வவுனியாவில் சி றுமி மீது து ஷ்பிர யோகம் : இருவர் விளக்கமறியலில்!!

தாலிக்குளம் பகுதியில்..

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் சி றுமி ஒருவரை பா லியல் து ஷ்பிர யோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் ச ந்தேகந பர்கள் இருவரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ச ந்தேகநபர் த லைமறை வாகியுள்ள நிலையில், ச ந்தேகத்தின் பேரில் இருவரை கை து செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் 10 நாட்கள் வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது.

குறித்த சி றுமி கடந்த 10ஆம் திகதி தாலிக்குளம் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவரினால் பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருடன் சென்ற இருவர் அவரது பா துகாப்பிற்காக வெளியே நின்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிராமத்தில் இருந்த சிலருக்கு தெரியவந்துள்ளதையடுத்து, பொலிஸார் சி றுமியை அழைத்து வி சாரணை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் குறித்த சி றுமியை வைத்தியசாலையில் அனுமதித்து அறிக்கையினையும் பெற்றுக்கொண்டனர்.

அந்த சிறுமி 15 வயதுடையவர் எனவும், குறித்த இளைஞன் 26 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபராக அந்த இளைஞனை கை து செய்து சட்டத்தின் முன்நிறுத்தி த ண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களே உ யிர் வாழ்வார் என கூறப்பட்ட குழந்தை : ஹீரோவாக தியாகம் செய்த பெண்!!

தியாகம் செய்த பெண்

இரண்டு வயது குழந்தை ஒன்று சிறுநீரக பி ரச்சினையால் பா திக்கப்பட்டு இன்னும் சில மாதங்களே உ யிர் வாழ்வாள் என கூறப்பட்ட நிலையில், முன் பின் தெரியாத பெண் ஒருவர் அந்த குழந்தைக்கு சிறுநீரகம் தா னம் செய்து அவரது உ யிரைக் கா ப்பாற்றியிருக்கிறார்.

Newcastleஐச் சேர்ந்த Joety and Amrik Kandola தம்பதியின் மகள் Anaya. குறைபிரசவத்தில் பிறந்த Anayaவுக்கு ஒரு குறிப்பிட்ட நோ ய் ஏற்பட்டு அவளது சிறுநீரகங்கள் பா திக்கப்பட்டன.

மருத்துவர்கள் அவள் இன்னும் சில மாதங்களே உயிர் வாழ்வாள் என்று கூறிவிட, அவளை இ ழக்க மனமில்லாத அவளது பெற்றோர், தங்கள் சிறுநீரகம் அவளுக்கு பொருந்தததால், சிறுநீரக தானம் கோரி பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கை சீக்கியரான Surinder Sapal (36) கண்களில் பட, இரண்டு குழந்தைகளின் தாயான அவர் கண்களுக்கு, Anaya தனது மூன்றாவது குழந்தையாகத்தான் தெரிந்திருக்கிறாள். உடனே Anayaவின் பெற்றோரை அவர் தொடர்புகொள்ள, மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் Anayaவுக்கு பொருந்துமா என சோ தித்திருக்கிறார்கள்.

அது பொருந்துகிறது என்பது கண்டறியப்பட்டதோடு, 100,000இல் ஒருவர்தான் Anayaவுக்கு பொருத்தமாக இருக்க முடியும் என்பதும், அந்த ஒருவர் Surinder என்பதும் தெரியவந்துள்ளது. Surinder தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய, அ றுவை சி கிச்சை மேற்கொள்ளப்பட்டு Anaya நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறாள். Anayaவின் பெற்றோர் Surinderஐ ஒரு ஹீரோ என்று கூறினால் கூட போதாது, அவர் ஒரு சூப்பர் ஹீரோ என்கின்றனர் கண் க லங்க.

ஆனால், தன் ஹீரோ எல்லம் இல்லை என்று கூறும் Surinder, எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு பி ரச்சினை ஏற்பட்டு, என்னால் உதவ முடியாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று மட்டுமே ஒரு தாயாக என்னால் எண்ண முடிந்தது என்கிறார்.

நாடு க டத்தப்படுவதை த டுக்க தீவிரமாக போ ராடி வரும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு க டத்தப்படுவதை த டுக்க தீ விரமாக போ ராடி வரும் நான்கு பேர் அடங்கிய தமிழ் குடும்பத்தினர், தங்களது இரண்டாவது கிறிஸ்துமஸையும் த டுப்புக் கா வலில் கழிக்கக்கூடும் என வழக்கறிஞர் கவலை தெரிவித்துள்ளார்.

நடேசலிங்கமும் பிரியாவும் இலங்கையில் இருந்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தனர். அவர்களது இரண்டு மகள்களான கோபிகா (4) மற்றும் தருணிகா (2) அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது மகள் மற்றும் பா துகாப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் உ ரிமை ஆகியவற்றின் மீது குடும்பம் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதனால், நீதிமன்ற மூலம் இந்த வி வகாரம் முடிவு செய்யப்படும் வரை அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அவர்களை நாடு க டத்தப்பட முடியாது. எனினும், தருணிகாவை தவிர மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அ கதி அந்தஸ்துக்கான கூற்றுக்கள் நி ராகரிக்கப்பட்டுள்ளன.

தருணிகாவுக்கு பா துகாப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு விசா வழங்கப்பட்டால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு க டத்த அரசாங்கத்திற்கு அ திகாரம் இல்லை.

மார்ச் 2018ல், குடிவரவு அதிகாரிகள் மத்திய குயின்ஸ்லாந்தின் பிலோலாவில் உள்ள நடேசலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவர்களை மெல்போர்ன் மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆகஸ்ட் பிற்பகுதியில், குடும்பம் நாடு க டத்தப்படும் நிலையில் இருந்த போது, பெடரல் நீதிமன்ற நீதிபதியின் கடைசி நிமிட த டை உத்தரவால், குடும்பத்தினருடன் இலங்கைக்கு புறப்பட்ட விமானம் டார்வினில் தரையிறக்கப்பட்டது.

பின், நான்கு பெரும் டார்வினிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர், பின்னர் வந்த த டை உத்தரவுகளால் குடும்பம் அங்கேயே உள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்கள் த டுக்கின்றன.

இந்நிலையில், திங்களன்று மெல்போர்ன் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வி சாரணையில், வழக்கில் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் இறுதி வி சாரணை திகதியை தீர்மானிக்க முடியும் என குடும்பத்திற்காக வா தாடும் வழக்கறிஞர் ஃபோர்டு கூறினார்.

இந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் தான் கிறிஸ்மஸ் தீவில் த டுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பதை அவுஸ்திரேலியர்கள் நினைவில் கொள்வது முக்கியம்.

ஏ மாற்றமளிக்கும் பகுதி என்னவென்றால், பெரும்பாலான அவுஸ்திரேலியா வழக்குகளில், த டுப்புக் கா வலில் இருக்க வேண்டிய அவசியமில்லை, சமூகத்தில் வாழ மற்றும் பங்களிக்கலாம். முன்பு அவர்கள் அதை தான் செய்திக்கொண்டிருந்தனர் என வழக்கறிஞர் ஃபோர்டு கூறினார்.

இது நடைமுறையில் இருக்கும் போது அவர்கள் ஏன் சமூகத்தில் இருக்க முடியாது? அவர்கள் இருக்க முடியாது என்பதற்கு உண்மையில் எந்த பொருத்தமான காரணமும் இல்லை என வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரை மனதுடன் மகளின் உ டலை அ டக்கம் செய்தோம் : அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்!!

அரை மனதுடன்..

2013ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்தவரின் மகள் இ றந்துவிட்டதாக உ டலை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த நிலையில், அவர் தற்போது உ யிருடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் பிலோமினா பகுதியை சேர்ந்த தம்பதியர் அந்தோணி யாகப்பா, பவுலின் மார்த்தாள். இவரது மகள் இமாகுலேட். இமாகுலேட் கணினி தொடர்பான பட்டபடிப்பை முடித்துவிட்டு வறுமை காரணமாக, சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபின் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அலைப்பேசி, தொலைப்பேசி எதுவும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இமாகுலேட் உரிமையாளர் அலைப்பேசியில் இருந்து அழைத்து தாய், தந்தையிடம் பேசி வந்துள்ளார்.

2013ஆம் ஆண்டும் மே மாதம் 5ஆம் திகதி பெற்றோருக்கு அழைத்து “எனக்கு இங்கு வேலை கஷ்டமாக உள்ளது. கணினி தொடர்பான வேலை வழங்கவில்லை. வீட்டு வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. என்னை அனுப்பிய ஏஜென்ட் புஹாரியிடம் கூறி உடனே, என்னை அழைத்து கொள்ளுங்கள்” என்று அழுதபடி தெரிவித்துள்ளார்.

உடனே பெற்றோர் ஏஜென்ட்-யிடம் தெரிவித்துள்ளனர். அவர் முறையான பதில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில், அதே வருடம் மே மாதம் 21ஆம் திகதி இமாக்குலேட் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் அவரின் பெற்றோருக்கு அழைத்து “உங்கள் மகள் த ற்கொ லை செய்து கொண்டார். இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உ டலை வாங்குகள்” என்று தெரிவித்துவிட்டு அலைபேசியை துண்டித்துள்ளார்

அ திர்ச்சியடைந்த இமாக்குலேட்டின் பெற்றோர், அ ழுது பு லம்பியபடி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி இ றப்பை ச ந்தேக ம ரணம் என்று பதிவு செய்து உ டலலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இமாக்குலேட் உடல் திருச்சி விமானநிலையம் வந்தடைந்துள்ளது. அங்கு பெட்டியை திறந்து பார்த்து, இது எங்கள் மகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாரும் நம்பவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்ற அவர்களுக்கு டி.என்.ஏ சோதனை செய்ய உத்தரவு கிடைத்துள்ளது.

அதன்படி டி.என்.ஏ சோதனை நடந்துள்ளது. அதில், அது இமாக்குலேட் என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வேறு வழியின்றி அந்த உ டலை அ டக்கம் செய்துள்ளனர்.

அதன்பின், கடந்த ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த 23பேர் சவுதியில் கொ த்தடி மைகளாக இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், இமாக்குலேட் இருப்பதை பெற்றோர் கண்டுள்ளனர். இதை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு நடந்தவற்றை விளக்கி கடிதம் எழுதியுள்ளனர். அதில், இதுவரை என்ற முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முதலில், உ டலை மீ ட்டுத்தர போ ராடினோம். தற்போது, இமாக்குலேடையும், அவருடன் இருக்கு 23 பே ரையும் மீட்டுத்தர போ ராடி வருகிறோம் என்று பெற்றோர் க லங்கியபடி தெரிவித்துள்ளனர்.

6 வருடங்களுக்கு பின் அமெரிக்காவில் இருந்து திரும்பிய மருமகள் : த லையை சி தைத்து கொ ன்ற மாமியார்!!

6 வருடங்களுக்கு பின்..

6 வருடங்களுக்கு பின் அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பிய மருமகளை, உறங்கிக்கொண்டிருக்கும் போது பூத்தொட்டியால் அ டித்து கொ லை செய்த மாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான ஆனந்தி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ரியா(35) என்கிற இளம்பெண்ணை தன்னுடைய மகன் ரோஹனுக்கு மணமுடித்து வைத்துள்ளார்.

திருமணத்திற்கு முன்புவரை ரியா செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் இது ஆனந்திக்கு சுத்தமாக பி டிக்கவில்லை என தெரிகிறது. மேலும் ரியாவின் பெயர் பிடிக்கவில்லை எனக்கூறி, அதனை சுவாதி என மாற்றிக்கொள்ளுமாறும் ஆனந்தி தொ ந்தரவு செய்துள்ளார்.

இதனால் ரியா தன்னுடைய செவிலியர் வேலையை விட்டு, எம்.பி.ஏ படிப்பதற்காக கணவருடன் அமெரிக்கா சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு இருவரும் கடந்த 6 வருடங்களாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் 1ம் திகதியன்று தம்பதியினர் இருவரும் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். பல நேரங்களில் ஆனந்தி தன்னுடைய 6 மாத பேரக்குழந்தையை கொஞ்ச முயன்றுள்ளார். ஆனால் ரியா அதற்கு த டையாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளனர்.

ரியா மட்டும் அறையில் தன்னுடைய குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்தி, இரும்பு பூத்தொட்டியால் ரியாவின் த லையில் மீண்டும் மீண்டும் தா க்கிக்கொண்டே இருந்துள்ளார்.

இதில் ரியா இ றந்துவிட்டார் என்பது உறுதியான பின்னரே தன்னுடைய தா க்குதலை நிறுத்தியுள்ளார். பின்னர் நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று, மருமகளை கொ லை செய்துவிட்டேன் எனக்கூறி ச ரணடைந்துள்ளார்.

தனது மகனையும், பேரக்குழந்தையையும் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்ததாலே ரியாவை கொ லை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ரியாவின் உ டலை பி ரேத ப ரிசோதனை அனுப்பிவிட்டு வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பற்றி எ ரியும் போ ராட்டம்!!

இந்தியா முழுவதும்..

குடியுரிமை சட்டத்துக்கு எ திர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பெரியளவில் போ ராட்டம் நடந்து வரும் நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பா திக்காது என உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதற்கு எ திர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வட இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போ ராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு தென்னிந்தியாவிலும் போ ராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போ ராட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், குடியுரிமை திருத்த சட்டத்தை எ திர்த்து நடந்த போ ராட்டம், வ ன்முறை துரதிர்ஷ்டவசமானது. இவை மிகவும் வருத்தமளிக்கிறது.

விவாதம், ஆலோசனை மற்றும் எ திர்ப்பு ஆகியன ஜனநாயகத்தின் அவசியமானவை. ஆனால் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும், பொது சொத்தை சே தப்படுத்துவதும் நமது பண்பாடு இல்லை. பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது.

பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும், எம்.பி.க்களும் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்தியாவின் பல நூற்றாண்டு கால இ ரக்கம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை விளக்குவதாக இந்த சட்டம் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பா திக்காது என உறுதி அளிக்கிறேன். இந்த சட்டம் குறித்து இந்தியர்கள் யாரும் அ ச்சம் கொள்ள தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள், இந்தியாவை தவிர போக வேறு இடம் இல்லாதவர்களுக்காக மட்டுமே இந்த சட்டம்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நம்மை பிரித்து, தொ ந்தரவு செய்யும் யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.

அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை காக்க வேண்டிய நேரம் இது. வ தந்திகள் மற்றும் த வறான தகவல்களை யாரும் பரப்பவோ, அவற்றை நம்பவோ வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

என்னை கருணைக் கொ லை செய்திடுங்கள் : இலங்கைத் தமிழ் இளைஞர் க ண்ணீர்!!

தமிழகத்தில் பிறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வசித்து வரும் தனக்கு இந்தியா குடியுரிமை வழங்காவிட்டால் தன்னை க ருணைக் கொ லை செய்திடுங்கள் என இலங்கை தமிழர் மனு அளித்துள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.

அந்த மனு தொடர்பில் யனதன் கூறுகையில், என் பெற்றோர் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கை போ ரின் போது இந்தியாவுக்கு வந்து சேலத்தில் த ஞ்சமடைந்தனர்.

நான் 1991ஆம் பிறந்தேன் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்று இங்கேயே வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்கு கு டியுரிமை ம றுக்கப்பட்டுள்ளது மி குந்த ம ன வே தனை அளிக்கிறது.

இந்த நிலை எனது சந்ததியருக்கும் வரக்கூடாது என்பதற்காக என்னை கருணைக் கொ லை செய்திட கோரிக்கை விடுத்து உள்ளேன் என கூறியுள்ளார்.

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் : ப ரிதாபமாக உ யிரிழந்த மாணவன்!!

மாணவன்

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் உ யிரிழந்துள்ளார். பொத்துபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வாகனத்தில் கலவான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே மோ துண்டு உ யிரிழந்துள்ளார்.

எனினும் விபத்திற்கு காரணமான ஆசிரியர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. வீதி ஓரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மாணவன் மீதே வா கனம் மோதுண்டுள்ளது. உ யிரிழந்த மாணவன் கலைத் துறையில் மிகவும் திறமையானவர் என குறிப்பிடப்படுகின்றது.

உ யிரிழந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரதேச மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் ஆசிரியர் எந்த பிரச்சினையுமின்றி பாடசாலை சென்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ்?

திருமதி சார்ள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் சில தினங்களில் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில், திருமதி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.

இந்நிலையில் திருமதி சார்ள்ஸை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக ஜனாதிபதி, பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!!

ஜனாதிபதி, பிரதமர்

நாடாளவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய சகல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒரு இலட்சம் பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் போது எத்தகைய அரசியல் பேதங்களும் இன்றி, தகைமைகளுக்கேற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை அரசதுறையில் நிலவும் மனிதவள இடைவெளிகளை நிரம்புவதற்காக 54 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சங்கிலி அ பகரித்த தி ருடர்கள் பொதுமக்களால் நை யப்புடைப்பு!!

தி ருடர்கள்

வவுனியா – பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அ பகரித்துச் சென்ற போது இளைஞர்கள், பொதுமக்கள் து ரத்திப் பி டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று காலை 11.30 மணியளவில் வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண்ணின் க ழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அ பகரித்து கோயில் குஞ்சுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் நை யப்புடைக்கப்பட்டுள்ளனர்.

சங்கிலி அ பகரித்துச் சென்ற ந பர்கள் ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்த முஸ்லிம் ந பர்கள் எனவும் பரிசங்குளம் பகுதிக்கு மேசன் வேலைக்காக வந்தவர்கள் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கை ப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பி டிக்கப்பட்ட இருவரையும் தற்சமயம் ஓமந்தை பொ லிஸாரிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளனர்.

த ப்பித்து சென்ற ந பரை கை து செய்வதற்கான நடவடிக்கைகளையும் மே லதிக வி சாரணைகளையும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா உட்பட வடக்கு, கிழக்கில் நாளை முதல் அடைமழை : எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

அடைமழை

நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் நாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் காலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலை நேரத்தின் சில இடங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடி, மின்னல் மூலம் ஏற்படும் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரபல நடிகை அதிரடியாக கைது : பேஸ்புக் வீடியோவால் நேர்ந்த கதி!!

பாயல் ரோஹத்கி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்து கூறியதாக பிரபல மொடலும் நடிகையுமான பாயல் ரோஹத்கியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாயல், நேற்று டிசம்பர் 15ம் திகதி ராஜஸ்தானில் பண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. மம்தா குப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவிற்காக கடந்த அக்டோபர் மாதம், ராஜஸ்தானில் பாயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குறித்த வீடியோவில், பாயல் மோதிலால் நேருவின் குடும்பத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தார், மேலும் ஜவஹர்லால் நேருவின் மனைவியையும் அ வதூறு செய்தார் என புகார் அளிக்கப்பட்டது.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் சார்மேஷ் சர்மா புகார் அளித்ததை அடுத்து, ஐடி சட்டத்தின் 66 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் பாயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கேள்விக்குரிய வீடியோ செப்டம்பர் 21 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. வீடியோவின் உள்ளடக்கம் மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்கக்கூடும் என்று புகார் கூறினார்.

இந்நிலையில், தன்னை குஜராத் பொலிஸ் கைது செய்ததாக பாயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயணிகளுடன் கொ ளுத்தப்பட்ட பே ருந்து : கொ ளுத்தியது பொலிசார் என பொதுமக்கள் கு ற்றச்சாட்டு!!

பயணிகளுடன்..

திருத்தப்பட்ட குடியுரிமை ச ட்டத்துக்கு எ திர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போ ராட்டம் வெ டித்துள்ள நிலயில் டெல்லியிலும் தீ விரமடையும் போ ராட்டத்தில் அரசு பேருந்துகள் தீயி ட்டு எ ரிக்கப்பட்டன.

திருத்தப்பட்ட கு டியுரிமை ச ட்டத்துக்கு எ திர்ப்பு தெ ரிவிக்கும் வகையில் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போ ராட்டம் வெ டித்துள்ளதால் சில மாவட்டங்களில் இணைய சேவைகள் மு டக்கப்பட்டுள்ளன.

இந்நிலயில் டெல்லியில் தீ விரமடையும் போ ராட்டத்தின் எ திரொலியாக டெல்லி பாரத் நகர் பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்துகள் தீயி ட்டு எ ரிக்கப்பட்டன. பிறபகுதிகளில் சில தனியார் வாகனங்களும் எ ரிக்கப்பட்டன.

போ ராட்டக்காரர்கள் பே ருந்துகளை பயணிகளுடன் கொ ளுத்தியதாக தகவல் ப ரவிய நிலையில், அரசு பேருந்துகளை பொலிசாரே கொ ளுத்தியதாக பொதுமக்கள் கு ற்றஞ்சா ட்டியுள்ளனர்.

இதை உறுதி செய்யும் சில காணொளி காட்சிகளும் சமூக வலைதளத்தில் ப ரவி வருகிறது. போ ராட்டத்தில் ஈ டுபட்டவர்களே குறித்த காணொளிகளை வெ ளியிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அ றவழியில் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சில வி ஷமிகள் தி டீரென்று பேருந்துகளை கொ ளுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்றைய தினம் வாகனமொன்று மரத்துடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் ப லத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் – அக்கரைப்பற்று பகுதியினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னாலிருந்த மரத்துடன் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஏறாவூர் மீச் நகர் பிரதேசத்தினை சேர்ந்த அஸீஸ் அஹமட் றூஹுல்லா (29 வயது), எஸ்.யூசூப் (37 வயது) ஆகியோர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 500 கோழிகளும் இ றந்துள்ளன. அதிக வேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சலவை இயந்திரத்திற்குள் குழந்தையின் முகம் : அ திர்ச்சியில் இணையதளவாசிகள்!!

ரஷ்ய தந்தை ஒருவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படமானது, பலரையும் அ திர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் வேகமாக சுழன்றுகொண்டிருந்த சலவை இயந்திரத்திற்குள், தனது குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படத்தை சமீபத்தில் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலில் அதனை பார்த்து தான் பெரிதும் அ திர்ச்சியடைந்ததாகவும், அதன்பின்னரே ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த தனது குழந்தையின் படம் என்பதை உணர்ந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனை பார்த்த பெரும்பாலான இணையதளவாசிகள், பார்த்த உடனே தங்களுக்கு நெ ஞ்சுவலி, ம னஅழுத்தம் வந்துவிட்டதாக கூறினர். இதுபோன்ற படங்களை பதிவிடும் போது எ ச்சரிக்கை என குறிப்பிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் அவர் தன்னுடைய இடுகையின் வார்த்தைகளை மாற்றி, இதுபோன்ற படங்களை பதிவிடும்போது எ ச்சரிக்கைக்கு என குறிப்பிடுமாறு மற்றவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த இடுகை தற்போது 100,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.