வவுனியா உளுக்குளம் பகுதியில் ஆணொருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (19.12.2019) அதிகாலை குளத்திற்கு மீன் பிடிக்க சென்ற 57 வயதுடைய ஜி.விஜயசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீன் பிடிப்பதற்கு சென்ற விஜயசிறி என்பவர் நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஊர்மக்கள் தேடிச் சென்ற போது உளுக்குளம் குளத்தினுள் மிதந்த நிலையில் ச டலம் காணப்பட்டதை தொடர்ந்து உளுக்குளம் பொலிஸரால் மீ ட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை ச டலம் மரண ப ரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும் கூட இயங்கும் தன்மை என்பது அவசியமாகின்றது.
ஒருவருடைய இயங்கும் தன்மையானது மட்டுப்படுத்தப்படும்போது தனது சகவயது உடையவர்களுக்கு சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்புக்களை அவர் அடையமுடியாமல் போவதனால் கல்வி, தொழில், பொழுதுபோக்கு மற்றும் சமூக நடவடிக்கைகளில் தனது உரிமைகளை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தினை அவர் இழக்க நேரிடுகின்றது.
ஊனமுற்றவர்களை சமூகத்தில் உள்ளடக்குவதிலும் பங்கேற்க செய்வதிலும் துணை இயக்க சாதனங்கள் நுழைவுப்புள்ளியாக அமைகின்றன. அவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்கவும் சமூகத்தில் கண்ணியமாக வாழவும் இச் சாதனங்கள் உதவுகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் ஊனமுற்றவர்களிற்கான உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் ஊனமுற்றவர்களின் கௌரவம் மரியாதை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளிற்கான சம உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பிரகடனத்தின் 04,20,26 ஆகிய உறுப்புரைகளில் ஊனமுற்றவர்களின் தனிப்பட்ட இயக்கம் மற்றும் உலக தரம் வாய்ந்த துணை இயக்க தொழில் நுட்பங்களை அல்லது குறைந்தளவு மாற்றியமைக்கப்பட்ட துணை இயக்க சாதனங்களைப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்காக சமூகத்தில் பங்கேற்க செய்தல் என்பவை தொடர்பான வினைத்திறனுள்ள அளவீடுகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இப் பிரகடனம் 13 டிசம்பர் 2006 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக்கூட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கை 8 பெப்ரவரி 2016 அன்று 162 ஆவது நாடாக இப் பிரகடனத்தை ஒப்புக் கொண்டதன் மூலமாக ஊனமுற்றோரின் இயங்கும் தன்மை மற்றும் சமூகத்தில் இணைந்து செயற்படல் தொடர்பான உரிமைகள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட 04,20,26 ஆகிய உறுப்புரைகளின் விதிமுறைகளிற்கு அமைந்து நடப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஊனமுற்றோரின் இயக்கத்திற்கு பேருதவி புரியும் ஒரு துணை இயக்க சாதனமாக சக்கரநாற்காலியும் அடையாளம் காணப்பட்டுள்ளது இது பொதுவாக முள்ளந்தண்டு வடக்காயம், இரண்டு கால்களும் அகற்றப்பட்டோர், போலியோ மற்றும் பெருமூளை வாதம் போன்று அதிக அளவில் இயங்கும் தன்மை பாதிக்கப்பட்டவர்களின் இயங்கும் தன்மையை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றது.
நீண்ட கால பாவனையாளர்களுக்கு தரமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான சக்கரநாற்காலிகளை பயன்படுத்துவதன் மூலம் படுக்கைப் புண், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு, மூட்டு இறுக்கம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
பொருத்தமான சக்கரநாற்காலி ஒன்றினை வழங்குவதன் மூலம் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் உடல் அமைப்பின் நிலையினை பேண முடிவதுடன் இறுக்கம் கூடிய தசைகளின் இறுக்கத் தன்மையை குறைத்து வளர்ச்சிப் பாதையின் மைல்கற்களை அடைவதிலும் உதவ முடியும். எனவே சக்கரநாற்காலி இங்கு ஒரு துணை இயக்க சாதனம் என்பதையும் தாண்டி ஒரு மருத்துவ உபகரணமாக பயன்படுகின்றது.
மேலும் சக்கரநாற்காலியானது பாவனையாளர் வாழும் சூழலுக்கு பொருந்தக்கூடிய வகையில் அமைய வேண்டும் பொதுவாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சக்கரநாற்காலியை கரடுமுரமான மற்றும் செப்பனிடப்படாத சாலைகளில் பாவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது அவர்களுடைய சக்கரநாற்காலி குறித்த சூழலுக்கு பொருத்தமானதாக இல்லாவிடில் பாவனையாளர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
சக்கரநாற்காலிகள் சற்று விலை உயர்ந்த உபகரணங்கள் ஆகையால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தொடர் சக்கர நாற்காலி சேவைகளை பேணுவதற்கு தரமான கடுமையான நிலைகளிலும் நீண்டகால பாவனை தரக்கூடிய நாற்காலிகளை வழங்குவது, மற்றும் சக்கரநாற்காலி பாகங்களை உள்நாட்டில் கிடைக்கும்படியாக செய்வதும் நாற்காலிகளைத் திருத்துவதற்குரிய பயிற்சிகளை வழங்குவது என்பன அவசியமாகும்.
உலக சுகாதார நிறுவனமானது சக்கரநாற்காலிகளின் தரத்தை உறுதிப்படுத்துத்துவற்காகத் தனது அங்கத்துவ நாடுகளில் தேசிய சக்கரநாற்காலித் தரநிலைமையை மேம்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் உற்சாகப்படுத்தி வருகின்றது.
சக்கர நாற்காலி வழங்கும் சேவையானது சிகிச்கை முறையில் அமைய வேண்டும் பொருத்தமான ஒரு மருத்துவ நபரின் பங்கேற்பு என்பது ஆரம்பகட்ட மதிப்பீடு சக்கரநாற்காலி பரிந்துரைப்பு, பொருந்தும் தன்மை மற்றும் தொடர்ச்சியான மேற்பார்வை என்பவற்றில் அவசியமானதாகும். இப் படிநிலைகளில் ஏதேனும் ஒரு தவறு நேரும் பட்சத்தில் அது பயனாளரில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சக்கர நாற்காலி வழங்கும் சேவையின் மற்றுமொரு முக்கியமான படி ஆனது பாவனையாளர்களுக்கான அடிப்படைத் திறன் பயிற்சி ஆகும். இதன் மூலம் பாவனையாளர்களும் அவர்களைக் கவனித்துக் கொள்வோரும் நல்ல இயங்கும் தன்மைக்கான மேம்பட்ட சக்கரநாற்காலி பாவிப்பு முறை அமுக்கத்தை குறைப்பதற்கான உத்திகள் கொண்டு செல்லும் உத்திகள் மற்றும் சக்கர நாற்காலி பராமரிப்பு என்பன பற்றி அறிந்து கொள்ள முடியும் இதுவே சக்கர நாற்காலி வழங்கும் சேவையின் மிக முக்கியமான படிமுறை ஆகும்.
ஊனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சக்கர நாற்காலிகளை வழங்குவது என்பது அனைத்து நாடுகளினதும் பிரதான கடமையாகும் தொடர்ச்சியான சேவையை பேணுவதற்குப் பொருத்தமான தேசிய கொள்கைகளை வடிவமைத்தல், சக்கரநாற்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம், பயிற்சி மற்றும் நிதிவழங்கல் என்பன முக்கியமானவையாகும்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொருத்தமான சக்கரநாற்காலி வழங்கும் சேவையானது நன்றாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுடைய சுகாதார சேவை அமைப்பில் உள்வாங்கப்பட்டு நன்றாக விருத்தி செய்யப்பட்டுள்ளது. அவர்களிற்கு சமமான அளவில் சக்கரநாற்காலி சேவையை நிர்மாணிப்பது என்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிதித் தடைகளின் காரணமாக மிகப் பெரிய சவாலாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் தனது அங்கத்துவ நாடுகளில் சக்கரநாற்காலி வழங்கும் சேவைகளினை மேம்படுத்துவதற்றாக ‘குறைவான வளங்களைக் கொண்ட இடங்களில் வினைத்திறனாக சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்’ என்ற வழிகாட்டி ஆவணத்தை உருவாக்கியுள்ளது.
2012 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் துறையின் தரவுகளின்படி இலங்கையின் மொத்த மக்கள் குடித் தொகையில் 8.7 வீதமானோர் ஊனமுற்றோர் ஆவர்.
30 வருட கால உள்நாட்டு யுத்தமானது பல இளம் இலங்கையர்கள் உடல் உறுப்புக்களை இழக்க காரணமாக அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட வீதி வலையமைப்புக்களும் விருத்தியடைந்த வேகமான போக்குவரத்து வசதிகளும் பல விபத்துகளுக்கும் அகன் மூலம் அதிக ஊனமுற்றோர் உருவாகவும் காரணமாகின்றன குறைவான உடல் உழைப்புடன் கலாச்சார உணவிற்கு பதிலாக விரைவு உணவுகளும் இலங்கையின் இளம் தலைமுறையினரில் சர்க்கரை, உயர்குருதி அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுடன் இயங்கும் தன்மை தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துத்துகின்றன.
இலங்கையானது அதன் இலவச சுகாதார சேவை முறைமை காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு நிகரான சுகாதார சுட்டியினை கொண்டிருக்கின்றது என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது ஆனாலும் அதன் துணை இயக்க சாதன வசதிகளை வழங்குகின்ற துறையானது மிகவும் குறைவான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தினது வளர்முக நாடுகளிற்கான சக்கரநாற்காலி சேவை வழங்கும் திட்டத்திற்கான அடிப்படை வழிகாட்டுதல்களில் இலங்கை இன்னும் ஆகக்குறைந்த தேவைகளையேனும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
இலங்கையின் சுகாதார சேவை முறையில் சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான திட்ட நடைமுறையொன்று இல்லாமையினால் தேவையேற்படுவோர் பெரும்பாலும் உள்ளுர் விநியோகஸ்தர்களையும் மேலதிகமாக வேறு சந்தர்ப்பங்களையும் நாடுகின்றனர்.
தற்போது இலங்கையில் சமூக நல மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஊனமுற்றோருக்கான சேவைகள் கையாளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மையமாகவுள்ளது. இவ்வமைச்சு ஏனைய தேவையான அமைச்சுக்களுடன் இணைந்து இவ் ஊனமுற்றோர்களுக்கான நலத்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கின்றது.
மாகாண சபைகளினூடாகவும் ஊனமுற்றோர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனினும் அதற்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மற்றும் நிதிசார் குறைபாடுகளினால் அவை சிரமத்தை எதிர்நோக்க நேரிடுகின்றது.
இவ்விரு தாபனங்களும் இவ்வகையான துணை இயக்க சாதனங்களை வழங்கிவரும் பிரதான நிறுவனங்கள்; ஆயினும் இவர்களினது சேவையினது தரமானது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது.
சக்கர நாற்காலியானது கிராமசேவகர், பிரதேச செயலாளர் மற்றும் அரச சைத்திய அதிகாரி ஆகியோரினது சிபாரிசுடன் வழங்கப்படுகின்றது எனினும் இவ்வகையான சக்கர நாற்காலிகளினது தரமானது உலக சுகாதார நிறுவனத்தினது தர சான்றிதழின் அடிப்படை விதிகளுக்கு கூட அமைவாக இருப்பதில்லை.
சக்கர நாற்காலிகளை பரிந்துரைக்கும் விசேட நிபுணரின் கணிப்பீடு, பரிந்துரைப்பு வழங்குதல் தொடர்ச்சியான மேற்பார்வை என்பன சக்கர நாற்காலிகளை வழங்கும் செயற்பாட்டில் இருப்பதில்லையாதலினால் பொருத்தமான மக்களை சக்கர நாற்காலிகள் சென்றடைவதில்லை.
பொதுவாக இவ்வுபகரணங்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்டப்ட நிதியின் அடிப்படையில் மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் அவையாவும் ஒரே அளவு பரிமாணங்களையும் தரத்தையும் கொண்டவையாகும்.
எனவே வௌவேறு உடற்பருமன் வயது, அங்கவீனத்தின் தன்மை உடைய பாவனையாளர்களும் ஒரே வகையான அவர்களுக்கு பொருத்தமற்ற சக்கர நாற்காலிகளையே பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான பொருத்தமற்ற சக்கரநாற்காலிகள் பாவனையாளர்களின் வாழ்கைத்தரத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முதல் படத்தில் குழந்தை ஒன்று வளர்ந்தோர்கெனப் பரிந்துரைக்கப்பட வேண்டிய சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை காணமுடிகின்றது இது அவரின் உடற்பருமனை விடவும் பெரியதாகும். இந் நாற்காலியின் பெரிய அளவிலான இருக்கையால் இக் குழந்தைக்கு எதுவித ஆதாரத்தையும் வழங்க இயலாதுள்ளது இதனால்; முள்ளந்தண்டானது நிரந்தரமான பக்க வளைதலுக்கு உள்ளாகும் கால்கள் அவற்றுக்கென அமைக்கப்டப்டுள்ள தாங்கும் ஆதாரத்தை சேராதிருப்பதனால் அது கால்களின் ஒழுங்கற்ற வளர்ச்சிக்கும் அல்லது மூட்டுக்கள் இறுகுவதற்கும் இட்டுச் செல்கின்றது.
எனவே பொருத்தமற்ற சக்கரநாற்காலியினை பயன்படுத்தும் போது முன்னர் இருந்ததை விட உடல் குறைபாடுகள் அதிகரிக்க நேரிடுகின்றது. துரதிஷ்டவசமாக எமது நாட்டின் பெரும்பாலான ஊனமுற்ற சிறார்கள் இவ்வகை சக்கர நாற்காலிளையே பாவிக்கின்றனர்.
சக்கரநாற்காலியில் பொருத்தமான அமுக்க நிவாரண மெத்தைகள்; ஏதுமின்றி அமர்ந்திருக்கும் பாவனையாளர்களுக்கு (விசேடமாக உணர்வு அற்றவர்களுக்கு) அழுத்தப்புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் என்புத் தொகுதிக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான அமுக்கம், இரத்த குழாய்களை அடைத்து தோலுக்கான குருதி வழங்கலைத் தடைசெய்வதால் அவை அழிவடைந்து புண்களை தோற்றுவிக்கின்றது.
இவ்வகையான அழுத்தத்தினால் ஏற்படும் புண்கள் சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து தொற்றுக்குள்ளாகி உயிராபத்தினை ஏற்படுத்த கூடியவையாகும். குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் மரணவீதத்தை அதிகரிக்கும் பிரதான காரணி இதுவேயாகும்.
இவ்வாறான மிகவும் முக்கியமான பிரச்சனை ஒன்றானது சக்கர நாற்காலிகளை வழங்கும் போது இந் நாட்டில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.
மேலும் பயனாளிகள் சக்கரநாற்காலிகளை உபயோகிக்க பயிற்சியளிக்கப்படுவதில்லை ஆகையால் அவர்கள் அந் நாற்காலிகளை திறம்பட பாவிக்க முடியாதுள்ளதுடன் துணை / இரண்டாம் கட்ட காயங்களுக்கும் வேறு பாதகமான விளைவுகளுக்கும் உட்பட நேர்கின்றது.
இவ் உபகரணங்கள் மக்களின் நன்மை கருதி அவர்களின் வரி அறவீட்டின் மூலமே கொள்வனவு செய்யப்படுகின்றன எனினும், அவை பொருத்தமானவாறு பாவனையாளர்களை அடைய முடியாவிடின் அவர்களின் ஆரோக்கியம் மேலும் நலிவுறவும் காரணமாயமைகின்றன இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றது.
பிறநாடுகள் சிலவற்றில் துணை இயக்க உபகரணங்கள் சுகாதார அமைச்சு, சமூக சேவை அமைச்சு பாதுகாப்பு அமைச்சு என்பவற்றினூடாக வழங்கப்படுகின்றன. எனினும் எமது நாட்டில் இதனை சுகாதார அமைச்சினூடாகவே வினைத்திறனாக செய்ய முடியும். என நம்புகின்றேன். றாகம புனர்வாழ்வு மருத்துவமனையின் சக்கரநாற்காலி வழங்கற்சேவை, இதற்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.
நாட்டின் முழுப் பாகத்திற்கும் சுகாதார சேவையானது விஸ்தரிக்கப்பட்டுள்ளமையால் இச் சக்கரநாற்காலி வழங்கும் சேவையை குறித்த அமைச்சினுள் கொண்டு வருவதே இலகுவானதும் இலாபகரமானதுமாகும்.
ஒவ்வோர் மாவட்டத்தினதும் பொது வைத்தியசாலைகளில் துணை இயக்க உபகரணம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் அலகுகளை உருவாக்கி, அங்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள வைத்திய சேவை உதவியாளர்களை தொழில்நுட்பவியலாளர்களாக பயிற்றுவிப்பது இயலுமானதொன்றாகும்.
மேலும் வைத்தியசாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இயன்மருத்துவர்கள் தொழில்வழி சிகிச்சையாளர்கள்; அல்லது செயற்கை அவையவ நிபுணர்களுக்கு தேவையான பொருத்தமான மேலதிக பயிற்சிகளை வழங்குவதன் மூலம் விசேட மருத்துவ நிபுணர்களையும் உருவாக்க முடியும்.
அதிகரிக்கின்ற (ஏறத்தாழ 10%) தங்கியிருப்போரினது தொகையுடன் எமது நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்வது கடினமானதாகும். எனவே அவர்களையும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் மனிதவலுவிற்குள் அரவணைத்து செல்வதே சிறந்த முறையாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி துணையான இயக்க உபகரணங்களான சக்கரநாற்காலி போன்றவை அங்கவீனமற்றோரை பொது சமூகத்தினுள் உள்ளடக்குவதற்கான உபாயமாதலால் அரசாங்கமானது இதனை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசதாபனங்கள் தற்போதய நிலைப்பாட்டின்படி ஏதாவதொன்றை பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட சிறந்தது. என்பதற்கு அமைவாகவே சக்கரநாற்கலிகளை வழங்கும் திட்டமானது நடைபெற்று வருகின்றது. ஆயினும் இவ் எண்ணமானது எப்போதும் சரியான ஒன்று அல்ல என்பதால் இக்கொள்கையில் சாதகமான மாற்றம் ஒன்றிற்கு இதுவே தக்க தருணமாகும்.
வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வடக்கு ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதும், வட மாகாண ஆளுநர் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கே.ஜெயலட்சுமி ஒன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார். 16 வயதில் சாதித்திருக்கும் இந்த சிறுமி தொடர்பாக பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
ஜெயலட்சுமி ஒரு சாதாரண பெண் அல்ல, ஏனெனில் அவர் ம னநலம் பாதிக்கப்பட்ட தாயையும் அவளுடைய தம்பியையும் கவனிக்க கடினமாக உழைக்கிறார்.
அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் இவர்தான். முந்திரி பருப்புகளை விற்பனை செய்வதுடன் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூசன் எடுத்து தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.
தனது படிப்புக்கான செலவையும் இதில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் அவர் கவனித்துக் கொள்கிறார். கோ 4 குரு ஏற்பாடு செய்த போட்டியைப் பற்றி பேசும்போது,
அந்தப் பெண் தற்செயலாக போட்டியைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், இப்போது அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் இந்த சாதனை சிறுமி கூறுகிறார்.
மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் ” நான் ஒரு கேரம் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டபோது, பலகை அருகே கிடந்த ஒரு செய்தித்தாளைக் கண்டேன். அதில் கடந்த ஆண்டு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பை வென்ற தன்யா தஸ்னெம் பற்றிய கதை இருந்தது.
உடனடியாக நான் அதில் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பதிவு செய்தேன் ” என்று கூறியுள்ளார். இது TNIE ஆல் மேற்கோள் காட்டப்பட்டது.
எனவே, அவர் நேஷனல் மீன்ஸ் கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு உதவித்தொகைகளை வென்றுள்ளார். அவரது சாதனை குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ” நான் அப்துல் கலாம் ஐயாவைப் போல ராக்கெட் தயாரிக்க விரும்புகிறேன்.
இந்த பயணத்தை அரசுப் பள்ளியில் படிக்கும் எவரும் இதுவரை வென்றதில்லை. நான் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும் ” என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
ஜெயலட்சுமியின் பயணத்திற்கு கிட்டதட்ட இரண்டு லட்ச ருபாய் செலவாகும். அவரின் தந்தை தனியாக வசித்து வருகிறார், எப்போதாவது இவருக்கு பணம் அனுப்புவார்.
இவரது நண்பர்களும், ஆசிரியர்களும் பாஸ்போர்ட் பெற இவருக்கு உதவியுள்ளனர். பாஸ்போர்ட் அதிகாரி ஜெயலட்சுமிக்கு 500 கொடுத்தார், மேலும் ஜெயலட்சுமி தனக்கு உதவுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெயலட்சுமியின் பயணம் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் என்றும் அதனால் கண்டிப்பாக உதவுவதாகவும் கூறியுள்ளார். பள்ளி முதல்வர் கூறுகையில், ” ஜெயலட்சுமி மிகவும் திறமையான பெண் மற்றும் பல போட்டிகளில் வென்று வருகிறார். வானமே அவளுக்கு எல்லை” என்று கூறினார்.
நாசா நடத்திய போட்டியில் வென்ற ஒருசில மாணவர்களில் இவரும் ஒருவர். வெற்றியாளர்களுக்கு நாசாவின் முழு சுற்றுப்பயணமும் வழங்கப்படும், மேலும் அவர்கள் விண்வெளி வீரர்களுடன் உரையாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் யூ டியூப் நட்சத்திரங்களில் 2019-ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த நபர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் Ryan Kaji. தற்போது 8 வயதாகும், இவர் தன்னுடைய 3 வயதிலே, அதாவது கடந்த 2015-ஆம் ஆண்டு யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தியுள்ளார், இந்த யூ டியூப் சேனலிற்கு அவருடைய தாய் மற்றும் தந்தை பெரிதும் உதவிகின்றனர்.
ஆரம்பத்தில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், நாட்கள் செல்ல, செல்ல Ryan Kaji குழந்தைகள் விளையாடும் பொம்பைகளைப் பற்றியும், அதை எப்படி பயன்படுத்துவது? என்ன இருக்கிறது? போன்ற குழந்தைகளுக்கு தேவையானவற்றை கூறி வந்தால், சிறுவனின் வீடியோ வைரலானது.
இதனால் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே சென்ற நிலையில், தற்போது இவரின் யூ டியூப் சேனலை 23 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் பிரபல அமெரிக்க பத்திரிக்கையான போர்ப்ஸ் நிறுவனம், இந்த 2019-ஆம் ஆண்டில் யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதித்த நட்சத்திரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் Ryan Kaji குறித்த ஆண்டில் மட்டும் 20 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது, கடந்த ஆண்டிலும் Ryan Kaji தான் முதலிடம் பிடித்தார். ஆனால் 2018-ஆம் ஆண்டில் இவரின் ஆண்டு வருமான யூ டியூப் மூலம் 17 மில்லியன் பவுண்டாக இருந்தது, தற்போது அது அதிகரித்துள்ளது.
இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் Dude Perfect என்ற ஐந்து பேர் கொண்ட நண்பர்களின் யூ டியூப் சேனல் 15 மில்லியன் பவுண்டுடனும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் Nastya யூ டியூப் சேனல் 13.7 மில்லியன் பவுண்டும் சம்பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிமோனியா பாதிப்பால் அவ திப்பட்டுவந்த நோயாளியின் மூச்சுக் குழாயில் இருந்து மீன் ஒன்றின் தலை பகுதியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையிலேயே கட்டார் நாட்டவரான நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்து மருத்துவர்கள் மீன் தலையை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மூச்சுக்குழாயில் பல ஆண்டுகளாக இந்த மீன் தலையின் பாகம் சிக்கிக் கிடந்ததே, குறித்த நபருக்கு நிமோனியா பா திப்பு ஏற்பட காரணம் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
கட்டார் நாட்டில் குறித்த நபர் நிமோனியா தொடர்பில் சிகிச்சை மேற்கொண்டும் அங்குள்ள மருத்துவர்களால் மூச்சுக் குழாயில் சிக்கியுள்ள மீனின் தலையை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது. தற்போது அந்த நபர் குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனான வட்ஸ் அப்பிள் கோளாறு ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழுவாக இணைந்து சட் செய்யும் வசதியிலேயே இக் கோளாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சட் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிந்துபோவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழுவில் இணைந்துள்ள அனைவருக்கும் இப் பிரச்னை ஏற்படுவதாக ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் புதிய வட்ஸ் அப் பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2.19.58 எனும் பதிப்பினை அப்டேட் செய்வதன் மூலம் இப் பிரச்னையை தவிர்க்க முடியும்.
இதேவேளை உலகெங்கிலும் சுமார் 1.5 பில்லியன் வாட்ஸ் ஆப் பயனர்கள் உள்ள நிலையில் நாள்தோறும் 65 பில்லியன் குறுஞ்செய்திகள் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எலுமிச்சை நமது அன்றாட சமயலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான விட்டமின் சி இருக்கிறது. மேலும் ஊட்டச் சத்துகள் உள்ளது.
ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன.
எலுமிச்சை சுகாதார நலன்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி, பாஸ்பரஸ், புரதங்கள், மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அதன் பல ஊட்டமளிக்கும் கூறுகள் காரணமாக உள்ளன.
அதுமட்டுமின்றி நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் எலுமிச்சையின் தோலின் கூட பல ஏராளமான நன்மைகள் உண்டு.
மேலும் எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை வேகவைத்து அதன் நீரை பருகினால் உடலில் பல மாயங்கள் நிகழும் என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது எலுமிச்சை வேகவைத்த நீரை பருகுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
செய்முறை : எலுமிச்சை – 6, தண்ணீர் – 1/2 லிட்டர், தேன் – தேவையான அளவு. தயாரிக்கும் முறை : முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
நன்மைகள் : இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. மேலும் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்னைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.
தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது.
இந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6க்கு இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வியமைச்சினால் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 180 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 187 புள்ளிகளாக காணப்பட்டது.
பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கண்டி, பெண்கள் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 179 புள்ளிகளும், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 175 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 168 புள்ளிகளும் (கடந்த முறை 178), கல்முனை, கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு 166 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 20ம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 339,410 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன் அதில் 332,179 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கான மாணவர் எண்ணிக்கை 5,000ஆக அதிகரிக்கப்பட்டு 20,000 மாக உயர்த்தப்பட்டதோடு, அதில் 250 புலமைப் பரிசில்கள் விசேட தேவையுடையோர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பெறுபேறுகள் தயாரிக்கும் போது நாடளாவிய அல்லது மாவட்ட ரீதியில் Rank வழங்கப்படாமை விசேட அம்சமாகும்.
ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி 3 வருடங்களாக பயணித்த ரயில் ஒன்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் சாரதிகள் இருவர் மற்றும் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுவதற்காக பயணித்த ரயிலே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் அண்மையில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தினமும் கொழும்பிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் கண்டி நோக்கி பயணிக்கும், பின்னர் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும். அதற்கமைய தினமும் இரவு 8.30 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்தை நெருங்கும் இந்த ரயிலின் சில பெட்டிகள் நீக்கப்படும்.
ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு என்ஜின் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் ரயில் பெட்டியை பொருத்தி 50 கிலோ மீறறர் தூரம் எந்த பயணிகளுமின்றி பயணிப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். அதற்கமைய நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஜனாதிபதி நேற்றிரவு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசியில் ஊடாக தொடர்பு கொண்டு ஜனாதிபதி கலந்துரையாடினார்.
சமகால அரசாங்கத்தினால் அமுல்செய்யப்பட்ட வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கிடைக்கின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்த திடீர் விஜயங்கள் காரணமாக அரச நிறுவனங்களில் பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் கடும் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் புதுமாப்பிள்ளை வீட்டின் பின்புறத்தில் கொ லை செய்யப்பட்டு ச டலமாக கிடந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜோ மெல்கோசா (30).
இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமணத்துக்கு அழைக்காமலேயே இரண்டு பேர் அங்கு வந்து பி ரச்னை செய்ய தொடங்கினர்.
அவர்களை மணமகன் ஜோ தடுத்தார், பின்னர் சிறிது நேரத்தில் ஜோவும் அந்த இரண்டு ம ர்ம ந பர்களும் மா யமானார்கள். இதன் பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டின் பின்புறத்தில் ஜோ ச டலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து ஜோவின் சகோதரர் ஆண்டி வேலாஸ்குஸ் கூறுகையில், அந்த இருவரையும் என் சகோதரன் ஜோ தடுத்தான், இதையடுத்து அவனை கிரிக்கெட் ம ட்டையால் அ டித்து கொ ன்றுவிட்டனர், அவன் மீது எந்த தவறும் கிடையாது.
இது போன்ற ம ரணம் அவனுக்கு ஏற்பட்டிருக்க கூடாது, அவனுக்கு ஒரு மகள் உள்ளார் என வே தனையுடன் கூறியுள்ளார். இதனிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரோனி ரமிரீஸ் (28) மற்றும் அவன் தம்பி ஜோஸ் ரமிரீஸ் (19) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் உ யிரிழந்த புதுமாப்பிள்ளையின் இறுதிச்சடங்குக்காக GoFundMe இணையதள பக்கம் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியின் அழகான இலங்கை என்னும் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் சுவரோவியங்கள் வரையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில் அவருடைய அழகான இலங்கை என்னும் செயற்திட்டத்தின் கீழ், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகு படுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் வவுனியாவில் சி வில் பா துகாப்பு குழு, பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் இணைந்து சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா சந்தை சுற்று மதிலில் சி வில் பா துகாப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து சுவரை சுத்தம் செய்து ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன்,
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் சுவர்களில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இரணைமடுக் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. குறித்த இரு வான் கதவுகளும் 6 அங்குலம் அளவில் திறந்து நீர் வெளியேற்றபட்டு வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றபட்டது.
தற்பொழுதும் இரணைமடுக் குளத்தின் நீர் மட்டமானது 35 அடி 10 அங்குலம் அளவில் காணப்படுவதால் தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே இன்றைய தினம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டன.
நாடோடி சமூகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா பெண் ஒருவர், தன்னுடைய 38 வயத்திற்குள்ளாகவே 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 38 வயதான லங்காபாய் என்கிற கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால் து ரதிஷ்டவசமாக அந்த குழந்தை அடுத்த சில மணி நேரங்களில் உ யிரிழந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் பவார் கூறுகையில், முதன்முறையாக லங்காபாய் கடந்த செப்டம்பர் 8ம் திகதியன்று ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது உ டல்நிலை மோ சமடைந்திருப்பது குறித்து கேட்டபோது தான், அவர் 20வது முறை கர்ப்பம் தரித்திருப்பது எங்களுக்கு தெரியவந்தது. அவருக்கு தற்போது 9 மகள்கள் உட்பட 11 குழந்தைகள் உள்ளனர். மூன்று முறை கரு க லைந்துள்ளது. 5 குழந்தைகள் பி றந்து இ றந்துவிட்டன.
அவரை ப ரிசோதனை செய்வதற்காக எங்கள் குழு நவம்பர் 21ம் திகதி அவருடைய வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர்கள் அங்கிருந்து கர்நாடகாவிற்கு சென்றிருந்தனர்.
தற்போது அவருக்கு 17வதாக ஒரு பெண் குழந்தை பிறந்து, இ றந்திருப்பதை நாங்கள் அறிந்தோம். மேலும் அவரை பற்றியதகவல்களை தெரிந்துகொள்வதற்காக முயற்சித்து வருகிறோம் எனக்கூறியுள்ளார்.
போலி அறக்கட்டளை மூலம் 65 பேரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு கட்ட கடன் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் நீலகிரி பொலிஸ் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கோவையை சேர்ந்த ரூபினிபிரியா (29) என்பவரை கைது செய்தனர்.
வி சாரணையில் அவர் போ லியான அறக்கட்டளை ஒன்றினை ஆரம்பித்து பல லட்சம் மோ சடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வீடுகட்ட கடன் தருவதாகக் கூறி 65 பேரிடம் ரூ.18 லட்சம் வரை முன்பணம் வசூலித்து மோ சடி செய்திருந்துள்ளார்.
அவருக்கு உதவியாக சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை ஏஜெண்டுகளாக நியமித்திருந்துள்ளார். சிவா ஏற்கனவே வேறு வ ழக்கில் சி றையில் இருப்பதால், த லைம றைவாக உள்ள மற்ற இருவரையும் பொலிஸார் வலைவீசி தே டி வருகின்றனர்.