கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது வரையிலான முடிவுகளின் படி 130இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க முன்னணி வகிக்கிறது. பத்து வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
இதன்படி தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களின் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மலர்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை, தி,மு.க சார்பில் போட்டியிட்ட ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை விட அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா வடக்கில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் கடமை செயலாளர் இ.தயாபரன் தலைமையின் கீழ் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான நெடுங்கேணி சந்தை, பேரூந்து தரிப்பிடம், வங்கிகள், நகர வர்த்தக நிலையங்கள், வாடிகான்கள் என்பன தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களின் உட்பகுதி மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி மக்களே அணிதிரளுங்கள் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னிமாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
நாட்டின் இன்றைய அபாயகரமான சூழலை எமது கட்சி கருத்திற்கொண்டு ஏனைய இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகளின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய, வேகமாகப் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பினைக் கருத்திற்கொண்டும் மே தினப் பேரணியையும் கூட்டத்தையும்
நிறுத்தியிருந்தது.
இப்பேரிடர் காலத்தில் கோட்டாபய, மஹிந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சிவில் நிர்வாகத்தில் ராணுவத் தலையீடு இலாப வெறிக்காக இயற்கை வளங்களைச் சூறையாடல் உரிய சுகாதார வசதிகளைக் கட்டமைக்காமை என்பவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
என்பதுடன் இனி வரும் காலப்பகுதியில் அரசியல் இலாப நோக்கம் கருதிய களியாட்ட அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் அனுமதி வழங்கும் நடைமுறையையும் தவிர்க்கவேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்திநிற்கின்றது.
அத்துடன் அனைத்து அடக்குமுறைகளையும் இல்லாமல் செய்வதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி அனைத்துமக்களும் அணிதிரளுமாறு குறித்த அறிக்கையில் உள்ளது.
தமிழகத்தில் காதலித்த இளைஞனுடன், மகளை தாய் அனுப்பி வைத்ததால், க.டும் கோ.பமடைந்த கணவன் அவரை தீ.யி.ட்டு எ.ரி.த்.து கொ.ன்.ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்தின் அருகில் இருக்கும் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23-ஆம் திகதி ச.டலம் ஒனறு எ.ரிந்து கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விரைந்த வந்த பொலிசார் உ.டலை பார்ப்பதற்குள் மு.கம் முற்றிலும் கருகி போயுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெ.ண்ணின் க.ழுத்தில் வெ.ட்.டு.க் கா.ய.ம் இ.ருந்துள்ளது.
அதன் பின் பொலிசார், அந்த உ.ட.லை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வி.சாரணையில், இ.றந்து கி.டந்தது ஒரு .பெண் என்பதும், அவர் தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ரவுடி முனியசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த தம்பதியின் மகளான வெங்கடேஸ்வரி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 26 ஆம் திகதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் வெங்கடேஸ்வரி காதலித்த நபருடன் அவருடைய தாய் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள, முருகலட்சுமி ச.ட.லமாக க.ண்.டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு முருகலட்சுமியின் கணவர் மீது ச.ந்தேகம் ஏற்பட, பொலிசார் த.லை.ம.றை.வா.க இருந்த முனியசாமியை தே.டி.யுள்ளனர்.
அ.வரைப் பி.டித்து விசாரித்த போது, மகளின் காதலை சேர்த்து வைத்த முருகலெட்சுமியை கொ.லை செ.ய்.த.து வெளிச்சத்திற்கு வந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சாரணையில், வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இளைஞரை காதலிப்பது அவருக்கு தெரியவந்ததால், முனியசாமி இதற்கு எ.திர்ப்பு தெரிவித்து, மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கு.ற்ற வழக்குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இளைஞரை மாப்பிள்ளையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது அவரது மனைவி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே கணவனுக்கு பல்வேறு கு.ற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ர.வு.டியாக இருக்க வேண்டுமா? என முருகலெட்சுமி எ.திர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் தான், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மாணவரை அழைத்து பதிவு திருமணம் செய்வதற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே இந்த கொ.லை ச.ம்பவத்தை முனியசாமி செ.ய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முனியசாமியின் கூட்டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் கு.ழந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெண் கேட்டுள்ளனர். வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு திருமணம் செய்து வை என அ.ழுத்தம் கொடுத்து வந்தார்.
ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு ம.றுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது.
தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு தொ.ங்.கி.ய நிலையில் கிடந்தார். இதை பார்த்து ப.த.றி.ப்.போன பெற்றோர், அவரை மீ.ட்.டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுஜா ஏற்கனவே இ.றந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமல்தாஸ் பொலிசில் பு.கார் செய்தார். அதில், தனது மகளை அவருடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வ.ரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி உ.ள்ளனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சுஜா இ.றப்பதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சி.த்.ர.வ.தை தான் காரணம் என்றும், தனது கு.ழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நாட்டினுள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வௌியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கோவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் பின்வருமாறு,
*பொது போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
*வாடகை வாகன பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
*வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
*கோவிட் தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.
* இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
* பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.
* வெசாக், றமழான் பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.
* ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.
* அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத் தரவேண்டும்.
* தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.
* மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.
* அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.
* மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது. கைதிகளை பார்வையிட முடியாது.
* நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகை தரமுடியும்.
* மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை. மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கோவிட் நிலைமையை கருத்தில்கொண்டு அது திருத்தப்படும்.
வவுனியாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிசீஆர் முடிவுகள் சில இன்று (01.05) இரவு வெளியாகின.
குறித்த முடிவுகளின் படி 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில், வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனைய 6 பேர் சமூகத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், தோணிக்கல், கூமாங்குளம், குருமன்காடு, குருக்கள் புதுக்குளம், உளுக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போலி செய்தி வெளியிட்டமை குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஊரடங்குச் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போலி செய்தி வெளியிடப்பட்ட விவகாரம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலிச் செய்திகள் வெளியிடப்படுவதனால் மக்கள் பதற்றமடையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட் நோய்த் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
எனினும் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலைமை அறிவிக்கப்படாது என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இன்றும் மாலை 5 வரைக்கும் 1,304 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 450 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (01.05.2021) காலை 8.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையில் சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாவது கட்டமாக 1500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 140 நபர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 321 நபர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றி வைக்கப்பட்டதுடன்,
இன்று (01.05.2021) மூன்றாம் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர், நோயாளர் காவு வண்டி சாரதிகள் உள்ளிட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் 29.04.2021 அன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் அன்று 29.04.2021 மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்த நிலையில் முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த தீவிபத்தின் போது முத்துஐயன் கட்டினை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா அரிராசசிங்கம் என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (01) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா யாழ் வீதியில் பயணித்த டிப்பரை வழி மறித்து அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் த.ப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (30.04.2021) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்கள் யாழ் வீதி சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து,
அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டு த.ப்பித்து சென்றதுடன் குறித்த வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் டிப்பர் சாரதி ப.டுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் மோட்டார் சைக்கிளில் வந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய ஹோட்டல் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்தார்.
இன்று (01.05) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஒருவாரமாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (29.04) வவுனியா நகரப்பகுதியில் உள்ள உணவகங்கள் சுகாதார பிரிவினரால் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு பின்பற்றப்படுகின்ற சுகாதார நடைமுறைகள் மற்றும் முகக்கவசம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மற்றும் முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியோர் என 100 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, சுகாதார பணிமனைக்கு குறித்த உணவகங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனாலும் குறித்த செயற்பாட்டுக்கு வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் (01.05) பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் பொலிசார் அடங்கிய குழுவினர் குறித்த ஹோட்டலுக்கு சென்று அவர்களது சுகாதார நடைமுறைகள் முககவசம் என்பவன தொடர்பில் பரிசீலித்ததுடன், சுகாதார பணிமைனைக்கு வராமைக்குரிய காரணம் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டது.
இதன்போது குறித்த ஹோட்டலில் கடமையாற்றி சிலர் அன்டிஜன் அல்லது பிசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது கடமையாற்றியமை தெரியவந்ததுடன், அவர்களை பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் குறித்த ஹோட்டலை திறக்குமாறு கோரினோம்.
இதன்போது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு ஒத்துழைக்காது அவர்கள் குழப்பம் விளைவித்து சோடா போத்தல் ஒன்றினால் சுகாதார பரிசோதகர்கள் மீது தா.க்.கு.த.ல் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக பொலிசார் தலையிட்டு, மேலதிக பொலிசாரை வரவழைத்து குறித்த ஹோட்டலை சுய தனிமைப்படுத்தியதுடன், அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை வவுனியா பொலிஸ் நிலையம் அழைத்து சென்று அவர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
வவுனியா நகர வீதிகளில் இன்று (01.05) விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிசார் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் கொவிட் 19 இன் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிசார் வீதியில் பயணிப்போர், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வாகனங்கள் என்பவற்றை மறித்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்,
சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முகக்கவசம் அணியாதோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிகையும் பொலிசாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள சில வியாபார நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்துவனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் சற்று முன்னர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரமடையும் கோவிட் தொற்றின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வந்த நிலையில் கடந்த 27ஆம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று வரையில்(30) விடுமுறை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையிலேய அடுத்தவாரமும் பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.