பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்..

த.மிழகத்தில் பள்ளிக்கும் செல்லும், மாமன் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்தார்.

ஆ.யு.த.ப் ப.டை.யி.ல் இருந்து சென்னை, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த பழனிக்குமார். தற்போது கு.ற்றப்பிரிவு ஆய்வாளருக்கு டிரைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் திகதி பழனிக்குமார், தன்னுடைய மாமன் மகளை மதுரையில் இருக்கும் சமயநல்லூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின், இவர் தனது புது மனைவியுடன் சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, கு.ழந்தைகள் நல அமைப்புக்கு பழனிக்குமார், திருமணம் செய்து கொண்டது ஒரு மை.னர் கு.ழந்தை, அவருக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை. இது ஒரு கு.ழந்தை தி.ருமணம் என்று பு.கா.ர் சென்றுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன்பேரில் வி.சாரித்த போது குடும்ப கவுரவத்துக்காக நடத்தப்பட்ட கு.ழந்தை தி.ருமணம் என்பது தெரியவந்துள்ளது.

பழனிகுமாரின் மாமன் மகள் ப.ள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில் வேறொருவரை காதலித்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்த பெண்ணின் பெற்றோர், அவர் காதலனை திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரவம் பா.திக்கப்படும் என்று கூறி பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அந்த சி.று.மி.யை பழனிகுமாருக்கு தி.ருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

வேறு வழியின்றி பழனிக்குமாரும், குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் தனது மாமன் மகளான சி.று.மி.யை திருமணம் செய்து கொண்டு சென்னை அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இ.தனால் 17 வ.ய.து மை.ன.ர் சி.று.மி.யை தி.ருமணம் செ.ய்த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க பழனிக்குமார் மீ.து போ.க்.சோ ச.ட்டத்தின் கீ.ழ் பொ.லிசார் வ.ழக்கு ப.தி.வு செ.ய்து, அ.வரை நீ.திமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர்.

இந்தியாவில் அசுர வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை நோய் : 3 வாரத்தில் 31,000 பேர் பாதிப்பு, 2100 பேர் பலி!!

பூஞ்சை நோய்..

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 3 வாரத்தில் கருப்பு பூஞ்சையால் 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,100 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பலவீனமானவர்கள் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) நோய் பாதித்து வருகிறது.

இந்த நோய் பாதிப்பால் பலர் தங்கள் கண் பார்வையை இழக்கின்றனர். உயிரையும் பறிக்கும் உயிர்க்கொல்லியாகவும் இந்நோய் இருந்து வருகிறது. இதனால், கருப்பு பூஞ்சையை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சையின் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 31,216 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,109 பேர் இறந்துள்ளனர். 150% நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 7,057 பேர் பாதிக்கப்பட்டு 609 பேர் இறந்துள்ளனர். கடந்த மே 25-ஆம் திகதி புள்ளி விவரங்களின்படி, மகாராஷ்டிராவில் 2,770 பேர், குஜராத்தில் 2,859 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது இதர மாநிலங்களிலும் மளமளவென அதிகரித்து வருகிறது.

இந்நோயின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்பியோடெரிசின்-பி மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதே பலி எண்ணிக்கை உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தற்போது, மாநிலங்களின் பாதிப்பு அடிப்படையில் ஆம்பியோடெரிசி- பி மருந்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு தரும் மருந்து போதிய அளவுக்கு இல்லை எனவும், கூடுதல் மருந்து தர வேண்டும் எனவும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதிகரிக்கும் பேக்கரி உற்பத்திகளின் விலை!!

பேக்கரி உற்பத்தி..

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட வேண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று இரவு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

உலகின் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளும் இலங்கையில்!!

கொரோனா வைரஸ்…

உலகில் தற்போது காணப்படும் அனைத்து வகையான கோவிட் வைரஸ் திரிபுகளும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, கோவிட் வைரஸ் திரிபுகள் தொடர்பிலான சோதனைகளை சீரற்ற முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் தினசரி கோவிட் மரணங்கள் 100 முதல் 200 வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகிய திரிபு வைரஸ் வகைகளுடன் லேசான, மிதமான மற்றும் அபாயகரமான வைரஸ் திரிபுகள் நாட்டில் பரவி வருகின்றது.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் சீரற்றவையாக இருப்பதால் இந்த நிலைழைமயை எப்போதும் தடுக்க முடியாது. நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும் அவை ஊடகங்களின் சித்தரிப்பு மட்டுமே ஆகும்.

பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறந்த நிலையிலேயே இருக்கின்றன. வீதிகளில் பொதுமக்கள் அதிகமானோர் காணப்படுவதால் பாரிய தொகை நிதியினை செலவிட்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஸ்ட்டிக்கர் ஒட்டும் முறை பயனற்றதாகிவிட்டது.

இந்த நிலைமை பல உப கொத்தணிகளை உருவாக்க வழிவகுக்கும். எனவே தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஆலயத்தின் முன்பாக நின்று கோழி விற்பனையில் ஈடுபட்டவரின் அனுமதிப் பத்திரம் பறிமுதல்!!

கோழி விற்பனை..

வவுனியா, குட்செட் வீதியில் ஆலயம் முன்பாக வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனையில் ஈடுபட்டவரின் பயணத்தடைக் கால அனுமதிப் பத்திரம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (12.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்ப்பில் மேலும் தெரியவருவதாவது, பயணத்தடைக் காலப்பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்று கோழி இறைச்சி விற்பனை செய்வதாக பிரதேச செயலகம் ஊடாக,

பெறப்பட்ட அனுமதியை வைத்து வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற பொலிசார் பயணத் தடைக் காலத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று கோழி விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்ததுடன்,

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக சுகாதாரப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி : சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை!!

பாணில் போத்தல் மூடி..

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (12.06) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதியில் வாகனத்தை மறித்து ஒருவர் பாணினை வாங்கியுள்ளார்.

வாங்கிய பாணினை உண்பதற்காக எடுத்த போது அதனுள் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றின் மூடி இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதுடன், பாணும் சுகாதாரப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனைப் பெற்று முறைப்பாட்டை பதிவு செய்த சுகாதாரப் பிரிவினர், கொவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் வழங்கப்பட்ட பாஸ் அனுமதியைக் கொண்டு சுகாதார சீர்கேடான முறையில் குறித்த பேக்கரி செயற்பட்டுள்ளதாக போக்கரிக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வவுனியா கற்குழியில் 97 பேரிடம் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை..

வவுனியா, கற்குழிப் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக 97 பேரிடம் பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்குழிப் பகுதியில் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து எழுமாறாக பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அத்தியாவசிய தேவை கருதி அனுமதி பெற்று வீதியால் பயணித்தவர்கள், தேவையற்ற வகையில் கற்குழி கிராமத்தில் நடமாடியவர்கள், வீடுகளில் இருந்தோர் என பலரும் பொலிசாரால் வரவழைக்கப்பட்டு,

சுகாதாரப் பிரிவினரால் அவர்களது விபரங்கள் பதியப்பட்டு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. கற்குழியின் மூன்று பகுதிகளில் இவ்வாறு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 97 பேர் வரையில் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, பிசீஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா தொற்று : நேற்றும் 62 பேர் பலி!!

கொரோனா…

இலங்கையில் மேலும் 62 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 2759 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,893 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரையில் 184,090 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, கோவிட் பரவல் காரணமாக ,நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

வவுனியா, சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (11.06.2021) வெளியாகின.

அதில் சகாயமாதாபுரம் பகுதியில் 29 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் எட்டு பேருக்கும், மகாஇலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் பொலிசார் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் தங்கியுள்ள ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஒருவருக்கும் என 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தில் ஏற்கனவே 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போது 29 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் இக் கிராமத்தில் 96 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல் வீச்சு : சாரதி காயம்!!

பேரூந்து மீது கல் வீச்சு…

வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சுத் தா.க்.கு.த.ல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று த.ப்பிச் சென்றுள்ளனர்.

முருகனூர் பகுதியில் இன்று (12.06.2021) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு,

முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல்வீச்சுத் தா.க்.கு.த.ல் மேற்கொண்டுள்ளனர்.

கல்வீச்சு தா.க்.கு.த.லை.ய.டு..த்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தா.க்.கு..தல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து த.ப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பேருந்தின் அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் எவருக்கும் பெரியளவில் கா.யங்கள் ஏற்படவில்லை.

ஆடைத்தொழிற்சாலையினால் கொரோனா தொற்று பரவுவதாக வடமாகாணத்தில் பல பகுதிகளில் எ.திர்ப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் கு.ற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலை அதிரடியாக அதிகரிப்பு!!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு..

சிபேட்கோ எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் எரிப்பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை : 20 ரூபாவால் அதிகரிப்பு – (157 ரூபா), ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை : 23 ரூபாவால் அதிகரிப்பு – (184 ரூபா),

ஒரு லீற்றர் டீசல் : 07 ரூபாவால் அதிகரிப்பு – (111 ரூபா)
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் : 12 ரூபாவால் அதிகரிப்பு – (144 ரூபா)
ஒரு லீற்றர் மண்ணெண்ணை : 07 ரூபாவால் அதிகரிப்பு – (77 ரூபா)

எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை தொடர்பிலான நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடலினுள் போடப்பட்ட 40 பேரூந்துகள்!!

பேரூந்துகள்…

வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமையை விருத்தி செய்வதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று வடக்குக் கடலில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட பஸ் வண்டிகளை கடலினுள் விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு தேவையான சூழலை உருவாக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தில் சுமார் 40 கைவிடப்பட்ட பஸ் வண்டிகள் இவ்வாறு கடலினுள் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா எப்போ வீட்டுக்கு வருவார்? விமானியான தந்தை இறந்ததை அறியாமல் காத்திருக்கும் 5 வயது மகள்!!

இந்தியாவில்…

இந்தியாவில் இளம் வயதில் விமானி கொரோனாவால் உ.யிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் படும் வேதனை மனதை உருக்கியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஸ் திவாரி (36).  இவர் ஏர் இந்தியாவில் விமானியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி திவாரி கொரோனா பாதிப்பால் உ.யிரிழந்தார். திவாரியுடன் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனியர் விமானிகளான கேப்டன் அமிதீஷ் பிரசாத், கேப்டன் பிரசாத் கர்மகர், கேப்டன் சந்தீப் ராணா, கேப்டன் கில் ஆகியோரும் உ.யிரிழந்துள்ளனர்.

உ.யிரிழந்த திவாரிக்கு தாஸ் என்ற மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது. தாஸ் கூறுகையில், திவாரி உ.யிரிழந்தது என் குழந்தைக்கு தெரியாது.

அப்பா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி விடுவார் என காத்திருக்கிறாள். திவாரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக என் மகளிடம் கூறியிருக்கிறேன்.

அதற்கு, அப்பா வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது, எப்போ தான் வருவார் என கேட்டு கொண்டிருக்கிறார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தான் என் கணவர் இறந்திருக்கிறார் என கூறியுள்ளார்.

திருமணமாகி 17 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட குழந்தையில்லாத தம்பதி அடுத்தடுத்து உ.யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (40), தச்சு தொழிலாளி.

இவரது மனைவி பூர்ணிமா (36 ). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். இதனிடையே அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பூர்ணிமா இ.றந்தார். இன்று அதிகாலை சக்திவேலும் இறந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன்-மனைவி ப.லியான சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காதலியை 10 ஆண்டுகளாக ஒரே அறையில் ரகசியமாக வைத்திருந்த காதலன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கா.ணாமல் போன இளம் பெண் ஒருவர் பத்து ஆண்டுகளாக காதலனுடன் அறை ஒன்றில் ரகசியமாக தங்கி வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கேரளாவின், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் கடந்த 2010-ஆம் ஆண்டு திடீரென மா.யமானார். இதனால் பெற்றோர் கொடுத்த பு.காரின் அடிப்படையில் பொலிசார் தேடி வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் அவரை க.ண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கா.ணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை. இதனால், இரவில் மட்டும் வீட்டின் கதவு அல்லது ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வந்துள்ளார். காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வாராம்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை பி.டித்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். அப்போது, காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. பெண்ணின் குடும்பத்தினரும் இதை எதிர்க்கவில்லை என்று கூறினார்.

திருமணமான 4 மாதத்தில் ஒரே கயிற்றில் ச.டலமாக தொ.ங்கிய தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதி ஒரே க.யிற்றில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.

அதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது.

பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 40 நாட்கள் கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சவிதாவுக்கு கரு கலைந்துவிட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவரும் மிகுந்த ம.னவேதனையுடன் காணப்பட்டு வந்ததோடு வாழ்க்கையில் வெறுப்படைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் மணியும், அவரது மனைவி சவிதாவும் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, புதுமணத்தம்பதி ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தை பார்த்து அ.தி.ர்.ச்.சி.யி.ல் உறைந்தனர்.

தகவலின்பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி, சவிதா ஆகியோரின் உ.டல்களை மீ.ட்.டு பி.ரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட வி.சாரணையில், கரு கலைந்ததால் மன உளைச்சலில் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக தீ.வி.ர வி.சாரணை நடந்து வருகிறது.