கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் மரணம்!!

கொரோனா..

மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் முடக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

அறிவிப்பு..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உடனடியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறும்,

அவ்வாறு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதுவரை முடக்கப்பட்ட பகுதிகளில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நாளையதினம் (23.01.2021) காலை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்,

மேலும் வவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகர வர்த்தக நிலையங்களில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிராந்திய சுகாதார பணிமனையினால் வழங்கப்படும் பரிசோதனை அட்டையை வைத்திருக்கும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படுவதுடன்,

குறித்த செயற்பாடுகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று வார காலப்பகுதிக்குள் 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது!!

சூசைப்பிள்ளையார் குள வீதி..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட சூசைப்பிள்ளையார் குள வீதி மாத்திரம் நாளையதினம் (23.01) விடுவிக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் வவுனியாவில் பல இடங்கள் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் பிரகாரம் 250 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நகரின் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சூசைப்பிள்ளையார் குள வீதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில்,

அப்பகுதி நாளையதினம் (23.01) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதுடன் குறித்த பகுதியில் திறக்கப்படும் அனைத்து வர்த்தக நிலையங்களும் தொற்று நீக்கிய பின்னர் திறக்கப்பட வேண்டுமென என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி போன்ற இடங்கள் தொடரந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிராந்திய சுகாதார பணிமனையினால் வழங்கப்படும் பரிசோதனை அட்டையை வைத்திருக்கும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படுவதுடன்,

மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (22.01) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த நான்கு நபர்களும், தோணிக்கல் வீதியினை சேர்ந்த ஒருவரும், பஸார் வர்த்தக நிலைய ஊழியர்கள் எட்டு பேர் என 13 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வவுனியா நகரப் பாடசாலைகளில் 10 வீதமே மாணவர்கள் வருகை!!

மாணவர்கள் வருகை..

வவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதுடன், நகரப் பாடசாலைகளில் 10 வீதமான மாணவர்களே வருகை தருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டதுடன், பல பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் மாணவர்கள் பெரிதாக பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை. இது தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எமது வலயத்தில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் வரவு மிகவும் குறைவாக உள்ளது. இருந்தபோதும் எமது வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர்.

செட்டிகுளம் பிரதேச பாடசாலைகளில் மாணவர் வருகை 50 வீதமாகக் காணப்படுகின்றது. எனினும் நகரக்கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமாகவே மாணவர் வரவு அமைந்துள்ளது.
அதிலும் நகரப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர் வருகை 10 வீதமாகவே காணப்படுகின்றது.

இதேவேளை வெளி மாவட்டங்களிற்குச் செல்லும் ஆசிரியர்களிற்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீடு வீடாக கெஞ்சியும் யாரும் வரவில்லை : மகளுடன் சேர்ந்து வசித்த 35 வயது தாய்க்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 7 வயது சி.று.மி கண்முன்னே அவரது தாயை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த, தாயின் 2 வது கணவர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை சேர்ந்தவர் சரிதா (35). இவர் கணவர் சுரேஷ். தம்பதிக்கு செர்மிலி (7) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் மதன் (42) என்பவருடன் காதலில் விழுந்த சரிதா அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மதனுக்கும் ஏற்கனவே அலமேலு என்ற மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்த பின்னரே சரிதாவை மணந்தார். திருமணத்துக்கு பின்னர் மதன் – சரிதா தம்பதிக்கு மெகிலினா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மதனுடனான திருமணத்துக்கு முன்னர் வரை சரிதா வேலைக்கு சென்ற நிலையில் பின்னர் வேலையை விட்டுள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக சரிதா, மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் த.க.ரா.று செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆ.த்.தி.ர.ம் அடைந்து ச.ண்.டை.யி.ட்.ட.தா.க கூறப்படுகின்றது.

முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது ஏன் என கேட்டு த.க.ரா.று செ.ய்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே மீண்டும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

7 வயது மகள் செர்மிலி அருகில் இருந்த நிலையில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த மதன் வீட்டில் இருந்த இ.ரு.ம்.பு பை.ப்.பை எடுத்து சரிதாவின் த.லை.யி.ல் அ.டி.த்.து.ள்.ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ப.ரி.தா.ப.மா.க இ.ற.ந்.தா.ர். தனது கண்முன் தா.யை அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தை பார்த்த, செர்மிலி அ.தி.ர்.ச்.சி அடைத்து க.த.றி அ.ழு.தா.ர்.

இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத கு ழந்தையுடன் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.னா.ர். பின்னர் பொலிசார் த.லை.ம.றை.வா.க இருந்த மதனை கொ.லை ந.ட.ந்.த 3 மணி நேரத்தில் சு.ற்.றி.வ.ளை.த்.து கை.து செ.ய்தனர்.

அப்போது பொலிசாரிடம் செர்மலி, இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் தா.ய் தா.க்.க.ப்.ப.டு.வ.து குறித்து வீடு வீடாக சென்று கெஞ்சி உதவி கேட்டும் ஒருவர் கூட உதவுவதற்கு வரவில்லை என அ.ழு.து கொண்டே கூறியது பார்ப்பதற்கு ப.ரிதாபமாக இருந்தது.

81 வயது பாட்டியை திருமணம் செய்த 36 வயது நபர் : மகிழ்ச்சியாக இருந்த தம்பதியை பிரித்த ஒரு விடயம்!!

81 வயது பாட்டி..

பிரித்தானியாவை சேர்ந்த 81 வயது பாட்டியும், எகிப்த்தை சேர்ந்த 36 வயது நபரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விசா பிரச்சினையால் இருவரும் பிரிந்து வெவேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Iris Jones (81). இவர் £220,000 மதிப்புடைய சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். Irisம் எகிப்து நாட்டை சேர்ந்த Mohamed Ahmed (36) என்பவரும் பேஸ்புக் மூலம் கடந்த 2019ல் நட்பானார்கள்.

இது பின்னர் காதலாக மாறியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் Iris தனது காதலனை காண எகிப்துக்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று வசிக்க முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் Iris பிரித்தானியாவுக்கு வந்தார். ஆனால் விசா பிரச்சினையால் அவர் கணவர் Mohamedஆல் பிரித்தானியாவுக்கு இன்னும் வரமுடியவில்லை.

இதன் காரணமாக பிரிந்துள்ள தம்பதி வேதனையடைந்துள்ளது.
இது குறித்து Iris கூறுகையில், எப்போது என் கணவர் என்னுடன் ஒன்றுசேருவார் என தெரியவில்லை.

நான் விரும்பும் ஒருவரிடமிருந்து நான் பிரிந்துவிட்டேன், அது மிகவும் கடினமான ஒன்றாகும். என்னால் எகிப்துக்கு திரும்பிச் செல்ல முடியாது, ஏனென்றால் அங்குள்ள சூழல் எனது உடல்நலத்திற்கு பொருத்தமாக இல்லை.

மேலும் அங்கு சூடாகவும் தூசி நிறைந்ததாகவும் அனைத்து பகுதிகளும் இருக்கிறது என கூறியுள்ளார். Mohamed கூறுகையில், நாங்கள் எங்கு வாழ்கிறோம் அல்லது அவள் எவ்வளவு பணக்காரர் அல்லது ஏழை என்று எனக்கு கவலையில்லை, நான் Iris உடன் இருக்க விரும்புகிறேன்.

பிரித்தானியா அல்லது எகிப்து எங்கு வாழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை. பிரித்தானியா அழகான நாடு என எனக்கு தெரியும், ஆனால் உலகில் எங்கும் Iris உடன் வாழ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

வீட்டு வேலைக்கு வந்தவனின் கொ.டூ.ர செ யல் : பரிதாபமாக இ.ற.ந்.த இந்திய தம்பதி!

இந்திய தம்பதி..

து.பாயில் இ.ந்திய த.ம்பதியர், பா.கிஸ்தான் நா.ட்டைச் சே.ர்ந்த ந.பரால் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்பவத்தில், த.ம்பதியரின் இ.ரண்டு ம.கள்கள் ம.ற்றும் அ.வர்களது ந.ண்பர்கள் சா.ட்சியளிக்க உ.ள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த தம்பதியயார் ஹிரென் ஆதியா(48) மற்றும் அவரது மனைவி விதி(40) ஆகியோர் துபாயில் இருக்கும் ரேபியன் ராஞ்செஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், சம்பவ தினமான கடந்த 2020-ஆம் ஆண்டு ஜுன் 17-ஆம் திகதி 26 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால், இந்த த ம்பதியனர் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர்.

அந்த 26 வயது மதிக்கத்தக்க இ ளைஞன், வீட்டில் பரமாரிப்பு வேலைக்காக வந்துள்ளான். அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு, அதை தி.ரு.ட தி ட்டுமிட்டு, இ வர்கள் இ ருவரையும் ப.டு.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

அப்போது வீட்டில் இருந்த இ ரண்டு ம கள்களும் அ வனை பி.டி.க்.க போ.ரா.டி, அ வனிடம் க.த்.து கு.த்.து வா.ங்.கி, கா.ய.ங்.க.ளு.ட.ன் பொலிசாரிடம் பி.டி.த்.து ஒ.ப்.ப.டை.த்.த.ன.ர்.

இதையடுத்து இது குறித்து வ ழக்கு பதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு அங்கிருக்கும்,

நீதிமன்றத்தில் வரும் 10-ஆம் திகதி வி சாரணைக்கு வரவுள்ளது. அந்த வி.சாரணையின் போது, கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட தம்பதியினர் 13 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க மகள்கள் இரண்டு பேர் சாட்சியளிக்கவுள்ளனர்.

இதையடுத்து முழு வி சாரணைக்கு பின், அந்த நபர் கு ற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் க டுமையான த ண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலனின் மொபைல் போனை ஆராய்ந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

இளம் பெண்..

காதலன் தனக்கு து.ரோகம் செய்கிறாரோ என ச ந்தேகப்பட்ட ஒரு பெண், அவரது மொபைலை ஆராய்ந்தபோது அது உண்மைதான் என்பதைக் கண்டுபிடித்தார்.

உண்மை நிரூபணமானபோது, பிரித்தானியாவின் Salisburyயைச் சேர்ந்த Lauren Lilley (29) என்ற அந்த பெண், தன் காதலனான Nathan Smithஐ வீட்டை விட்டு து ரத்தி, அவரது பொருட்களையும் வெளியே தூ க்கி வீ சினார்.

பல நாட்கள் அழுது தீர்த்தும் மனம் ஆறாமல், Nathanஐ எப்படியாவது ப.ழிவாங்கவேண்டுமென முடிவு செய்தார் Lilley. இப்போதும் கூட தனது காதலனின் அமேசான் கணக்கை தன்னால் அணுகமுடியும் என்பது நினைவு வரவே, பொய்யன்,

ஏ மாற்றுக்காரன் என்பது போன்ற தலைப்பு கொண்ட இந்தி சினிமா டிவிடிக்களை Nathanஉடைய பணத்திலேயே வாங்கினார் Lilley.
Nathan கணக்கு வைத்திருக்கும் வங்கி இது குறித்து அவருக்கு தெரியப்படுத்தியபோதுதான் அவருக்கு உண்மை தெரிந்துள்ளது.

Nathan, Lilleyயை தொலைபேசியில் அழைக்க, நல்ல பெண் வாழ்க்கையில் விளையாடாதே என அவரை க த்திய பிறகுதான் மனம் அ.மைதியடைந்துள்ளது Lilleyக்கு.

உயிரிழந்தவரின் சடலத்தால் ஏற்பட்ட குழப்ப நிலை : வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!!

குருணாகல் வைத்தியசாலையில்..

குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகியுள்ளனர்.

இதன் போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் சடலம் மீளவும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மல்சிரிபுர, நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராகும். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளளார். PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அறிக்கை கிடைத்த பின்னரே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பொறுப்பெடுக்க சென்ற சுகாதார அதிகாரிகளுக்கும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தகராறின் பின்னர் சடலம் தகனம் செய்யப்பட்டதுடன் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மிகவும் விழிப்புடன் இருங்கள் : பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!!

மத்திய வங்கி எச்சரிக்கை..

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மிகவும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்த மோசடிகளில் பெரும்பாலானவை வலை அல்லது மொபைல் பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்க்கின்றன.

” இதுபோன்ற கடன் விண்ணப்ப மதிப்பீட்டு செயல்பாட்டின் போது, ​​மோசடி செய்பவர்கள் இரகசியமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல் / தரவைப் பகிர்ந்து கொள்ள பொதுமக்களை கவர்ந்திழுக்கிறார்கள்.

இந்நிலையில், இது போன்ற மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம் : பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை!!

தொற்றாளர் தப்பியோட்டம்..

சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல தயாராக இருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். கட்டுநாயக்க, வலானகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தங்குமிடத்தில் இருந்து குறித்த கொரோனா தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நோயாளி நேற்று தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 25 வயதுடைய தப்பியோயுள்ளார்.

PCR பரிசோதனையின் போது குறித்த இளைஞன் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பதவிய, போகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். தப்பி சென்றவரை கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெற்றோருக்கு பல சந்தர்ப்பங்களில் தூக்க மாத்திரை : சி.று.மி.க்.கு நே.ர்.ந்.த அ.வ.ல.ம்!!

அவலம்..

15 வ.ய.தா.ன பா.ட.சா.லை மா.ண.வி ஒ.ரு.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.தா.க. தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் கை.து செய்துள்ளனர்.

ச ந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆ.பா.ச கா.ணொ.ளி.க.ளை கா.ண்பித்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, சி.று.மி ச ந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.

அ து க.ருத்தடைக்காக எ டுத்துக்கொ ள்ளப்பட்ட மா.த்திரை எ ன தெ.ரியவந்தது. இ து கு றித்து பொ லிஸாருக்கு அ றிவிக்கப்பட்ட நி லையில், ச ந்தேகநபர் கை.து செ ய்யப்பட்டு ள்ளார்.

சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ள.தா.க பொலிஸாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சி.று.மி வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு இலங்கை வரவுள்ள பத்து விமானங்கள் : நாட்டிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!!

விமான நிலையங்கள்..

விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே,

நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

14 நாட்கள் முடிந்த பிறகு, மூன்றாவது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனை முடிவில் எதிர்மறை முடிவு வரும் பட்சத்தில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுலாப்பயணிகளால் உள்ளூர் மக்களுக்குக் கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு பத்து விமானங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளது. நாட்டுக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு ஒரு விமானத்தில் 75 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு 750 இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொரோானா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கற்பதற்காகப் பதுளையிலிருந்து வந்து நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகாமைத்துவபீட மாணவிக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து வந்து பூநகரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பிலிருந்து யாழ். சென்ற பயணிகள் பேருந்து காரொன்றுடன் மோதி விபத்து!!

விபத்து..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து பயணிகளை இறக்கிய பின் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது, ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்தில் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் மற்றும் அருகிலிருந்த பேருந்து தரிப்பு நிலையம், ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு என்பனவும் சேதமடைந்துள்ளன.

இதனால் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரும் தலையில் கடும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் அலுவலக விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த காரில் பயணித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.