இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்கள் : ஒரே நாளில் 11 பேர் பலி!!

கோவிட் மரணங்கள்..

இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும்,

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும்,

கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய  தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கோவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 530 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் 1,636 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா தொற்றாளர்கள்..

இலங்கையில் தாண்டவமாடும் புதிய கோவிட் கொத்தணியான ‘புத்தாண்டுக் கொத்தணி’யில் நாட்டில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையான கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.

இன்று மாத்திரம் 1,636 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ந்து நான்கு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 120 ஆக எகிறியுள்ளது.

கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்வடைந்துள்ளது.

11 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரயிலில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி : கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அப்படியே குதித்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய க.ற்பைக் கா.ப்பாற்றிக் கொள்ள ஓடும் இரயிலில் இருந்து கு.தித்த சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் Mulanthuruthy இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸில் கடந்த புதன் கிழமை 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆலப்புழாவில் இருக்கும் தன்னுடைய வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த இரயில் பெட்டியில், இன்னொரு நபரும், இந்த பெ.ண்ணும் மட்டும் த.னியாக இருப்பதை அறிந்த அந்த நபர், உடனடியாக இந்த பெ.ண்ணை தா.க்.கி, அ.வரை இரயிலின் க.ழிவறைக்குள் இ.ழுத்து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய மு.யன்றுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் ப.றி.க்.க மு.யன்றுள்ளார். இதனால் க.டும் அ.திர்ச்சியடைந்த அந்த பெ.ண், உடனடியாக இரயில் பெட்டியின் கதவை திறந்து அப்படியே இரயில் சென்று கொண்டிருக்கும் போ.தே கு.தித்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெ.ண்ணிற்கு த.லை.யி.ல் ப.லத்த கா.ய.ம் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணிடம் அ.த்.துமீ.றி.ய ந.பரின் பெயர் Bijukuttan என்பதும், அவர் ஆலப்புழாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நபர் மீது ஏற்கனவே தங்கநகை தி.ரு.ட்.டு வ.ழக்குகள் இருப்பதாகவும் இரயில்வே பொலிசார் தெரிவித்துள்ளனர். த.லை.ம.றை.வா.க உள்ள அந்த ந.ப.ரை பொலிசார் தே.டி வ.ருகின்றனர்.

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : கண்களில் இருந்து வழிந்த நீர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தனது மனைவியை கனத்த மனதுடன் வேறு நபருக்கு கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த வினோத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

உத்தம் மண்டல் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சப்னாவுக்கு கணவர் மண்டலின் உறவினர் ராஜு குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இதையறிந்த மண்டல் மற்றும் குடும்பத்தார் சப்னாவை கண்டித்தனர். ஆனால் ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்தார்.

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு ராஜுகுமாரை சப்னாவுக்கு திருமணம் செய்து வைக்க மண்டல் முடிவு செய்தார். அதன்படி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் தம்பதிகள் மண்டல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். இந்த சமயத்தில் தன்னையும் மீறி மண்டல் கண்களில் இருந்து நீர் வழிந்தது காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை!!

கொரோனா தொற்று..

இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரியவாறு பின்பற்றுமாறு தொடர்ச்சியாக நாட்டு மக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதாவது மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரையின் அடிப்படையில், இரண்டு நபர்களிடையே குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆபத்தான நிலையை நோக்கி நகரும் இலங்கை : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!!

ஆபத்தான நிலையை நோக்கி…

நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கிச் செல்கிறது. எனவே முழுமையான முடக்கலுக்கு செல்ல அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற பலமுறை கோரிக்கை விடுத்தபோதும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயல்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் ஆபத்தான சூழ்நிலையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் தாங்கள் பல கோரிக்கைகளை விடுத்ததாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்தார்.

தினசரி கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பதால், நோயாளியை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாமதம் காரணமாக, நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் வரை அவர்கள் தங்கள் வீடுகளில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும். இதன் காரணமாக அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்று ரோஹனா கூறியுள்ளார்.

கோவிட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவ்வளவு சாதகமானவை அல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நாட்டை உடனடியாக முடக்குவது குறித்து பரிசீலிக்குமாறும் அல்லது கூடிய விரைவில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுப்பதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு இரு வாரங்கள் தடை!!

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு..

இலங்கையில் திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இருவாரங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும். மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இரண்டு வாரங்கள் உடனடியாக தடை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கோவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

பூங்கா வீதியில்..

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் 19 வயது இளைஞன் செய்த மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

19 வயது இளைஞன்..

வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளுடன் கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கந்தசாமி கோவில் வீதியில் ச.ந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை மறித்து சோ.தனை செய்த போது குறித்த இளைஞனிடமிருந்து 2 மில்லி கிராம் ஹெ.ரோயின் போ.தைப் பொ.ருள் க.ண்டுபிடிக்கபபட்டது.

குறித்த ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளை மீ.ட்.ட பொலிசார் அதனை உடமையில் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா யாழ் வீதியில் டிப்பரை வழிமறித்து சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு : மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் அ.ட்டகாசம்!!

யாழ் வீதியில்..

வவுனியா, யாழ் வீதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் ந.டத்திவிட்டு மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் த.ப்.பி.ச் செ.ன்றுள்ளனர்.

இன்று (30.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்கள்,

யாழ் வீதி, சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வா.ள் வெ.ட்டுத் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர். குறித்த வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் டிப்பர் சாரதி ப.டு.கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லை மே.ற்கொண்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் த.ப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோட்டர் சைக்கிளின் கண்ணாடியும் உ.டைந்த நிலையில் மீ.ட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பிரணவன் (வயது 30) என்பவரே ப.டு.கா.யமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம் : உடனடியாக மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்ட உடல்!!

கே.வி.ஆனந்த் ..

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 24-ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது போன்ற நிலையில், தான் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கே.வி. ஆனந்த் மரணமடைந்தார்.

கொரோனா சிகிச்சையில் இருக்கும் போதே அவர் இறக்கும் போது, அவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போதும் அவருக்கு தொற்று உறுதியானால் அதன் பின்னரே கொரோனா மரணமாக அது மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கபடாது என்று தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது, அவரின் உடல், பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் 10 நாட்கள் பணியாற்ற அனுமதி : நாளை முதல் அமுலுக்கு வரும் நடைமுறை!!

அரச ஊழியர்கள்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச ஊழியர்கள் 10 நாட்கள் மாத்திரமே பணி செய்ய வேண்டும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்டுக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்ற சுற்றரிக்கமைய மே மாதத்தில் 18 நாட்களே பணியாற்ற வேண்டும். எனினும் ஒரு ஊழியர் மே மாத்தினுள் 10 நாட்கள் மாத்திரம் பணிக்கு வர வேண்டும் எனவும் ஏனைய நாட்களை சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறைகளில் பணிக்கு அறிவிக்கலாம்.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் போது நிறுவனங்களின் பிரதானிகளின் அவசியத்திற்கமை அழைக்க வேண்டும்.

நிறுவனத்தின் பிரதானிக்கு அவசியம் என்னறால் ஒரே ஊழியரை வாரத்திற்கு 5 நாட்களும் அழைக்க முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உழைப்பாளர்களுக்கு விடுமுறை வழங்குங்கள் : வர்த்தக சங்கம் கோரிக்கை!!

வர்த்தக சங்கம் கோரிக்கை..

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.

அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள் பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர்தினம் என்று அறியப்படுகின்றது.

இந்த தினத்தில் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மே 1ம் திகதி விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் உழைப்பால் இந்த உலகத்தினை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விடுமுறை வழங்கி அவர்களை கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டை முடக்க உடன் நடவடிக்கை எடுங்கள் : அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!

கொரோனா..

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே கருத்து வெளியிடுகையில், “இது ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புதிய மாறுபாட்டைக் கொண்ட அறிகுறிகளின் நோயாளிகளின் எண்ணிக்கை நாடு இதுவரை கண்டதை விட அதிகமாக உள்ளது என அந்த சங்கத்தின் துணை இயக்குநர் வைத்தியர் எஸ்.எம்.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

“தேவையற்ற முறையில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறினால், நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த கட்டாயப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் நோய் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் வேகமாக கோவிட் தொற்று பரவி வரும் நிலையில், பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் 1,531 கொரோனா தொற்றாளர்கள் பதிவு : பல பகுதிகள் முடக்கம்!!

கொரோனா..

இலங்கையில் மற்றுமொரு புதிய கோவிட் கொத்தணி உருவாகி தாண்டமாடுகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 1,531 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நாள் ஒன்றில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்றே இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியில் பதிவாகியுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக எகிறியுள்ளது.

புதிய கோவிட் கொத்தணியின் தீவிரத்தையடுத்து நாடெங்கும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேவேளை, நாடெங்கும் எழுந்தமான பி.சி.ஆர். பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார். மேலும், 362 பேர் கோவிட் வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 378 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே துடி துடித்து இறந்த பெண் : கண்கலங்க வைக்கும் பின்னணி!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் உ.யிரிழந்தவர்களின் ச.டலம் தெருக்கள் மற்றும் வீட்டிற்குள்ளும் கிடப்பதால், உறவினர்கள் கடும் வே.தனையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு கிரிதர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சுப்பம்மா கொரோனாவால் பா.திக்கப்பட்டதால், அவர் அங்கிருக்கும் சாய் நகர் காலனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருடைய மகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் வெளிப்பட துவங்கின. எனவே கிரிதர் தனக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்து சுப்பம்மா உ.யிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வர இயலாத நிலையிலிருக்கும் கிரிதர் உறவினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தன்னுடைய தாயின் ம.ரணம் பற்றி தகவல் அளித்து உ.டலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சுப்பம்மாவின் உ.டலை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. அதேபோல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் செவ்வாய் கிழமை இரவு முதல் தன்னுடைய தாயின் உ.டலை அடக்கம் செய்ய அரசிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் என்று வீட்டிற்குள்ளேயே அவருடைய உ.டலை வைத்து கொண்டு மகன் கிரிதர் காத்துகிடந்துள்ளார்.

அதே போல ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்த அஞ்சலி என்பவர் கொரோனாவால் பா.திக்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியது. அப்போது அஞ்சலியின் குடும்பத்தினர் போன்பே, கூகுள் பே அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துகிறோம் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் இங்கு ஒன்லி கேஸ் பேமெண்ட், நோ ஆன்லைன் பேமென்ட் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால், வேறு வழி இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளான அஞ்சலியை மருத்துவமனையின் வெளியே உட்கார வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் பணம் திரட்ட சென்றுவிட்டனர்.

மூன்று மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டி கொண்டு மருத்துவ மனைக்கு வந்த உறவினர்கள், மருத்துவமனைக்கு வெளியே அஞ்சலி பரிதாபமாக உ.யிரிழந்து கி.டப்பதை கண்டு அ.திர்ச்சி அடைந்தனர்.

அவருடைய உடலை அங்கிருந்து எடுத்துச்செல்ல எவரும் முன் வராத நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் ராஜேஷ், ராஜன் ஆகிய இருவரும் இறுதி யாத்திரை வாகனத்தை அழைத்து வந்தனர்.

கொரோனா பா.துகாப்பு உடையணிந்து கொண்ட அவர்கள் அஞ்சலியின் உ.டலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து அந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.