கண்டியிலிருந்து முல்லைத்தீவு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், நேற்று வெளிவந்த கோவிட் 19 பரிசோதனை முடிவின்போது ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த மாதம் 19ஆம் திகதி கண்டியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தொடர்ந்து 29ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்ததுடன் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

குழவிக் கொட்டு..

வவுனியா இறம்பைக்குளம் ஆலயம் ஒன்றுடன் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று (04.02.2021) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, இறம்பைக்குளம், நாகபூசனி அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மண்டபத்தின் அருகில் இருந்த மரத்தில் இருந்து கலைந்து சென்ற குழவிகள் கொட்டியதில்,

வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி உள்ளிட்ட மூவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் குழவிக் கொட்டுக்கு சிலர் இலக்காகியுள்ளனர்.

இது தொடர்பில் ஆலய மண்டப நிர்வாகத்தினர் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்காமையின் காரணமாகவே பலரும் குழவிக் கொட்டுக்கு இலக்காகி வருவதாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பெற்றோர்களுக்கு..

சுகவீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எந்தவித தாமதமுமின்றி கூடிய விரைவில் பிள்ளைகளை அழைத்து வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்றரை வயதான குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. அந்த குழந்தையின் மரணத்திற்கு பிரதான காரணம் தாமதமாக அழைத்து வந்தமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழந்தை 11 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் கொண்டு வரும் போதே ஆபத்தான கட்டத்தில் இருந்தமையினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தோம். எனினும் எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.

குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களாவர். அவர்கள் குழந்தை நோயினால் தீவிரநிலையடைந்த பின்னரே அழைத்து வந்தார்கள்.

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இதுவரையில் 150க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே பெற்றோர்களே, சுகவீனம் அடைந்த குழந்தைகளை தாமதமின்றி அழைத்து வந்தால் நாங்கள் காப்பாற்றி விடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..

பெப்ரவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்து, நிலையான விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சினால் வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, சீனி, தேயிலை தூள், பருப்பு உட்பட முக்கிய 27 பொருட்களுக்கு இவ்வாறு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

அரசாங்கம் பொருட்களுக்கு வரி விதித்தால் அல்லது மாற்று விகிதத்தை மாற்றினால் மட்டுமே இந்த ஒப்பந்தங்களில் மாற்றம் மேற்கொள்ள முடியும். பொருட்களுக்கான நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை லங்கா சதொச மற்றும் Q shop மூலம் மாத்திரம் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!!

5300 மரக்கன்றுகள்..

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 5300 மரக்கன்றுகள் இன்று (04.02.2021) நாட்டப்பட்டன.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5300 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

அந்தவகையில் வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 9.29 இற்கு வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன ஆகியோர் இணைந்து மரம் ஒன்றினை நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காமினி மகாவித்தியாலய மைதானம், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் பிரிவுகள், பாடசாலைகள், வலயக் கல்வித் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் மரநடுகை இடம்பெற்றது.

இதன்போது இலுப்பை, வேப்பிலை, மருத மரங்களுக்கு முன்னிரிமை வழங்கப்பட்டு நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுதந்திரநாள் எமது இனத்திற்கு ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!!

உண்ணாவிரதப் போராட்டம்..

சர்வதேசமே எம் இனத்தை அழிந்த ஸ்ரீலங்கா தேசத்திற்கு இன்று (04.02) சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (04.02) இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதி கிடைக்காத நிலையில் நாம் எமக்கான நீதியை பெற்றுத் தருமாறு சர்வதேசத்திடம் கோரியே இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம்.

காலை 9 மணியில் மாலை 4 மணிவரை கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாம் எமக்கான நீதியை கோருவதுடன், ஐ.நா மனிதவுரிமை பேரவையில் எமக்கான நீதியைப் பெற சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன், போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதி ஒருவர் விடுதலை!!

கைதி ஒருவர் விடுதலை..

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

73 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 146 சிறைக்கைதிகள் இன்று (04.02) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும்,

50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறார் குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்தும் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரி என்.பிரபாகரன் தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைலாகு கொடுத்து குறித்த கைதியை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே விடுதலை செய்யப்பட்டார்.

பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்த மாணவி : வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்!!

மலீஷா..

புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் உயிரிழந்துள்ளார். புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மலீஷா என்ற 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பகல் உணவு பெற்ற பின்னர் மயக்கம் வருவதனை போன்று உள்ளதாக குறித்த மாணவி தனது சக மாணவர்களிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் முதலுதவிகளை வழங்கிய ஆசிரியர்கள் மாணவி வழங்கிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

1990 என்ற அம்பியுலன்ஸ் சேவைக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்திய போதிலும் அது தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக மாணவியின் தாயார் மாணவியை முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு அங்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலைக்கு குறித்த சிறுமி மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். எனினும் அங்கு சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. PCR முடிவுகளுக்காக காத்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டாபயவின் உருவப் பொம்மையை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இணைந்திருந்தனர்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளி குழறுபடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிலுக்கு முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் உருவப் பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!!

சுதந்திர தின நிகழ்வுகள்..

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உட்பட பிரதம விருந்தினர், அதிதிகள் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரின் மோட்டார் வாகன பேரணியுடன் அழைத்து வரப்பட்டனர்.

அத்துடன் இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபன் ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இடம்பெற்றது.

அதன் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுரை, மாணவர் உரை, பிரதம விருந்தினர் உரை, மரம் நடுகை போன்ற பல நிகழ்வுகளுடன் சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவுற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நகரசபை, உள்ளுராட்சி மன்றம்,

மாவட்ட செயலகம், போன்றவன்றின் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி : இறுதியில் நடந்த சோகம்!!

தமிழகத்தில்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபார்க் பொன்னையராஜாபுரம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 21). இவர் ரேஸ்கோர்சில் இருக்கும் தனியார் காபி கடையில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், உறவினரான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சார்ந்த 19 வயது மாணவியை, கடந்த 3 வருடமாக காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.

இவர்களின் கா.தல் வி.வகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. இருவரும் உறவினர்கள் என்பதால் எ.திர்ப்பு இ.ல்லாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில்,

சம்பவத்தன்று கல்லூரி மாணவி தில்லைநகரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சென்ற விஷ்ணு, உறவினர்கள் முன்னிலையில் மாணவியை திருமணம் செய்து வைக்க கூறி கோரிக்கை வைத்துள்ளார்.

திடீரென கல்லூரி மாணவி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், சினிமாவில் நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கவே, ம.ன வே.தனையடைந்த விஷ்ணு வீட்டில் இ.ருந்த க.த்தியை எ.டுத்து மா.ணவியை ச.ரமாரியாக வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.

நி.லைகு.லைந்துபோன மா.ணவி ச.ரிந்து வி.ழவே, அவரை மீட்ட உறவினர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆசையாக வளர்த்த மகன் : தா.யை கொ.லை செ.ய்த கொ.டூரம்.. விசாரணையில் வெளியான அ.திர்ச்சிக் காரணம்!!

மதுரை மாவட்டத்தில்..

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியை சார்ந்தவர் சேகர். இவரது மனைவி வஞ்சிமலர் (வயது 49). இவர்கள் இருவருக்கும் ஓம் சக்தி என்ற 19 வயது மகன் உள்ள நிலையில், இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார்.

ஓம் சக்திக்கு 3 வயது இருக்கையிலேயே கணவன் – மனைவி க.ருத்து வே.றுபாடு கா.ரணமாக, கடந்த 10 வருடமாக தம்பதிகள் பி.ரிந்து வா.ழ்ந்து வருகின்றனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக சட்டப்படி வி.வாகரத்து கிடைத்தும், வஞ்சிமலர் சமையல் வேலைக்கு சென்று தனது மகனை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வஞ்சிமலருக்கு சமையல்காரர் ஒ.ருவருடன் ப.ழக்கம் ஏ.ற்படவே, இருவரும் அவ்வப்போது ஒ.ன்றாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் வஞ்சிமலரின் மகன் ஓம் சக்திக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ம.கன் தா.யை க.ண்.டிக்கவே, வஞ்சிமலர் இதனை பொ.ருட்படுத்தவில்லை. இதனால் அவ்வப்போது தாய் – மகன் இடையே த.க.ரா.று ஏ.ற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் மீ.ண்டும் த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது.

இதன்பின்னர் இருவரும் படுத்து உறங்கிய நிலையில், தாய்-மகன் இடையே நேற்றிரவு மீண்டும் வா.க்குவா.தம் ஏ.ற்பட்டது. இருவரும் ச.ண்டைக்கு பின்னர் உ.றங்கிவிட்ட நிலையில், 1 மணியளவில் எழுந்த ஓம் சக்தி தாயின் த.லை.யி.ல் அ.ம்.மி.க்.க.ல்.லை தூ.க்.கி.ப்.போ.ட்.டு கொ.லை செ.ய்துள்ளார்.

வஞ்சிமலரின் அ.லறல் ச.த்தம் கே.ட்டு அ.திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று பார்க்கையில் வி.பரீதம் புரிந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே,

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வஞ்சிமலரின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓம் சக்தியையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

தம்பி மனைவியின் பிறந்தநாளை கேக் வெ.ட்டி கொண்டாடிய அண்ணன் : சந்தேகத்தால் அரங்கேறிய சோகம்!!

இந்தியா..

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் குமாரச்சேரி கிராமத்தை சார்ந்தவர் யோவான் (வயது 25). இவரது சகோதரர் ஏசான் (வயது 22). இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், ஏசான் ம.து ம.ற்றும் க.ஞ்.சா ப.ழக்கம் உடையவர்.

இதனால் ம.னந.லம் பா.திக்கப்பட்டது போல அவ்வப்போது இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த நேரத்தில்,

ஏசான் திடீரென வைத்திருந்த க.த்.தி.யை எ.டுத்து யோ.வானின் த.லை ம.ற்றும் க.ழு.த்.து ப.குதியில் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டியுள்ளார். இதில், நி.லைகுலைந்துபோன யோவான், இ.ர.த்.த வெ.ள்.ளத்தில் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், யோ.வானின் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஏசானை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது ஏசான் அளித்த வா.க்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ” நெல்லூரில் உள்ள துணிக்கடையில் நான் (ஏசான்) பணியாற்றிய போது, அனுஷா என்பவரை காதலித்து 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்தேன்.

நாங்கள் இருவரும் மேலூரில் வசித்து வந்த நிலையில், யோவான் பெயின்டிங் வேலை செய்து வந்தார். பின்னர், கடந்த மார்ச் மாதம் குமாரசேரிக்கு வந்து தங்கிய நிலையில், கடந்த மாதம் யோவான் என் மனைவியின் ஊருக்கு சென்று, அவரின் பிறந்தநாளில் கேக் வாங்கிக்கொடுத்து வெ.ட்டவைத்து கொண்டாடினர்.

இதனால் எனக்குள் எழுந்த ச.ந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அ.ண்ணனை கொ.லை செ.ய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏசானை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

மன்னாரில் கடமை முடித்து வீடு திரும்பிய சுகாதாரப் பணி உதவியாளர் விபத்தில் பலி!!

மன்னாரில்..

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம்.சல்மான் (வயது-29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிலங்குளம், பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும், அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து வீடு நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் திடீரென உயிரிழந்த இருவருக்கு கொரோனா!!

கொரோனா..

தென்னிலங்கையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்த இரண்டு நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களுக்கு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில்,

அந்த நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்றியிருந்தமை இன்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ருவன் நாணயக்கார தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குருந்துவத்தை கிங்தொட்டை மற்றும் டக்கியாவத்தை தலாப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். அவர்கள் 59 மற்றும் 77 வயதுடையவராகும்.

குறித்த இருவரும் தங்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டிற்கு சென்றவர் என காலி நகர மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இரண்டு சடலங்களும் தகனம் செய்யப்படவுள்ளன.

வவுனியாவில் யாசகம் செய்பவர் உறங்கியபோது அவரது சக்கர நாற்காலி திருட்டு!!

யாசகம் செய்பவர்..

வவுனியாவில் ஒற்றைக் காலை இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்து யாசகம் செய்யும் நபர் ஒருவர் உறங்கிய போது அவரது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

விபத்து ஒன்றில் ஒற்றை காலை இழந்த நபர் ஒருவர் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் யாசகம் செய்து வருகின்றார். வழமைபோல் யாசகம் செய்து விட்டு நேற்று (02.02) இரவு உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது உறங்கிய இடத்திற்கு அருகில் விட்டிருந்த சக்கர நாற்காலியை காணவில்லை.

இதனையடுத்து குறித்த நபர் அப்பகுதியில் நின்ற பொது மக்களின் உதவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.