பயணியின் உடலில் இருந்து வந்த இரத்த கசிவு : பாதிவழியில் தரையிரங்கிய விமானம்!!

பாதிவழியில் தரையிரங்கிய விமானம்..

ஐரோப்பாவின் லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரியானைர் விமானம் ஒன்று பயணி ஒருவரின் மோ சமான நடத்தையின் காரணமாக பாதி வழியில் தரையிறங்கிய சம்பவம் பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளியன்று, லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து காலை 6.29 மணிக்கு புறப்பட்ட ரியானைர் நிறுவன விமானத்தில் பின்பக்க இருக்கையில் இருந்த பயணி ஒருவர் க டுமையான வா க்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விமானம் பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கிய பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து சென்றதாக சக பயணிகள் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இதர பயணிகளையும் காவல்துறையினர் விமானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் குறிப்பிட்ட நபரின் உடல் நிலையை கண்டு இதர பயணிகள் அ ச்சமடையக்கூடாது என சக பயணிகளுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் அழைத்து சென்ற குறிப்பிட்ட பயணியின் உடலிலிருந்து இரத்தம் கசிவதை சக பயணிகள் கண்டு அச்சமடைந்திருந்துள்ளனர். இந்த தகவல் விமான ஊழியர்களுக்கு தெரிய வந்ததையடுத்து விமானமானது போர்த்துகலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் ஐந்து காவல்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட நபரை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்தது மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஏன் அந்த நபர் வா க்குவாதத்தில் ஈடுபட்டார் என்றோ, அவரது உடலில் ரத்தக்கசிவு எப்படி ஏற்பட்டது என்றோ காவல்துறையனர் கூறவில்லை.

 

கொரோனாவை விளையாட்டாக எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கொரோனா..

கனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ம ரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உ யிர் பிழைத்துள்ளார்.

Vancouver-ஐ சேர்ந்தவர் Alison Lowe (31). சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியில் சுற்று திரிந்துள்ளார். அதாவது வலிமை வாய்ந்த தன்னையும், தன் நண்பர்களையும் கொரோனா தா க்காது என கொடிய நோயை சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் Alisonன் நண்பர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து செப்டம்பரில் கொரோனாவால் Alison பாதிக்கப்பட்ட நிலையில் 16 நாட்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

பின்னர் ஒருவழியாக கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். Alison கூறுகையில், கொரோனாவை நான் சாதாரணமாக எடுத்து கொண்டேன், அதன் விளைவு என்னை வைரஸ் பாதித்தது.

என் உடல் நிலை மோசமானதால் நான் பிழைப்பது கடினம் என்றே மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உ யிர் பிழைத்தேன், இது மருத்துவர்களையே ஆச்சரியமடைய வைத்தது.

நான் வீடு திரும்பிய போதிலும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதோடு, கூடுதல் ஆக்சிஜனும் எனக்கு தேவைப்படுகிறது. படிக்கட்டுக்கு மேலேயும் கீழேயும் நடக்க சிரமப்படுகிறேன் என கூறியுள்ளார்.

 

வேலை செய்யும் வீட்டில் 18 வயது பணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

அஞ்சு..

இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அ டி த் து கொ டுமை ப்படுத்தி யதாலும், வீ ட்டுக்கு அனுப்ப மறுத்ததாலும் அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார் என குடும்பத்தார் கு ற்றஞ்சாட்டியு ள்ளார்.

பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இ ருந்திருக்கிறார்.

காலையில் அவர்கள் தூ ங் கி எ ழுந்த போது அஞ்சு தூ க் கி ல் ச டலமாக தொ ங் கு வ தை பா ர்த்துவிட்டு எங்களுக்கு த கவல் கொடுத்தனர்.

அஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் பு கா ர் கொ டுத்துள்ளனர், அதன் அடிப்படையில் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

வவுனியாவில் 4 க ஞ் சா செ டிகள் மற்றும் து ப்பா க்கி மீ ட்பு : ஒருவர் கைது!!

முருகனூர் பகுதியில்..

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான க ஞ் சா செ டி நான்கு மீ ட்கப்பட்டதுடன், து ப்பா க்கி ஒ ன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீ ட்கப்பட்டு ள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று(18.10.2020) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கு ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய,

வவுனியா கு ற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் பிரனீத் திஸாநாயக்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான விக்கிமசூரிய, நிசாந்த மற்றும் பொலிஸ் கொஸ்டபிள்களான தயாளன், உபாலி, சமீர, ரணசிங்க ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் வவுனியா, முருகனூர் பகுதியில் விசேட சோ தனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 6 அடி உயரமான நான்கு க ஞ் சா செ டிகள் க ண்டுபி டிக்கப்பட்டு அவை மீ ட்கப்ப ட்டது.

அத்துடன், குறித்த வீட்டின் பின்பகுதியில் ர வைகள் இ டப்பட்டு சு டுவத ற்கு தயாரான நிலையில் பு தைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தயாரிப்பான து ப்பா க்கி ஒன்றும் அதற்குரிய ர வைகளும் மீ ட்கப்ப ட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான 40 வயது குடும்பஸ்தர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

பெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

திருநங்கை கண்ணகி..

தமிழகத்தில் திருநங்கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இரக்கமின்றி து ன் பு று த் தி ய த ந்தையின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி.

இவர் ராகுல் எனும் சி றுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.

கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பி ரச்சினை அங்கிருந்து தான் தொடங்கியது.

வளர்ப்பு மகனால் சொத்து பறிபோய் விடுமோ என அ ஞ்சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பாராமல் ராகுலை தினந்தோறும் அ டி த் து து ன் பு று த் தி வ ந்துள்ளார்.

மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு ம கனை க த் தி யா ல் கு த் தி க் கொ ன் று வி டு வ தா க வு ம் மி ர ட் டி யு ள் ளா ர். தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செயலால் அ திர்ச்சி அடைந்த திருநங்கை கண்ணகி,

தனது மகனை அப்சல் க டுமையாக தா க் கி, கொ லை மி ர ட் ட ல் விடுக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து க ண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் அப்சல் முபாரக்கை கைது செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையின் 13 பகுதிகளில் கொரோனா நோயாளிகள்!!

கொரோனா நோயாளிகள்..

மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு தொடர்புடைய 115 பேர் நேற்றை தினம் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 13 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானார் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 32 ஆகும். இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்காவில் 30 பேரும் திவுலப்பிட்டியவில் 24 பேரும், பிங்கிரியவில் 11 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மத்துகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொட்டிகாவத்த, கராப்பிட்டிய மற்றும் கஹத்துடுவ ஆகய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான அறிவிப்பு!

நாளைய தினம் (19.10.2020) எமது தொழிற்சங்கத்தால் வடமாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

கடந்தவாரம் கர்ப்பவதியாக காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டும், மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியும், ஏலவே வடமாகாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வினை பெறவுமே இப்போராட்டம் முன்னெடுக்க படுகின்றது.

எந்தவொரு தொழிற்சங்கத்தினது உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களது ஆதரவை வெளிக்காட்டும் விதமாக நாளை காலை (19.10.2020) சுகயீன விடுமுறையை உங்கள் திணைக்கள தலைவருக்கு தந்தி மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் அறிவியுங்கள்.

உங்களின் அவ்வறிவிப்பு எவ்விதத்திலும் சட்ட மீறலாக அமையாது என்பதையும், அது உங்களின் தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த உரிமை என்பதையும், அதை மனிதாபிமானம் மிக்க எந்தவொரு திணைக்கள தலைவரும் புரிந்துகொள்வர் என்பதையும் தயவுடன் நினைவிற்கொள்ளுங்கள்.

இவ்விடயம் தொடர்பாக யாருக்கேனும் சந்தேகங்கள் காணப்படின் கடிதத்தலைப்பில் உள்ள தொலைபேசி இலக்கதிற்கு அல்லது எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளவும்.

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 55 பேர் விடுவிப்பு!!

55 பேர் விடுவிப்பு..

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த 55 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்கு திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .

இதில் இன்று 55 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இராணுவத்தினரினால் எற்பாடு செய்யப்பட்டது .

இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, கம்பஹா, மாத்தறை , பதுளை, மொனராகலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை நிறைவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர் . தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில், அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் அவர்களின் முயற்சிகளில் எங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் நேற்று 50 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இன்று மிகுதி 55 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா குத்துச் சண்டை வீரர்கள் வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!!

தங்கப் பதக்கங்களை வென்று சாதனை..

வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்று சாதனைப்படைத்த வீரர், வீராங்கனைகள் இதன்போது கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கெளரவிப்பு நிகழ்வில் வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு , பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்போது ஒரு வீரருக்கு துவிச்சக்கர வண்டியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாணத்தை சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் வீர வீராங்கனைகள் பங்குபற்றிய குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட வீரர்கள் ஆறு தங்கங்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படக் காரணம் : இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்!!

கொரோனா இரண்டாவது அலை..

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்பத்திற்கு வெளிநாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அதன் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா காணப்படவில்லை. கொழும்பு பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியே இறுதியாக சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சிலர் வருகைத்தந்தனர். கடல் நடவடிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் இருந்து 6 பேர் வந்தனர். அவர்கள் 6 பேரும் நேற்றைய தினம் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய பார்த்தால் சில முறையில் சில விடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எனினும் உறுதியான முறையில் கூற முடியாத நிலை உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உயர்தர பரீட்சையில் மாணவருக்கு உதவிய மேற்பார்வையாளர் கைது!!

மேற்பார்வையாளர் கைது..

கல்வி பொதுத்தராதர உயிர்தர பரீட்சையில் பரீட்சாத்தி ஒருவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வாதுவ மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பரீட்சை மண்டபத்தின் மேலதிக மேற்பார்வையாளர் காவல்துறையினரிடம் முறையிட்டதை அடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரான ஆசிரியர் பரீட்சை ஆணையர் ஜெனரலின் பரிந்துரையின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பரீட்சை ஆணையாளருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

காலநிலை தொடர்பில்..

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி தேசமானிய மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30-40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென் மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50-60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

இதேவேளை நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!!

ஆமர் வீதியில்..

கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை தனியார் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு ஆமர் வீதியில் இன்று(18.10.2020) காலை தனியார் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உறுப்பினராகும் இலங்கைப் பெண்!!

இலங்கைப் பெண்..

இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட vanushi walters என்ற பெண் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

வனுஷீ, நியூசிலாந்தின் தொழிற்கட்சியின் சார்பில் ஓக்லாண்டின் அப்பர் ஹார்பர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். தேசிய கட்சியின் ஜேக் பெஸானட்டை வீழ்த்தி வனுஷீ இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தேர்தலில் வனுஷீ 14,142 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் பெஸானட் 12,727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனுஷீ, சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய பொறுப்பு ஒன்றை வகித்துள்ளதுடன், அவர் முன்னணி சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா குளத்தினுள் மண் கொட்டி நிரப்பி மூடியமைக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கடும் கண்டனம்!!

வவுனியாக் குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு ரிப்பர் மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர் தேங்கி நிற்கக்கூடிய இடத்தை மூடியமைக்கு கடும் எ திர்ப்பையும் கண்டனத்தையும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பண முதலைகளின் குள ஆக்கிரமிப்பினால் பல ஏக்கர் குள நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரிந்த விடயமே. பாலை விடவும் குடிநீர் விலையேறியிருக்கக்கூடிய இச் சூழலில் சாதாரண மக்கள் நிலத்தடி நீர் மூலம் பெறும் குடிநீருக்கும்,

நாசம் விளைவிக்கும் செயற்பாட்டை வவுனியா நகரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இணைந்து செய்யும் செயல் அருவருக்கத் தக்கதாகவும் எதிர்கால சந்ததி பற்றி எதுவித அக்கறையுயின்றி செய்யப்பட்ட விடயமாகவே பார்க்கபட வேண்டியுள்ளது.

இதனை எமது கட்சி மிக வன்மையாக எதிர்ப்பதுடன், மக்கள் மத்தியில் குள ஆக்கிரமிப்புக்கு எ திராக முன்னெடுக்கப்படும் அனைத்து வெகுஜன நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதுடன்,

எங்களுடைய அமைப்பின் தோழர்கள், இளைஞர் அணியினர், பெண் அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிராக வவுனியாக் குள மக்கள் செயலனி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுடன் கைகோர்த்து பலமடையச் செய்வோம் என்பதையும் கூறிக்கொள்வதோடு,

நெல்லா, குடிநீரா, களியாட்டமா என வந்தால் எதை பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதையும் மக்கள் கவனத்தில் எடுப்பதுடன், இயற்கைச் சூழலை நேசிக்கக் கூடிய ஒவ்வொருவரும் எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பையும் விடுக்கின்றோம்.

வவுனியா வந்த இளைஞனை காணவில்லை : புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

மனுவேப்பிள்ளை மன்னா..

புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை கா ணவில்லை என இளைஞனின் பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு – மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் பயணித்துள்ளார்.

குறித்த பேரூந்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் இல்லை.

அவரை கா ணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வவுனியா பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனை கண்டவர்கள் 0762127738 அல்லது 0776629797 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் உறவினர்கள் கோரியுள்ளனர்.