விரைவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!!

எரிபொருட்களின் விலை…

பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை செய்ய செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் விரைவில் பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் வலைகளில் திருத்தங்கள் செய்யும் தினத்தை அறிவிப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த 21 மாதங்களாக அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை செய்யாமல் இருந்தது.

தொடர்ந்தும் அரசாஙகத்தினால, பாரிய நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடனை திருப்பி செலுத்த முடியாத ஆபத்தான நிலைமைக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சென்றுள்ளது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

-பெட்ரோல்-

21ஆம் திகதி வரை பயணத் தடை தொடர்ந்தும் நீடிப்பு : 14ஆம் திகதி நீக்கப்பட மாட்டாது!!

பயணத் தடை..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி!!

கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல்…

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் – மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்டவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 22 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு அமெரிக்காவின் பன்முகத்தன்மையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் சிறந்த குடிமக்களால் ஆனது, அதே நேரத்தில் பரந்த அளவிலான பின்னணிகள், அனுபவங்கள் மற்றும் தொழில்களைக் குறிக்கிறது.

அந்த வகையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!!

அபூர்வ சத்திர சிகிச்சை…

கண்டியில் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மரத்திலிருந்து விழுந்தால் முதுகெலும்புக்கு கடுமையாக சேதமடைந்த 60 வயதான கொவிட் தொற்றாளருக்கே இந்த சத்திரசிசிக்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடலில் ஒக்ஸிஜன் அளவு குறைவான இருந்ததுடன் மயக்கமடைய செய்ய முடியாத கட்டத்தில் கடும் அவதானமிக்க நிலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கண்டி வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுனந்த உடகெதர தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையில் 6 விசேட வைத்தியர்கள் பங்கேற்றனர்.

சாதாரண நிலையில் இருக்கும் நபர் ஒருவருக்கே முதுகெலும்பு சத்திரசிகிச்சை செய்வதென்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் இந்த நபருக்கு கொவிட் தொற்றியிருந்ததுடன்,

அவரது உடலில் ஒக்ஸிஜன் அளவு நூற்றுக்கு 80 வீதம் குறைவடைந்திருந்ததுடன், அவரை மயக்கமடைய செய்து சத்திரசிகிச்சை செய்வதென்பது விசேட காரணம் ஒன்றாகும் என விசேட வைத்தியர் சுனன்ந்த உடகெதர தெரிவித்துள்ளார்.

ஏணி ஒன்றின் உதவியுடன் பலாக்காய் பறிக்க சென்ற போது கீழே விழுந்தமையினால் குறித்த நபரின் முதுகெலும்பு பாரிய சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதுவரையில் அவரது பாதங்கள் செயலற்ற நிலையில் காணப்பட்டமையினால் சத்திரசிகிச்சை வேண்டிய கட்டாய நிலைமை காணப்பட்டது.

இரண்டு பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபருக்கு ஒக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டுள்ளது. எனினும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் : இராணுவத் தளபதி!!

போக்குவரத்து கட்டுப்பாடுகள்..

கடுமையான சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை பயண தடையை நீக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி இந்த தீர்மானித்தை எடுத்துள்ளது. நாட்டை திறந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அத்துடன் திருமண நிகழ்வுகள், விருந்துகள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டை மீண்டும் திறப்பதற்காக அனைத்து பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் இன்றைய தினம் சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

சுகாதார ஊழியர்கள்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து ‘தீர்வுகள் தாமதம் பிரச்சனைகள் முடிவற்றவை ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததுடன், வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஒண்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (11.06) காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மதியம் 12 முதல் 12.30 வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, ‘சுகாதார துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, பயணத்தடை நேரத்தில் அவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடு, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு தேவை, சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்று’ உள்ளிட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளரின் நன்மை கருதி சுகாதார ஊழியர்கள் சேவை வழங்கிய போதும், ஏனைய நோயாளர் விடுதிகளில் வைத்தியர்களே முழுமையான சேவைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை…

வவுனியா நகரப் பகுதியில் வீதியில் பயணித்தவர்கள் சுகாதாரப் பிரிவினரால் வழிமறிக்கப்படடு அவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அண்மையில் இன்று (11.06) மதியம் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து வைத்தியர்களான யூட் பிரீஸ் மற்றும் பிரசன்னா அவர்களின் தலைமையில் எழுமாற்றாக பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அத்தியாவசிய தேவை கருதி அனுமதி பெற்று வீதியால் பயணித்தவர்கள், தேவையற்ற வகையில் நகரில் நடமாடியவர்கள் என அனைவரும் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு, சுகாதாரப் பிரிவினரால் அவர்களது விபரங்கள் பதியப்பட்டு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 50 பேர் வரையில் இவ்வாறு பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

நாட்டில் கொரோனா பெருந்தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரமாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2011ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் நாட்டில் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் மொத்தமாக 101 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுவரையில் நாள் ஒன்றில் வெளியிடப்பட்ட அதி கூடிய கோவிட் மரணப் பதிவுகள் நேற்றைய தினம் 101 என பதிவாகியுள்ளது.

கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவருக்காக, ஒரு கிராம மக்களே சேர்ந்து செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது 34 வயதில் பாக்யலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

மருத்துவரான இவரும், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அங்கிருக்கும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் 24-ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து விடுபட்டார். ஆனால், பாஸ்கர்ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். முதலில் அவர், குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் வரை செலவாகலாம் எனவும் கூறியுள்ளனர்,

இதை கேட்டு அவரது மனைவி பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று வேதனையில் இருந்துள்ளார். ஆனாலும் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், சிறிதளவு பணத்தை திரட்டி, அங்கிருந்து ஐதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் கணவரை சேர்த்தார்.

மேலும் தனக்கு தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார். தங்களது கிராமத்துக்கு இரவும், பகலும் அயராது மருத்துவ சேவை புரிந்த மருத்துவர் பாஸ்கர் ராவ் உ.யிருக்கு போ.ராடி கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது.

அ.திர்ச்சியுற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடி மருத்துவருக்கு உதவ முடிவு செய்தனர். அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை சேர்த்தனர். பலர் சேமிப்பு பணத்தை கூட மருத்துவரின் உ.யிர் காக்க கொடுக்க முன் வந்தனர்.

அதன்படி 20 லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது. அவற்றை பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனியுங்கள் என கூறினர்.

மருத்துவர் பாஸ்கர்ராவ் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்தது. உடனே அவர், பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயதுக் குழந்தைக்கு தாயால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலுக்கு இ.டையூறாக இருந்த 3 வயது மகனை தாய் து.டி.து.டி.க்.க அ.டி.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்த பெண் உதயா (24). இவரை சுரேஷ் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிக்கு, உமேஷ் என்ற 3 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவர் சுரேஷ் மற்றும் உதயாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது, உதயா தனது மகனுடன் ஜிமெட்டிலா பகுதியில் வசித்து வந்தார். கணவனை பிரிந்த தனிமையில் வசித்து வந்த உதயாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கரன் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், ஜீடிமெட்லாவில் உள்ள பகத்சிங் நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, தனது கணவர் சுரேஷ், மகன் உமேஷை பார்க்க விரும்புப்போது மட்டும் உதயா, தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று மகனை அழைத்து சென்று காட்டி வந்துள்ளார்.

மகனை சுரேஷ் சந்தித்த பிறகு வாடகை வீட்டிற்கு வந்து, பாஸ்கரனுடன் வசித்து வந்துள்ளார். அப்போது இப்படிய சென்று கொண்டிருந்தால், நம்முடைய உறவுக்கு உமேஷ் இடையூறாக இருந்துவிடுவான் என்று காதலன் பாஸ்கரனுடன் சேர்ந்து உதயா மகனை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளார்.

அதன் படி, உதயாவும், பாஸ்கரனும் சேர்ந்து உமேஷை க.டு.மை.யா.க தா.க்.கி.ய.தி.ல், ம.ய.க்.க.ம.டை.ந்.த சி.று.வ.ன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 வயது சி.று.வ.ன் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ன்.

இது பற்றிய தகவல் அறிந்த சி.று.வ.னி.ன் தந்தை சுரேஷ் அளித்த பு.கா.ரி.ன் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீடிமெட்லா பொலிசார் உதயாவையும் அவரது காதலன் பாஸ்கரன் மீதும் கொ.லை வ.ழக்கு பதிவு செய்து கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றுக்கு பலி!!

கொரோனா..

இலங்கையில் பச்சிளம் குழந்தை கோவிட் 19 தொற்றால் காரணமாக உயிரிழந்துள்ளது. பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கோவிட் நிமோனியா இந்த மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த குழந்தையின் மரணம் கம்பளை மருத்துவமனையில் நடந்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு ரிஜ்வே மருத்துவமனையில் கடந்த வருடம் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை கோவிட் காரணமாக உயிரிழந்தது.

இதுவே கோவிட் காரணமாக உயிரிழந்த முதல் குழந்தையாக இருந்ததுடன் தற்போது 8 நாட்களான குழந்தை உயிரிழந்துள்ளது. இலங்கையில் இதுவரை கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி வருகிறது.

கோவிட் காரணமாக ஆயிரத்து 910 பேர் இறந்துள்ளனர். அத்துடன் ஒரே நாளில் அதிகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று அறிவிக்கப்பட்டதுடன் நேற்றை தினம் 67 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்தனர்.

நின்று போக இருந்த மகளின் திருமணம்.. அதே நாளில் நடத்தி ஊர் மக்களை வாயடைக்க வைத்த தந்தை!!

கேரளாவில்..

மகளின் திருமணம் நிற்ககூடாது என்பதற்காக தந்தை படகை ஒன்று வாடகைக்கு எடுத்து மேடையாக அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியைச் சேர்ந்த பெண் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் செய்வதாக கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து பேசி தள்ளி வைத்தனர். இதனிடையே, மணமகளின் இல்லத்தில் எளிமையான முறையில் மணமக்களுக்கு திருமணம் நடத்துவதாக இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

ஆனால், மணமகள் ஊரில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மணப்பெண்ணின் வீட்டில் தண்ணீர் புகுந்து திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் திருமணம் தடைப்படுகிறதே என மணப்பெண்னான ஆதிரா பயங்கர மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதைக்கண்ட ஆதிராவின் தந்தை, மகளின் மனநிலையை புரிந்து திருமணத்தை குறித்த தேதியில் எப்படியாவது நடத்த வேண்டும் என முயன்றார். இதையடுத்து, வீட்டில் திருமணத்தை நடத்த வேற வழியில் யோசித்த அவர், ஒரு படகைத் திருமண மேடையாக மாற்ற முடிவெடுத்தார்.

இதற்காக ஒரு பெரிய படகை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அதில் திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்து மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதத்துடன், மிதக்கும் படகு முழுவதும் பூக்கள் அலங்கரிக்கபட்டு கோலாகலமாக மணமக்களின் திருமணம் நடத்தியுள்ளார்.

மேலும், இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு பங்கேற்றனர்.

இதன்பின்னர், மகளின் திருமணம் நின்று விடக் கூடாது என்பதற்காக தந்தை செய்த செயல் அனைத்து மக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டும் மற்றும் அந்த தந்தைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.

கணவரின் கொ.டு.மை தாங்காமல் 27 வயது இளம் மனைவி எடுத்த வி.பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் சி.த்.ர.வ.தை தாங்க முடியாமல் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் அ.தி.ர்.ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.

தம்பதிக்கு இரு கு.ழந்தைகள் உள்ளன. வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மூர்த்தி தனது மனைவி வித்யாகுமாரியிடம் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு அடிக்கடி த.க.ரா.று செ.ய்துள்ளார். மேலும், அவரை இ.ர.க்கமின்றி அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை தம்பதிக்கு இடையே த.க.ரா.று ஏற்பட்டு உள்ளது. பின்னர், மூர்த்தி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, வித்யாகுமாரி வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ச.ட.ல.த்.தை மீ.ட்.ட.ன.ர். இது குறித்து வித்யாகுமாரின் தாய் மீனாட்சி காவல் நிலையத்தில் பு.கா.ர் செய்தார்.

அதில், எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அ.டி.த்.து உ.தை.த்து சொல்ல முடியாத வகையில் து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதன் காரணமாக, அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். அவரது இ.ற.ப்.பு.க்.கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் செய்த நெஞ்சை ப.த.றவைக்கும் கொ.டூ.ர.ம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் போ.தை.க்கு அ.டி.மை.யா.ன கணவன் ஒருவர், தன்னுடைய ம.னைவியை நண்பர்களுடன் சேர்ந்து வ.ன்.கொ.டு.மை செ.ய்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே 1 1/2 வயதில் ஆண் கு.ழ.ந்தை உள்ள நிலையில், தற்போது ஜெயமணியின் ம.னைவி போ.லீசில் பு.கார் அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் ஜெயமணி, போ.தை.க்.கு அ.டி.மை.யா.வ.த.ற்.கா.க தன்னையே ந.ண்பர்களுக்கு விருந்தாக்கினார் என அ.தி.ர்.ச்.சிக.ர பு.கா.ரை தெரிவித்துள்ளார்.

அதாவது, தான் 5 மாதம் க.ர்ப்பமாக இருந்த போது, சத்து மா.த்திரை என்று ம.ய.க்.க மா.த்திரையை கொடுத்து தன்னை ம.ய.ங்.க வை.த்ததாகவும் அரை ம.ய.க்.க.த்.தி.ல் இருந்த போது , கணவரே அவரது கூட்டாளி சுந்தரமூர்த்தியை அழைத்து வந்தது, தன்னை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய வை.த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர், மணிகண்டன் என்பவரை அழைத்து வந்து அவருடன் ப.டு.க்.கை.யை ப.கிர்ந்து கொள்ள வ.ற்.பு.று.த்.தி.ய.தா.க.வு.ம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் சொன்னால் கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வேன் என்று க.ணவர் ஜெயமணி மி.ர.ட்.டி வ.ந்ததாகவும் வே.தனையுடன் தெ.ரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் மீண்டும் இதே த.வ.றை க.ணவன் செ.ய்.துவருவதால் தன்னையும் , கு.ழ.ந்.தை.யை.யு.ம் கா.ப்.பா.ற்.று.ம்.ப.டி க.ண்.ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வ.ழ.க்.கு ப.திவு செ.ய்.த போ.லீ.சார், ஜெயமணி மற்றும் அவனது கூட்டாளிகளை கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டைத்தனர்.

உணவு உண்ணும் போது அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில்..

எந்த வ.லி.யும் தெரியாமல் இறப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி ஒரு மனிதர் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே மரணித்தார். சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக உட்கார்ந்து உட்கார்ந்தபடியே அதே இடத்தில் உயிரிழந்தார்.

மேதக் மாவட்டம் தூப்ரான் கிராம எல்லையில் இந்த சம்பவம் நடந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தபடி உள்ளார்… சாப்பிட்டபடியே உள்ளார்… ஆனால் உயிரிழந்துள்ளார். இந்த வினோதமான நிகழ்ச்சி குறித்து கிராம மக்கள் ஆச்சரியமும் சோகமும் கொண்டுள்ளார்கள்.

இந்த படத்தில் தெரியும் மனிதர் அப்படியே உயிரிழந்தார். சப்பாத்தியை சாப்பிடுவதற்காக அதன் மீது வைத்த கை அப்படியே இருக்கிறது. உட்கார்ந்தபடியே வாயிலிருந்து ர.த்.தம் ஒழுகியபடி மரணம் அடைந்தார்.

இந்த விஷயம் குடும்ப அங்கத்தினர்களுக்குத் தெரிவதற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. அதற்குள் அதே நிலையில் கட்டையைப் போல் சடலம் இறுகிவிட்டது. இவர் சித்தி பேட்டை மாவட்டம் வர்கல் மண்டலம் துண்டுபல்லியைச் சேர்ந்த காசால சாயிலு (46).

வியாழனன்று மதியம் மேதக் ஜில்லா மனோகராபாத் மண்டலம் பாலட கிராமத்தில் ஒரு உறவினரின் அந்திமக் கிரியையில் பங்கு கொண்டார். அதே நாள் தூப்ரான் வழியாக சொந்த கிராமத்துக்கு செல்லுகையில் அல்லாபூரில் ம.து.வு.ம் உணவு பொட்டலமும் வாங்கிக் கொண்டு தூப்ரான் -கஜ்வேல் சாலை அருகில் சற்று தூரத்தில் அமர்ந்து உண்பதற்காக கையை உணவில் வைத்த சாயிலு மாரடைப்பால் அதே நிலையில் இறந்து போனார்.

எத்தனை நேரம் கழிந்தாலும் அவர் வீட்டிற்கு திரும்பாததால் குடும்ப அங்கத்தினர்கள் வெள்ளிக்கிழமை போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் தேடி வருகையில் சாலையருகில் அமர்ந்தபடியிருந்த சாயிலுவின் ச.டலத்தை கண்டனர்.

விவசாயம் செய்துவரும் சாயலுவுக்கு குழந்தைகள் இல்லை. இந்த சம்பவம் குறித்து தூப்ரான் சமூக ஆரோக்கிய நிலையம் சூப்ரவைசர் அமர்சிங் கூறியபோது சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக மாரடைப்பு வந்திருக்கலாம் என்றும் இதில் வ.லி.யோ வேறு ஏதும் அடையாளங்களோ இல்லாமலேயே உயிர் பிரிந்துவிடும் என்றும் விவரித்தார்.

14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் : இராணுவத் தளபதி அறிவிப்பு!!

பயணக்கட்டுப்பாடு…

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

மேலும், பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படாமல் தொடர்ந்து நீடிக்கப்படும் என வெளியாகி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 21ம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வரும் நிலையில் 25ம் திகதிமுதல் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.