இலங்கையில் அதிகபடியான கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் இதுவரையில் 1,466 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 104,953 ஆக அதிகரிக்கின்றது.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 8737 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவிட் வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 201,187 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்சிசன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்த கோவிட் உயிரிழப்புகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிகளவு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏழு நாட்களாக இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணி ம.னைவியை க.ணவர் து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற ச.ம்பவத்தின் சிசிடிவி காட்சி வெ.ளியாகியுள்ளது.
ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில் நிஜாமுதீன் பகுதியிலே இந்த கொ.லை ந.டந்துள்ளது. கொ.ல்.ல.ப்.ப.ட்.ட பெ.ண் 29 வ.யதுடைய சாய்னா என அ.டையாளம் கா.ணப்பட்டுள்ளார்.
சாய்னாவின் முதல் இரண்டு க.ணவர்கள் அவரை விட்டு பி.ரிந்து வங்க தேசத்திற்கு சென்றதையடுத்து, அவர் மூன்றாவதாக Sharafat Sheikh என போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ல்.கா.ர.னை தி.ருமணம் செ.ய்துள்ளார்.
Sharafat Sheikh-ஐ NDPS சட்டத்தின் கீழ் பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். இதனையடுத்து சாய்னா ஒரு வருடத்திற்கு முன் நான்காவதாக வசீம் என்ற நபரை ம.ணந்துள்ளார்.
இந்நிலையில், இ.ரட்டை கு.ழந்தைகளுடன் நி.றைமாத க.ர்ப்பிணியாக இருப்பதால் சாய்னா சில நாட்களுக்கு முன் ஜா.மீனில் சி.றையிலிருந்து வி.டுதலையாகியுள்ளார்.
சாய்னா வி.டுதலையானதால் ரெஹானாவுடன் வசீம் பழகுவதற்கு இ.டை.யூ.று ஏ.ற்பட்டுள்ளது. ரெஹானாவுடன் தான் பழகுவது குறித்து வசீம் சாய்னாவிடமே கூறியதாக கூறப்படுகிறது.
தனது சகோதரியுடனான உ.றவைத் தொடர சாய்னாவை விட்டு விலக வசீம் முடிவு செய்துள்ளார். இதனிடையே தன்னுடைய 3வது க.ணவரிடம் சம்பவத்தை கூறி உனக்கு தக்க பாடம் புகட்டுவேன் என சாய்னா வசீமை மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.
இதனால் சாய்னாவை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.டு இ.ரண்டு து.ப்.பா.க்.கி.க.ளை வா.ங்கிய வசீம், சாய்னாவின் வீட்டிற்கு சென்று வெ.ளியே உட்கார்ந்துக்கொண்டிருந்த சாய்னாவை நோ.க்கி து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.ள்.ளா.ர்.
உடனே சாய்னாவிடம் வேலை செய்பவர் வசீமை த.டு.த்துள்ளார், எனினும், வே.லைகாரனை சு.ட்.டு சா.ய்.த்.த வசீம், நிறைமாத க.ர்ப்பிணி என்றும் பாராமல் ப.ட்டப்பகலில் பலருக்கு முன் சாய்னாவை த.லை.யி.ல் ச.ர.மா.ரி.யா.க சு.ட்.டு சா.ய்.த்.து.ள்.ளா.ர்.
இதில் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் சாய்னா அ.தே இ.டத்தில் உ.யி.ரை வி.ட்டுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வி.ரைந்த பொ.லிசார் சாய்னாவின் உ.ட.லை ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாய்னாவின் வேலைகாரர் மருத்துவமனையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி வ.ருவதாக த.கவல்கள் வெ.ளியாகியுள்ளது.
சாய்னாவை சு.ட்.டு.க் கொ.ன்.ற பி.ற.கு வசீம் நேராக காவல் நிலையம் சென்று ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். இந்த கொ.லை.யி.ல் சா.ய்னாவின் சகோதரி ரெஹானாவுக்கு தொ.டர்பு இ.ருக்கிறதா என்பது குறித்து பொலிசார் வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.
A woman named Shaina who had come out of jail on parole two days ago shot dead at her home in Nizamuddin area. Her servant also shot at.
Shaina is the wife of gangster Shafaat and was pregnant.
உலகளாவிய ரீதியில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கோவிட் தொற்று விலை மதிக்க முடியாத லட்சக்கணக்கான உயிர்களை தினமும் காவு கொண்டு வருகின்றது.
பல வல்லரசு நாடுகளே இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பல வறிய நாடுகளின் நிலை பதற வைக்கிறது.
தீவிரம் அடையும் தொற்றுக்கள், வறுமை, பட்டிணி, வேலையின்மை என முழு உலகும் அல்லாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கோவிட் வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கின்றது இந்த கட்டுரை.
கோவிட் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.
காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும். வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கோவிட் வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.
இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை.
இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை. கோவிட்-19 அறிகுறிகள் தென்படி, ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
எல்லோருக்கும் அறிகுறிகள் ஒன்று போல இருக்குமா?
இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கோவிட் வைரஸ் தாக்கும் என்பதுதான்.
காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.
காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.
ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.
உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.
குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.
வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.
இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம்.
பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு கோவிட் வந்தால் என்ன அறிகுறி?
வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கோவிட் வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இருமல் வந்தால் கோவிட்-19 அறிகுறியா?
பல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.
கோவிட் வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் வேறு வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனாலும், பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?
கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், போதிய ஒய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.
ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால்தான்.
பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.
தீவிர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கும்?
மிகவும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனை பிரிவே தீவிர சிகிச்சை பிரிவு.
கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும். மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபடும்.
கடுமையான பாதிப்பை சந்திந்தவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் அவர்களின் சுவாசப் பிரச்சனை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோவிட் அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள்.
குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.
கோவிடட்டிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்.
உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும். நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள்.
அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள்.
கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.
உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
கோவிட்-19 என்றால் என்ன?
கோவிட் வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும்.
மனிதர்களில் இந்த கோவிட் வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர்.
இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கோவிட் வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோவிட் ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
கோவிட் தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது.
ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை. 56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:
6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை.
80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.
முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்பு விதிகளை மீறிச் செயற்பட்டதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனைத்துவிதமான கிரிக்கட் செயற்பாடுகளுக்கும் சொய்சாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டில் சொய்சாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நிர்ணய சதியுடன் நுவான் சொய்சா தொடர்புபட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சுமத்தப்பட்ட மூன்று வகையான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் இந்த போட்டித் தடை அமுல்படுத்தப்பட உள்ளது. இலங்கையின் சார்பில் 125 போட்டிகளில் பங்கேற்றுள்ள நுவான் சொய்சா, பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக வேகமாகப் பரவி வருகின்ற கோவிட் வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் அனைத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மே 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்படும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு மக்கள் தயார் நிலையில் இருப்பது நல்லதாக அமையுமென அவர் அறிவித்துள்ளார்.
ஊடங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், பல நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வது நல்லது.
எனினும் அவை அனைத்தும் எதிர்வரும் நாட்களில் பதிவாகும் கோவிட் நோயாளிகளிள் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நாம் மக்களை அச்சுறுத்தவோ அல்லது உண்மை நிலைமையை மறைக்கவோ தயாரில்லை. ஆனால் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருப்பது அவசியம்.
இதற்கிடையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கோவிட் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை நிலையங்களை அமைக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதிகளான வவுனியா பஜார் வீதி, இலுப்பையடி சந்தி, மொத்த மரக்கறி விற்பனை மையம், குடியிருப்பு வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, புதிய பேரூந்து நிலையம், கண்டி வீதி என்பன இன்று (28.04.2021) காலை 8 மணியளவில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன் நடைபாதைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டது.
நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் பல பகுதிகள் அதிக அபாயமிக்கவையாக மாறி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற நிலையில் பொது முடக்கம் ஒன்றுக்குச் செல்வது குறித்தும் அரசாங்கம் கடந்த இரு நாட்களாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.
புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் செயற்பாடுகளைத் தொடரந்து நாட்டில் மீண்மொரு கோவிட் அலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக நாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது அடையாளம் காணப்ட்ட கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை விட புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரியாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காரியாலயங்கள் உள்ளேயும் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயும் முகக் கவசம் அணிந்திருப்பதனை அலுவலக மேற்பார்வையாளர்கள் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணியாளர்கள் பணியிடத்திற்கு பிரவேசிக்கும் போதே முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பணி செய்யும் முழு நேரத்திலும் அவர்கள் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டுமேனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைகள், காரியாலங்கள் உள்ளிட்டவற்றுக்குள் பிரவேசிக்கும் வாடிக்கையாளர்கள் சேவை பெறுனர்களும் முகக் கவசங்களை அணிந்திருப்பதனை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
அனைத்து நிறுவனங்களினதும் முகாத்துவம் கோவிட் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது முக்கிய கடப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாதிருப்பதனை நிறுவனங்களின் முகாமைத்துவம் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களுக்குள் பிரவேசிக்கும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை கட்டாயமாக அளவீடு செய்யப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் நோய்த் தொற்று பரவுகை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் கோவிட் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோனர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 3900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது மாத சிறைத்தண்டனை விதிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (27.04) உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் குருக்கள் புதுக்குளம் பகுதியினை சேர்ந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த நபரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குறிய நடவடிக்கையினையும் அவருடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (28.04) காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும், றிசாட் பதியதீன், அசாத்சாலி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் குறித்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசுக்கு ஆதரவு வழங்காததற்காக இந்த கைதா, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், அரசே உண்மையான சூத்திரதாரிகளை கைது செய், தமிழ் பேசும் உறவுகளே அநீதியான கைதுதுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்,
இன மத பாகுபாடு இன்றி பணியாற்றிய சேவகனை விடுதலை செய், றிசாட் பதியுதீன்- அசாத் சாலி-ஹிஸ்புல்லா- ரிஜாஜ் பதியுதீன் அடுத்தது யார்?, சிறுபான்மையினரின் குரலை விடுதலை செய், ரிசாட்டின் கைது யாரை திருப்தி படுத்த’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன்,
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், விடுதலை செய் விடுதலை செய் றிசாட்டை விடுதலை செய் என கோசமும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ரி.கே.இராஜலிங்கம், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் ஈபிடிபிக் கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற மோ.த.ல் சம்பவம் தொடர்பில் மூவர் வவுனியா பொலிசாரால் இன்று (27.04) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கை.க.லப்பாக மாறியதில் கட்சியின் வவுனியா மாவட்ட உதவிச் செயலாளர் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் தா.க்.கு.த.ல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செ.ய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில் கொரோனாவால் இ.றந்தவர்களின் உ.டல்களை தகனம் செய்ய இடமில்லாததால் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் ம.ரண ஓலம் எழுந்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு உ.யிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 நோயாளிகள் வரை இ.றப்பதால் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்காமல் நீண்ட வரிசையில் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உ.டல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் நிதீஷ் குமார் என்பவரது தாய் கொரோனா நோயால் இறந்துள்ளார்.
அவரது உடலை தகனம் செய்ய இடமில்லாமல் இரண்டு நாட்களாக தாயின் ச.டலத்தை தனது வீட்டில் வைத்திருந்த சோக சம்பவம் நாட்டு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது.
இதே போல மேலும் சில இடங்களில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சில அதிகாரிகள் டெல்லியில் ஏற்பட்டுள்ள சூழலை வெளிப்படையாக சொல்ல மறுப்பதாக கு.ற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மணமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மணமக்களின் திருமணம் வித்தியாசமாக நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் நகரத்தில் நேற்று ஒரு ஜோடி PPE Kit எனும் மருத்துவ பாதுகாப்பு உடையணிந்து வித்தியாசமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்கு முன்பு ஏப்ரல் 19-ஆம் திகதி மணமகனுக்கு கொரோனா இருப்பது தெரியந்ததது. இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தியுள்ளனர்.
முதலில் அதிகாரிகள் திருமணத்தை நிறுத்த வந்துள்ளனர். ஆனால், மூத்த அதிகாரிகளின் வேண்டுகோள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில் ஒருவழியாகே திருமணம் நடைபெற்றது.
எளிதாக வீட்டிலேயே நடந்த இந்த திருமண விழாவில் மணமக்களுடன் 2 உறவினர்கள் மற்றும் புரோகிதர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அனைவருமே PPE உடைகளையே அணிந்திருந்தனர்.
இந்த நிகழ்வு எந்த பெருந்தொற்றும் இரு மனங்கள் ஒன்று சேர்வதை தடுக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. இந்த திருமண விழாவில் எடுக்கப்பட்ட சிறிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. மேலும், மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.