பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.
தொப்பை கரையும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு மருந்து அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.
அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.
அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.
வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது.
இந்தியாவில் டிக்டாக் மூலம் தோழியான திருமணமான பெண்ணின் வீட்டில் ஆண் வேடமிட்டு இன்னொரு பெண்ணொருவர் தங்கிய நிலையில் இருவரும் ஓ ட்டம் பிடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் – அர்ச்சனா. இவர்களுக்கு 11 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அர்ச்சனாவின் சகோதரி லட்சுமி பெங்களூரில் பணிக்கு சென்றார். அங்கு அவருடன் அஞ்சலி என்ற இளம்பெண் நட்பானார். இதையடுத்து லட்சுமி தனது சகோதரி அர்ச்சனாவுடன் போனில் பேசும் போதெல்லாம் அஞ்சலியும் அவருடன் பேசி நட்பாகியுள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்து நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சலி, அர்ச்சனா வீட்டுக்கு வந்தார். அதுவும் ஒரு ஆண் போல தன்னை காட்டி கொண்டு, பேன்ட், சட்டை, தலையில், விக் என்று அர்ச்சனா வீட்டில் ஒரு வாரமாக தங்கினார்.
அப்போது அர்ச்சனா – அஞ்சலி நட்பு எ ல்லை மீ றுவதை பார்த்த அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றார்கள். இந்நிலையில் கணவருடன் ச ண்டை போட்டு கொண்டு அர்ச்சனா தாய் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து நேற்று முன் தினம் அவர் தனது பிள்ளைகளோடு மா யமாகியுள்ளார். அதே போல அஞ்சலியையும் கா ணவில்லை, இது குறித்து ரவிக்குமார் பொலிசில் புகார் கொடுத்துள்ள நிலையில் பொலிசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 94ம் கட்டை பகுதியில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியும் வானொன்றும் மோதியதில் ஆறு பேர் ப டுகா யமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று இரவு (16.12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான 1990 அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளியொருவரை கந்தளாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது திருகோணமலையை நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டியில் பயணித்த சாரதி, உதவியாளர் மற்றும் நோயாளி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வானில் பயணம் செய்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்து 6 பேரும் தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 36 ரூபாவினை நீக்கி, அதற்கு பதிலாக 8 ரூபா எனும் புதிய விசேட வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுக்கான ஒருங்கிணைந்த கட்டணம் 36 ரூபா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக 8 ரூபா விசேட வர்த்தக பொருள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் இந்த விசேட வர்த்தக பொருள் வரி, டிசம்பர் 14 முதல் அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை நுகர்வுக்கு அவசியமான கோதுமை மாவானது, இதுவரை கோதுமை விதைகளாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரில் மாவாக உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது.
ஒரு கிலோ மாவின் விலை 8 ரூபாவாக விசேட வர்த்தக பொருள் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, கோதுமை மாவை இறக்குமதி செய்து போட்டி விலையில் விநியோகிக்க எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தையில் அதிகரித்த அரிசி விலையை கட்டுப்படுத்த, ஒரு கிலோ சம்பா மற்றும் நாட்டு அரிசி ஆகியன உச்சபட்சமாக கிலோவொன்று தலா 99 ரூபா, 98 ரூபா ஆகிய சில்லறை விலையை நிர்ணயிக்கவும், கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதியை ஏற்படுத்தி, கோதுமை மா மீதான வரியைக் குறைக்கவும் அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்ற பெண் ஒருவர் 14 வருடங்களாக திரும்பி வராத நிலையில், தற்போது அவர் இ றந்துவிட்டார் என்ற தகவல் வந்துள்ளதால் குடும்பத்தினர் வே தனையில் உள்ளனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கொட்டரக்கார பகுதியை சேர்ந்தவர் ஜெயா விஜயராஜன். 53 வயதான இவருக்கு விஜயராஜன் என்ற கணவர் உள்ளார்.
விஜயராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீடு திரும்பினார்.
இதனால் குடும்ப சூழ்நிலை, பணம் தேவை போன்ற காரணத்தினால் ஜெயா 14 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் இருக்கும் பள்ளி ஒன்றிற்கு குழந்தைகளை கவனிக்கும் வேலை சென்றுள்ளார்.
2013-ஆம் ஆண்டோடு இவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆன போதும், இஸ்ரேலில் இவர் நாடு திரும்பாமல் அங்கு ச ட்டவிரோ தமாக தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஜெயா, என்னுடைய உடல்நிலை சரியில்லை, கடந்த சில ஆண்டுகளாகவே நான் இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அவருடைய கணவர் கேரளாவிற்கு வந்துவிடு, பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர் கேரளாவிற்கு வரவில்லை. அதன் பின் நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை தொடர்பு ஜெயா என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, அதற்கு சிகிச்சையளிக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர் தங்களிடம் இருந்த சொத்தை அடமானம் வைத்து பணம் அனுப்பியுள்ளனர்.
இருப்பினும் அவரின் உ யிர் பிழைக்கவில்லை, கடந்த வெள்ளிக்கிழமை உ யிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.
அவரின் உ டலை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஜெயாவிற்கு இரண்டு மகள்கள், அவர்கள் அம்மா ஜெயாவைப் பற்றி கூறுகையில், அம்மா கடந்த 2004-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்றனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்பா வெளிநாட்டில் இருந்து திரும்பிவிடதால், அம்மா வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று பணம் அனுப்பி வந்தார்.
நாங்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும், இங்கு வரும் படி கூறுவோம், ஆனால் அவர் பணம் இல்லை என்று வே தனையுடன் கூறுவார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய மாநிலம் கேரளாவில் அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகளால் ம னம் உ டைந்த தம்பதி ஒன்று ரயில் முன்பு கு தித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 5 பிள்ளைகள் அடுத்தடுத்து ம ரணமடைந்த நிலையில் ம னம் உ டைந்த ராதாகிருஷ்ணன்(49) மற்றும் அவரது மனைவி லதா(41) ஆகிய இருவரும் ரயில் முன் கு தித்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் ஐந்து பிள்ளைகளில் மூவர் பிறந்து மூன்று மாதங்களுக்குள் இ றந்துள்ளனர். அதற்கு அடுத்து பிறந்த லிஜித் என்பவர் 8வது வயதில் நோய்வாய்ப்பட்டு இ றந்துள்ளார்.
கடைசி நம்பிக்கையான மகள் லிம்யா பிறந்தது முதலே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இருந்ததனைத்தும் செலவிட்டு மகளை கா ப்பாற்ற முயற்சி மேற்கொண்ட தம்பதிகளுக்கு பே ரிடியாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் லிம்யா தமது 18வது வயதில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.
இதில் க டுமையாக பா திக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் ம ரணமடைந்துள்ளார். இதன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இந்த தம்பதி அண்டை வீட்டார் எவருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
மிகவும் ம னமுடைந்த நிலையில் இருவரும் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று பகல் தங்கள் குடியிருப்பில் இருந்து எர்ணாகுளம் நகருக்கு சென்றதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி பகல் 11 மணிக்கு முன்னர் தமது 5 சகோதரர்களையும் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.
ஆனால் மதியம் ஒன்றரை மணியளவில் ரயில் த ண்டவாளம் அருகே இரண்டு ச டலங்கள் கிடப்பதாக பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த வி சாரணையில் அந்த ச டலங்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் லதா என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை க ண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.
மேஷம் : 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித சந்தோஷத்தையும் தரப்போகின்றன.
மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.
குருவின் பார்வை ராகுவிற்கு கிடைத்துள்ளது. இதுநாள் வரை எதையும் கொடுக்காமல் அமைதியாக இருந்தார் 2020ஆம் ஆண்டில் இனி அள்ளிக்கொடுக்கப் போகிறார். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும்.
ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது.
செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.
ரிஷபம் : 2020ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்கள் நல்ல வளர்சியை கொடுக்கும் உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சனி குரு உடனும் அமர்ந்துள்ளார். 2020ஆம் ஆண்டு அஷ்டம சனி பாக்ய சனியாக மாறி விடுவார்.
பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள்.
அஷ்டமத்தில் உள்ள கேது பகவான் குரு உடன் இணைந்துள்ளதால் உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்.
கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சந்தோஷம்.
அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். ரிஷப ராசிக்காரர்கள் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மிதுனம் : 2020ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களே வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. காரணம் ஜென்ம ராகுவை குரு பார்வையிடுகிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள்.
புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு உடன் இணைந்துள்ள கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார்.
குழந்தைகளால் மதிப்பு கிடைக்கும் விற்பனையாகமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.
கடகம் : 2020ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பகவான் பார்வையிடுகிறார். ஆறாம் இடத்தில் குரு உடன் சேர்ந்து உள்ள கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது.
உங்களுக்கு நீண்டநாளாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். குரு பார்வையால் நிறைய பணவரவு வரும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். ப்ராடு நிதி நிறுவனங்கள் சீட்டு கம்பெனிகளில் போட்டு விட்டு ஏமாந்து போய் விட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார்.
பண வருமானத்தை குருவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். இந்த ஆண்டு புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு.
லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேது, குருவின் பார்வை விழுகிறது.
நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும்.
எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உங்க வருமானம் 2020ஆம் ஆண்டு அபரிமிதமாக உயரும். அதற்கான வேலைகளை ராகுவும் கேதுவும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும். விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்க பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும் திருமண பாக்கியம் கிடைக்கும்.
கன்னி : 2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்களால் புதிய அனுபவங்களை கிடைக்கும். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும்.
நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். குரு இருப்பதால் நிறைய பிரச்சினைகள் தீரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் முடிவுக்கு வரும். சுகமான ஆண்டாக அமையப்போகிறது.
புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள் அதற்கான வேலையை ராகு செய்வார்.
உங்க வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ராகு கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியங்கள் துலங்கும் உங்களின் எண்ணங்கள் நிறைவேற குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உங்க ராசிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது.
மனதில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த நோய்கள் குணமடையும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் வரப்போகிறது.
திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டு வந்த உங்களின் ஏக்கம் தீரப்போகிறது.
நீண்ட நாட்களாக வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஞான காரகன் கேதுவின் 3ஆம் இடத்துச் சஞ்சாரத்தினால் குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள்.
பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும்.
விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளால் அமைதி பிறக்கும். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
விருச்சிகம் : 2020ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடையும் நேரம் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர்.
அஷ்டம ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் நிறைய நடக்கும் நேரம் கைகூடி வரப்போகிறது. கை நழுவிப்போன நல்ல விசயங்கள் உங்களை மீண்டும் தேடி வரும்.
வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் கட்டி முடித்து குடியேறும் காலம் வரப்போகிறது.
பணவரவு அற்புதமாக இருக்கும். கழுத்தை நெரித்து வந்த கடன்கள் அடைபடும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
தனுசு : 2020 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.
ஜென்ம குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும்.
வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். நல்ல காரியங்கள் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.
ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது பகவான் குரு உடன் சேர்ந்து உள்ளது கோடீஸ்வர யோகத்தை தருகிறார். மனதில் இருந்த கலக்கம் நீங்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
உங்க பேச்சிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் கைகூடி வருகிறது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மகரம் : 2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று அமர்ந்துள்ளார்.
இதுநாள் வரை சனி பார்வையோடு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் கொடுத்து வந்தார்.
இனி நோய்கள், கடன்கள் நீங்கும் வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். இந்த புத்தாண்டில் புதியதாக கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். மோட்ச ஸ்தானத்தில் விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்கள் உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள்.
நல்ல வேலையும் உத்யோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். நோய்கள் தீரும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் முகத்தில் அருள் தாண்டவமாடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்கள்.
வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். வெற்றி மீது வெற்றிகள் வந்து உங்களை சேரும்.
கும்பம் : 2020ஆம் ஆண்டு முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர் ராகுவும் கேதுவும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.
உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருக்கிறார் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். தொழிலுக்காக வெளியூர் பயணம் சென்று தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் துறையில் இதுநாள்வரை ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வேலைகள் நிறைய சம்பளத்துடன் கிடைக்கும். வங்கியில் பணம் சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தை விட்டு வெளியூரில் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு உருவாகும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். குலதெய்வத்தின் அருள் கூடியிருக்கிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும்.
செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம் : 2020ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் இது சிறப்பான அம்சமாகும். உங்க வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.
அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் பலிக்கும். தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும்.
சொந்த பந்தங்கள் நண்பர்களிடையே மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுவார்த்தை வெற்றிகரமான முடியும். சிலருக்கு காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடியும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது. சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.
புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள்.
பொருளாதார நிலை சீரடையும். இந்த ஆண்டு நீங்க எந்த விசயத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு பலிதமாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும். தடைகள் நீங்கும்.
தமிழகத்தில் பேரன், பேத்திகளுக்காக பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம் செல்லாது என கூறப்பட்டதால் இரண்டு பாட்டிகள் அ திர்ச்சியடைந்த நிலையில் அதில் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் பூமலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) மற்றும் தங்கம்மாள் (70). கணவரை இழந்த இவர்கள் தங்களின் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் உ டல்நிலை சரியில்லாமல் போக, மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், மகன்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 46 ஆயிரத்தை கொடுக்க, அதைக் கண்ட மகன்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் அந்த பணம் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள், பல ஆண்டுகளாக சிறுக, சிறுக இறுதி காலத்தில் பேரன், பேத்திகளுக்காக கொடுக்க சேர்த்து வைத்த பணம், செல்லாது என்று கூறியது இருவரையும் வே தனையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மூ ச்சுத்தி ணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிகளுக்கு, தொண்டு நிறுவனம் சார்பாக ரூபாய் 46 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த தங்கம்மாள், இன்று காலை பரிதாபமாக உ யிரிழந்தார்.
பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளை கா ணவில்லை என அவருடைய உறவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பிரபல கிராமிய பாடகரும், சினிமா பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பல்லவியை கா ணவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் உறவினரான கவுசிக் என்பவர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், நேற்று இரவு மேகாவிற்கும், பல்லவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த பல்லவி கோபித்துக்கொண்டு காரில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் லொட்ஜில் ரூம் எடுத்து தங்குவது போல் நடித்து, அங்கிருந்த விலை மதிப்புமிக்க எல்.இ.டி டிவியை திருடிச் சென்ற சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விழுப்புரத்தின் 4 முனை சந்திப்பு அருகே கே.வி.ஆர். என்ற தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை , கையில் வெற்றுப் பெட்டியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்துள்ளார்.
அதன் பின், அறைக்கு சென்ற அவர், சிறிது நேரத்திலேயே அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறைக்கு திரும்பவில்லை.
இதனால் அங்கிருந்த ஊழியர்கள் தங்களிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சுமார் 15,000 ரூபாய் மதிப்பிலான 22 இன்ச் எல்.இ.டி டிவி தி ருடப்பட்டிருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆ ராய்ந்து பார்த்த போது, கையில் பெட்டியுடன் வந்த இளைஞன், குறித்த பெட்டியின் உள்ளே டிவியை மறைத்து வைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞன் கொடுத்த ஆதார் அட்டை போலியான் ஆதார் அட்டை என்பது தெரியவந்துள்ளது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண்ணாக தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனம் பெற்றுள்ளார். உள்நாட்டு யு த்தத்தால் புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்கு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அந்த வகையில் கராத்தே த ற்காப்பு கலையை 6 வயதில் இருந்தே பயின்று வந்த இவர், தனது 18ஆவது வயதில் கறுப்பு பட்டியை பெற்றுக்கொண்டுள்ளார். இதே சந்தர்ப்பத்தில் சுவிஸ் பிரெஞ்சு பேசும் மாநிலங்களுக்கிடையில் நடந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 2008, 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் கராத்தே ஆசிரியராக இருந்து வருவதுடன், தனது கல்வியிலும் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார். உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவ கணக்கியல்மானி என்ற பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.
அத்துடன் தனது திறமையால் உயர் அதிகாரியாக இன்று வலம் வருகின்ற நிலையில் இவரை உலகத் தமிழ் மக்கள் வாழ்த்துகின்றனர். அத்துடன் தங்களது அரசியல் பி ரச்சினைகளை சுவிஸ் அரசுகளோடு பேசுவார் என சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், தாமரைச்செல்வன் கீர்த்தனா மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின் நைரோபி பகுதியில் வசித்து வருகிறார்.
வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞரான உஷா, கிழக்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் உஷா, கென்யா வனப்பகுதியில் நடந்துவரும் அழகான ஆப்பிரிக்க யானை, அதன் பின்புறத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை மற்றும் அதனை சூழ்ந்துள்ள மேகம் ஆகியவற்றை ஒருசேர தன்னுடைய ஆப்பிள் ஐ போனில் படம்பிடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “இந்த இரண்டு ராட்சதர்களையும் ஒரே புகைப்படத்திற்குள் கொண்டுவருவது மிகப்பெரிய கனவு” என குறிப்பிடபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் பகிரப்பட்ட அந்த புகைப்படம் தற்போது 2,45,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
கப் ரக வாகனத்தில் பயணித்த இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(16.12.2019) மாலை 6 மணியளவில் ஹொரவப்பொத்தனை வீதி, இலுப்பையடிப் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போ தைப்பொருள் த டுப்புப்பிரிவு பொலிசார் தாண்டிக்குளம் பகுதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக வந்த மகேந்திரா கப் ரக வாகனத்தை,
மறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவரது உடமையில் இருந்து 560 மில்லி கிராம் மற்றும் 160 மில்லி கிராம் ஹெ ரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த ஹெ ரோயின் பொதிகள் பொலிசாரால் மீ ட்கப்பட்டதுடன், மகேந்திரா கப் ரக வாகனத்துடன் குறித்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஒருவர் ஹெ ரோயினை விற்பனை செய்பவர் எனவும், மற்றைய நபர் ஹெ ரோயினை வாங்கியவர் எனவும் தெரியவந்துள்ளதாக போ தைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 30 மற்றும் 33 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தாண்டிக்குளம் மற்றும் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையில் வவுனியா பொலிஸ் நிலைய போ தைப்பொருள் த டுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஞானசிறி, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான ஜகத், ஜயதிலக, பொலிஸ் கான்ஸ்டபிள்களான தினியகொட, சமன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
மா யமான மலேசிய விமானத்தின் விமானி தாம் கடைசியாக செல்லவிருக்கும் பகுதி தொடர்பில் புகைப்படம் ஒன்றில் தெரிவித்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மா யமான மலேசிய விமானத்தில் இருந்து கடைசியாக அந்த விமானி வெளியிட்ட புகைப்படமானது, தாம் செல்லும் பகுதியை குறிப்பிடுவதாக தற்போது எகிப்திய பொறியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது ஒரு தி ட்டமிட்ட செயல் எனவும் அந்த எகிப்திய பொறியாளர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய விமானம் MH370 மா யமான நிலையில், குறித்த விமானமானது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு க டத்தப்பட்டத்காகவும் முதன் முறையாக வா திட்டவர் இந்த எகிப்திய பொறியாளரே.
இதற்கு முக்கிய காரணமாக இவர் குறிப்பிடுவது, பிலிப்பைன்ஸ் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7,000 தீவுகளில் உலகப்போ ரின் போது பயன்படுத்தப்பட்ட தற்போது பயன்பாட்டில் இல்லாத விமானத்தளங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மலேசிய விமானத்தை க டத்திய நபர் அல்லது க டத்தியவர்கள் இங்கு தரையிறக்கி இருக்கலாலாம் எனவும், இங்குள்ள ஓடுதளங்கள் குறுகியது என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பா ய்ந்திருக்கலாம் என இஸ்மாயில் என்ற அந்த எகிப்திய பொறியாளர் தெரிவித்திருந்தார்.
2014 ஆம் ஆண்டு அந்த விமானம் மா யமானதற்கு முன்னர் குறித்த விமானி வெளியிட்ட குடும்ப புகைப்படத்தில் ம ர்மம் புதைந்திருப்பதாக கூறும் இஸ்மாயில். அந்த புகைப்படத்தில் குறித்த விமானியின் குடும்பம் அமர்ந்திருக்கும் நாற்காலியானது நீல நிற துணியால் மூடப்பட்டுள்ளது.
இது பிலிப்பைன்ஸ் பகுதியில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகும். குறித்த புகைப்படத்தில் தாம் எங்கு செல்ல இருப்பதாக அவர் முன்னரே குறிப்பிட்டுள்ளதாகவும், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் ஒன்றில் தம்மை தே டினால் போதும் என அவர் அப்போதே குறிப்பிட்டு சென்றுள்ளார் என இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து க டத்தி வரப்பட்ட தங்ககட்டிகளில் செய்த சுமார் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை பொலிசார் ப றிமுதல் செய்த நிலையில், 3 பேரை கைது செய்து 7 பேரை தே டி வருகின்றனர்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மனோலி தீவுப் பகுதியில் கடந்த 7ம் திகதி வருண்குமார் எஸ்.பி.சப் கலெக்டர் சுகபுத்ரா சோ தனை நடத்திய போது, அங்கு க ஞ்சா தங்கம் க டத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
இதனால் இது தொடர்பாக பொலிசார் நடத்திய வி சாரணையில், சென்னை நகைக்கடை உரிமையாளர் கியாஸ் படகோட்டி புலிப்படை என்பவர் மூலம் 70 கிலோ க ஞ்சாவை க டத்தி இலங்கையில் சேர்த்துவிட்டு தங்கம் க டத்தி வந்து ராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தர்ஹா பகுதியில் சிலரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சுந்தரமுடையான் பகுதியில் வேன் ஒன்றை பொலிசார் சோ தனை செய்த போது, அதில் வந்த பெருங்குளம் ரஞ்சித் (26), விஜய் (29), காளிராஜ் (51), ஆகியோரிடம் இருந்து 53 பவுன் நகை 4.73 லட்சம் ரூபாயை ப றிமுதல் செய்து கைது செய்தனர்.
த னிப்ப டை பொ லிசார் அவர்களிடம் நடத்திய வி சாரணையில், இலங்கையில் இருந்து க டத்தி வ ரப்பட்ட தங்க கட்டிகளை நகைகளாக மாற்றி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ரஞ்சித் வீட்டில் 132 பவுன் நகையும் 5.36 லட்சம் ரூபாய் ம றைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த பொலிசார். அதனையும் ப றிமுதல் செய்தனர்.
இவர்கள் கியாஸ் மூலம் க டத்தலில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் மேலும் சிலருக்கு தொ டர்பிருப்பதாக கூறப்படுவதால், த னிப்படை பொலிசார் அவர்களை தே டி வருகின்றனர்.
வவுனியா பண்டாரிகுளம் பாடசாலை வீதியிலுள்ள வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திராவின் வீடு இன்று (16.12.2019) மாலை 4.30 மணியளவில் தீப்பற்றியெரிந்ததில் பல லட்சம் பெறுமதியான உடமைகள் சேதமாகியுள்ளன.
குறித்த வீடு பூட்டியிருந்த நிலையில் வீட்டின் மேல் பகுதியிலிருந்து புகை வந்ததினை அவதானித்த அயலவர்கள் வீட்டின் வளவினுள் சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவலை வழங்கியதுடன் தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அயவர்கள் தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இத் தீ விபத்து காரணமாக வீட்டின் ஓர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தளபாடம் உட்பட பல பொருட்கள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மின் ஒழுக்கின் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.