வவுனியாவில் ஆராதனை நடாத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!!

வவுனியா – செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றைய தினம் ஆராதனை நடாத்திய15 ற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுஎச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளதுடன், ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடவேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றையதினம்கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றருந்தது.

இது தொடர்பாக செட்டிகுளம்பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிசார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 ற்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்ததுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மக்களுக்காக மேலும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ள இலங்கை அரசாங்கம்!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன், மக்களுக்காக மீண்டும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், 23 இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்ப கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்பு பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Divisional Secretariat- Vengalacheddikulam (பிரதேச செயலகம்-வெங்கல செட்டிகுளம்)

Administration Contact Details

http://www.vengalacheddikulam.ds.gov.lk/index.php/en/contact/contact-details.html

 

Grama Niladhari  Details & T.P Number – 2020

http://www.vengalacheddikulam.ds.gov.lk/index.php/en/administrative-structure/gn-divisions.html

 

 

 

Development officer’s details-2020

http://www.vengalacheddikulam.ds.gov.lk/index.php/en/administrative-structure/development-division.html

 

 

Samurdhi Divisions-2020

http://www.vengalacheddikulam.ds.gov.lk/index.php/en/administrative-structure/samurdhi-divisions.html#samurdhi-officers-%E2%80%93-samurdhi-mahasangam

 

 

Divisional Secretariat-Vavuniya South( பிரதேச செயலகம் வவுனியா தெற்கு-சிங்களம்)

Administration Contact Details-Sinhala Division

http://vavuniyasouth.ds.gov.lk/index.php/en/contact/contact-details.html

 

Grama Niladhari  Details & T.P Number – 2020

http://vavuniyasouth.ds.gov.lk/index.php/en/administrative-structure/gn-divisions.html

 

Development officer’s details-2020

http://vavuniyasouth.ds.gov.lk/index.php/en/administrative-structure/development-division.html

 

Samurdhi Divisions-2020

http://vavuniyasouth.ds.gov.lk/index.php/en/administrative-structure/samurdhi-divisions.html#samurdhi-officers-%E2%80%93-divisional-secretary-office

 

 

Divisional Secretariat- Vavuniya North(பிரதேச செயலகம் வவுனியா வடக்கு)

 

Administration Contact Details

http://vavuniyanorth.ds.gov.lk/index.php/en/contact/contact-details.html

 

Grama Niladhari  Details & T.P Number – 2020

http://vavuniyanorth.ds.gov.lk/index.php/en/administrative-structure/gn-divisions.html#details-of-grama-niladhari

 

 

Development officer’s details-2020

http://vavuniyanorth.ds.gov.lk/index.php/en/administrative-structure/development-division.html

 

 

Samurdhi Divisions-2020

http://vavuniyanorth.ds.gov.lk/index.php/en/administrative-structure/samurdhi-divisions.html

 

 

Divisional Secretariat- Vavuniya(பிரதேச செயலகம் வவுனியா)

Administration Contact Details

http://www.vavuniya.ds.gov.lk/index.php/en/contact/contact-details.html

 

Grama Niladhari  Details & T.P Number – 2020

http://www.vavuniya.ds.gov.lk/index.php/en/administrative-structure/gn-divisions.html

 

Development officer’s details-2020

http://www.vavuniya.ds.gov.lk/index.php/en/administrative-structure/development-division.html

 

Samurdhi Divisions-2020

http://www.vavuniya.ds.gov.lk/index.php/en/administrative-structure/samurdhi-divisions.html

District Secretariat Vavuniya மாவட்ட செயலகம் வவுனியா

Administration Contact Details

 

http://www.vavuniya.dist.gov.lk/index.php/en/contact/contact-details.html

SN Designation Branch Telephone No Fax Number Email ID
1 Govt. Agent / District Secretary District Secretariat, Vavuniya 024-2222235 / 071-0361215 024-2222212 ds@vavuniya.dist.gov.lk
gavavuniya@gmail.com
2 Addl. Govt.  Agent / Addl. District Secretary District Secretariat, Vavuniya 024-2222203 / 071-8332080 024-2222203 addldistsec@vavuniya.dist.gov.lk
3 Addl. Govt. Agent(Land) District Secretariat, Vavuniya 024-2228043 / 077-6248305 _ ..
4 Director Planning District Planning Secretariat 024-2222137/ 024-2222590 dpsvav@gmail.com
077-5315063
5 Chief Accountant Finance Branch 024-2222187 / 071-8662416 024-2222187 vadicacct@gmail.com
6 Chief Internal Auditor Internal Audit Branch 024-2223100 / 077-4595689 024-2223100 inaudit@vavuniya.dist.gov.lk
7 Deputy Director Planning District Planning Secretariat 024-2222042 024-2222590 dpsvav@gmail.com
8 Assistant District Secretary Administration Branch 024-2222138 / 077-3275955 024-2222138 admin@vavuniya.dist.gov.lk /
gavaadsfob@gmail.com
9 Assistant Director of Planning WFP / Resettlement Unit 024-2222210 /  077-4233047 024-2224292 drrsvav@yahoo.com
10 Assistant Director of Planning District Planning Secretariat 024-2225171 / 076-8401063 024-2222591 dpsvav@gmail.com
 11 Assistant Director of Planning District Planning Secretariat 024-2222589 / 077-3211499 mugunthanv1965@gmail.com
12 Accountant Account Branch 024-2224347 / 071-8619256 024-2224347 accounts@vavuniya.dist.gov.lk
13 Engineer Engineering Unit 024-5672548 / 077-6513741 engineering@vavuniya.dist.gov.lk
14 Administrative Officer Establishment Branch 024-2222106 / 077-0763676 ao@vavuniya.dist.gov.lk
15 Translator (Sinhala – Tamil) District Secretariat 071- 4481446 _ Mohamednizad123@gmail.com
16 Information Communication Technology Officer ICT Unit 024-2225370 / 077-0106859 _ it@vavuniya.dist.gov.lk
17 Registrar of Lands & Additional District Registrar Land and District Registry 024-2222130 / 071-8011995 024-2222130 lrvavuniya@rgd.gov.lk
rlvavuniya024@gmail.com
18 Deputy Director Statistical Branch 024-2222164 / 071-8435643 024-2222164 Statistics@vavuniya.dist.gov.lk
19 Director Department of Samurdhi Development 024-2223463 / 077-6617817 024-2228041 vavuniya@divineguma.gov.lk /
sambankvav@gmail.com
20 Accountant Department of Samurdhi Development 024-2228012 / 077-6184320 024-2228041 acctrdhsva@gmail.com
21 Director of Agriculture Ministry of Agriculture – District Agriculture Director’s office 024-2224348 / 077-7079264 024-2224348 doavav@yahoo.com / 
agri@vavuniya.dist.gov.lk
22 District Assistant Director (NFS) National Fertilizer Secretariat 071 6827602 / 077 9741036 024-2224348 nfsadvav@gmail.com
23 Asst. Director Land Use Planning Branch 024-2222216 / 071-3079596 024-2222216 Landuse.vav@gmail.com
24 District Assistant Director Disaster Management Unit 024-2225553 / 024-2225553 disaster@vavuniya.dist.gov.lk /
vavuniya@dmc.gov.lk
25 Assistant Director Small Enterprises Development Division 024-2228037 / 071 8149908 024-2228037 seddvavuniya@gmail.com
26 Deputy Election Commissioner (Nothern Province) Elections Branch 024-2222311 / 071-6849588 024-2222311 vavuniya@elections.gov.lk / elections_va@yahoo.com
27 Assistant Commissioner Dept. for Registration of Person, Northern Province 024-2227201 / 077-3206668 024-2227202 akirupa28@gmail.com
28 Regional Director – Northern Province Regional Industry Service Center(North) 024-2226206 / 077-9038805 024-2226206 riscnothern@gmail.com
29 Superintendent of Auditor General Audit Office 024-2223701 / 071-6142542 024-2223701
30 Assistant Director Agriculture Insurance Board 024-2222490 / 071-5338469 _ vn@aib.gov.lk
31 Deputy Director Industrial Development Board 024-2222274 / 071-8055571 024-2222274 idbvavuniya@gmail.com
32 Chief Examiner of Motor Traffic Dept. of Motor Traffic 024-2222372 / 077-7900053 024-2222372 _
33 Assistant Explosive Controller (Anuradhapura, Vavuniya, Mullaitivu & Polannaruwa) Assistant Explosive Controller’s Unit 077-3502842 / 071-3571177  –  dimuthdewa@gmail.com / thilinanilaweera@gmail.com

மரண அறிவித்தல் அமரர்.சிவராசா சிவரூபன்

வவுனியா புதூர்சந்தி புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் ,இல,30 புகையிரதக் கடவை வீதி குருமன்காட்டை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட

அமரர்.சிவராசா சிவரூபன்;27.03.2020(வெள்ளிக்கிழமை)அன்று சிவபதமடைந்தார்.

அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 30.03.2020 (திங்கட்கிழமை) காலை10.00மணியளவில் ,இல:30 புகையிரதக்கடவை வீதி குருமன்காடு என்னும் முகவரியில் இடம்பெறும்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 0768077166

 

கொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை!!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இலங்கையின் வான்படையினர் அங்கொடை தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தில் 16 கட்டில்களை கொண்ட அறைகளை தயார்ப்படுத்துகிறது.

எதிர்வரும் 9 நாட்களுக்குள் இது தயார் செய்யப்பட்டுவிடும்.

எதிர்வரும் நாட்களுக்குள் வரும் நோயாளிகளுக்காகவே இந்த தயார்ப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாளில் 260 கொரோனா உயிரிழப்பு : பிரித்தானியாவில் விமான நிலையம் பிணவறையாக மாற்றம்!!

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் நேற்று ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இறாந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

இக் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உலகத்தில் இறப்பு வீதம் கூடிக்கொண்டு வருகின்றதே தவிர குறைந்தமாதிரி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவே இல்லை.

மேலும் பிரித்தானியாவில் இவ்வாறு அதிகமானோர் நாளொருவண்ணம் இறந்துவரும் நிலையில் பேர்மிங்கம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றுவதற்கு நடவடிக்கையும் நடந்துகொண்டுவருகின்றது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிகரித்துவரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேர்மிங்காம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.

குறித்த பிணவறையில் சுமார் 12,000 சடலங்கள் வரை சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 20000 க்கு அதிகமான உயிரிழப்புக்கள் நிகழ வாய்ப்புண்டு என கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கும் மண்டபமான எக்செல் மண்டபத்தைக் கூட அண்மையில் தற்காலிக மருத்துவமனையாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே அநாவசியமாக வெளியில் செல்லாது வீடுகளில் இருந்து உங்களை நீங்களே முடிந்தளவு இத் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அரசு விடுத்த கோரிக்கை : வெளிநாடுகளில் இருக்கும் 17 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு!!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்தவேண்டுகோளை அடுத்து நேற்று பகல்வரை 17 ஆயிரம் பேர் தம்மை பதிவுசெய்து கொண்டனர்.

இதில் 6773 பேர் மத்திய கிழக்கில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்து 1892 பேரும், தென்னாசியாவில் இருந்த 1028 பேரும், வட அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் இருந்த 6000 பேரும் தன்மை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தரவுகளை கொண்டு எதிர்காலத்தில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது : அரச செலவில் இறுதிக் கிரியைகள்!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபரின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் பபா பலிஹவடன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, பாதிக்கப்பட்டவரின் இறுதி சடங்குகள் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்தார். கொரேனா வைரஸினால் இலங்கையில் பதிவான முதல் மரணம் இதுவாகும்.

அங்கொட வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 113 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் அகோரம் : ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவலின் மூன்றாம் கட்டமாக தற்போது குழுக்களாக பரவி வருவதாகவும் வைரஸின் நான்காவது கட்டம் பரவினால் அது மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முதலாவது மரணம் சம்பவித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதிய கொரோனா நோயாளிகள் 7 பேரும் இன்று காலை இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரையில் அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கை 113 ஆகும்.

அத்துடன், இரண்டு வைத்தியர்களும் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 10 வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் : வானில் இருந்து தெளிக்கப்பட்ட மந்திரித்த நீர்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

தற்போது வரையில் இலங்கையில், 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளதுடன், விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்ட நீர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வானில் இருந்து தெளிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் குறித்த நீர் தெளிக்கப்பட்டது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது வரையில் உலகம் முழுவதும் 656,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்வு!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை வரை இந்த தொகை 113ஆக இருந்தது.

இந்தநிலையில் இன்று காலை மேலும் இரண்டு தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டி அக்குரனையில் உள்ள கிராமம் மற்றும் புத்தளம் கடயங்குளம் ஆகிய கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் இரு பிரதேசங்கள்!!

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த இரு பிரதேசங்களை முழுமையாக தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அக்குறன பிரதேசம் மற்றும் புத்தளம் கடமன்குளம் கிராமத்தின் ஒரு பகுதியை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று தொடர்ந்து பரவாமல் இருப்பதற்காக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு மூடப்படும் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சில பகுதிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவது மரணம் நேற்று சம்பவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.