இன்றைய நாளுக்கான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இன்றைய நாளுக்கான பேரணி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவுபெற்றுள்ளது என சிவில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பேரணி மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இருந்து நாளை மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகிபல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெற்று வந்தது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் நிறைவடைந்தது.

வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 10.00 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பமான மேற்படி போராட்டமானது அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளைத் தாண்டி மட்டக்களப்பினை வந்தடைந்துள்ளது.

இந்த போராட்டத்தின் போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களை பல இடங்களில் பொலிஸ் தடைகளை ஏற்படுத்திய,

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறியபோது பேரணியில் சென்றவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது பேரணியில் சென்றவர்களின் பதாகைகளை கிழித்தெறிந்ததுடன், பேரணியில் சென்றவர்கள் மீது தா.க்.கு.த.ல் நடாத்துவதற்கும் முற்பட்டபோதிலும் அவற்றினையெல்லாம் தாண்டி துணிச்சலுடனும், எழுச்சியுடனும் பேரணி மட்டக்களப்பு நோக்கி சென்றது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அவற்றினையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.

இந்த பேரணியானது பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100 கிலோ மீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள்,

முஸ்லீம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த போது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி உட்பட பெருமளவான முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை தொடக்கம் மருதமுனை வரையில் முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்ததுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டம் நாளை மட்டக்களப்பில் ஆரம்பமாகி திருகோணமலை, தென்னமரவாடியை சென்றடைந்து யாழ்ப்பாணம், பொலிகண்டியில் நிறைவடையவுள்ளதாக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த போராத்தில் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் மாவட்ட தலைவர்களான எஸ்.சிவயோகநாதன், வேலன் சுவாமிகள், அருட்தந்தை ரொஹான், அருட்தந்தை ரொமேஸ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், பண்ணையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், கலையரசன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

-தமிழ்வின்-

கொழும்பு சென்ற பேருந்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இரு பெண்களுக்கு நேர்ந்த கதி..

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் இருந்த பெண்கள் இருவர் ம.யக்கமடைந்துள்ளனர். பேருந்தில் பெண்கள் ம.யக்கமடைந்தவுடன் அவர்களின் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்.த இளைஞன் அங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுள்ளார்.

இளைஞனை கை து செய்வதற்கு பொலிஸார் வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருந்தில் பயணித்த குறித்த பெண்களுக்கு இளைஞன் ரோல்ஸ் வழங்கியுள்ளார்.

அதனை உட்கொண்டவுடன் பெண்கள் இருவரும் ம.யமடைந்ததாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த மு றைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கு ற்றசெயல்கள் இடம்பெறும் என்பதனால் பேருந்துகளில் அ.டையாளம் தெரியாத நபர்களுடன் பழக வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அ.டையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அ.டையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர் : மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!!

சீனாவில்..

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறமாக மாறியதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Du என்று அழைக்கப்படும் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
அவற்றில் ஒன்று புற்றுநோய்க்கட்டி.

அந்த கட்டி அவரது கணையத்தில் இருந்ததால், அது அவரது பித்தநீர் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆகவே, பித்தநீர் வெளியேறாததால்தான் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.

தற்போது, மருத்துவர்கள் அந்த இரண்டு கட்டிகளையும் அகற்றியிருக்கிறார்கள். அந்த கட்டிகளுக்கு காரணம், Du 30 ஆண்டுகளுக்கும் மேலாக கு.டிகாரராக இருந்ததும், பு.கை.பி.டி.த்.ததும்தான்.

ஆகவே, தயவு செய்து ம.து.வை.யு.ம் பு.கைப்பி.டித்தலையும் நிறுத்துமாறு மருத்துவர்கள் Duவை கேட்டுக்கொண்டுள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கட்டிகள் அகற்றப்பட்டதும் Duவின் தோல் நிறம் சாதாரணமாகிவிட்டது என்பதுதான்.

இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குறுஞ் செய்தி : மகிழ்ச்சியாக சென்ற இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் காரில் சென்ற இளம் தந்தை பாலத்தில் இருந்து கீழே விழுந்து நதியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் Sheffield-ல் இருக்கும் பாலத்தில் சென்ற போது, எதிர்பார்தவிதமாக அந்த பாலத்தின் இரும்பு பேரியர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரானாது, கீழே நதியில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால், இளம் தந்தையான Tommy Hydes(24) மற்றும் அவருடைய உறவினர் மற்றும் மருமகன் என்றழைக்கப்படும் Josh Hydes(20) பரிதாபமாக நதியில் மூழ்கினர்.

இவர்கள் சென்ற கார் மெர்சிடிஸ் கார், இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டு, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இவர்களின் இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தான் Tommy Hydes-க்கு குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு April Rose என்ற காதலி உள்ளார். இவர் அயர்லாந்தை சேர்ந்தவர். தனது கணவர் மரணம் குறித்து அவர் கூறுகையில், அவர் இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

அப்போது Josh Hydes வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் என் காதலன் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் சிறந்த நண்பராக இருந்தார். நான் உன்னை அவரை மிகவும் நேசிக்கிறேன்.

அவரின் மரணம் என்னைக் கொல்கிறது, நீங்கள் திரும்பி வர முடியாது என்பது எனக்கு தெரியும், அது எனக்கு மிகவும் வலிக்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார். உயிரிழந்த Tommy Hydes-ன் புகைப்படம் முதல் முறையாக பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.

அடையாளம் தெரியாதவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ : வைரலாகும் புகைப்படம்!!

பெண் எஸ்.ஐ..

இந்தியாவில் அடையாளம் தெரியாதவரின் சடலத்தை 2 கி.மீற்றர் தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்ஐ புகைப்படம் சமூகவலைத்தளங்கள் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கு நகராட்சி அடவி கொத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக பொதுமக்கள் நேற்று பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்ஐ சிரிஷா, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். பின்னர் அடையாளம் தெரியாதவரின் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. அதேபோல் சடலம் இருந்த விவசாய நிலப்பகுதி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடத்தில் இருந்தது.

இதனால், எஸ்ஐ சிரிஷா, அங்கிருந்த ஒரு சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரில் சடலத்தை வைத்து தனது தோளில் சுமந்தபடி சுமார் 2 கிலோமீற்றர் தூரம் உள்ள சுடுகாட்டில் தன்னார்வ அமைப்பினர் மூலம் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையறிந்த டிஜிபி கவுதம்சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

பெ ட்ரோலை ஊ ற்றி தீ வைத்த இலங்கை இளைஞன் : நேர்ந்த வி பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இலங்கை தமிழர் முகாமில் வசித்த இ ளைஞன் தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் முகாமில் வசிப்பவர் நல்லப்பன்.

இவரது மகன் மதிவாணன் (23) பெயிண்டர். இவர் கடந்த 27ஆம் திகதி மா.லை இ ருசக்கர வா கனத்திற்கு வை த்திருந்த பெ.ட்.ரோ.லை எ.டுத்து த.ன்.மீ.து ஊ.ற்.றி.க்.கொ.ண்.டு தீ வை.த்.து.க் கொ.ண்.டா.ர்.

அவரது ச.த்.த.ம் கேட்டு அ க்கம் ப க்கத்தினர் அ வ ரை மீ.ட்.டு வாலாஜா அரசு ம ருத்துவம னையில் சி.கிச்சைக்காக அ னுப்பி வை த்தனர். பி ன்னர் மே.ல் சி.கிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ம ருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சி கிச்சை ப.லனின்றி நேற்று அ வ ர் இ.றந்.தா.ர். இது குறித்து பொ லிசார் வ ழக்குப்பதிவு செ ய்து வி.சாரணை ந டத்தி வருகின்றனர்.

மியான்மரில் நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண்!!

மியான்மரில்..

மியான்மரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண் ஒருவர் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை இராணுவம் கைது செய்துள்ளது.

அத்துடன், ஒரு வருடத்திற்கு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடம் முன் நடனம் ஆடி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

மியான்மரில், ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இது குறித்து எதுவும் அறியாத கிங் ஹின் வை என்ற நடனக்கலைஞர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. குறித்த பெண்ணின் இந்த நடவடிக்கைகளுக்கும், இராணுவ கையகப்படுத்துதலுக்கும் இடையிலான அதிசயமான வேறுபாடு குறித்து பலர் கருத்து தெரிவித்தனர்.

தொழில் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிய இரு இளைஞர்கள் பரிதாபமாக மரணம்!!

களனி கங்கையில்..

களனி கங்கையில் குளிப்பதற்காக சென்ற 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் மாலை களனி கங்கையின் நவகமுவ, மாபிட்டிகம பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் தே.டப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர்களில் ஒருவர் தொழிலுக்கான நேர்முக தேர்வில் தெரிவாகியதனை கொண்டாடுவதற்காக,

நண்பர்களுடன் களனி கங்கை பாலத்திற்கு அருகில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் இளைஞர்கள் குளிப்பதற்கு சென்ற போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளளனர்.

இரண்டு நண்பர்கள் நீரில் மூழ்கும் போது மற்றைய இரண்டு நண்பர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 27 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

தத்துக்கொடுத்த தாயை தேடும் லண்டனில் வாழும் இலங்கைப் பெண்!!

யாசிகா பெர்னாண்டோ..

லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது பெற்றோர் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.

அது, தாங்கள் யாசிகாவை பெற்றவர்கள் அல்ல, யாசிகா மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது தத்துக்கொடுக்கப்பட்டவர் என்பதுதான். 1980களில், யாசிகாவை வளர்த்த டொனால்டும், யசந்தாவும் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் அவர்கள் யாசிகாவை நேசித்ததால், யாசிகாவுக்கு தன்னை பெற்றவர்களின் எண்ணம் அதிகம் வரவில்லை என்றாலும், 31 வயதானபோது யாசிகா, இவானி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, தானும் இதேபோல் இருக்கும்போதுதானே தன்னை தன் தாய் தத்துக்கொடுத்தார்.

இப்படி ஒரு அருமையான பாசப்பிணைப்பு கொண்ட ஒரு குழந்தையை தத்துக்கொடுக்க யாருக்கு மனம் வரும் என்ற கேள்வி யாசிகாவின் மனதில் எழுந்தது.

அப்போது, இலங்கையில் ஒரு வீட்டிலிருந்து யாசிகாவை தாங்கள் தங்கள் கைகளில் வாங்கிக்கொண்டபோது, ஒரு பெண் ஓவென கண்ணீர் விட்டுக் கதறும் சத்தத்தை தாங்கள் கேட்டதை நினைவுகூர்ந்தார்கள் டொனால்டும், யசந்தாவும்.

அப்போது முடிவு செய்தார் யாசிகா, தன்னைப் பெற்ற தாயை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று. யாசிகாவும் அவரது கணவர் திலக்கும் இலங்கைக்கு புறப்பட்டார்கள். சிலரது உதவியுடன் அவர் பிறந்த இடமான கொழும்புக்கு சென்று தேடியபோது, யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை.

நீண்ட அலைச்சலுக்குப் பின் தன்னை தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்த கான்வெண்டுக்கு சென்றபோது, அவர்களுக்கு யாசிகாவின் தாய் இருந்த இடம் தெரிந்திருந்தாலும்,

அவர் இப்போது தான் தத்துக்கொடுத்த மகளை சந்திக்க தயாராக இருக்கிறாரா என்பது தெரியாததால், அதற்குள் யாசிகா லண்டன் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டது, தாயை சந்திக்காமலே, இதயத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு பிரித்தானியாவுக்கு திரும்பினார் யாசிகா.

ஆனால், யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பதில் உதவியவரான சிறி சில்வா என்பவர், அவரை சந்தித்து அவர் யாசிகாவை சந்திக்க தயாராக இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா காரணமாக இப்போதைக்கு யாசிகாவால் இலங்கைக்கு செல்லமுடியாது என்பதால், வீடியோ அழைப்பு மூலம் தாயை சந்தித்திருக்கிறார்.

என்னை ஏன் தத்துக்கொடுத்தீர்கள் என அவர் தாயிடம் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கக்கூடும், பதிலுக்கு அந்த தாயும் கண்ணீர் வடித்திருக்கலாம். அந்த விவரங்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியாவதால் அளிக்கப்படவில்லை.

என்றாலும், யாசிகாவும் அவரது கணவர் திலக்கும், தங்கள் மகள் இவானி மற்றும் புதிதாக பிறந்திருக்கும் இன்னொரு மகளையும் அவர்களது பாட்டிக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.

இலங்கையில் 18 மாத ஆண் சிசு உட்பட மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவு!!

கொரோனா மரணங்கள்..

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

1. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில் ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இரத்தம் குறைதல் ஆகிய காரணிகளால் இவர் உயிரிழந்துள்ளார்.

5. கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் கண்டி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இரத்தம் விசாமாகியமை, தீவிர நீரிழிவு, சிறுநீரக நோய் என்பனவற்றில் இவர் உயிரிழந்துள்ளார்.

6. கொழும்பு – 2 பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாத ஆண் சிசுவொன்று நேற்றைய தினம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

7. ராகம பிரதேச்தைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இரத்த அழுத்தம் மற்றும் அஸ்துமா ஆகிய நோய்க் காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வயிற்று வலியால் அவதியுற்ற குழந்தை : எக்ஸ்ரேயில் அதிரவைத்த காட்சி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கடும் வயிற்று வலியால் அவதியுற்ற குழந்தை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் பெற்றோர். 22 மாதக் குழந்தையான Becca McCarthyயை பரிசோதித்த மருத்துவர்கள்,

முதலில் அவளுக்கு குடல் வால் அழற்சி இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆனால், எக்ஸ்ரே வித்தியாசமான ஒரு காட்சியைக் காட்டியது.

ஆம், Beccaவின் வயிற்றுக்குள் உருண்டையான பொருட்கள் சில சங்கிலிபோல் இணைந்திருந்ததைக் கண்ட மருத்துவர்கள், அவை உலோகத்தாலான பொருட்கள் என தெரியவந்ததையடுத்து அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர்.

அதற்காக Beccaவின் குடல் தற்காலிகமாக அகற்றப்பட்டது. அந்த குடலை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை காந்த உருண்டைகளை விழுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பல வண்ணங்களில் இருந்த அந்த காந்த உருண்டைகளை குழந்தை மிட்டாய் என்று எண்ணி விழுங்கியிருக்கிறாள். இரண்டரை மணி நேர அறுவை சிகிசைக்குப்பின் காந்த உருண்டைகளை அகற்றி குடலை இணைத்துள்ளனர் மருத்துவர்கள்.

மேலும் ஒரு வாரத்திற்கு Becca மருத்துவமனையில் செலவிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளர்கள். இந்நிலையில், அந்த காந்த உருண்டைகளை தடை செய்யவேண்டும் என்று கோரியுள்ள Beccaவின் தாய்,

யாராவது அவற்றை வாங்கி வைத்திருந்தால் தயவு செய்து வீசியெறிந்துவிடுமாறு பெற்றோரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நள்ளிரவில் பரிதாபப்பட்டு செய்த உதவி : இளைஞரை உ.யிருடன் கொ.ளுத்திய கொ.டூரம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத இருவருக்கு தமது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் அளித்த இளைஞர், தற்போது உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். சம்பவத்தன்று திரைப்படம் பார்த்து விட்டு, நள்ளிரவில் தமது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது வழி மறித்த ஒருவர், மிக அவசரம் எனவும், எந்த வாகனமும் தமக்கு உதவ முன்வரவில்லை எனவும் கூறி உதவி கேட்டுள்ளார். பரிதாபப்பட்ட ஹரிஷ் அவருடன், அவர் கூறிய பகுதிக்கு தமது இருசக்கர வாகனத்தை திருப்பி விட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்னொரு பகுதியில் வைத்து இரண்டாவது ஒருவர் கை காட்டி, உதவி கோரியுள்ளார். உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவரையும் பரிதாபப்பட்டு, ஹரிஷ் தம்முடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மூவரும் கொஞ்ச தூரம் சென்றதும், அந்த நபர்கள் இருவரும் ஹரிஷை ச.ரமாரியாக தா.க்.கி.ய.து.ட.ன், பைக்கில் இருந்து ஹரிஷை கீழே த.ள்ளியுள்ளனர்.

மட்டுமின்றி, பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து ஹரிஷ் மீது ஊ.ற்றி தீ.வை.த்.து.வி.ட்.டு அங்கிருந்து மா.யமாகியுள்ளனர். சுமார் 4 மணியளவில் உள்ளூர் மக்கள் சிலர் கு.ற்றுயிராக கி.டந்த ஹரிஷ் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும்,

அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஹரிஷின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வி.சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் 28 வயதான ஹரிஷ் மீது முன் வி.ரோதம் இருந்திருக்கலாம் எனவும், ஹரிஷ் கூறிய மொழியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 4 மணிநேரம் மொபைலில் கேம் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான சிறுவன் நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரமாக ஒன்லைனில் ‘Fire Wall’ என்ற கேமை விளையாடிக்கொண்டிருந்தார்.

சிறுவனின் தந்தை பச்சையப்பன் எதேச்சையாக தன் மகனை பார்த்தபோது, அவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளான். பதறிப்போன பெற்றோர்கள் இரவு 11.40 மணியளவில் Jipmer மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

தர்ஷன், தொடர்ந்து கேம் விளையாடியதால் தான் இறந்துவிட்டானா அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக இறந்தானா என்பது இப்போதைக்கு தெரியவில்லை.

அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகினறனர்.

இந்நிலையில், நான்கு மணி நேரம் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடியா நிலையில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் குறித்து வெளியான தகவல்!!

கயான் தந்தநாராயண..

இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் எக்மோ இயந்திரத்தின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த வைத்தியர் கயான் தந்தநாராயணவின் மனைவி, தனிமைப்படுத்தலின் கீழிருந்து வந்த நிலையில் நேற்று காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். அவர் அவரது கணவரை அடையாளம் காட்டினார்.

அத்துடன் தன் கணவர் வைத்தியர் கயான் தந்தநாராயணவுக்கு இறுதி அஞ்சலியையும் அவர் செலுத்தினார். அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டதாக காலி நகரின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஆர்.எம். நாசிம் தெரிவித்தார்.

இந்நிலையில், வைத்தியர் கயான் தந்தநாராயணவின் சடலம் இன்று காலி, தடல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

என்னை ஏன் தத்துக் கொடுத்தீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறிய லண்டனில் வாழும் இலங்கைப் பெண்!!

யாசிகா பெர்னாண்டோ..

லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது பெற்றோர் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.

அது, தாங்கள் யாசிகாவை பெற்றவர்கள் அல்ல, யாசிகா மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது தத்துக்கொடுக்கப்பட்டவர் என்பதுதான்! 1980களில், யாசிகாவை வளர்த்த டொனால்டும் யசந்தாவும் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் அவர்கள் யாசிகாவை நேசித்ததால், யாசிகாவுக்கு தன்னை பெற்றவர்களின் எண்ணம் அதிகம் வரவில்லை என்றாலும், 31 வயதானபோது யாசிகா, இவானி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது,

தானும் இதேபோல் இருக்கும்போதுதானே தன்னை தன் தாய் தத்துக்கொடுத்தார், இப்படி ஒரு அருமையான பாசப்பிணைப்பு கொண்ட ஒரு குழந்தையை தத்துக்கொடுக்க யாருக்கு மனம் வரும் என்ற கேள்வி யாசிகாவின் மனதில் எழுந்தது.

அப்போது, இலங்கையில் ஒரு வீட்டிலிருந்து யாசிகாவை தாங்கள் தங்கள் கைகளில் வாங்கிக்கொண்டபோது, ஒரு பெண் ஓவென கண்ணீர் விட்டுக் கதறும் சத்தத்தை தாங்கள் கேட்டதை நினைவுகூர்ந்தார்கள் டொனால்டும் யசந்தாவும்.

அப்போது முடிவு செய்தார் யாசிகா, தன்னைப் பெற்ற தாயை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று! யாசிகாவும் அவரது கணவர் திலக்கும் இலங்கைக்கு புறப்பட்டார்கள். சிலரது உதவியுடன் அவர் பிறந்த இடமான கொழும்புக்கு சென்று தேடியபோது, யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை.

நீண்ட அலைச்சலுக்குப் பின் தன்னை தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்த கான்வெண்டுக்கு சென்றபோது, அவர்களுக்கு யாசிகாவின் தாய் இருந்த இடம் தெரிந்திருந்தாலும், அவர் இப்போது தான் தத்துக்கொடுத்த மகளை சந்திக்க தயாராக இருக்கிறாரா என்பது தெரியாததால்,

அதற்குள் யாசிகா லண்டன் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டதால், தாயை சந்திக்காமலே, இதயத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு பிரித்தானியாவுக்கு திரும்பினார் யாசிகா.

ஆனால், யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பதில் உதவியவரான சிரி சில்வா என்பவர், அவரை சந்தித்து அவர் யாசிகாவை சந்திக்க தயாராக இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா காரணமாக இப்போதைக்கு யாசிகாவால் இலங்கைக்கு செல்லமுடியாது என்பதால், வீடியோ அழைப்பு மூலம் தாயை சந்தித்திருக்கிறார்.

என்னை ஏன் தத்துக்கொடுத்தீர்கள் என அவர் தாயிடம் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கக்கூடும், பதிலுக்கு அந்த தாயும் கண்ணீர் வடித்திருக்கலாம். அந்த விவரங்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியாவதால் நமக்கு அளிக்கப்படவில்லை.

என்றாலும், யாசிகாவும் அவரது கணவர் திலக்கும், தங்கள் மகள் இவானி மற்றும் புதிதாக பிறந்திருக்கும் இன்னொரு மகளையும் அவர்களது பாட்டிக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த முதல் வைத்தியரின் உடல் தகனம் செய்யப்பட்டது!!

கொரோனா..

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த முதலாவது முன்னரங்க மருத்துவ பணியாளரான வைத்தியர் கயான் தந்தநாரயணவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர் கயான் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வைத்தியர் கயானின் சடலம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் காலி தடெல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் கயானின் மனைவி மற்றும் தாயாருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.