நாட்டில் நேற்றைய தினம் (11.09) கோவிட் தொற்றால் 144 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,296 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் (10.09) கோவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கடந்த 09ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எழுதுமட்டுவாழ், கரம்பகம் பகுதியைச் சேரந்த 11 வயதான சிறுமியே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எழுதுமட்டுவாழ் – கரம்பகம் பகுதியில் கடந்த 08 மாதங்களாக உறவினர் ஒருவரின் வீட்டில் குறித்த சிறுமியும் தாயாரும் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி குறித்த சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே சிறுமி தவறான முடிவை எடுத்து உயிரை மாய்க்க முயற்சி செய்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இதேவேளை, சிறுமிக்கு நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படானதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கடாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மின்சார கட்டணம் செலுத்த கூடிய வாடிக்கையாளர்கள் தாமதமின்றி மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்சார கட்டணம் செலுத்த கூடிய வசதி உள்ளவர்கள் உட்பட அதனை செலுத்தாமல் இருப்பதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அனேகமான அலைபேசிகளின் விலைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் ( கிராப்டீ 512 ஜீ.பி.) ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் (சில்வர் 512 ஜீ.பி.) ஆகிய ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் அரை மில்லியன் அல்லது ஐந்து லட்சம் ரூபாவிற்கும் மேல் விலையிடப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் இந்த ஸ்மார்ட் பேசியின் சந்தை விலை ஒரு லட்சம் ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் 5000 முதல் 7000 ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பிரபல பண்டக்குறியைக் கொண்ட மத்திய ரக ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் 10000 ரூபா முதல் 15000 ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் இந்த விலைகள் மேலும் உயர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெற்கு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவருடன் தொடர்புகொண்டு வினவியுள்ளது. இதன்போது, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அதேவேளை வணிக வங்கிகளினால் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாமையினாலே தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 11 ஆம் திகதி வரை 1651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை 1651 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 63 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது. வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும் மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை.
இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது. ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் அதிகளவான,
ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும்,
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்கான கட்டில்கள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அவர்களுக்கான கட்டில்களுக்கான பற்றாக்குறை மற்றும் இடவசதிப் பிரச்சனை என்பன ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நோயாளர்களுக்கான வசதிகளுடன் கூடிய 3 கட்டில்கள் மற்றும் இரண்டு ஒட்சிசன் சிலின்டர் வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் லாவண்யா நகையக உரிமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு லட்சம் பெறுமதியான குறித்த பொருட்கள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன், வைத்தியர் மதுரகன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
வவுனியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 38 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (11.09) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (11.09) 06 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 06 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
தரணிக்குளம், பெரியஉலுக்குளம், பூந்தோட்டம், புளியங்குளம், பட்டானிச்சூர் (இரண்டு நபர்கள்) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.
இந்நிலையில் மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவு அறையிலேயே புதுமாப்பிள்ளை தூ.க்.கி.ல் ச.டலமாக தொ.ங்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த அதிகாலையில் மணமகள் நந்தினி அ.லறியுள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன் கார்த்திகேயன் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரி.ழ.ந்.து கி.டந்துள்ளார்.
இதனால் அ.திர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசார் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலிஸார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிசார் மணமகளிடம் ந.டத்திய மு.தற்கட்ட வி.சாரணையில், கார்த்திகேயன் ப.தற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தேன்.
பாத்ரூம் சென்று வந்தவரை கூடவே சென்று அழைத்து வந்து பக்கத்தில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் காலையில் எழுந்தபோது பக்கத்தில் ஆள் இல்லாததைக் கண்டு தே.டி.ய போதுதான் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி இ.ற.ந்.து கி.டந்தார் எனத் தெவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 60 நாட்களை கடந்தும் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இலங்கையில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர, க.பொ.த சாதாரணதர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்காக தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.
அதன்படி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2021 நவம்பர் 14ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும், க.பொ.த சாதாரணதர பரீட்சை 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 3ஆம் திகதி வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டிருந்தன.
என்ற போதும் இவை தற்போது முன்மொழியப்பட்ட தற்காலிக திகதிகளே, நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் தற்போது கல்வி அமைச்சிற்கும்,அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சி.றுமி க.ர்ப்பமான வழக்கில் அவரது தந்தையும், காதலனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அ.திரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி.றுமிக்கு வ.யிற்று வ.லி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.றுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சிசிக்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அ.திர்ச்சியடைந்தனர், காரணம் சி.றுமி 2 மாதம் க.ர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சி.றுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார். இதைகேட்டு தலைசுற்றல் ஏற்பட்டு அ.திர்ச்சியில் சிலையாய் நின்ற தாய் பின்னர் தனது மகளிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.
சி.றுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இருந்தது. சி.றுமியின் தந்தையான முனியசாமி (39) பெற்று மகள் என்றும் பாராமல் சீ.ரழித்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது என மி.ரட்டியுள்ளார்.
மேலும் சி.றுமியை காதலிப்பதாக கூறி வந்த அறிவுமதி (19) என்ற இளைஞரும் சி.றுமிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்தது வி.சாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக சி.றுமியின் தாய் பொலிசில் அளித்த பு.காரின் பேரில் முனியசாமி, அறிவுமதி இருவரையும் பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஹொட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சி.றுமி உ.யிரிழந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ ஓட்டலில்,
ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் புதன்கிழமை சிக்கன் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகள் லோஷனாவுக்கு திடீரென வாந்தி, ம.யக்கம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சி.றுமி உ.யிரிழந்தார். அதே போல், அந்த ஹொட்டலில் சாப்பிட்ட ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் பாத்திமா, விஷ்ணு சீனிவாசன், தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, ம.யக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமையின் வி.பரீதம் உணர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா, மற்றும் பொலிஸ் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர், பா.திக்கப்பட்டவர்களிடம் விசாரித்துவிட்டு, செவன் ஸ்டார் பிரியாணி ஹொட்டலில் உணவு பொருள் பா.துகாப்பு குழுவினருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
பிரியாணி சமைக்க கெ.ட்டுபோன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டதா? அல்லது பிரியாணியில் வேறு ஏதும் கலக்கப்பட்டதா? என்பது குறித்து வி.சாரித்த அதிகாரிகள், ஆய்வுக்காக இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துச்சென்றதோடு அந்த கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் பா.திக்கப்பட்டவர்கள் அங்கு சாப்பிட்டதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகளும் அங்கிருந்து சேகரிக்கப்பட்டது. பலரது விருப்ப உணவான பிரியாணியை சாப்பிட்ட பின் சி.றுமி ப.லியானதோடு இதுவரை 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அசைவ பிரியர்களை அ.திர்ச்சியடைய வைத்துள்ளது.