வவுனியாவில் பேரூந்து நிலையங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்!!

விசேட அதிரடிப்படையினர்..

வவுனியாவில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியான பேரூந்து நிலையங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் இன்று (09.06.2020) காலை ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம்!!

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி..

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.

அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

வீதியோரத்தில் நின்ற வான் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து : மூன்று பேர் தப்பியோட்டம்!!

விபத்து..

அம்பாறையில் வீதியோரத்தில் தரித்து நின்ற வானொன்றின் மீது மிக வேகமாக வந்த முச்சகக்கரவண்டி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த மேலும் இரு இளைஞர்களும் அவருடன் இணைந்து தப்பி சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற மூன்று இளைஞர்களையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவதால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை!!

முகக் கவசம் அணிவதால்..

இலங்கையில் சமகாலத்தில் முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் பாரியளவு குறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் முகக் கவசம் அணிந்தமையினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக,

இலங்கை சுவாச நோய் நிபுணர்களின் சங்கத்தின் பிரதானி, கண்டி வைத்திய சங்கத்தின் தலைவர் துஷ்யந்த மெதகெதர வெளியிட்டுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுவாச நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நோய் தன்மை பாரிய அளவு குறைந்துள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கையும் பெருமளவு குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முகக் கவசம் அணிவதனை பழக்கமாக தொடர்ந்து மேற்கொண்டால் பாதுகாப்பு நடவடிக்கையாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நோய் ஏற்படும் கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், தங்கள் உடலில் உள்ள கிருமிகள் சமூகங்களுககு செல்வதனையும் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற கார் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

வவுனியாவில் இன்று (09.06.2020 அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

அந்த காரானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரியவருகிறது.

விபத்தில் காரை ஓட்டிய நபரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்திற்கு இலக்கான கார் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் யுவதிகள் இருவரை க டத்த முயற்சி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்று மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து க டத்த முயன்றுள்ளது.

இதன்போது க டத்த முற்பட்டவர்களிடம் இருந்து பெண் ஒருவர்
தப்பித்து வந்து மக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸில் ச ரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பகுதியில் இருந்து பெண்கள் இருவர் கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர். இதன்போது இரு பெண்களையும் கொடிகாமம் பகுதியில் இருந்து மாசேரி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அவ்வேளை குடத்தனை பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவொன்று அப்பெண்களை க டத்திச்செல்ல முற்பட்ட வேளை ஒரு பெண் அ வலக் கு ரல் எழுப்பியவாறு அப்பகுதியில் த ப்பி பா துகாப்பு கோரி கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு ச ரணடைந்த பெண் பொது மக்களின் உதவியோடு பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் பொலிஸாரும், பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் க டத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலைவீசித் தே டி வருகின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரும் குறித்த பெண்கள் இருவரையும் திட்டமிட்டு அழைத்து, இவ்வாறு ஏனையோருடன் இணைந்து இந்த க டத்தல் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு!!

கையடக்க தொலைபேசி..

நாட்டில் பல இடங்களிலும் என்றும் இல்லாத வகையில் கையடக்க தொலைபேசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றையடுத்து இலங்கையில் இறக்குமதி தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொலைபேசி உட்பட அதன் உதிரிப்பாகங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் புதிய கையடக்க தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில வணிகர்கள், கைப்பேசிகளை உரிய விலையை விட அதிகரித்த விலையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது சந்தையில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் திடீரென நிறுத்தப்பட்ட சோதனைகள் : கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுமா?

ரயில் நிலையங்களில்..

சுமார் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் நேற்று வழமைக்கு திரும்பியுள்ளது. அதற்கமைய நேற்று காலை அலுவலக ரயில்கள் உட்பட 49 ரயில்கள் பல்வேறு மாகாணங்களில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாக ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் ரயில், பொதி போக்குவரத்து, தூர பயண சேவை மற்றும் இணைய ஆசன பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களை போன்று நேற்றும் டோக்கன் வெளியிடுவதோ, ரயில் நிலையங்களில் நுழையும் போதும் வெளியேறும் போதும் உடல் வெப்ப நிலையை சோதனையிடும் நடவடிக்கையோ முன்னெடுக்கவில்லை எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்த இராணுவத்தினரும் நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில ரயில்களில் பயணிகள் நிறைந்து வழிந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சில ரயில்களின் பயணங்கள் ஆசன எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை போக்குவரத்தின் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும். இதன் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கடுமையாக எ ச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாயவின் மற்றுமொரு தீர்மானம் : தனியார் பேருந்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

பேருந்தில் ஏற்படவுள்ள மாற்றம்..

தனியார் பேருந்துகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நாள் ஒன்றுக்கு 7 மரணங்கள் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றில் அதிகளவானவை தனியார் பேருந்துகளால் ஏற்படுகின்றன. இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்தி விபத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை போன்றே தனியார் மற்றும் பாடசாலை பேருந்துகளுக்கும் தனியான நிறம் இருப்பது அவசியமாகும் ன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றி ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன்..

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவிய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளைஞரொருவர் ம ர்மமான முறையில் உயிரிழப்பு!!

இளைஞரொருவர்..

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் ம ர்மமான முறையில் உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றைய தினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இ றந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உ யிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில்,மேலதிக ப ரிசோ தனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்தியோகு அன்ரணி (வயது35) என்ற இளைஞரே ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசைப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த சோ கம்!!

இளம் தம்பதி..

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள பெரிய தீவான ஜெர்சியை சேர்ந்த காதலர்கள் Nathan Judge மற்றும் Charlotte Medcalf. இருவரும் மருத்துவமனை ஊழியர்களாக உள்ள நிலையில் கடந்த மே 30ஆம் திகதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்கள்.

ஆனால் அவர்களின் திட்டம் கொரோனாவால் ரத்தானது, முக்கியமாக அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பணி திருமணத்தை தள்ளி போடும் சூழ்நிலைக்கு தள்ளியது. ஆனால் அதற்கு பதிலாக மருத்துவமனையிலியே அனைவர் முன்னிலையிலும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டனர்.

ஆனாலும் அடுத்தாண்டு மே மாதம் 30ஆம் திகதி தாங்கள் நினைத்த மாதிரி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து Nathan Judge கூறுகையில், அரசாங்கத்தின் ஆலோசனையின் காரணமாக நாங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். திருமணம் செய்து கொள்ளும் நாளுக்காக இரண்டாண்டுகள் திட்டமிட்டோம்.

கடந்த மாதம் 30திகதிக்கு முந்தைய நாள் வரை நான் இதைப் பற்றி உண்மையில் சிந்திக்கவில்லை, ஆனால் அடுத்த நாள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்தோம் என்பதை உணர்ந்தபோது, ​​அது முடியாததால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம்.

பின்னர் அந்த ஏமாற்றத்தை மறக்கடித்து Charlotte-க்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதன்படி திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பூக்காரனைத் தொடர்பு கொண்டு, அதே பூச்செண்டை மீண்டும் உருவாக்கும்படி கேட்டு கொண்டேன்.

பின்னர் திருமண உடையில் மருத்துவமனைக்கு சென்று அவளை வியக்க வைத்தேன். அப்போது அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது, ஆனாலும் நாங்கள் நினைத்த மாதிரி இன்னும் திருமணம் நடக்கவில்லை, திருமணத்துக்கு பின்னர் இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசையாக இருந்தோம்.

ஆனால் கொரோனாவால் வீட்டிலேயே சி க்கிக்கொண்டோம். அடுத்தாண்டு மே 30ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

அதிகாலையில் வீட்டில் கேட்ட அ லறல் ச த்தம் : நடந்த வி பரீதம்!!

அதிகாலையில்..

தமிழகத்தில் ம னைவி, ம களை உ யிருடன் எ ரித்து கொ லை செய்த க ணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் மக்புல் அலி (40). இவருடைய மனைவி கொரோசா பேகம் (40).

இவர்களுக்கு அக்ரம் அலி (21) என்ற மகனும், மஜி (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக மதுரவாயல் அடுத்த புளியம்பேடு மெயின் ரோடு, நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கணவன், மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கணவனை வீட்டில் சேர்க்காமல் தனது மகன், மகளுடன் கொரோசா பேகம் தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து அ லறல் ச த்தம் கேட்டது. அக்கம், பக்கத்தினர் ஓ டிவந்து பா ர்த்தனர்.

கொரோசா பேகம் வீட்டில் தீப்பி டித்து எ ரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே கொரோசா பேகம், அவருடைய மகன் அக்ரம் அலி ஆகியோர் உ டலில் தீப்பி டித்து எ ரிந்து கொ ண்டிருந்ததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர்.

க தவை உ டைத்து உள்ளே சென்று இ ருவரின் உ டலிலும் எ ரிந்த தீயை அ ணைத்தனர். இதில் கொரோசா பேகம், அக்ரம் அலி இருவரும் ப லத்த தீக்கா யம் அ டைந்தனர். மஜிக்கு மட்டும் லேசான தீக்கா யம் ஏற்பட்டது. மூன்று பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாய்-மகன் இருவரும் அடுத்தடுத்து ப ரிதாபமாக இ றந்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்ததில், மக்புல் அலி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி மகன், மகளுடன் வசித்துவந்த கொரோசா பேகத்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தார். வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் 3 பேரும் வேலை செய்து வந்தனர். மகள் மஜி மட்டும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கு டி ப ழக்கத்துக்கு ஆளான மக்புல் அலி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் ச ந்தேகப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மக்புல் அலியை வீட்டில் சேர்க்காமல், கொரோசாபேகம் தனது மகன், மகளுடன் இந்த வீட்டிலும், மக்புல் அலி தனியாகவும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த மக்புல் அலி, கொரோசாபேகத்துடன் த கராறு செய்ததால் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து வெளியே அனுப்பி வைத்தார்.

இதனால் ஆ த்திரமடைந்த மக்புல் அலி, நேற்று அதிகாலை கொரோசா பேகம் வீட்டுக்கு சென்றார். காற்றுக்காக வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்து இருந்த கொரோசா பேகம், அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

மக்புல் அலி, திறந்து கிடந்த ஜன்னல் வழியாக அவர்கள் 3 பேர் மீதும் பெ ட்ரோலை ஊ ற்றி தீ வைத் துவிட்டு த ப்பி ஓ டிவிட் டார். இதில் அங்கு படுத்து இருந்த கொரோசா பேகம், அக்ரம் அலி, மஜி ஆகிய 3 பேர் மீதும் தீப்பி டித்து எ ரிந்ததுடன், வீடு முழுவதும் பரவி தீ கொழு ந்துவி ட்டு எ ரிந்தது.

இதில் படுகா யம் அடைந்த தாய், மகன் இருவரும் உ யிரிழந்து விட்டனர். லேசான கா யத்துடன் உ யிர் தப்பிய மஜி, தந்தை த லைம றைவான நிலையில், தாய், சகோதரனை இ ழந்து அனாதையாக நிற்கிறாள். இதையடுத்து த லைம றைவான மக்புல் அலியை பொலிசார் தே டி வருகின்றனர்.

வி ஷ பா ம்பை ஏ வி ம னைவியை கொ ன்ற வ ழக்கு : க ணவன் சி க்கியது இப்படித்தான்!!

உத்ரா..

கேரளாவில் வி ஷப் பா ம்பை ஏ வி வி ட்டு ம னைவியை கொ ன்ற க ணவனுக்கு த குந்த த ண்டனை வா ங்கிக் கொ டுக்கப்படும் என பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துவருகின்றனர். கேரளாவின் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் விஜயசேனன், இவரது ம கள் உத்ரா, 20 தவிகிதம் மூ ளைவள ர்ச்சி கு ன்றியவர்.

இருப்பினும் குறை தெரியாமல் ஆ சை ம களை வளர்த்த விஜயசேனன், உத்ராவுக்கு தி ருமண வ யது வ ந்தவுடன் மா ப்பிள்ளை பார்க்க தொடங்கினார்.

பத்தனம்திட்டா நகரின் அடூர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சூரஜ், உத்ராவைப் பற்றிய எல்லா விவரங்கள் தெரிந்தும் தி ருமணம் செய்ய முன்வந்தார். இதனால் ம கிழ்ச்சியில் திளைத்த விஜயசேனன் த ம்பதியினர், 2018ம் ஆண்டு சூரஜ்- உத்ராவின் தி ருமணத்தை வெ குவிமர்சையாக ந டத்தினர்.

வ ரதட்ச ணையாக ஒரு கிலோ தங்கம் (115 பவுன்), 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் என்று அள்ளிக்கொடுத்துள்ளார் விஜயசேனன். இதுமட்டுமின்றி சூரஜ் தங்கையின் படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டதுடன், அனது தந்தைக்கு ஆட்டோ ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

பணம் வேண்டும் என அடிக்கடி சூரஜ், உத்ராவை அ டித்து கொ டுமைப்ப டுத்த த ந்தையிடம் கூ றி அ ழுதிருக்கி றார் ஒ ருகட் டத்தில் தன் பெ ற்றோர்களிடம், தன்னால் இ னியும் தா ங்கமுடி யாது சூரஜ் உங்களிடம் காட்டுவது எல்லாம் நடிப்பு என்று சொல்லிக் க தறியிரு க்கிறாள் உத்ரா.

இ தனால் கோ பத்தில் இருந்த விஜயசேனன், சூரஜிடம் வந்து “என் மக ளை விவாகரத்து செ ய்துவிடுங்கள், நாங்கள் செல்கிறோம்” என கூறியுள்ளார். இதற்கு “மாமா என்னமோ ந டந்திருச்சு, இனிமேல் இப்படி இருக்காது” என உத்தரவாதம் அளித்துள்ளார் சூரஜ்.

வெளியே போ லியாக நீ லிக் க ண்ணீர் வ டித்திருந்தாலும் உத்ராவை பா ம்பை ஏ விவி ட்டு கொ ல்வது எ ன மு டிவு செ ய்தான். இ தன்படி கடந்த பிப். 26 அன்று அருகிலுள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற பா ம்பு பி டிப்பவனிடம், யூ ட்யுப்பில் பாம்பு பற்றி வீடியோ போடவேண்டுமென்று சொல்லி விஷமுள்ள வைப்பர் பா ம்பை 5 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்திருக்கிறான்.

மார்ச் 2-ஆம் தேதியன்று இரவு உத்ரா தூ ங்கும்போது, தான் கொண்டு வந்த பா ம்பை வி ட்டுக் க டிக்கவைத்தி ருக்கிறான். அந்தப் பா ம்பு உத்ராவின் இ டது கையி ல் கொ த்த, வ லியால் அ வள் அ லறித்து டித்த நே ரத்தில் சூரஜ் குடும்பத்தினர் உத்ராவை சி கிச்சைக்காக ம ருத்துவ ம னையில் சே ர்த்துள்ளனர்.

சி கிச்சையில் உ டல்நலம் தே றிய உத்ரா நேராக தனது பெ ற்றோர் வீட்டிற்குப் போய்விட்டார். தன்னுடைய முதல் தி ட்டம் தோ ல்வியடைந்த நேரத்தில், உத்ராவின் பெ ற்றோர் வீட்டிலேயே வைத்து பாம்பைக் க டிக்கவிட்டுக் கொ ன்றுவிட லாம் என் ற தி ட்டத்தில் அ தற்கான கா ரியத்தில் இ றங்கியிக்கிறான்.

தன்மீது ச ந்தேகம் வ ராதபடி யிருக்க, இ ரண்டு மூ ன்று த டவை உத்ராவின் வீட்டிற்குப் போய் பா சமாக நடந்து கொண்டிருக்கிறான். கடந்த மே 5 அன்று மீண்டும் பா ம்பு பார்ட்டி சுரேஷை நாடியவன், இம்முறை வேறு கதைக்காக கொடிய வி ஷமுள்ள கோ ப்ரா ர க, ரா ஜ நா கப் பா ம்பை பத்தாயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறான் சூரஜ்.

அந்தப் பா ம்பை சுரேஷ், ஒரு கண்ணாடி ஜாரில் அடைத்துக்கொடுக்க அதை கறுப்பு பேக் ஒன்றில் மறைத்துக்கொண்டு தன் மாமனார் வீடு வந்திருக்கிறான் சூரஜ். மறுநாள் வீட்டின் தரைத் தளத்தில் இரவு ஒரு கட்டிலில் உத்ரா படுத்திருக்க அடுத்த கட்டிலில் சூரஜ் படுத்திருக்கிறான்.

அவள் உறங்கிய பிறகு கொண்டுவந்த ஜாரில் அடைத்துவைத்திருந்த ராஜநாகத்தை எடுத்து அவள் படுத்திருந்த கட்டிலின்மேல் விட்டிருக்கிறான். பாம்பு கொ த்தி உத்ராவின் உ டல் அ டங்கியதை உறுதிசெய்த பின், காலை எழுந்து எதுவுமறியாதவன் போல வெளியே வந்திருக்கிறான்.

வழக்கமாக காலை அவளுக்குக் காபி கொண்டு வந்த உத்ராவின் தாய் ரேணுகா, அவள் சலனமற்றுக் கிடப்பதைப் பார்த்து அ லற, பதைபதைத்துப் போன உத்ராவின் தந்தையும் சிலரும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உத்ரா இ றந்துபோக, உத்ராவின் தம்பிக்கு சூரஜின் மேல் ச ந்தேகம் வந்திருக்கிறது. பூட்டிய ஏ.சி.ரூமிற்குள் பாம்பு நுழைய சான்ஸ் இல்லை. அன்றைய இரவு மருமகன் சூரஜ் மட்டுமே உடனிருந்தான். எனவே என் மகள் ம ரணத்தில் சந்தேகமிருக்கிறது என்று கொல்லம் மாவட்டத்தின் எஸ்.பி.யான ஹரிசங்கரிடம் புகார் கொடுத்திருக்கிறார் விஜயசேனன்.

அப்போது தான் உண்மைகள் வெளிவந்துள்ளன, கண்களால் பார்த்த சாட்சிகள் இல்லாத போதும், கைரேகைகள் ஒத்துப்போவதாகவும், சூரசுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்கப்படும் எனவும் பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாமனார் : அவரை கொ லை செய்தது ஏன்? அதிரவைத்த மருமகளின் வாக்குமூலம்!!

மருமகளின் வாக்குமூலம்..

இந்தியாவில் பணப்பிரச்சனையில் மாமனாரை க த்தியால் கு த்தி கொ ன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் விஸ்ரம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமசேனி – குஷ்மா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகனின் மனைவி பெயர் காமினி. ராமசேனி சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு சொந்தான நிலங்களை விற்பனை செய்த நிலையில் அவருக்கு அதன் மூலம் ரூ 25 லட்சம் பணம் கிடைத்தது. அதிலிருந்து தனக்கு ரூ 10 லட்சத்தை கொடுக்க வேண்டும் என காமினி தனது மாமியார், மாமனாரிடம் அடிக்கடி ச ண்டை போட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக காமினி தனது மாமியார் குஷ்மாவிடம் வா க்குவாதம் செய்த நிலையில், வயதானவர் என்றும் பாராமல் அவரை அ டித்துள்ளார்.

குஷ்மாவின் சத்தம் கேட்டு அங்கு ஓ டி வந்த ராம்சேனி தனது மருமகளை த டுக்க முயன்ற போது ஆத்திரமடைந்த காமினி மாமனார் ராம்சேனியை க த்தியால் கு த்தியுள்ளார். இதையடுத்து க த்தியபடி இர த்த வெ ள்ளத்தில் ச ரிந்து வி ழுந்த ராம்சேனி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

பின்னர் பயந்து போன காமினி வீட்டிலிருந்து ஓ ட முயன்ற போது அங்கிருந்த அவரின் உறவினர், கிராம மக்கள் உதவியுடன் காமினியை பிடித்தனர், ஆனாலும் காமினி அவர்களை க ற்களால் அ டித்தார். இதையடுத்து அனைவரும் சேர்ந்து காமினியை அ டித்து உ தைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ராம்சேனியின் ச டலத்தை கைப் பற்றிவிட்டு, கைது செய்யப்பட்ட காமினியிடம் வி சாரணை நடத்தினார்கள், அப்போது நடந்த அனைத்தையும் அவர் வாக்குமூலமாக அளித்தார். மேலும் அவரிடம் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு வந்த தகவல் : அ திர்ச்சியடைந்த மொத்தக் குடும்பம்!!

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில்..

தமிழகத்தில் திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே மணமக்களை கொரோனா பிரித்த கொ டுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கெளரிவாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஷரிப் என்பவருக்கும், விருது நகரையடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த நஜிமா பானு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனோ பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், திட்டமிட்டப்படி மணமகன் திருமணம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், மணமகள் நஜிமா பானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மணமகன் சென்னை கெளாிவாக்கத்திலிருந்து விருதுநகருக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சோ தனை சாவடியில் அவரது ரத்த மாதிரியை எடுத்து கொரோனோ ப ரிசோ தனைக்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், முகமது ஷரிப்பிற்கும், நஜிமா பானுவிற்கும் விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகரில் எளிய முறையில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில், அம்மாபட்டி ஆரம்ப சுகாதார குழுவினர் மணமகள் இல்லத்திற்கு வந்து புதுமாப்பிள்ளைக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறியதையடுத்து அனைவரும் அ திர்ச்சியடைந்தனர், பின்னர் அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.