வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி!!

கொரோனா சந்தேகத்தில்..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கம்பனி ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து குறித்த கம்பனி உத்தியோகத்தர்கள் குறித்த இருவரையும் இன்று (19.10) வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளனர்.

அவர்கள் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கும் குறித்த கம்பனியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த மூவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் வவுனியாவில் சமூகத் தொற்று இல்லை எனவும் வவுனியா வைத்தியசாலைக்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் சமூகப் பரவல் இல்லை : பணிப்பாளர் நந்தகுமார்!!

வவுனியா வைத்தியசாலை..

வவுனியா வைத்தியசாலையில் கொவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தொற்று நீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்று வருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

 

வவுனியா ஓமந்தையில் இ ரட்டைக் கொ லை : படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் மரணம்!!

ஓமந்தையில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவு கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 17ஆம் திகதி இருவர் வெ ட் டி க் கொ ல் ல ப் ப ட் ட நிலையில், அங்கிருந்து ப டுகாய த்துடன் மீ ட்கப்பட்டவரும் இன்று (19.10.2020) காலை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளார்.

கடந்த இரு நாள்களாக வவுனியா மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உ யிரிழந்து ள்ளார். முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே உ யிரிழந்து ள்ளார்.

மாணிக்கர்வளவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோபால் குகதாசன் (வயது 40), கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த சிவனு மகேந்திரன் (வயது-34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தி ருந்தனர்.

இந்தக் கொ லை ச் ச ம்பவம் தொடர்பாக மாணிக்கர்வளவு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வி சாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், நபர்கள் ஒன்றுக் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த வரையில் குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை அரச நிறுவனங்களில் அத்தியவசிய சேவைகளை மாத்திரம் வழங்கி, மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறு அரச சேவைகள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். மறு அறிவித்தல் விடுக்கும் வரை அரச நிறுவனங்களில் பொது மக்கள் தினத்தை நடத்த வேண்டாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் கண்டு வரும் நிலையில், கல்வியமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்டது!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை..

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்று வருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

 

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சியில் வெளியான தகவல்!!

கொரோனா வைரஸ்..

புதிய கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ முடியும், இது இன்ஃப்ளூவன்ஸா ஏ வைரஸ் மனிதனின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் காலத்தைவிட ஐந்து மடங்கு காலம் அதிகம் என்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தொற்றுநோயியல் நிபுணர் ரியோஹெய் ஹிரோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் புதிய கொரோனா வைரஸ் ம துசாரம் அடிப்படையிலான கிருமிநாசினி அல்லது அதே செறிவின் எதனோல் திரவத்தால், 15 விநாடிகளுக்குள் செயலிழக்கப்படுவதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து மக்கள் தங்கள் கைகளை ம துசாரம் கலந்த தொற்று நீக்கிகளை பயன்டுத்தி நன்கு கழுவ வேண்டும் அல்லது ம துசாரம், சார்ந்த கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் ஹிரோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

குழுவின் இந்தக்கண்டுபிடிப்புகள் அமரிக்காவின் அறிவியல் இதழான ‘மருத்துவ தொற்று நோய்கள்’ என்ற இணையப்பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

குழுவின் கூற்றுப்படி, புதிய கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூவன்ஸா ஏ ஆகியவை தோலின் மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டபோது, புதிய கொரோனா வைரஸ் மனித தோல் பரப்பின் மீது சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்தது, அதே நேரத்தில் இன்புளுவன்சா ஏயின் உயிர்வாழ்தல் சுமார் 1.8 மணி நேரமாக இருந்தது.

இதேவேளை வெப்பத்தை தாங்கும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்ற உயிர்வாழ்வதற்கு உகந்த மேற்பரப்புகளுக்கு இந்த குழு வைரஸ்களைப் பயன்படுத்தியது. இதன்போது புதிய கொரோனா வைரஸ் சுமார் 58 முதல் 85 மணி நேரம் வரை அவை செயலில் இருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் இன்ஃப்ளூவன்ஸா ஆறு முதல் 11 மணி நேரம் வரை மாத்திரமே அவற்றில் உயிர் வாழ்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஆராச்சியின்போது புதிய கொரோனா வைரஸ், எல்லா நிகழ்வுகளிலும் மிக நீண்ட காலம் தப்பிப்பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யவிருந்த நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண்!

கொரோனா..

கொழும்பின் புறநகர் பகுதியில் திருமணம் செய்தவிருந்த நாளில் இளம் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். நீர்கொழும்பு நகரத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களின் மகனின் திருமண நிகழ்வு கடந்த 3ஆம் திகதி திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் PCR பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொரட்டுமுல்ல, குசகினிவத்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் அவருடன் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய அவர்களின் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய 27 வயதுடைய பெண் ஒருவர் நேற்று காலை தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பெண் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணையவிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

 

கொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி!!

கொரோனா நோயாளி..

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். மற்ற நபர் ராகம, பட்டுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கித்துலம்பிட்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இருந்து காலி நோக்கி ரயிலில் பயணித்துள்ளார்.

அத்துடன் பிரதேசத்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவரது மனைவி கராப்பிட்டி வைத்தியசாலையின் தாதியாக செயற்பட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான நபருக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

வவுனியா மாவட்ட வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா மாவட்ட வைத்தியசாலை..

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

 

வவுனியா பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா : வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

 

ரிசாட் பதியூதீன் சற்று முன்னர் கைது!!

ரிசாட் பதியூதீன்..

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தே டப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று(19.10.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுச்சொத்துக்களை து ஸ்பிர யோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய கு ற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை க ண்டுபிடிக்க முடியவில்லை. பொலிஸாரின் தீவிர தே டுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஊடகங்களில் வெளியான செய்தியால் காணாமல் போன இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்!!

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் ஏறி பயணித்து, மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார்.

அதன் பின் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிசில் முறைப்பாடு செய்திருந்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து மன்னார் பகுதியில் குறித்த இளைஞன் நின்றதை அவதானித்தவர்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞனின் உறவினர்கள் மன்னாரிற்கு சென்று குறித்த இளைஞனை மீ ட்டுள்ளனர். இதனால் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன அழுத்தம் காரணமாக இடம்தெரியாது குறித்த இளைஞன் மன்னார் சென்றுள்ளதாக தெரியவரும் அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சதொசவில் சீனி, வெங்காயத்திற்கு தட்டுப்பாடு!!

சதொச..

அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட போதும் வவுனியா சதொசாவில் அதனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கத்தினால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய், சீனி ஒரு கிலோ 85 ரூபாய், பெரிய மீன் ரின் ஒன்று 200 ரூபாய் என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியாவில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு மக்கள் செல்கின்ற போதும், அங்கு குறித்த கட்டுப்பாட்டு விலையில் மீன் ரின் மட்டுமே உள்ளது.

சீனி மற்றும் பெரிய வெங்காயம் என்பன இல்லை என தெரிவிக்கின்றார்கள். எனவே, கட்டுப்பாட்டு விலை அறிவித்ததும் பொருட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன்,

இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைப் பெறக் கூடிய நிலையை உருவாக்கி தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

வவுனியாவில் கொவிட் 19 தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

விசேட கலந்துரையாடல்..

கொவிட் 19 தாக்கம் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நிலமைகள் குறித்து வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்,

தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், பொலிசார், சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டி தீர்மானங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்படி மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் உட்பட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை திறக்க முடியாது எனவும்,

வவுனியா மாவட்டத்தின் நான்கு எல்லைகளிலும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் உட்பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் மற்றும் சாரதி நடத்துனர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், வெப்பம் அளவிடுதலும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாட்டு விலையில் ஒரு வாரத்திற்குள் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்திற்கு தேவையான அரிசியினை பெற்றுக் கொள்வதற்கு இங்கு கொள்வனவு செய்யப்படும் நெல்லினை இந்த மாவட்டத்திலேயே குற்றி விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மீண்டும் கொரோனா நிதியுதவி!!

கொரோனா நிதியுதவி..

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கொரோனா அ ச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.