20 வயது மகளின் ச டலத்தை வீதியில் போட்டு போ ராடிய பெற்றோர் : காரணம் என்ன?

மகளின் ச டலத்தை

ஆந்திராவில் ஏற்கனவே திருமணமானவர் என தெரியாமலேயே இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தாரை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சித்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா (20). இவர் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹீம் (23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் இப்ராஹீமுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது பாத்திமாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாத்திமா, இப்ராஹீமிடம், ஏன் திருமணமானதை மறைத்து என்னை காதலித்து ஏமாற்றினாய் என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர்களிடையே கடும் த கராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் பாத்திமா ம னமுடைந்து காணப்பட்ட நிலையில் கல்லூரிக்கும் செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 13ம் திகதி இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் திடீரென தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

இதனைபார்த்து அ திர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பொலிசார் விசாரித்த நிலையில் இப்ராஹீம் த லைமறை வானார். இந்நிலையில் பாத்திமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இப்ராஹீமை விரைவாக கைது செய்யக்கோரி பாத்திமா சடலத்துடன் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த பொலிசார் இம்ராஹீமை கைது செய்வதாக கூறி சமாதானத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அவர்கள் பாத்திமா ச டலத்தை எடுத்து கொண்டு கலைந்து சென்றார்கள்.

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற 10 வயது சிறுவன் உட்பட ஆறு இலங்கை அகதிகள் கைது!!

படகில் கடல் வழியாக இலங்கைக்கு த ப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவில் வசித்து வரும் முஸ்லிம்கள் உட்பட, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளும் பெரும் க லக்கலமடைந்துள்ளனர்.

இதனால் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்த சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போ ராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் 10 வயது சிறுவன் உட்பட ஆறு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த சுதாகர் (40), அவரது மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஸ்கரன் (10), உதயகுமார் (40) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீ‌ஷன் (42), அவரது மனைவி திலக்சனா (31) என்பது தெரியவந்துள்ளது.

தற்போது இவர்கள் 6 பேரும் இலங்கை திரும்ப முடிவு செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு முகவரை அணுகியுள்ளனர். படகு வர தாமதமானதால் தனுஷ்கோடியில் காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலணிக்குள் இருந்த பாம்பு : அ லறியடித்து ஓடிய சி றுமி!!

காலணிக்குள் இருந்த பாம்பு

கடைசி நொடியில் காலணிக்குள் நல்ல பாம்பு இருப்பதை கவனித்ததால் 9 வயது சி றுமி அதிர்ஷ்டவசமாக உ யிர்தப் பியுள்ளார்.

தேனியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகள் அவந்திகா (9). அருகாமையில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுமி, தினம்தோறும் பள்ளி செல்லும்போது காலணி அணிந்து செல்வார்.

வழக்கம்போல நேற்றும் பள்ளிக்கு புறப்பட்ட சிறுமி, காலணி அணிவதற்காக அதனை கையில் எடுத்த போது உள்ளே நல்ல பாம்பு இருப்பதை பார்த்து அ லறியடித்து க்கொண்டு வீட்டிற்குள் ஓ டியுள்ளார்.

ச த்தம் கேட்டு ஓ டிவந்த பெற்றோர், உள்ளே 2 அடியில் நல்ல பாம்பு குட்டி ஒன்று சுருண்டு கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அதனை ஒரு பத்திரத்தால் மூடி வைத்துவிட்டு, பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நபர், பத்திரமாக பாம்பை பிடித்து மலைப்பகுதியில் விடுத்துள்ளார்.

ம ரணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன் : 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை!!

காதல் கதை

கேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.

திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். சமையல் பணி செய்து வந்த அவரின் உதவியாளராக கோச்சானியன் என்பவர் இருந்தார்.

அப்போது ம ரணப் படுக்கையில் கோச்சானியனிடம், என் இ றப்புக்கு பின்னர் நீ தான் என் மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு ம ரணமடைந்தார்.

பின்னர் ஆண்டுகள் உருண்டோடின. லஷ்மி மற்றும் கோச்சானியன் இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருந்தது.

இந்த சூழலில் 11 மாதங்களுக்கு முன்னர் லஷ்மி அம்மாள் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

அதே போல வயது முதிர்வால் சாலையில் மயங்கி கிடந்த கோச்சானியனை சமூக ஆர்வலர்கள் மீட்டு அதே முதியோர் இல்லத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சேர்த்தனர். இந்நிலையில் இருவருக்கும் வரும் 30ஆம் திகதி முதியோர் இல்லத்திலேயே திருமணம் நடக்கவுள்ளது.

அவர்களை வாழ்க்கை கதையை கேட்டறிந்த முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெயக்குமார் திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளார்.

இது குறித்து கோச்சானியன் கூறுகையில், எங்கள் விருப்பத்தை நனவாக்க அனைவரும் எங்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.

ஜெயக்குமார் கூறுகையில், முதியோர் இல்லத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் நடத்தலாமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடன் பேசி இது போன்ற திருமணத்தை ஊக்குவிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். இந்த திருமணமானது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என கூறியுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் விபத்து : ஶ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேரின் வி சாரணை ஒத்திவைப்பு!!

வி சாரணை ஒத்திவைப்பு

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீரங்காவின் பா துகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் உ யிரிழந்தார்.

உ யிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இ றந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் மூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய ஶ்ரீ ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 18.10.2019 ம் திகதி குறித்த 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த வழக்கு நேற்றையதினம் (16.12.2019) மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது வழக்கினை எதிர்வரும் மாதம் (16.01.2020) ம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வவுனியாவில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை!!

காணியற்ற மக்களுக்கு

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிகளை வழங்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக காணிக் கச்சேரியை நடாத்தி காணிகள் வழங்குவதாக ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும்,

அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1400 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2427 பேரும், வவுனியா வடக்கில் 316 பேரும் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக பிரதேச செயலாளர்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

வனவளத் திணைக்களத்தின் அனுமதி முழுமையாக கிடைக்காமையால் குறித்த காணிகளை மக்களுக்கு கையளிக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த காணியின் விபரங்களை தருமாறும் அதனை கொழும்பில் அமைச்சின் அனுமதி பெற்றுத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

இந்நிலையில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

வவுனியாவில் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறந்து வைப்பு!!

கழிவுகளை சேகரிக்கும் மையம்

வவுனியா நகரசபை பூங்கா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் இன்று (17.12.2019) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான பொருட்களை மனிதஇனம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து வருகிறது.

அனைத்து இடங்களிலும் (நிலைகளிலும்) பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்றாகத் திகழ்கிறது. பிளாஸ்டிக் பொருளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி சுற்றுப்புற சூழனை பாதுகாக்கும் நோக்கில்,

கொகாகோலா நிறுவனத்தின் நிதி அனுசனையுடன் ஆசிய மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபையின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையத்தினை,

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன், வவுனியா நகரசபை தவிசாளர் தவிசாளர் இ.கௌதமன் , உபநகரபிதா சு.குமாரசாமி, கொகாகோலா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லக்சன் மதுருசிங்க , ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஜோகான் ரேபட் ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

அத்துடன் மாணவர்களிடமிருந்து பிளாஸ்டிக் போத்தல் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் கூடிய அங்கத்துவ அட்டை (PET) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன , வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் , நகரசபை செயலாளர் இ.தயாபரன், வர்த்தகசங்க தலைவர் சுஜன் சண்முகராஜா,

கொகாகோலா நிறுவனத்தின் அதிகாரிகள் , ஆசிய மன்றத்தின் அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்படும் மரம்!!

இடையூராக காணப்படும் மரம்

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காணப்பட்ட மரம் ஒன்று கடந்த 04.12.2019 அன்று முறிந்து வீழ்ந்தமையினால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட மரத்தினை அகற்றி வீதி ஓரத்தில் போட்டனர்.

எனினும் இரு வாரங்கள் கடந்த நிலையிலும் வீதி ஓரத்தில் காணப்பட்ட மரம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படாமையினால் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் ம து அருந்திவிட்டு இளைஞர்கள் அ ட்டகாசம் : பிரதேச செயலாளருக்கு மகஜர்!!

பெரியதம்பனை

வவுனியா – வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள பெரியதம்பனை பகுதியிலுள்ள க ள்ளுத் த வறணையில் ம து அருந்தும் இளைஞர்கள் கிராமத்திற்குள் பல்வேறு அ டாவடித்தனங்களை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

எனவே குறித்த க ள்ளுத் தவறணையை உடனடியாக அப்புறப்படுத்த கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். அந்த மகஜரில், புளியங்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏழாவது கிளையானது எமது பெரியதம்பனை பகுதியில் கிராமத்தில் க ள்ளுத் தவறணை இயங்கி வருகின்றது.

குறித்த க ள்ளுத் தவறணையானது கிராம மக்களினதும் கிராம மட்ட நலன்புரி அமைப்புக்களினதும் எமது பகுதி கிராம அலுவலகரின் கட்டளையையும் மீறி இயங்கி வருகின்றது. குறித்த க ள்ளுத் தவறணையில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட போத்தல் க ள்ளு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிராம உற்பத்தி க ள்ளினை விற்பனை செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த க ள்ளுத் தவறணையில் தற்போது போத்தல் க ள்ளு பெருவாரியாக இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் வறுமையில் வாடும் இக்கிராம மக்களின் வாழ்வாரத்தை மேலும் சீ ரழிக்கும் இந்த செயலானது கண்டிக்கத்தக்கது.

ம துப்பி ரியர்கள் க ள்ளிணை அருந்திவிட்டு கிராமத்திற்குள் பற்பல அ டாவடித்தனங்கள் செய்தும் குடும்ப பொருளாதாரத்தை திட்டமிட்டு சீ ரழிக்கும் செயற்படும் வளர்ந்து வரும் இளம் சமூகம் சிறுவயதிலேயே துர்நடத்தைகளில் ஈடுபடுவதற்கும் மேலும் பல காரணங்ளை உருவாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிட்டது.

உடனடியாக க ள்ளுத் தவறணையை அப்புறப்படுத்தி கிராமத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமத்தின் மக்களின் பா துகாப்பினையும் பாதுகாத்திட தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான புளியங்குளம் பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்க பெரியதம்பனை ஏழாம் இலக்க க ள்ளுத் தவறணையின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறும் எமது கிராம மக்களின் வேண்டுகேளாக 159 கிராம மக்கள் கையொப்பமிடப்பட்ட பெயர் பட்டியலையும் அத்துடன் இணைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நவிலல் : திருமதி தனபாலசிங்கம் வெற்றிநாயகி!!

திருமதி தனபாலசிங்கம் வெற்றி நாயகி

பிறப்பு தலைமன்னார் (05.07.1954)

இறப்பு வவுனியா குருமன்காடு (14.12.2019)

தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வெற்றிநாயகி
அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும்,

மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கனம்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – 024 2223119
அ.இ.ம வெனிசியஸ் மருமகன் – 077 5397511

விலாசம் – 49/12 A, 1ம் ஒழுங்கை , கோவில் வீதி , குருமன்காடு , வவுனியா

மனைவியை நீதிமன்றுக்கு அருகில் கொ லை செய்த கணவன் : கேகாலையில் சம்பவம்!!

கேகாலையில் சம்பவம்

கேகாலை பிரதேசத்தில் தனது மனைவியை கணவர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கி கொ லை செய்துள்ளார்.

குறித்த பெண் கேகாலை நீதிமன்றிற்கு வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலையாக சென்று கொண்டிருந்த போது நீதிமன்றின் முன்னால் இத்தா க்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ச ந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் அவரை கேகாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டாபயவின் பணிப்புரையால் யாழில் ஏற்படும் மாற்றம்!!

யாழில் ஏற்படும் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இலங்கை வேலைத்திட்டம் தமிழர் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்திலும் ஓவியம் வரையும் செயற்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் கலாச்சாரம், பாரம்பரியம் என்பனற்றை வெளிப்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டம் ஒன்றை தமிழ் இளைஞர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதாக தென்னிலங்கையில் அதிகம் பேசப்படுகின்றன. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் வரையப்படும் சுவர் ஓவியங்கள் பெரும்பாலானவை இ னவாத ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதாக பலரும் கு ற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 வயது மாணவனின் உ யிரை ப லியெடுத்த பௌத்த பி க்கு : பெற்றோர் சோ கத்தில்!!

பெ ற்றோர் சோ கத்தில்..

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது வாகனத்தை செலுத்திய பௌ த்த பி க்கு கை து செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பி க்குவை இரத்தினபுரி நீதவான் முன்னிலையில் நேற்று ஆ ஜர் செய்ததை அடுத்து அவரை வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உ த்தரவிட்டார். உரும்வல குசல என்ற பௌத்த பி க்குவே இவ்வாறு வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி நிவிதிகல பொத்துபிட்டிய பிரதேசத்திலேயே குறித்த வி பத்து இடம்பெற்றது. எவ்வாறாயினும் வி பத்தை மேற்கொண்டவர் ஒரு ஆசிரியர் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிவிதிகல பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடுத்தே இந்த வி பத்தை மேற்கொண்டவர் ஒரு பௌ த்த பி க்கு என தெரிய வந்துள்ளது. ச ந்தேகத்தின் அடிப்படையில் கை து செய்யப்பட்ட பௌத்த பிக்கு வாகனத்தை செலுத்தும் போது ஒருவித போ தை பொ ருளை உ ட்கொண்டிருந்தார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துளளது.

அவர் செலுத்திய வாகனம் வீதியை விட்டு விலகி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த, உ யிரிழந்த மாணவன் மீது மோ தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உ யிரிழந்த 19 வயது பாடசாலை மாணவனின் பி ரேத பரிசோதனை இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் விபத்தை மேற்கொண்ட பௌத்த பிக்குவை உடனடியாக கைது செய்யுமாறு அவசர பிரேத பரிசோதகர் ஹரிந்த லக்மின தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையிலே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன் இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பிள்ளையின் ம ரணம் தொடர்பாக சோ கத்தில் வாடும் பெற்றோர், உ யிரிழந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி பிரதேச மக்களுடன் இணைந்து போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே விபத்தில் காயமடைந்த மேலுமொரு மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருளில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!!

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இருளில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டம் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தர்மபால செனவிரத்திண தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கூட்டமானது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் சில நிமிடங்கள் தாமதமாகி ஆரம்பமாகியுள்ளது. வவுனியாவில் மின்சார திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற இருந்தவேளை மின் பிறப்பாக்கி வசதிகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருக்காமை பெரும் விசனத்தினை ஏற்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

பாணின் விலை 10 ரூபாயால் குறைப்பு!!

பாணின் விலை

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளமையால் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில்,இடைக்கால அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி திருத்தங்கள் காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைத்து கொள்வதற்கு எமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் மூலம் நேரடியாக நாட்டிற்கு அதிகளவில் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும்.

பாணின் விலையை குறைக்க முடிந்ததால், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையையும் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

நான் கா ணாமல் போய்விட்டேனா? என்னை க டத்திவிட்டார்களா? புஷ்பவனம் குப்புசாமியின் மகள் வெளியிட்ட தகவல்!!

குப்புசாமியின் மகள்

தான் கா ணாமல் போய்விட்டதாகவும், தன்னை க டத்திவிட்டதாகவும் வெளியாகும் செய்திகள் அனைத்துமே பொய்யானவை என்று புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல கிராமிப் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி. இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பிபிஸ் படித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அலுவலராகவும் பல்லவி பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பல்லவி மா யமாகிவிட்டதாக சென்னை ஆர்.ஏ புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தனது தங்கையுடன் நடைபெற்ற வா க்குவாதத்திற்கு பிறகு அவரை கா ணவில்லை என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்லவியை சிலர் க டத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பல்லவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் மா யமாகவில்லை என்றும் தனக்கு எதுவும் நிகழவில்லை என்றும் கூறியுள்ளார்.