வவுனியாவில் 11 நாட்களில் 63 பேர் மரணம் : 1651 பேருக்கு கொரோனா தொற்று!!

வவுனியாவில்..

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 11 ஆம் திகதி வரை 1651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை 1651 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 63 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது. வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும் மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை.

இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது. ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப்..

43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் அதிகளவான,

ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும்,

நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட யாழ். மருத்துவ பீட மாணவி : நடந்தது என்ன?

திருலிங்கம் சாருகா..

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவபீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்கான கட்டில்கள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா வைத்தியசாலைக்கு..

வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்கான கட்டில்கள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அவர்களுக்கான கட்டில்களுக்கான பற்றாக்குறை மற்றும் இடவசதிப் பிரச்சனை என்பன ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நோயாளர்களுக்கான வசதிகளுடன் கூடிய 3 கட்டில்கள் மற்றும் இரண்டு ஒட்சிசன் சிலின்டர் வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் லாவண்யா நகையக உரிமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழு லட்சம் பெறுமதியான குறித்த பொருட்கள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன், வைத்தியர் மதுரகன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 38 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (11.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (11.09) 06 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 06 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

தரணிக்குளம், பெரியஉலுக்குளம், பூந்தோட்டம், புளியங்குளம், பட்டானிச்சூர் (இரண்டு நபர்கள்) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.

இந்நிலையில் மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ப.தற்றமாக இ.ருந்த புது மா.ப்பிள்ளை : அதிகாலையில் அ.லறிய ம.னைவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவு அறையிலேயே புதுமாப்பிள்ளை தூ.க்.கி.ல் ச.டலமாக தொ.ங்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த அதிகாலையில் மணமகள் நந்தினி அ.லறியுள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன் கார்த்திகேயன் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரி.ழ.ந்.து கி.டந்துள்ளார்.

இதனால் அ.திர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசார் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலிஸார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிசார் மணமகளிடம் ந.டத்திய மு.தற்கட்ட வி.சாரணையில், கார்த்திகேயன் ப.தற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தேன்.

பாத்ரூம் சென்று வந்தவரை கூடவே சென்று அழைத்து வந்து பக்கத்தில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் காலையில் எழுந்தபோது பக்கத்தில் ஆள் இல்லாததைக் கண்டு தே.டி.ய போதுதான் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி இ.ற.ந்.து கி.டந்தார் எனத் தெவித்துள்ளார்.

மே.லு.ம் இ.து.ப.ற்.றி பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து பு.து மா.ப்.பி.ள்.ளை கார்த்திகேயனின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ண.ம் கு.றி.த்.து வி.சா.ரி.த்.து வ.ரு.கி.ன்.ற.ன.ர்.

மாணவர்களுக்கு திட்டமிட்ட வகையில் பரீட்சைகளை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

பரீட்சை..

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 60 நாட்களை கடந்தும் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இலங்கையில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர, க.பொ.த சாதாரணதர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்காக தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதன்படி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2021 நவம்பர் 14ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும், க.பொ.த சாதாரணதர பரீட்சை 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 3ஆம் திகதி வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டிருந்தன.

என்ற போதும் இவை தற்போது முன்மொழியப்பட்ட தற்காலிக திகதிகளே, நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் தற்போது கல்வி அமைச்சிற்கும்,அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழ்வின்-

வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சி.றுமி க.ர்ப்பமான வழக்கில் அவரது தந்தையும், காதலனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அ.திரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி.றுமிக்கு வ.யிற்று வ.லி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.றுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சிசிக்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அ.திர்ச்சியடைந்தனர், காரணம் சி.றுமி 2 மாதம் க.ர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சி.றுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார். இதைகேட்டு தலைசுற்றல் ஏற்பட்டு அ.திர்ச்சியில் சிலையாய் நின்ற தாய் பின்னர் தனது மகளிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.

சி.றுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இருந்தது. சி.றுமியின் தந்தையான முனியசாமி (39) பெற்று மகள் என்றும் பாராமல் சீ.ரழித்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது என மி.ரட்டியுள்ளார்.

மேலும் சி.றுமியை காதலிப்பதாக கூறி வந்த அறிவுமதி (19) என்ற இளைஞரும் சி.றுமிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்தது வி.சாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சி.றுமியின் தாய் பொலிசில் அளித்த பு.காரின் பேரில் முனியசாமி, அறிவுமதி இருவரையும் பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு : ஒரு எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஹொட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சி.றுமி உ.யிரிழந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ ஓட்டலில்,

ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் புதன்கிழமை சிக்கன் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகள் லோஷனாவுக்கு திடீரென வாந்தி, ம.யக்கம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சி.றுமி உ.யிரிழந்தார். அதே போல், அந்த ஹொட்டலில் சாப்பிட்ட ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் பாத்திமா, விஷ்ணு சீனிவாசன், தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, ம.யக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமையின் வி.பரீதம் உணர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா, மற்றும் பொலிஸ் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர், பா.திக்கப்பட்டவர்களிடம் விசாரித்துவிட்டு, செவன் ஸ்டார் பிரியாணி ஹொட்டலில் உணவு பொருள் பா.துகாப்பு குழுவினருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

பிரியாணி சமைக்க கெ.ட்டுபோன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டதா? அல்லது பிரியாணியில் வேறு ஏதும் கலக்கப்பட்டதா? என்பது குறித்து வி.சாரித்த அதிகாரிகள், ஆய்வுக்காக இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துச்சென்றதோடு அந்த கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் பா.திக்கப்பட்டவர்கள் அங்கு சாப்பிட்டதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகளும் அங்கிருந்து சேகரிக்கப்பட்டது. பலரது விருப்ப உணவான பிரியாணியை சாப்பிட்ட பின் சி.றுமி ப.லியானதோடு இதுவரை 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அசைவ பிரியர்களை அ.திர்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11000 ஐ கடந்தது!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 87 பெண்களும், 70 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று முன்தினம் (09.09.20210 கோவிட் தொற்றினால் 131 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தாயின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த 9 வயது மகன் : நெகிழ்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்து கொடுத்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன்.

இவர் அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து தன்னுடைய 9 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சுபாஷினிக்கும், திரைத்துறையில் ஓவியராக பணிபுரிந்து வரும், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆதிஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன் படி இவர்களின் திருமணம், மதுரை திருமங்கலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இவர்களின் திருமணத்தின் போத், சுபாஷினியின் 9 வயது மகன் தாலி எடுத்து கொடுக்க, ஆதிஸ், தாலி காட்டினார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

மகன் தாலி எடுத்துக் கொடுத்ததைக் கண்ட தாய் சுபாஷினி ஒரு நிமிடம் கண்கலங்கிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கணவனை தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த மனைவி மற்றும் மகள்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் கணவன் உயிரிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், கணவனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

வேப்பமடு பிரதேசத்திலுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட, நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவரின் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று காலை சடலம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் காலமான குறித்த நபர், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரு நாட்களின் பின்னர் 6ஆம் காலை அவரது மனைவி சித்தி அஜீபாவும் (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) குறித்த தினத்தின் நண்பகல் வேளையிலும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 4ஆம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தாருக்கு (வயது 56) கோவிட் தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று!!

டெல்டா வைரஸ்..

செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (11.09) வெளியாகின.

அதில் செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலும் 15 பேர் டெல்டா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேர் இனங்காணப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களை டெல்டா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, டெல்டா வைரஸ் தொற்று பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.

கைபேசி, தொலைக்காட்சி உட்பட 623 பொருட்களின் இறக்குமதி குறித்த தீர்மானம் : விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படுமா?

623 பொருட்கள்..

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

என்ற போதும் இதனூடாக குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படாது. வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு முறைமைக்கு மாத்திரமே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள், உதிரிப்பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிகப்படியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி சந்தையின் உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-