வயிற்று வலியால் துடித்த இளைஞன் : சிறுநீரகப்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

சிறுநீரகப்பையில்..

இந்தியாவில் பா லியல் இன்பத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்புறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அ திர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய பா லியல் இன்பத்திற்காக கேபிள்கள் மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி ஒருநாள் மொபைல் போனின் சார்ஜ் கேபிளை உபயோகிக்கும் போது அந்த கேபிள் அவரது சிறுநீரகப்பையில் சிக்கிக்கொண்டது.

இதனால் கடும் வ யிற்று வ லியில் அ வதிப்பட்ட வந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, அங்கு உண்மையை மறைத்து எதிர்பாரதவிதமாக மொபைல் போனின் ஹெட் போனை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எண்டோஸ்கோபியையும் நடத்தியுள்ளனர், ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது இரைப்பைக் குழாயிலும் எதுவும் இல்லை.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்போதே அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அதில் அந்த நபரின் சிறுநீரகப்பையில் வயர் ஒன்று இருந்துள்ளது.

ஆனால் அது ஹெட் போன் அல்ல சார்ஜர் கேபிள். இதனால் அதைக் கண்டு அ திர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அ றுவை சி கிச்சை மேற்கொண்டு கிட்டத்தட்ட 2 அடி நீளமுள்ள கேபிளை வெற்றிகரமாக அவரது சிறுநீரகப் பையிலிருந்து அகற்றினர்.

இதையடுத்து குறித்த இளைஞன், தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில், இது தொடர்பாக அந்த அ றுவை சிகிச்சையை மேற்கொண்ட நிபுணர் மருத்துவர் வல்லியுல் இஸ்லாம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், 25 ஆண்டுகளாக அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை.

நோயாளி செய்தது ஒரு வகை ஆபத்தான சுயஇன்பம் ஆகும். ஒரு பொருள் அல்லது திரவத்தை சிறுநீர்க்குழாயில் செலுத்துவதாகும். அந்த நபர் கேபிளை சொருகி 5 நாட்களுக்குப் பிறகுதான் எங்களிடம் வந்துள்ளார்.

மேலும் அவர், நேயாளி தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அவர் அதைச் சொருகிய அதே வழியில் கேபிளை அகற்றியிருக்கலாம் என்றும் ஆனால் அவர் பொய் சொன்னதால்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவின் விசேட உத்தரவு!!

விசேட உத்தரவு..

அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தமது அரசாங்கம் நியமித்துள்ள பிரதானிகள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினர்கள் எவரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்காகவும் அரசியலில் பணிகளில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் பிரதானிகள் அல்லது பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளில் எவருக்காவது ஏதேனும் அரசியல் கட்சிக்காக அரசியலில் ஈடுபடும் தேவை இருந்தால், அவர்கள் சட்ட ரீதியாக பதவியில் இருந்து விலகிச் சென்று அதனை செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களின் பிரதானிகளும், அதிகாரிகளும் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை. அரச அதிகாரிகள் தாமம் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் வினைதிறன், ஊழலின்மை, பலாபலன்,

ஒழுக்கம் ஆகியவற்றை பேணி, நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும். பொது மக்களின் பணத்திலேயே அரச நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இதனால், அரச நிறுவனங்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் என்பன அரசுக்கு சொந்தமான வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்களையோ, நிதியினையோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியின் அரசியல் வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

இந்த உத்தரவை மீறும் அரச நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர் முழுவதும் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிப்பு!!

இராணுவத்தினர்..

கடந்த மூன்று மாதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச்சட்டம் தற்போது தளர்த்தப்பட்டு நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளதுடன்,

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று (08.06.2020) முதல் வழமைக்கு திரும்பியுள்ளமையினையடுத்து வவுனியா நகரின் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தாண்டிக்குளம் சந்தி, வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகே, புதிய பேரூந்து நிலையம், ஏ9 வீதி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் திடீர் சோ தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஓமந்தை இராணுவச் சாவடியில் தூரப்பகுதிகளிலிருந்து வடபகுதிக்கு வருபவர்களின் பதிவு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்தா சேர்ந்துருவாங்கனு நினைச்சோம் : ஆனால் பெற்று கொடுத்துவிட்டு பரிதாபமாக இறந்த இளம் பெண்!!

இளம் பெண்..

தமிழகத்தில் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பெண் ஒருவர் பரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் பிரபா என்ற 24 வயது பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. வரதட்சனை கொ டுமை காரணமாக திருமணம் ஆன 4 மாதங்களில் இருவருக்கும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் பிரபா கர்ப்பம் அடைந்ததால், குழந்தை பிறந்தால் இரண்டு பேரும் சரியாகிவிடுவார்கள், என்று உறவினர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரசவத்திற்காக பிரமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இருப்பினும் பிரபாவின் நிலைமை மிகவும் மோசமானதால், அவர் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா ப ரிதாபமாக இ றந்தார். இதனால் அ திர்ச்சியடைந்த பிரபாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாதே பிரபாவின் ம ரணத்துக்கு காரணம் என உ டலை வாங்க மறுத்து போ ராட்டம் செய்தனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த பொலிசார் பிரபாவின் மரணம் தொடர்பாக வி சாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், பிரபாவின் உ டலை பெற்று கொண்டு கலைந்து சென்றுள்ளனர்.

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் தரையில் விழுந்து விபத்து!!

விமானம் விபத்து..

ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் காமக்யநகர் நகரப் பகுதிக்கு அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர்.

கங்கடஹாடா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரசாலாவில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் (கேடிஐ) பயிற்சியளிப்பவர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விமானங்கள் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விமானத்தில் இருந்த இரு விமானிகளையும் உயிரிழந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர்களை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

விமானத்தில் ஒரு பெண் பயிற்சி விமானி மற்றும் ஒரு பயிற்றுவிப்பாளர் பயணித்துள்ளனர். இறந்த விமானிகள் தமிழகத்தைச் சேர்ந்த அனிஷா பாத்திமா (பயிற்சி விமானி) மற்றும் பீகாரைச் சேர்ந்த சஞ்சய் ஜா (பயிற்றுவிப்பாளர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வவுனியா புதுக்குளம் இலங்கை வங்கியில் தானியங்கி இயந்திரம் உடைப்பு

தானியங்கி இயந்திரம்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்கள் விடுமுறையின் பின்னர் இன்றையதினம் (08.06.2020) வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு குப்பைக்கூடையினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக் குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் எனினும் இதுவரையில் சந்தேகத்தின் பெயரிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடு வீதியில் பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!!

மோட்டார் சைக்கிள்..

மட்டக்களப்பு நகர் வேதாரணியம் வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றியதில் அதனை ஓட்டிச் சென்றவர் மோட்டர் சைக்கிளை விட்டு பாய்ந்து தப்பித்ததுடன் மோட்டர் சைக்கில் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் இன்று (08.06.2020) இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சோந்த கடை ஒன்றில் வேலை செய்துவரும் 40 வயதுடையவர் சம்பவதினமான இன்று காலை ஏறாவூர் பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது,

மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு பின்னால் உள்ள வேதாரணியம் வீதி வழியக சென்ற போது மோட்டர்சைக்கிள் திடீரென தீப்பற்றியது.

இதனையடுத்து மோட்டர்சைக்கிளை விட்டு பாய்ந்ததுடன் மோட்டர்சைக்கி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது இந்த பகுதிக்கு பொலிசார் சென்று தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ் பூநகரியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!!

கோர விபத்து..

யாழ் பூநகரி பகுதியில் இன்று(08.06.2020) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கமலகுமார் பதவியேற்பு!!

குணரட்ணம் கமலகுமார்..

வவுனியா கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குணரட்ணம் கமலகுமார் இன்று (08.06.2020) மதியம் பதியேற்றுள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக பதவி வகித்த சுவர்ணராஜா ஓய்வு பெற்று சென்ற நிலையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே வவுனியா கல்வியற் கல்லூரியின் 5 ஆவது பீடாதிபதியாக கு.கமலகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், வவுனியா கல்வியற் கல்லூரியின் உப பீடாதியாகவும், ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளராகவும், சாரணியத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளராகவும் பதவி வகிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்பு நிகழ்வில் திருமதி கமலகுமார், உப பீடாதிபதிகள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

இளம் குடும்பப் பெண்

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(08.06.2020 காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பைவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வா ய்தகராறு ஏற்பட்டு அது கைக லப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளம் குடும்ப பெ ண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உ யிரிழப்பு!!

யாழில்..

கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.

ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ்ப்பாணத்தின் ரயில்ப் பாதைகளும் தனியார் ஒப்பந்த தாரர்களால் சீரமைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான நடவடிக்கை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சற்று முன்னர் ம யங்கி வீ ழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த 37 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான றெஜினோல்ட் என தெரியவந்துள்ளது. மேலும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பாக பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இறந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை சுறா!!

அரியவகை சுறா..

ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோகிராம் நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன் உடலில் காயங்களுடன் உ யிரிழந்த நிலையில் நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.

பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று மாலை வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது வேல்ஸார்க் எனப்படும் அரியவகை சுறா மீனே உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை தெரியவந்தது. இந்த பிரம்மாண்ட மீன் படகுகளை புரட்டிப் போடும் அளவுக்கு பலம் வாய்ந்ததாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்கடல் பகுதியில் மட்டும் வசிக்கக்கூடிய இந்த மீன் கப்பல்களில் மோதி காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். குறித்த சுறா மீனை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவர முயற்சித்த போதும் இயலாததால் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இழுத்து கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து உடற்கூற்று ஆய்வு செய்து மீன் இறந்ததற்கான காரணங்கள் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த சுறா மீன் சுமார் 35 தொடக்கம் 40 வயதை கொண்டது எனவும்,

ஆண் சுறா மீன் எனவும், காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டமையினால் குறித்த புள்ளிச் சுறா பலவீனமாக காணப்பட்டமையினால் பாறையில் மோ தி உ யிரிழந்துள்ளதாக கால்நடை வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

மரத்திலிருந்து தவறி விழுந்து..

வவுனியா – மடுகந்த பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அன்ரன் அருள்நாதன் (வயது 51) என்ற நபரே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மடுகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளில் சந்தோஷமாக வாழக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியானது!!

சந்தோஷமாக வாழக் கூடிய நாடுகள்..

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழலாம் என HSBC Expat Explorer நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 163 இடங்களில் வசிக்கும் 33 நாடுகளை சேர்ந்த 18,000 பேரிடம் நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிகள் நல்ல வருமானத்துடன் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை இங்கு வாழலாம் என கூறப்படுகிறது. தங்களுடைய சொந்த நாட்டை போன்று சுவிட்சர்லாந்தில் பத்திரமாக இருப்பதாக 67 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அரசியலும், பொருளாதாரத்தின் சீரான நிலையும் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதாவது உலகளில் சராசரி வருமானம் $75,966ஆக இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் $111,587 ஆக இருக்கிறது.
நாடுகளின் பட்டியல்

சுவிட்சர்லாந்து
சிங்கப்பூர்
கனடா
ஸ்பெயின்
நியூசிலாந்து

இந்த மாத இறுதி வாரத்தில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கிறதா?

உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள்..

இந்த மாத இறுதி வாரத்தில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளுக்கு பதினாறாயிரம் உடல் வெப்பமானிகளை பெற்றுக்கொள்வதற்கு விலை மனுக் கோரப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் 8000 வெப்பமானிகளும், இரண்டாவது வாரத்தில் 8000 வெப்பமானிகளும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த வெப்பமானிகள் குறித்த விலை மனுக் கோரல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் வெப்பமானிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கல்வி அமைச்சு இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியமானது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலைகளை வழமையாக இயக்குவது தொடர்பில் திடமான திகதிகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

சுரக்ஷா காப்புறுதி திட்டம்..

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வலயக் கல்வி காரியாலயம் அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163, 011 2784872 அல்லது 011 3641555 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.