வவுனியாவில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு நேற்று (01.05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குறித்த தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று(02.05.2021) இரவு வெளியாகிய நிலையில் அதில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த தொற்றாளர்களை கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கிய பின்னர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:57 மணிக்கு பனாமா நகரத்திலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவில் டிராகன் காப்ஸ்யூல் மூலம் தரையிறங்கியுள்னர். விண்வெளி வீரர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்பதுடன் மற்றைய நபர் ஜப்பானைச் சேர்ந்தவர் ஆவார்.
நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுடன் கூட்டாக உருவாக்கப்பட்ட க்ரூ டிராகன் விண்கலத்தால் நிலையத்திற்கு வந்த முதல் குழு சுழற்சி பணியின் முடிவினால் அவர்கள் பூமி திரும்பினர் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாசாவின் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர் மற்றும் ஷானன் வாக்கர் மற்றும் ஜப்பானின் சோச்சி நோகுச்சி ஆகிய மேற்படி குழுவினர் 2020 நவம்பர் 15 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வசே விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.
இந்திய தலைநகர் டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ .தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கடும் பணிச்சூழலால் ஏற்பட்ட மன அ.ழுத்தம் காரணமாகவே மருத்துவர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பா.திக்கப்பட்டு வருகின்றனர்.
மயானங்களில் ச.டலங்கள் எ.ரிந்து கொ ண்டே இருக்கின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொ.த்துக் கொ.த்தாக நோயாளிகள் ம.ரணமடைகின்றனர்.
டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் ம.ரணமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் பெ.ரும் அ.திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி ஏற்பட்ட கொரோனா உ.யி.ர் ப.லிகளால், அவர் க.டுமையான மன அ.ழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பா.திக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உ.யிர்களை கா.ப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.
அவரது ம.றைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது சொந்த ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பல நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலேயே இறக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன.
அது போல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போபாலை சேர்ந்த ஒருவர் என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள்.
போபாலை சேர்ந்தவர் ஜாவித் கான் (34). இவர் ஆட்டோ ஓட்டுநர். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் படும் துயரங்கள் குறித்தும் அன்றாடம் டிவியிலும் பேப்பர்களிலும் படித்து தெரிந்து கொண்டார் ஜாவித். சில சம்பவங்கள் கண்ணாலும் பார்த்துள்ளார். ஆட்டோ ஓட்டும் தன்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தார்.
உடனே மனைவியிடம் நகைகளை கேட்டார். அந்த நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றினார். அதில் ஆக்ஸிஜன் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 8 முதல் 10 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இதற்காக ஜாவித் எந்த கட்டணத்தையும் வாங்குவதில்லை. ஜாவித் தனது செல்போன் எண்ணை சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காத பட்சத்தில் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தினமும் ஆக்ஸிஜனை நிரப்ப ரூ 600ஐ ஜாவித் செலவிடுகிறார்.
இதற்காக ஆக்ஸிஜன் நிரப்பும் மையங்களில் 4 முதல் 5 மணி நேரங்கள் வரை காத்திருக்கிறார். கைவிட்டு செலவு செய்து வந்தாலும் அவர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதில்லை. மாறாக நோயாளிகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவைகளை பலர் பாராட்டி வருகிறார்கள். கொரோனா நெருக்கடி நேரத்தில் அன்றாடம் ஹீரோக்கள் உருவாகிறார்கள்.
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து காரியாலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய பிராந்திய காரியாலயங்கள் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான காரியாலயமும், பிராந்திய காரியாலயங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்று பரவுகை நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வோர் 0115226126 மற்றும் 0115226100 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களுக்கு இடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படும் கோவிட் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. மொரவெவ – நாமல்வத்த, பத்தாம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஏ.ஜி. விஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருந்தகம் ஒன்றில் மருந்து எடுத்து குடித்துவிட்டு வழமைபோன்று இவர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில் அவருடைய வயலுக்கு அருகிலுள்ள வயல் உரிமையாளரை கையால் கூப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வயல் உரிமையாளர் அங்கு சென்று குறித்த நபரை வயலில் இருந்து தூக்கிக்கொண்டு வந்து முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு வரும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் இவருடன் தொடர்புபட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர். மரணம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் 8 மாவட்டங்களில் கோவிட் -19 வைரஸ் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், கண்டி, மாத்தளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் வரும் நாட்களில் பாரதூரமானதக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் காணப்படும் தொற்று நோய் பரவல் நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம், அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்கிளல் சரியான பரிசோதனைகளை நடத்தி தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது என்பனவும் தாமதமாகி இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான நிலைமையில் இருந்து தப்பிக்க உடனடியாக பயண தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார ஆலோசனைகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அந்த சங்கம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது வரையிலான முடிவுகளின் படி 130இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க முன்னணி வகிக்கிறது. பத்து வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
இதன்படி தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களின் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மலர்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை, தி,மு.க சார்பில் போட்டியிட்ட ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை விட அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா வடக்கில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் கடமை செயலாளர் இ.தயாபரன் தலைமையின் கீழ் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான நெடுங்கேணி சந்தை, பேரூந்து தரிப்பிடம், வங்கிகள், நகர வர்த்தக நிலையங்கள், வாடிகான்கள் என்பன தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களின் உட்பகுதி மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி மக்களே அணிதிரளுங்கள் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னிமாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
நாட்டின் இன்றைய அபாயகரமான சூழலை எமது கட்சி கருத்திற்கொண்டு ஏனைய இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகளின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய, வேகமாகப் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பினைக் கருத்திற்கொண்டும் மே தினப் பேரணியையும் கூட்டத்தையும்
நிறுத்தியிருந்தது.
இப்பேரிடர் காலத்தில் கோட்டாபய, மஹிந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சிவில் நிர்வாகத்தில் ராணுவத் தலையீடு இலாப வெறிக்காக இயற்கை வளங்களைச் சூறையாடல் உரிய சுகாதார வசதிகளைக் கட்டமைக்காமை என்பவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
என்பதுடன் இனி வரும் காலப்பகுதியில் அரசியல் இலாப நோக்கம் கருதிய களியாட்ட அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் அனுமதி வழங்கும் நடைமுறையையும் தவிர்க்கவேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்திநிற்கின்றது.
அத்துடன் அனைத்து அடக்குமுறைகளையும் இல்லாமல் செய்வதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி அனைத்துமக்களும் அணிதிரளுமாறு குறித்த அறிக்கையில் உள்ளது.
தமிழகத்தில் காதலித்த இளைஞனுடன், மகளை தாய் அனுப்பி வைத்ததால், க.டும் கோ.பமடைந்த கணவன் அவரை தீ.யி.ட்டு எ.ரி.த்.து கொ.ன்.ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்தின் அருகில் இருக்கும் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23-ஆம் திகதி ச.டலம் ஒனறு எ.ரிந்து கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விரைந்த வந்த பொலிசார் உ.டலை பார்ப்பதற்குள் மு.கம் முற்றிலும் கருகி போயுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெ.ண்ணின் க.ழுத்தில் வெ.ட்.டு.க் கா.ய.ம் இ.ருந்துள்ளது.
அதன் பின் பொலிசார், அந்த உ.ட.லை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வி.சாரணையில், இ.றந்து கி.டந்தது ஒரு .பெண் என்பதும், அவர் தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ரவுடி முனியசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த தம்பதியின் மகளான வெங்கடேஸ்வரி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 26 ஆம் திகதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் வெங்கடேஸ்வரி காதலித்த நபருடன் அவருடைய தாய் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள, முருகலட்சுமி ச.ட.லமாக க.ண்.டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு முருகலட்சுமியின் கணவர் மீது ச.ந்தேகம் ஏற்பட, பொலிசார் த.லை.ம.றை.வா.க இருந்த முனியசாமியை தே.டி.யுள்ளனர்.
அ.வரைப் பி.டித்து விசாரித்த போது, மகளின் காதலை சேர்த்து வைத்த முருகலெட்சுமியை கொ.லை செ.ய்.த.து வெளிச்சத்திற்கு வந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சாரணையில், வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இளைஞரை காதலிப்பது அவருக்கு தெரியவந்ததால், முனியசாமி இதற்கு எ.திர்ப்பு தெரிவித்து, மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கு.ற்ற வழக்குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இளைஞரை மாப்பிள்ளையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது அவரது மனைவி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே கணவனுக்கு பல்வேறு கு.ற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ர.வு.டியாக இருக்க வேண்டுமா? என முருகலெட்சுமி எ.திர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் தான், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மாணவரை அழைத்து பதிவு திருமணம் செய்வதற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே இந்த கொ.லை ச.ம்பவத்தை முனியசாமி செ.ய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முனியசாமியின் கூட்டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் கு.ழந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெண் கேட்டுள்ளனர். வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு திருமணம் செய்து வை என அ.ழுத்தம் கொடுத்து வந்தார்.
ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு ம.றுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது.
தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு தொ.ங்.கி.ய நிலையில் கிடந்தார். இதை பார்த்து ப.த.றி.ப்.போன பெற்றோர், அவரை மீ.ட்.டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுஜா ஏற்கனவே இ.றந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமல்தாஸ் பொலிசில் பு.கார் செய்தார். அதில், தனது மகளை அவருடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வ.ரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி உ.ள்ளனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சுஜா இ.றப்பதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சி.த்.ர.வ.தை தான் காரணம் என்றும், தனது கு.ழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நாட்டினுள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வௌியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கோவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் பின்வருமாறு,
*பொது போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
*வாடகை வாகன பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
*வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
*கோவிட் தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.
* இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
* பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.
* வெசாக், றமழான் பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.
* ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.
* அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத் தரவேண்டும்.
* தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.
* மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.
* அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.
* மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது. கைதிகளை பார்வையிட முடியாது.
* நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகை தரமுடியும்.
* மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை. மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கோவிட் நிலைமையை கருத்தில்கொண்டு அது திருத்தப்படும்.
வவுனியாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிசீஆர் முடிவுகள் சில இன்று (01.05) இரவு வெளியாகின.
குறித்த முடிவுகளின் படி 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில், வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனைய 6 பேர் சமூகத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், தோணிக்கல், கூமாங்குளம், குருமன்காடு, குருக்கள் புதுக்குளம், உளுக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போலி செய்தி வெளியிட்டமை குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஊரடங்குச் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போலி செய்தி வெளியிடப்பட்ட விவகாரம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலிச் செய்திகள் வெளியிடப்படுவதனால் மக்கள் பதற்றமடையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட் நோய்த் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
எனினும் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலைமை அறிவிக்கப்படாது என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.