வவுனியாவில் 69 பேருக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நியமனம் வழங்கி வைப்பு!!

69 பேருக்கு..

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 69 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அலுவலகத்தில் இன்று(24.10.2020) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் சிபார்சுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 69 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

 

நாட்டில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மேலும் 201 தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

நாட்டில் மேலும் 201 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 37 பேரும், மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 24 பேரும், மீன்சந்தையுடன் தொடர்புடைய 140 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒருவர் உ யிரிழந்த நிலையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போதைய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3625ஆக அதிகரித்துள்ளது.

 

கொழும்பு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தீவிரம் : முழு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை!!

கொரோனா தீவிரம்..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் வேகமாக பரவி வரும் 5 மாவட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் துரிதமாக தீரமானத்தை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான தொகுப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த மாவட்டங்களின் ஊடாக நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கிறது.

இந்த மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பாக உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தை தொடர்ந்தும் ஒத்திவைத்தால், பேலியகொடையில் ஏற்பட்ட கொத்தணி போல் நாடு முழுவதும் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை !!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது.

இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும் சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன்படி எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 471 கொரோனா தொற்றாளர்கள் நான்கு நாட்களில் கண்டுபிடிப்பு!!

கொரோனா..

பேலியகொடை மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட 471 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 4 தினங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது 5 மடங்கு அதிகரிப்பு என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு நகரில் முதல் நிலை தொற்றாளர்கள் அனைவரையும் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்காது பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா வைரஸ் பரவும் நிலைமை அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் குளிரான சூழல் காணப்படுவதன் காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

அத்துடன் மீன் சந்தையில் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 112 பேர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தெரிவு!!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு..

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன்,

பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

வவுனியா புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது!!

புளியங்குளத்தில்..

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3 மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று(23.10.2020) மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவரும் இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், பழையவாடி, சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வெள்ளிக்கிழமையான நேற்று (24.10) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த ஆலயத்தின் பக்தர்கள் நாகதம்பிரானிடம் அருள்வாக்குப் பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற புளியங்குளம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தலைமையிலான பொலிசார் அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட மூவரை கைது செய்து கொண்டு சென்றதுடன், ஆலயத்தில் வெளியில் கழற்றப்பட்டிருந்த செருப்புக்களையும் அள்ளிச் சென்றனர்.

இது குறித்து ஆலய பக்தர்களால் ஊடகவியலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டத்தில் இருந்து சிலர் வருகை தந்தமையால் தாம் கைது செய்ததாக தெரிவித்தனர். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினருமான விக்டர்ராஜூக்கு தெரியப்படுத்தியதையடுத்து,

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஊடாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.

இது குறித்து பொலிசாருடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் பொலிசார் அவர்களை எ ச்சரித்து விடுதலை செய்திருந்தனர். குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதையடுத்து கோபம் கொண்ட நாகதம்பிரான் தொடர்ந்தும் அருள் நிலையில் இருந்து அதிகாலை 12 மணிக்கே இயல்பு நிலைக்கு வந்திருந்தது.

இதேவேளை, வவுனியாவில் 50 பேருக்கு உட்பட வகையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்ட போக்குவரத்துக்களும் இடம்பெற்று பலரும் பல இடங்குளுக்கும் வந்து செல்லும் நிலையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தமது சமய வழிபாட்டை முடக்கும் செயல் என ஆலய பத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று : இதுவரை 12 பேருக்கு தோற்று உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை,

மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதுவரை நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : இளைஞன் படுகாயம்!!

விபத்து..

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (24.10.2020) காலை 10.30 மணியளவில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வைரவர் கோவில் முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையூடாக வந்த மோட்டார் சைக்கில் வாகனத்துடன் மோதுண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டையிழந்து அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு!!!

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உ யிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் குளியாப்பிட்டியவில் பதிவா இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று மரணம் இதுவாகும். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற அரச உயர் அதிகாரியான பெண் மரணம்!!

நதீ ஜயவிக்ரம…

மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம இன்று வைத்தியசாலையில் உ யிரிழந்துள்ளார். கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இரத்த பரிசோதனையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1985ஆம் ஆண்டு பிறந்த அவர் உயிரிழக்கும் போது 35 வயதாகும்.

சடலம் தொடர்பான பிரே பரிசோதனை மாத்தறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் நுழைந்த அவர் விளையாட்டுத் துறை அமைச்சில் முதல் நியமனம் பெற்றுள்ளார்.

2013ஆம் ஆண்டு வெலிப்பிட்டிய உதவி பிரதேச செயலாளராகவும், 2016ஆம் ஆண்டு திஹகொட உதவி பிரதேச செயலாளராகவும், 2017ஆம் ஆண்டு முதல் உயிரிழக்கும் வரை மாத்தறை மாவட்ட செயலாளராக செயற்பட்டுள்ளார்.

வவுனியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வர்த்தக சங்கத்தினரினால் வெப்பத்தை அளவிடும் கருவிகள் வழங்கி வைப்பு!!

வெப்பத்தை அளவிடும் கருவிகள்..

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவீடும் கருவிகள் நான்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நான்கு கருவினையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், பொருளாளர் என்.செல்வரட்ணம் இணைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவிடம் கையளித்தனர்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் வவுனியாவிற்குள் நுழையும் பகுதிகளான ஈரட்டைப்பெரியகுளம், பூவரசங்குளம், ஓமந்தை, மாமடு ஆகிய பகுதிகளில் குறித்த கருவியின் பரிசோதனையின் பின்னரே வவுனியா மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளியினை இலகுவாக இனம்கான முடிவதுடன் வவுனியா மாவட்டத்தினுள் கொரோனா தொற்று பரவுவதையும் தடுக்க முடியும்.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 609 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள்!!

கொரோனா..

திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியிலிருந்து புதிதாக 609 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் இருந்தும், 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 05 பேர் காலி மீனவ துறைமுகத்தில் இருந்தும், 20 பேர் பேருவளை மீனவதுறைமுகத்தில் இருந்தும் 40 பேர் கொரோனா தொற்றாளிகளின் நெருங்கிய இணைப்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில் குணமாகிய 83 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கில் பெண்ணிடம் பழகிய இ ளைஞர் : வாட்ஸ் ஆப் எண்ணை கொடுத்த அடுத்த நொடியே காத்திருந்த அ தி ர்ச்சி!!

வேலூர்…

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(21). இவருக்கும் கு டி யா த் தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இ ள ம் பெ ண்ணுக்கும் ஓராண்டுக்கு மு ன் ன ர் ஃபேஸ்புக் மூலம் ப ழ க்க ம் ஏற்பட்டுள்ளது.

இ தை ய டுத்து, ஹைதராபாத்திலுள்ள ம ரு த் து வ மனையில் நர்ஸாகப் ப ணி பு ரிந்து வரும் அ ப் பெ ண், ப க் க த்து ஊர்க்காரர் என நம்பி, சரத்குமாருக்கு மொ பை ல் நம் ப ரை ப கி ர் ந்துள்ளார்.

இதன் பின்னர், சொ ந் த கிராமத்துக்கு அந்த நர்ஸ் பெ ண் வ ந் தி ரு ந் துள்ளார். அதை அறிந்த சரத்குமார், அ ப் பெ ண் ணு க்கு வா ட் ஸ் ஆ ப் பி ல் ஆ பா ச மா ன ப தி வு க ளைப் ப தி விட்டு, ஒ ன்றாக இருக்க அ ழை த் து ள்ளார்.

இதனால், அ தி ர்ச் சி ய டைந்த அந்த நர்ஸ் பெ ண், சரத்குமாரை எ ச் ச ரி த் த துடன், தொ ட ர் பையும் நி று த் தி க் கொ ண் டா ர். உடனே ஆ த் திர மடை ந் த சரத்குமார்,

அந்த நர்ஸ் பெண்ணின் போ ட்டோ வை ஃபே ஸ் புக்கிலிருந்து எடுத்து ஆ பா ச மா க மா ர் பி ங் செ ய் து அ ப்பெ ண் ணி ன் வாட்ஸ்ஆப்பிற்கு அ னு ப் பியுள்ளார்.

அப்போது, அந்த போட்டோக்களை ச மூ க ஊ ட க ங் க ளில் ப கி ரா ம ல் இ ரு க்க 2 லட்ச ரூபாய் ப ண ம் கே ட் டு ச ர த்குமார் மி ர ட் டியு ள்ளார். இதனால் அ ச் ச ம டை ந் த அ ந் த ந ர் ஸ்,

தன் பெற்றோரிடம் கூறி அ ழு த து டன், கு டி யா த் தம் அனைத்து மகளிர் கா வ ல் நி லை ய த் தில் பு கா ர ளி த்தா ர். பு கா ரி ன் பே ரி ல், போ லீ ஸா ர் வ ழ க்கு ப தி வு செ ய் து ச ர த் குமாரை கை துசெ ய் து வி சா ரி த் து வ ரு கி ன்றனர்.

 

தா யை தா க் கி ய தா ல் த ந்தையை கொ ன் ற 16 வ ய து ம க ள் : ந டந்த வி பரீதம்!!

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேசத்தில் 16 வயது சி று மி தனது த ந்தையை க டுமையாக தா க் கி ய தி ல் த ந்தை உ யிரிழ ந்த ச ம்பவம் பெரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சி றுமி தானாக முன் வந்து காவல்துறையில் ச ரணடைந்துள்ளார். தந்தை கு டித்துவி ட்டு வந்து தாயிடம் ச ண்டையிட தொ டங்கிய காரணத்தினால் ஆ த்திரமடைந்த சி றுமி துணி துவைக்கும் மட்டையை கொண்டு தலையில் அ டித்து வீ ழ்த்தியு ள்ளார்.

மகளின் திருமணம் குறித்து பேச தொடங்கிய போது ச ச்சரவு எழுந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சி று மி யை கூ ர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர்,

“தந்தை வேலை ஏதும் செய்யாமல் மூத்த மகளின் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்துள்ளது. அவருடைய செயல் குடும்பத்திற்கு பெரும்பாலும் பாரமாகவே அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

கொ டூ ர மா க கொ ல் ல ப் ப ட் ட திருநங்கை உ டல் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு : சம்பவத்தில் அ திரடி திருப்பம்!!

சங்கீதா..

தமிழகத்தில் க ழு த் து அ று க் க ப் ப ட்டு திருநங்கை கொ டூ ர மா க கொ ல் ல ப் ப ட் ட ச ம்பவத்தில் அ திரடி தி ருப்பமாக பிரியாணி மாஸ்டர் அ வரை கொ ன் ற து தெ ரியவந்து ள்ளது.

கோவையை சேர்ந்த திருநங்கை சங்கீதாவின் அ ழுகிய ச டலம் கடந்த புதன்கிழமை அவரது வீட்டிலுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து க ழு த் து அ று ப ட் ட நி லையில் மீ ட் க ப் ப ட் ட து. உ டல் அ ழுகி து ர்நா ற்றம் வீ சாமல் இருக்க அதன் மீது உப்பும் கொட்டப்பட்டு இருந்தது.

தொழில் போட்டி காரணமாக சங்கீதா கொ லை செ ய்ய ப்பட்டி ருக்கலாம் என முதல் தகவல் வெளியான நிலையில் சம்பவத்தில் அ திரடி தி ருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சங்கீதாவை கொ லை செ ய் த ராஜேஷ் என்ற 23 வ யது இ ளைஞனை போலீசார் கை து செ ய்தனர். திருநங்கை சங்கீதா, சக திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதனடிப்படையில் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவராக விளங்கிய சங்கீதா, கொரோனா ஊரங்டங்கின்போது பல்வேறு இடங்களில் நிதி திரட்டி, டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் ராஜேஷ், திருநங்கை சங்கீதாவை போனில் அழைத்து தாம் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடி வருவதாகவும் உங்களது உணவகத்தில் வேலை வேண்டும் என்றும் கேட்டிருக்கிறான்.

ராஜேஷ் மீது பரிதாபப்பட்டு கடந்த மாதம் பிரியாணி மாஸ்டராக வேலைக்குச் சேர்த்துக்கொண்ட திருநங்கை சங்கீதா, தங்குவதற்கு இடமின்றி தவித்த அவனுக்கு தனது வீட்டிலேயே இடமும் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக திருநங்கை சங்கீதாவுக்கு ராஜேஷ் பா லி ய ல் தொ ல் லை கொடு க்கத் தொடங்கியிருக்கிறான். சம்பவத்தன்றும் சங்கீதாவிடம் த வறாக நடக்க முயன்றதாகவும் அதற்கு அவர் எ திர்ப்பு தெரிவித்தோடு பொலிசில் சொல்லிவிடுவேன் என மி ர ட் டி ய தா ல் கொ லை செ ய் தி ரு க் கி றா ன் எ ன தெ ரியவந்துள்ளது.