கொரோனாவால் இ.றந்தவரின் உ.டலை க.டித்து கு.த.றி மு.கத்தை சி.தைத்த நாய் : கண்ணீர் விடும் உறவினர்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்தவரின் உ.டலை தகனத்திற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை நா.ய் க.டித்து கு.தறிய சம்பவம், குடும்பத்தினரை க.டு.ம் அ.தி.ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பா.திக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவால் மிக மோ.சமாக பா.திக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்திரப்பிரததேசத்தின், காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில், ஆடர்லியாகப் பணியாற்றிய 51 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்றால் உ.யிரிழந்தார்.

இதையடுத்து, கொரோனா விதிமுறைகளின்படி மருத்துவமனை நிர்வாகம் அவரின் உ.டலை குடும்பத்தினரிடம் வழங்கினர். பிபிஇ கிட்டில் உ.டலைச் சுற்றி, அதற்கு மேல் பாலித்தீன் கவரால் சுற்றி உ.டல் வழங்கப்பட்டது.

அதன் பின் நடந்த சம்பவம் குறித்து, கொரோனாவால் உ.யிரிழந்தவரின் நண்பர் திரிலோக் சிங் என்பவர் கூறுகையில், நாங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி வரை ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தோம், வரவில்லை.

இறுதியாக நேற்று காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் கிடைத்தது. அதில் உ.டலை ஏற்றிக்கொண்டு ஹின்டன் தகனப் பகுதிக்குச் சென்றோம். அங்கு சென்றபின் எங்களுக்கு முன் ஏராளமான உ.டல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு 10 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள் எனத் தெரிவித்தனர்.

இதனால் அருகே இருந்த பிளாட்பார்மில் உ.டலை வைத்துவிட்டோம் காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அவரின் உ.டலை பிளாட்பார்மில் வைத்துவிட்டு, வெயில் க.டுமையாக இருந்ததால் நிழலில் ஒதுங்கி நின்றோம்.

ஏராளமான உ.டல்கள் இருந்ததால், நாங்கள் தகனம் செய்ய மாலை 6 மணி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகலின்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் எங்களிடம் வந்து, நீங்கள் பிளாட்பார்மில் வைத்திருந்த உ.டலை நா.ய் க.டி.த்.து.க் கு.த.றி.வி.ட்.ட.து,

மு.கத்தைச் சி.தை.த்.து.வி.ட்.ட.து என்று கூறினார் இதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்து உடனடியாக வந்து பார்த்த போதும், அவர் சொன்ன படியே நா.ய் க.டி.த்.து கு.த.றியிருந்ததாக வே.தனையுடன் கூறினார்.

அதன் பின் இது குறித்து உறவினர்கள் அனைவரும் போ.ரா.ட்.ட.த்.தி.ல் ஈ.டுபட்டதால், விரைந்து வந்த அதிகாரிகள், தெரு நாய்கள் வராத வகையில் த.டுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

தங்கைக்கு உதவி செய்வது போல அண்ணன் செய்த கொ.டூரம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தங்கையை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த அண்ணன் கை.து செ.ய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான பின்னணி வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் ம.ரணமடைந்தார். அவரின் மகள் லோகப்பிரியா (20) கல்லூரியில் படித்து வந்தார்.

லோகப்பிரியாவின் தாய் சிவகாமி நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நி.லையில் லோகப்பிரியா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.க் கி.டந்ததை பார்த்து அ.திர்ச்சியடைந்தார்.

அவரது க.ழு.த்.து மற்றும் கா.தி.ல் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை, வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை கா.ணாமல் போயிருந்தது. பணம் நகைக்காக கொ.லை அ.ரங்கேறி இருக்கலாம் என்று ச.ந்தேகப்பட்ட பொலிசார் கொ.லை.யா.ளி.யை.த் தே.டி வ.ந்தனர்.

லோகப்பிரியாவின் அண்ணனான அவரின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொ.லை செ.ய்.த.து வி.சாரணையில் தெரியவந்தது. பழனியப்பன் இ.றந்த பிறகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ்தான் உடனிருந்து சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் கொண்ட சுரேஷ், நிலையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் நெ.ருக்கடி அதிகரிக்கவே, என்ன செய்வது என யோசித்துள்ளார். எனவே பழனியப்பன் வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் என எண்ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செய்வது போல அடிக்கடி வந்து வீட்டை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சாதகமாக்கி, லோகப்பிரியாவின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, வீடு முழுக்க பணம், நகை எங்கே இருக்கும் என அலசியதாகக் கூறப்படுகிறது.

பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தவிர பெரிதாக பணமோ, நகையோ சிக்காத நிலையில், லோகப் பிரியா அணிந்திருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொ.ள்.ளை.ய.டி.த்.த.து தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை பொலிசார் கை.து செ.ய்து மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

எங்க அம்மா செத்துருவாங்க… ஆக்ஸிஜனை எடுத்துட்டு போயிடாதீங்க அய்யா : பொலிசார் முன் மண்டியிட்டு கதறிய மகன்!!

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சிகிச்சை பெற்று வரும் தாய்க்காக மகன் பொலிசார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.

ஆக்ராவில் உள்ள மருத்துவமனையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், பிபிஇ கிட் அணிந்திருக்கும் நபர், பொலிசார் முன் மண்டியிட்டு, தயவு செய்து ஐயா.

எங்கிருந்து நான் சிலிண்டரை ஏற்பாடு செய்வேன்? என் அம்மாவை உயிருடன் திரும்பி வீட்டிற்கு அழைத்து வருவேன் என என் குடும்பத்தினரிடம் வாக்குறுதி அளித்து விட்டு இங்கே வந்துள்ளேன் என கதறுகிறார்.

எனினும், கதறிய நபரை கண்டுக்கொள்ளாத பொலிசார் தங்கள் கடமையை செய்துள்ளனர். இரண்டு நபர்கள் சிலிண்டரை எடுத்துச்செல்வதை வீடியோ காட்டுகிறது. காவல்துறையின் இச்செயலுக்கும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்தன.

இந்நிலையில், ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட எந்த சிலிண்டரையும் பொலிசார் எடுத்துச்செல்லவில்லை எனக் கூறி ஆக்ரா காவல்துறை குற்றம்சாட்டை மறுத்துள்ளது.

குறித்த வீடியோவில் மண்டியிட்டு கதறிய நபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தரும் படி பொலிசாரிடம் கோரியதாக ஆக்ரா எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் : 24 மணிநேரமும் குவியும் உடல்கள்!!

தற்காலிக தகன மேடைகள்..

இந்தியத் தலைநகர் டெல்லியில் கோவிட் தொற்றால் மரணமடையும் மக்களது சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விறகுகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு டெல்லி நகர முதல்வர் ஜெய்பிரகாஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லிக்கு அருகில் உள்ள வனங்களில் இருந்து அவசரகால ரீதியில் விறகுகள் வெட்டப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்படுகின்றன. 24 மணிநேரமும் உடல்கள் குவிவது வேதனையளிப்பதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை சமாளிக்க நாய்களைத் தகனம் செய்யும் இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய டெல்லி அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இன்றைய நாளின் மாலை ஐந்து மணி வரையிலான காலப்பகுதியில் 1,077 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் 1451 தொற்றாளர்களும் நேற்று முன்தினம் 1111 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர் அடையாளம் காணப்பட்டால் அது பெரும் ஆபத்தாக மாறும் சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்க நாளுக்கு அதிகரித்து வருகின்றமை குறித்து பெரும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஆபத்தான நிலையை உணர்ந்து நாட்டு மக்கள் உரிய சுகாதார விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை போன்று இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

பரவும் கோவிட்..

நாட்டில் பரவும் கோவிட் மரபணு முன்னரை விடவும் ஆபத்தானது என்பதனால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுவது கட்டாயமாகும். அவ்வாறில்லை என்றால் நிலைமை மோசமடையும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வேகமாக பரவும் வைரஸ், கடந்த காலகளில் பிரித்தானியாவில் பரவி பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியதென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட பீசீஆர் மாதிரிகளின் பின்னர் இந்த விடயம் உறுதி செய்யப்பபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் முதலாவது, இரண்டாவது அலையை விடவும் அபாயமானதெனவும், அந்த மரபணு இலங்கை முழுவதும் ஏப்ரல் மாதத்தில் பரவியுள்ளது. இவ்வாறு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு மற்றும் இதற்கு முன்னர் பரவிய மரபணுவின் அறிகுறிகளுடன் தொடர்புடையதாகும்.

இதற்கு முன்னர் நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை காணப்பட்டது, புதிய மரபணுவில் உடல் வலி, தலைவலி, வாசனை தெரியாமை போன்ற விடயங்கள் காணப்படும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த புதிய மரபணு காரணமாக ஏற்படும் மரணங்கள் 55 வீதம் அதிகம் எனவும் மக்களுக்கு இடையில் 50 வீதம் அதிகமாக பரவும் எனவும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மாறுபாடு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதலில் ஏற்பட்டது. இது பரவினால் உயிரிழந்து விடுவோம் என்ற எண்ணமே எல்லோரிடமும் காணப்பட்டது. அது பரவியவுடன் சுகாதார பிரிவுகளிடம் தெளிவுப்படுத்தினோம்.

எனினும் 8 பேரிடம் மாத்திரம் காணப்பட்ட அந்த மரபணு மாறிய கொரோனா எல்லோரிடமும் எப்படி பரவியது என்பது தெரியவில்லை. எனினும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதென ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

– தமிழ்வின்-

“N JOY” தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் : பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

தேங்காய் எண்ணெய் ..

‘N JOY’ என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணையில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதியல் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் போது அதில் புற்றுநோய் ஏற்படுத்தும் எப்லடொக்ஸின் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மேலும் சில ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் அந்த தேங்காய் எண்ணையில் எப்லடொக்ஸின் உள்ளமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய இந்த பெயரின் கீழ் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யும் மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரி சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிறுவனத்தின் கிரான்ட்பாஸ் களஞ்சிய அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றல்!!

கொரோனா தடுப்பூசி…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (29.04) சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதாரத்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாவது கட்டமாக 1500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் துறையினர், நோயாளர் காவு வண்டி சாரதிகள் உள்ளிட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.

நுவரெலியாவில் பேரூந்து விபத்து : 20 பேருக்கு பலத்த காயம்!!

பேரூந்து விபத்து..

நுவரெலியா – ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இராகலை – கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளது.

ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இராகலை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (29.04.2021) பிற்பகல் 12 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 20 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரும், ஹைய்பொரஸ்ட் வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் இராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் விமான நிலையத்தை உடனே மூட முடியாது : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

விமான நிலையம்..

விமான நிலையத்தை மூடுவது அல்லது சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் வழியாக வருபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பதால் விமான நிலையத்தை உடனடியாக மூட முடியாது எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ள இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க விசேட கண்காணிப்புப் பொறிமுறை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பரஸ்பர விமானப் போக்குவரத்து ஊடாக இலங்கைக்கு வருகை தரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தனி ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்களின் வருகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழு நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்..

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள 2,648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது.

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன் அறிவிப்பின்றி எந்தவொரு பகுதியும் முடக்கப்படும் : இராணுவத் தளபதி அறிவிப்பு!!

முன் அறிவிப்பின்றி..

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் முன்னறிவிப்பின் அந்த பகுதி முடக்கப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசம், பொலிஸ் பிரிவு, கிராம சேவகர் பிரிவு போன்றவைகள் உடனடியாக முடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நிலைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் முடக்கப்படுவது தொடர்பில் முன்கூடிய மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இம்முறை அவ்வாறு முன்னறிவிப்பு விடுக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எனினும் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில தினங்களான நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (28.04) உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் முடிவுகள் சில இரவு வெளியாகிய நிலையில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாமடு பகுதியில் இருவருக்கும், சாலம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்!!

கொரோன வைரஸ்..

பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவியதுடன், இவை 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத் துறை பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, குருநாகல், பொரலஸ்கமுவ போன்ற பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரி மூலமாக பிரிட்டனின் திரிபு வைரஸ் இலங்கையில் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அது 50 வீதத்தை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டு வருகின்றனர். அதேபோன்று வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் தொடர்பிலும் சமூகத்திலிருந்து பெருமளவில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதனை கருத்திற் கொண்டு நாம் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டோம். கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் 43 மாதிரிகளை பெற்று நாம் ஆய்வு செய்தோம்.

நேற்றுக் காலை பெற்றுக்கொள்ளப்பட்ட அதன் பரிசோதனை அறிக்கைக்கிணங்க பிரித்தானியாவின் திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதை நாம் நூற்றுக்கு நூறு உறுதி செய்துள்ளோம்.

இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அந்த வைரஸ் 55 வீதமான மரணங்களை ஏற்படுத்தலாம் எனவும் அதேபோன்று வைரஸ் பரவும் வேகம் 50 வீதமாக அதிகரிக்கலாம் என்றும் அறியமுடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த அஸ்ட்ரா செனாகா தடுப்பூசியானது சிறந்த பெறுபேற்றை தந்துள்ளது. அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் இதற்கு தீர்வை காண முடியும்.

ஆனால், எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாகும். கடந்தகாலத்தில் ஓரளவு பாதகமற்ற வைரஸ்தான் இருந்தது. புதிய வகை வைரஸானது மிகவும் ஆபத்தானது.

புதிய வகை வைரஸ் பரவியுள்ள நாடுகள் அனைத்து பாரிய இழப்புகளை சந்தித்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில்தான் பிரிட்டனில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு பாரிய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசியின் ஊடாக ஓரளவு தீர்வை கண்டுள்ளனர்.

இந்தியாவிலும் புதியவகை கொவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எமது நாட்டுக்குள் தற்போதுதான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இதனை பரவலடையாது கட்டுப்படுத்த வேண்டும். வைரஸானது மிகவும் வேகமாக இலங்கை முழுவதும் பரவலடைந்துள்ளது என்றார்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்.. ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள் : இந்தியாவின் பரிதாப காட்சிகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது. இங்கிருக்கும் மக்கள் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையின் நாட்டின் கிழக்கில் உள்ள இடத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் 100 உடல்களை தகனம் செய்வதை ஒருங்கிணைத்து வரும், ஜிதேந்தர் சிங் சாந்தி என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர், இறந்து கிடக்கின்றனர்.

இப்படி எங்களுக்கு தொடர்ந்து சடலங்கள் வந்து கொண்டே இருக்கிறது. சடல்ங்களின் எண்ணிக்கை அதிகமானால் வேறு வழியில்லாமல் சாலையில் தான் தகனம் செய்வோம்.

இங்கு அதிக இடம் இல்லை என்று சுட்டிக் காட்டினார். மேலும், டெல்லியில் இருக்கும் பகுதி ஒன்றில் ஏராளமான சடலங்கள் எரிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

அங்கு ஓய்வில்லாமல் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த செவ்வாய் கிழமை மட்டும், 320,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது எந்த ஒரு நாட்டிலும் இதுவரை பதிவாகாத அதிக பாதிப்பை கொண்ட ஒரே நாள் பதிவு ஆகும். சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,771 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

சுமார் 115 இந்தியர்கள் ஒவ்வொரு மணி நேரமும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து குறிப்பாக பிரித்தானியா 100 வென்டிலேட்டர்கள் 95 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவை அனுப்ப துவங்கியுள்ளது.

இந்தியா, ஆக்ஸிஜன் பற்றாக் குறை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக் குறை போன்றவைகளை எதிர்கொள்வதால், இரயில்களில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் டேங்கர்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பும் சேவையும் இந்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது, நினைவுகூரத்தக்கது.

ஒற்றை ஆம்புலன்சில் 22 சடலங்கள் : இந்தியாவில் கொரோனா தாண்டவம் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!

கொரோனா தாண்டவம்..

கொரோனா பாதிப்பின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் விரும்பினாலும் முடியாமல் போகும் நிலை.

அரசு மருத்துவமனை ஒன்றில் இறந்த 22 பேர்களின் சடலங்களை ஓரோ பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, ஒரே ஒரு ஆம்புலன்சில் எரியூட்ட கொண்டு செல்லும் காட்சி, நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவால் இறந்த 22 பேர்களின் சடலங்களையே ஒரே ஒரு ஆம்புலன்சில் திணித்து எரியூட்ட கொண்டு சென்றுள்ளனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் பதிவு செய்த குறித்த புகைப்படமானது, உள்ளூர் ஊடகங்கள் வெளியிடவே, குறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றம் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெளிவு படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை தேவைக்கு கிட்டாமல் போன நிலையிலேயே, ஒரே ஆம்புலன்சில் சடலங்களை கொண்டு சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 22 பேர்களில் 14 பேர் சனிக்கிழமையும் எஞ்சியவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதனிடையே, சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த குடும்பத்தினரின் மொபைல் போன்களை பொலிசார் கைப்பற்றியதாகவும், சடங்குகள் முடிவடைந்த பின்னரே போன்களை திருப்பி அளித்ததாகவும் கூறப்படுகிறது.