கதவைத் திறந்த போது வெளியில் வந்த அவர் மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சியில் பேச்சு வராமல் வாயடைத்து நின்றார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிநயாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து அன்பரசி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் திருமணமாகி 7 நாட்களே ஆவதால் வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிசய பூமியாக மாறும் மன்னார் : இலங்கையின் தலையெழுத்தை மாற்றுமா?

மன்னார்..

தமிழர் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகை கனிய வளங்கள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இந்த கனிய வளங்களை பயன்படத்துவதுடன் மூலம் இலங்கையின் முழு கடனையும் அடைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்.

குறித்த பகுதியில் 09 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டொலர் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எனவே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையிலிருந்து எமக்கு 167 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும்.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கடன்பட்டிருப்பதாகவும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் பேசாலை கனிய எண்ணெய் வளம் மற்றும் எரிவாயுவை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தினாலும் 133.5 பில்லியன் அமெரிக்க டொலரை மீதப்படுத்தலாம் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் பெட்ரோலிய அபிவிருத்திச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெட்ரோலிய அபிவிருத்தி ஆணைக்குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி : பெற்றோர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!!

இஷா..

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் சிறுமி இஷா கொடுமையான இரத்தப்புற்று நோய்க்குள்ளாகியிருந்த நிலையில், “தண்டு உயிரணுத் தானம்” செய்ய கொடையாளர்களிடம் பெற்றோர்களால் உதவிக்கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும், ஈஷாவுக்கு ஸ்டெம் செல் தானம் செய்யும் ஒருவர் நேற்று கிடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு வயது நிரம்பிய பிரித்தானியா வாழ் சிறுமி இஷா, கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு (Acute Myeloid Leukaemia) உள்ளாகி கடந்த 15 வாரங்களாக Great Ormond Street சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமியைத் தாக்கியுள்ள நோயில் மாற்றம் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

2 தடவை நடைபெற்ற வேதிச்சிகிச்சை (Chemotherapy) பயனளிக்காத நிலையில், 4 வயது நிரம்பிய இச்சிறுமியைத் தாக்கியுள்ள கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு “தண்டு உயிரணுத் தானம்” (Stem Cell Donation ) மூலமே சுகமாக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால், அவளது உடலுக்குப் பொருத்தமான ஒருவர் ஸ்டெம் செல் தானம் வழங்க வேண்டும், அதுவும் மூன்று வாரங்களுக்குள் பிரித்தானிய மருத்துவமனைகளில் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஸ்டெம் செல் தானம் வழங்க பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஈஷா இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவள் என்பதால், அவளுக்கு ஒரு தெற்காசியரின் ஸ்டெம் செல்கள் தான் பொருந்தும். அதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. தானம் செய்ய ஒருவர் முன்வர வேண்டும், அவரது ஸ்டெம் செல்கள் ஈஷாவுக்கு பொருந்த வேண்டும்.தானம் செய்பவர் ஆய்வக சோதனைகள் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும், ஈஷாவுக்கு ஸ்டெம் செல் தானம் செய்யும் ஒருவர் நேற்று கிடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தை நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனவும், குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டை முழுமையாகத் திறக்கும் ஆரோக்கிய நிலைமை இல்லை!!

டெல்டா வைரஸ் தொற்று..

நாட்டை முழுமையாகத் திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டைத் திறந்தால், மிக மோசமான இன்னொரு கோவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட வைத்திய நிபுணர்கள் நேற்று கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“நாடாக இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஒரு வாரத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்களும், ஆயிரம் அல்லது ஆயிரத்தையும் தாண்டிய வாராந்த கோவிட் மரணங்களும் இன்னும் நாட்டில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில். இது சாதாராண நிலைமை அல்ல. நாம் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட முடியும் என்றோ அல்லது நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது என்றோ எம்மால் ஒருபோதும் கூறிவிட முடியாது. நாம் இப்போதும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே உள்ளோம்” எனவும் விசேட வைத்திய நிபுணர்கள், ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகள் : நாட்டை திறப்பது குறித்து வெளியான அறிவிப்பு!!

அடுத்த வாரத்திலிருந்து..

கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

நாடு அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ கோவிட் ஒழிப்பு செயலணிக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும், புதிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னாரில் கனிய எண்ணெய் வளம் : பல பில்லியன்களை இலக்கு வைத்து ஆய்வில் களமிறங்கும் பிரித்தானியா!!

மன்னாரில்..

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் காணப்படும் பல பில்லியன்கள் பெறுமதியான கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரபல ஆய்வு நிறுவனமொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ள நிலையில் புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசிற்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் முன்னாள் கிராம அலுவலர் கொரோனா தொற்றால் மரணம்!!

பஞ்சாட்சரம் உமாபதி..

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான பஞ்சாட்சரம் உமாபதி கோவிட் தொற்றால் இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக கிராம அலுவலராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவருமான பஞ்சாட்சரம் உமாபதி கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் வன்னித் தேர்தல் தோகுதியில் போட்டியிட்டதுடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் ஆவார். இதேவேளை, இவரது தாயார் கடந்த 2 ஆம் திகதி கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.