கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட சடலமொன்றை ஏற்றிச்சென்ற வாகனமொன்று நேற்று கொக்குளாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வைத்தியசாலை வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தினை திருகோணமலைக்கு கொண்டு சென்ற வாகனமொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தல் சட்டமுறைகளை மீறி கொரோனா தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞரை அங்கு தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கோவில்குளம் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு நோய் தாக்கம் அதிகரித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார்.
மரணத்தையடுத்து உடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதாரப் பிரிவினர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞனை காணவில்லை. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறையை மீறி கொரோனா தொற்றுடன் யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்றம் குறித்த இளைஞனை தற்போது அவர் இருக்கும் இடத்தில் தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (15.09) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 67 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் பழ விற்பனை வாகனங்கள் மீது நகரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில், நகரசபையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாடு பூராகவும் அமுலில் உள்ள போதும் வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் வழமை போன்று வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் செயற்பாடுகளும், வர்த்தக நிலையங்களை அரைவாசி திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.
இது குறித்து சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நகரசபை என்பவற்றின் கவனத்திற்கு பலரும் கொண்டு வந்திருந்த நிலையில், வவுனியா, குருமன்காடு பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நகரசபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்பாப்பட்டது.
இதன்போது, குருமன்காடு பகுதியில் வாகனங்களில் பழ விற்பனையில் ஈடுபட்ட இரு வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாது இடம்பெற்ற வியாபார நடவடிக்கைகள் குறித்து நகரசபையினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போது,
வாகனத்தில் வைத்து பழ வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்காது போக்குவரத்து பொலிசாரை அழைத்து நகர சபையினருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, போக்குவரத்து பொலிசார் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, நகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி கோவிட் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் பொறுப்பற்ற வகையில் இடம்பெறும் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (15.09) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த , தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
நெளுக்குளம், கோவிற்குளம், பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள காப்பகத்தில் இருவர் என நான்கு பேரே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.
இந்நிலையில் மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், குறித்த தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மகன் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி வீட்டில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் (வயது 73) மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தாய்க்கு நோய் தாக்கம் அதிகரித்தமையால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று (14.09) மரணமடைந்துள்ளார்.
தாய் மரணமடைந்த தகவலை தெரிவித்து, குடும்பத்தினரை தகனக் கிரியைக்கு அழைப்பதற்காக பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டில் இருக்கவில்லை.
இது தொடர்பில் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக வவுனியா பொலிசார் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 132 பேர் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 11, 699 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 66 ஆண்களும், 66 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூரில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் தண்ணீரை நிறுத்தி 6 மணிநேர தேடலுக்கு பின்பு தீயணைப்புத் துறையினர் சடலங்களாக மீட்டனர்.
திருவள்ளூரை அடுத்துள்ள சிறுகடல் பகுதியைச் செர்ந்த சாமு விக்னேஷ் (13) மற்றும் அவரது நண்பர் மோனிஷ் 11) ஆகிய இருவரும், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே விளையாடிய போது,
கால் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்னர். இதையடுத்து.
கால்வாயில் சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களில் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது,நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஒடிசாவின் Bhubaneswar பகுதியை சேர்ந்தவர் Patitapaban Prusty.திருமணம் ஆன இவர் ஆன்லை உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக் கிழமை Patitapaban Prusty கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட Patitapaban Prusty மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் Katia இரயில் நிலையத்தில் பெண் ஒருவருடன் இருப்பது தெரியவந்தது.
அதன் பின் பொலிசார் பிடித்து விசாரித்த போது, இருவரும் காதலித்து வருவதாகவும், குடும்பத்தை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.
இவருடன் ஓட்டம் பிடித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் Patitapaban Prusty கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் கடத்தப்பட்டுவிட்டதாக பதறி போய் புகார் அளித்த மனைவி, அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் கா.ணாமல் போன திருமணமான இளம்பெண் காட்டில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து கா.ணாமல் போனார்.
இது தொடர்பான பு.காரின் பேரில் பொலிசார் ஜோதியை தே.டி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.டலமாக கி.டந்ததை இரு நாட்களுக்கு முன்னர் பொலிசார் பார்த்து அ.திர்ச்சியடைந்தனர், ஏனெனில் ச.டலமானது மிக மோ.சமான நி.லையில் இருந்தது.
இந்த நிலையில் ஜோதியை அவர் கணவர் தான் கொ.லை செ.ய்துவிட்டார் என கூறி அவர் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என போ.ராட்டம் ந.டத்தினார்கள்.
அவர்கள் கூறுகையில், ஜோதி கா.ணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் அவருக்கு ச.ண்.டை ஏ.ற்பட்டது.
இதையடுத்தே ஜோதி கா.ணாமல் போனார்.
அவருடன் சென்ற நாய் அடுத்த ஐந்து நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. ஜோதியின் கணவர் தான் அவளை எதாவது செய்திருக்க வேண்டும் என கூறினர்.
இதை தொடர்ந்து ஜோதியின் கணவரை பொலிசார் கை.து செய்துள்ளனர், அவரிடம் தீவிர வி.சாரணை நடந்து வரும் நிலையில் விரைவில் சம்பவம் தொடர்பில் பல அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 3 வயது சிறுவனை இரண்டு சிறுவர்கள் கிணற்றில் தள்ளி கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் கடும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன்- கவியரசி.
இந்த தம்பதிக்கு 10 வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் உள்ளனர். பார்த்திபன் டிரைவராகவும், கவியரசி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அல்போன்சா, வீடு கட்டுவதற்காக வீட்டிற்கு பின்பக்கம் மணல் இறக்கி வைத்துள்ளார். இந்த மணலில் பார்த்திபனின் மகன் தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்திருந்த போது, இதை பார்த்த அல்போன்சா சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆ.த்திரமடைந்த பார்த்திபன் அல்போன்சாவிடம் வா.க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இரு குடும்பத்தினருக்கும் ச.ண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆ.த்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் 13 வயது மதிக்கத்தக்க பிரவீன்குமார், 11 வயது மதிக்கத்தக்க அஜய் இருவரும் சேர்ந்து பார்த்திபனின் மகன் தீனதயாளனை கடைக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பிறகு தீனதயாளனை காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அந்த புகாரின் பேரில் பொலிசார் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் வி.சாரணை செய்தனர்.
அதில், பிரவீன் குமார், அஜய் இரு சிறுவர்களும், கு.ழந்தை தீனதயாளனை விஸ்வநத்தம் பகுதியில் கிணற்றுக்குள் தள்ளி கொ.லை செ.ய்ததாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்த பொ.லி.சா.ர், உடனடியாக அந்த கிணற்றிற்கு சென்று பார்த்த போது, கிணற்றில் சிறுவனின் ச.ட.லம் மிதந்து கிடந்துள்ளது. இதையடுத்து பொ.லி.சார் அந்த இரண்டு சிறுவர்களிடமும் தொடர்ந்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சினிமா பிரபலங்கள் விதவிதமான போட்டோக்களை நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ட்ரெண்ட்டாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்தான் மலையாள நடிகை தான் நிமிஷா பிஜோ.
இவர் கேரளாவிலுள்ள அரண்மூலா கோயிலுக்குச் சொந்தமான பாம்பு படகில் செருப்பு அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் உடையில் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
ஏனென்றால் பெண்களுக்கு அனுமதி இல்லாத பாம்பு படகில் நிமிஷா பிஜோ எல்லை மீறி போட்டோ ஷூட் நடத்தியதால், கோயில் தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் நடிகை நிமிஷா மற்றும் அவருடைய நண்பர் உன்னியும் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு, ‘போட்டோ ஷூட் நடத்தியது என்னுடைய தவறு. மன்னித்து விடுங்கள். மேலும் அங்கு இருப்பவர்கள் யாரும் என்னை தடுக்காமல் போட்டோ ஷூட் நடத்திய என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். இனி மேல் எந்த தவறும் நடக்காது என்று குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட பத்திரங்களை வழங்கியதை தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து நிமிஷா மற்றும் உன்னி விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் கோயில் புனிதத்தை அவமானப்படுத்தியதற்காக நிமிஷாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கண்டனங்கள் குவிகிறது.
சமீபத்தில் பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் மீது பா.லியல் ரீதியான செய்திகள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி.
இவர் பிரபல கட்சியை சேர்ந்த இவர் 9 பேருக்கு வங்கி கடன் கொடுப்பதாக கூறி அவரவர் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார். கந்து வட்டிக்குத்தான் வாங்கி கொடுத்தேன் என்று அவர்களிடம் கூறி அசல் பணத்தை வட்டி பணம் என்று கூறி வாங்கி மீது அசல் தொகையை கேட்டு மி.ரட்டியுள்ளார் நடிகை ஜெயலட்சுமி.
பின் கந்துவட்டி கேட்டு ஆண்களை அழைத்து வீட்டிற்கே வந்து மி.ரட்டியதாக மகளிர் சுயக்குழுவினர் அந்த நடிகை மீது ப.ரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாதாந்த வருமானத்தில் 5 சதவீதம் வரி அறவிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து இலங்கை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன, ஒரு இலட்சத்திற்கும் அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி இந்த நூற்றுக்கு 5 சதவீத வரியை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை. இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.