இளம் தம்பதி செய்துவந்த மோ சமான செயல் : அ திர்ச்சிப் பின்னணி!!

இளம் தம்பதி..

தமிழகத்தில் தங்கக்கட்டி வாங்கி விற்பதாகக் கூறி பெரியளவில் மோ.ச.டி செ ய்த த ம்பதி கை து செ ய்யப்பட்டு ள்ளனர். காரைக்குடியை சோ்ந்தவா் மாணிக்கம் (30). இவரது மனைவி கயல்விழி (29).

இ வா்கள் இ ருவா் மீ து ம் ப.ண மோ.ச.டி மற்றும் கொ.லை மி.ர.ட்.ட.ல் உ ள்ளிட்ட பு.கா.ர்.க.ளி.ன் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் கடந்த 2019 இல் வ ழக்குப்ப திவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக த.லை.ம.றை.வா.க இருந்த இ ருவரையும் பொலிசார் தே.டி.வ.ந்.த.ன.ர். இந்நிலையில் மாணிக்கம், கயல்விழி தம்பதி மீது மேலும் ப லரிடம் மோ.ச.டி செ ய்ததாக பு.கா.ர்.க.ள் வ ந்தன.

இதைத் தொடா்ந்து காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் த.னி.ப்.ப.டை அ மைக்கப்பட்டு தீ விரமாக இருவரையும் பொலிசார் தே.டி வ.ந்.த.ன.ர்.

இந்நிலையில் கோவை அருகே மாணிக்கம், கயல்விழி ஆகிய இருவரையும் கை து செ ய்து காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா்.

மேலும் த ங்கக் க ட்டி வாங்கி விற்பதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் நகை மற்றும் ரொக்கம் மோ.ச.டி செ ய்து சொ குசாக வாழ்ந்து வந்த பு.கா.ரி.ன் பே ரில் பொலிசார் இருவரிடம் வி சாரித்து வ ருகிறார்கள்.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் வாகனம் வீழ்ந்து விபத்து இருவர் மீட்பு : இருவரை காணவில்லை!!

வவுனிக்குளத்தில்..

முல்லைத்தீவு – வவுனிக்குளத்திற்குள் பட்டா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19.12.2020) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனிக்குளம் அணைக்கட்டு வழியாக பட்டா வாகனத்தில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அணைக்கட்டிலிருந்து கவிழ்ந்து குளத்திற்குள் விழுந்துள்ளது.

இதன்போது வாகனத்திலிருந்த ஒரு பிள்ளை தப்பி கரை ஏறியுள்ள போதும் தந்தையையும், இரு பிள்ளையும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் வாகனத்தை மீட்டு காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை மக்கள் மற்றும் பொலிஸாரால் மேற்கொண்டதுடன் நீரில் முழ்கிய நிலையில் காணப்பட்ட ஒர் பிள்ளையை பொது மக்கள் மீட்டெடுத்து மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

முதியோர் இல்லத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் முதியவர் உயிரிழந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 45 முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 98 முதியோருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த முதியோரில் 6 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதியோர் இல்லத்திற்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 140 பேரின் காணிகளை உடனடியாக ரத்து செய்து காணி அற்றோருக்கு வழங்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு!!

ஓமந்தையில்..

வவுனியாவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் ஓமந்தையில் அரச ஊழியர்களிற்காக வழங்கப்பட்ட காணிகள் என்பவற்றில் குடியிருக்காதவர்களது காணிகள் அனைத்தையும் ரத்து செய்து காணி அற்றோருக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் காணி அற்ற 600இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

எனினும் 600 பேர் வரையில் குறித்த பகுதியில் காணிகளை பெற்றுக் கொண்ட நிலையில் வெறும் 80 குடும்பங்கள் மாத்திரமே அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

200 பேர் வரையில் பகுதியளவில் வீடுகளை அமைத்துள்ளதுடன், ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் குறித்த காணிகள் பற்றைக்காடுகளாக வளர்ந்து காடுமண்டி கிடக்கிறது. அத்துடன் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் அரசின் வீட்டுத்திட்டங்களை பெற்றுவிட்டு அங்கு மக்கள் குடியிருக்காத நிலைமை காணப்படுகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பாக நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், குறித்த காணிகளை உடனடியாக ரத்து செய்து விட்டு, ரத்து பத்திரத்தை ஒட்டுமாறும் அந்த இருப்பிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ள காணி அற்றோருக்கு வழங்குமாறும் பணித்துள்ளார்.

இதேவேளை முதற்கட்டமாக ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளாத 140 பேரின் காணிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ரத்துப் பத்திரம் ஒட்டப்படவுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஓமந்தை பகுதியை விட வவுனியாவின் ஏனைய பிரதேசங்களிலும் அதிகமாக உள்ள நிலையில் அதனையும் கருத்தில் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கு.திலீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஆராய்ந்த ஆளுநர் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இப்படியான வீடுகள் காணிகள் இருந்தால் அவை அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து காணி அற்றோருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் : இராணுவ தளபதி எச்சரிக்கை!!

இராணுவ தளபதி எச்சரிக்கை..

பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் போது வார இறுதியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதனை முடிந்தஅளவு குறைத்துக் கொள்ளுங்கள் என இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு!!

நாளை இரவு..

நாளை இரவு(20.12.2020), வானில் விசேட கிரகங்கள் ஒன்று சேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.

800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பதிவு செய்யப்படுவர் : அரசாங்கம்!!

சமூக ஊடகப் பயனர்கள்..

சமூக ஊடகப் பயனர்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் கண்டியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களையும் பதிவிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதனை தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்பாடலின் மிகவும் வலுவான ஓர் ஊடகமான சமூக வலையமைப்புக்களை கிரமப்படுத்துவது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்?

இலங்கையில்..

இலங்கையில் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்றினால் நாட்டில் இருபத்து ஐந்து வீதமானவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

உலக உணவுத் திட்டத்தின் எச்சரிக்கை குறித்து நீர்ப்பாசன அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. உணவுப் பிரச்சினைகயை எதிர்நோக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையையும் உலக உணவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. எனவே மாற்று வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், குளங்கள் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கொழும்பில் மகனின் வீட்டிற்கு சென்று திரும்பிய தாய் வீதியில் சடலமாக மீட்பு!!

கொழும்பில்..

கொழும்பு – நாவல, சேனாநாயக்க மாவத்தையில் திடீரென விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாவல, ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் என தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகனின் வீட்டிற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த பெண் திடீரென விழுந்து மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் இதய சத்திரசிகிச்சை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதில் மீண்டும் சிக்கல்!!

சர்வதேச விமான நிலையம்..

எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றை மீண்டும் திறப்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ.சந்திசிரி தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு தேவையான சூழல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பிலான ஒத்திகை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த விமான பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்து தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திரத்தை முந்திச்செல்வதற்கு முயற்சித்த இளைஞன் விபத்தில் பலி!!

விபத்தில்..

மட்டக்களப்பு – மீராவோடை பிரதேசத்தில் இன்று (19.12) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்று மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பட்டா வாகனத்திற்கு இடம்கொடுத்த சந்தர்ப்பத்தில்,

உழவு இயந்திரத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச்செல்வதற்கு முயற்சித்த போதே உழவு இயந்திரத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் தந்தையும், மகனும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் வாழைச்சேனை – விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் கிரிஜன் (வயது – 18) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,

தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பபு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதாரப் பிரிவினரால் விடுவிப்பு!!

புதிய சாளம்பைக்குளம்..

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாளம்பைக்குளம் கிராமம் கடந்த (12.12.2020) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் கடந்த (14.12.2020) அன்று வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த 28 வயது தாயும் அவரது 5 வயது மகளும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் பின்னர் அடையாளம் காணப்பட்ட 38 வயது தந்தை, 8 வயது மகன், 2 வயது சிறுமி ஆகியோரும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

புதிய சாளம்பைக்குளம் முடக்கப்பட்டு இது வரையிலும் சமூகப்பரவல் எவையும் இன்மையினால் புதிய சாளம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 46 நபர்களை தவிர மிகுதி அனைவரையும் தனிமைப்படுத்தலிருந்து இன்று சுகாதார பிரிவினர் விடுவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் நான்கு பாடசாலைகள் காலவறையின்றி மூடப்பட்டதுடன், வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கற்பகபுரத்தில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து!!

விபத்து…

வவுனியா – மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (19.12.2020) மதியம் 12 மணியளவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னார் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார், இ.போ.ச பேரூந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக பயணத்தினை தொடர்ந்துள்ளது. இதன் போது பறயனானங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் இரு பேரூந்துகளும் ஒன்றையோன்று சந்திந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தனியார் பேரூந்தினை இ.போ.ச பேரூந்து முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் தனியார் பேரூந்து வழி விடாது போட்டி போட்டு ஓடியுள்ளது.

இவ்வாறாக 20 கிலோமிற்றர் தூரம் போட்டி போட்டு ஒடி வந்த இரு பேரூந்துகளும் வவுனியா கற்பகபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இ.போ.ச பேரூந்து தனியார் பேரூந்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் தனியார் பேரூந்தின் சாரதி பேரூந்தினை வீதிக்கு ஏற்றியுள்ளார்.

இதனால் இ.போ.ச பேரூந்து தனியார் பேரூந்துடன் மோதுண்டதுடன் பின்னர் இ.போ.ச பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகே காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதும் வகையில் சென்றுள்ளது.

எனினும் இ.போ.ச பேரூந்தின் சாரதியின் முயற்சியினால் பேரூந்து கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இடம்பெறவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் உயர்வு!!

கொரோனா..

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

1. அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கடந்த 11ம் திகதி அகலவத்தை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. மக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர் கடந்த 15ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

4. மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் ,நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

5. வத்துபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் இன்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த மரண விபரங்களை வெளியிட்டுள்ளது.

2 வருடமாக பாறைக்கு அடியில் தனிமையில் வாழ்ந்து வரும் இளைஞர் : அ திர்ச்சி சம்பவம்!!

பிலிப்பைன்ஸ்…

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி. இவருக்கு வயது 35. இந்நிலையில், 2 வருடத்திற்கு முன்பு இவருடைய வயதான பெற்றோர்கள் இருவரும் உ யி ரி ழந் து வி ட்டனர்.

பெற்றோரின் இ ற ப்பை தாங்கிக் கொள்ள மு டியாத ராண்டி ம ன வ ருத்தத்தில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வி ரக்தி நிலைக்கு சென்ற ராண்டி யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் சென்று பாறைகளின் இ டுக்குகளில் உள்ள இடைவெளிக்குள் சென்று தங்கினார்.

பெற்றோரை இ ழந்த வி ரக்தியில் யாருடனும் பேச ம றுத்த ராண்டி தனிமையில் வாழ விரும்பினார். நாட்கள் செல்ல செல்ல பாறைகளிலேயே அவர் வாழ்ந்து வந்தார்.

ஊர் மக்கள் பலர் எப்படியோ இவரை காட்டில் கண்டுபிடித்து உணவளித்து வந்தனர். ஊர் மக்கள் எல்லாரையும் போல் பொது இடத்தில் வாழ்வதற்கு வா என்று அழைத்தனர். ஆனால், அதற்கு ராண்டி ம றுத்துவிட்டார். நான் வெளி உலகிற்கு வந்து வாழ விரும்பவில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

ஆண்டுக்கு 10 குழந்தைகள் : மொத்தம் 150 குழந்தைகள் : ஒரு வித்தியாசமான மனிதர்!!

ஆண்டுக்கு 10 குழந்தைகள்..

ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் என் மூலம் பிறந்துவிட்டார்கள், என்றாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் ஒருவர்.

பிரித்தானியாவின் Ilfordல் வாழும் அமெரிக்கரான Joe Donor (50), கொரோனா நேரத்திலும் பிரித்தானிய பெண்கள் சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார்.

அவர்களில் மூன்று பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் தனக்குக் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசுகளிலேயே சிறந்த பரிசு என்கிறார் Joe.

தன்னிடம் உயிரணு தானம் பெற்ற பல பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் தனக்கு குழந்தையின் புகைப்படத்தை அனுப்புவதுண்டு என்று கூறும், Joe சில பெண்கள் இன்னமும் தன்னுடன் தொடர்பிலிருப்பதாகவும் கூறுகிறார்.

நாளைக்கு அந்த குழந்தைகள் தங்கள் ஒன்று விட்ட சகோதர சகோதரிகளை தேடும்போது அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் Joe.

Joe, அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து உயிரணு தானம் செய்துள்ளார்.