திருகோணமலையில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார் .
இவ்வாறு உ யிரிழந்தவர் மூதூர் -முட்டுச்சேனை, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த திலகநாதன் புவிதரன் (21வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞன் எலிக்காய்ச்சல்” காரணமாக உ யிரிழந்துள்ளதாகவும், வயல் வெளிகளில் இவ்வாறான காய்ச்சல் ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை ச டலம் ந ல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டதாகவும் அதன்பிரகாரம் இ ரகசிய முகாம் அல்லது இ ரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வி டுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் இ றந்துவிட்டார் என கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அது ஒரு சிறு பி ரச்சனை. இந்த 134 பேரும் சாதாரண போராளிகள். இது ஒரு பா ரிய பி ரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனை நாம் கோட்டாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சி க்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
கா ணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரச தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோட்டாவிடம் நாம் எதிர்பாக்கிறோம் அல்லது கா ணாமல் ஆக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு ம ரண அத்தாட்சி கொடுத்திருக்க வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச் சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி இ ரகசிய மு காம் அல்லது இ ரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அந்த விடயத்தில் தெளிவான முடிவை எமது மக்களுக்கு நாம் வழங்கவேண்டும். இதையும் பெ ரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு வே தனையான விடயமே.
எனது சகோதரனும் கா ணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் ம ரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போ ரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொ லை செய்யாதவர் எவரும் இல்லை.
இது போ ர் நடந்த பூமி. எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போ ரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதிப் போ ரில் வெள்ளைக் கொடியுடன் ச ரணடைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்படி நடந்து அரசு அதை மீறி செயற்பட்டிருந்தால் அது க ண்டிக்கப்பட வேண்டும்.
எனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. எனினும் போ ர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை. இறுதிகட்டத்தை நெருங்கும் போது ச ரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.
போரில் ஆ யிரக்கணக்கான மக்கள் கொ லை செய்யப்பட்டார்கள். அவர்கள் போ ரில் நெருங்கியே கொ லை செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு கொ லை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
பொதுமக்களை ம னித கே டயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போ ராளிகள் ம டிந்திருப்பார்களாக இருந்தால் உலகம் வரவேற்றிருக்கும்” என கூறினார்.
கென்யாவில் சிறுத்தையை மலைப்பாம்பு ஒன்று அப்படியே வி ழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து உ யிர் பி ழைப்பதற்கு சிறுத்தை ச ண்டை போட்டதை வனவிலங்கு புகைப்பட கலைஞர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
கென்யாவின் Maasai Mara Triangle Reserve-ல் இருக்கும் வனவிலங்குகளை பார்ப்பதற்காக மைக் வெல்டன் என்ற 28 வயது வனவிலங்கு புகைப்பட கலைஞர் சபாரியில் சென்றுள்ளார்.
அப்போது அவர், அங்கு மலைப்பாம்பு ஒன்றுடன் சிறுத்தை ச ண்டை போ டுவதை அப்படியே தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். முதலில் பசியில் இருந்த மலைப்பாம்பு, சிறுத்தையை அப்படியே வி ழுங்க நினைத்துள்ளது. ஆனால் சிறுத்தை அதிடமிருந்து தப்பிக்க போ ராடியது.
முதலில் தன்னுடைய காலால் பாம்பை அ ழுத்த, உடனடியாக பாம்பு அசுரவேகத்தில் சிறுத்தையை க டிக்க முயற்சிக்க, அதன் பின் தன்னுடைய உ டலால் சிறுத்தை உடலை அப்படியே அழுத்தி பிடித்ததால், சிறுத்தை த டுமாறியதாகவும், இறுதியில் பாம்பே வென்றது போன்று இருந்ததாக மைக் வெல்டன் கூறியுள்ளார்.
ஏனெனில் பாம்பானது அதன் உடலை இ றுக்கி பிடித்தவுடன் அதனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை, தன்னுடைய கமெராவின் லென்சை வைத்து இந்த புகைப்படங்கள் துல்லியமாக எடுக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பிரான்சில் டார்ன் ஆற்றின் மீதிருந்த தொங்கு பாலம் இ டிந்து வி ழுந்ததில் 15 வயது சிறுவன் ப லியானார் மற்றும் பலர் கா யமடைந்துள்ளனர்.
துலூஸின் வடக்கே மிர்பாயிக்ஸில் உள்ள பாலம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் இ டிந்ததில் ஒரு காரும் லொறியும் கீழே விழுந்து ஆற்றில் மூ ழ்கியது.
இந்த காரில் 15 வயது சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் இருந்தனர். விபத்தில் சிறுவன் சம்பவ இடத்தில் இ றந்தார் மற்றும் ஏழு பேர் கா யமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாலம் மிர்பாயிக்ஸ்-சுர்-டார்ன் மற்றும் பெஸ்ஸியர்ஸ் நகரங்களை இணைக்கிறது.பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வாகனங்கள் சிக்கியதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
60 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீ ட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், பாலத்தின் நிலை குறித்து வி சாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளுர் அதிகாரி தெரிவித்துள்ளார்
பொதுமக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், மேலும் முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள வில்லெமூர் தொங்கு பாலமும் மூடப்பட்டுள்ளது.
ரஜினி விரைவில், அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதிமையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு 65வது பிறந்தநாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று “உங்கள் நான்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ”எந்தத் தொழில் செய்பவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாத்துறையினர் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? எனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் இது தெரியவில்லை. கடந்த 50 வருடமாக சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது புதிதாக சினிமாவில் இருப்பவர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது.
ஒருகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கினார்.
அரசியலில் இறங்குவது சாதாரண விஷயம் கிடையாது. நிச்சயமாக கமல் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமலைப் போல் ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும். தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் ரஜினி.
அதேநேரம் நீங்கள் இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லது. என் ஆசை மட்டுமே இது என்று பேசினார்.
சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா க டத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ப ரபரப்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா (19) கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசியது ச ர்ச்சையை ஏற்படுத்திய வி வகாரத்தில் அவரை மோ சமாக தி ட்டி வீடியோ வெளியிட்டது முன்னர் ப ரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மா நித்தியாந்திதா க டத்தப்பட்டு த னிமையான இ டத்தில் வை க்கப்பட்டதாக சில நாட்களாக செய்தி பரவியது. இது குறித்து விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் க டத்தப்படவில்லை என்பதையும் பா துகாப்பாக உள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். என் விருப்பப்படி நான் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன் என கூறினார்.
இதற்கு பின்னர் அவர் ஒரு அ திர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது தன்னுடைய பெற்றோரே தான் க டத்தப்பட்டதாக வ தந்தி ப ரப்பி தன்னை ம ன அ ழுத்தத்துக்கு ஆளாக்குவதாக கு ற்றஞ்சாட்டினார்.
மேலும் தன்னை சி த்திரவ தை செய்ய, எந்த எல்லைக்கும் தன் பெற்றோர் போவார்கள் எனவும் சாமியார் நித்தியானந்தா மற்றும் அவரின் ஆசிரமத்தால் தனக்கு எந்தவொரு பி ரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச மீது இனந்தெரியாத நபர்கள் இன்று (18.11) மாலை தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில்,
குறித்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் ஐ.தே.க அமைப்பாளர் கருணாதாசவின் வீட்டின் முன்னால் வெ டி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த அமைப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சிகிச்சை பெற்றுவரும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளனர். தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த புக்கியா ஷிரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகியோர் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி மூன்று வருடம் தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இருவரும் தங்களுடைய காதலை பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மனமுடைந்த இருவரும் ஒரே க யிற்றில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டனர்.
சனிக்கிழமையன்று ச டலத்தையும் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் தீ ப்பிடித்து எ ரிந்த நிலையில் பதட்டப்படாமல் அதை தண்ணீர் ஊற்றி அணைத்து பலரின் உ யிரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வர்கலா நகரை சேர்ந்தவர் ருக்குயா பீவி (70). இவர் தனது வீட்டில் காலையில் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, அது லீக்காகி சிலிண்டரில் நெ ருப்பு பிடித்தது.
இதையடுத்து பயப்படாமல் மற்றும் ப தற்றப்படாமல் பீவி அந்த கேஸ் சிலிண்டரை வீட்டு வாசலுக்கு எடுத்து வந்து பைப் மூலம் தண்ணீரை அதன் மீது பீச்சி அடித்தார்.
இந்த தி கில் காட்சியை பீவியின் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் எட்டி நின்று பார்த்து கொண்டிருந்தனர். இந்த சூழலில் தகவலறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மீதி நெருப்பை அணைத்தனர்.
இதன் மூலம் பீவி தன் குடும்பத்தார் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினர் உ யிரை காப்பாற்றியதோடு வீட்டையும் காப்பாற்றினார்.
இதை தொடர்ந்து பீவியின் சாமர்த்தியம் மற்றும் தைரியத்தை கெளரவிக்கும் வகையில் அவருக்கு தீயணைப்பு துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
மேலும் சமுதாயத்துக்கு பீவி ஒரு முன் உதாரணமாக உள்ளார் என தீயணைப்பு துறை அதிகாரி அவரை பாராட்டியுள்ளார்.
மும்பையை சேர்ந்த நட்டாஷா என்ற பெண் தன் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். தற்போது யோகா ஆசிரியாராக இருக்கும் நட்டாஷா. நடனம், ஊக்கமூட்டும் பேச்சாளர், என்று பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார்.
இவர் தற்போது அனைவருக்கும் வெற்றியாளராக அறிமுகமானாலும் அவரது வாழ்க்கை சிறுவயதில், அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நட்டாஷாவின் 3வயதில், அவரது தாய் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். அதுவும், நட்டாஷாவின் கண்முன்னே தன்னைதானே தீ வை த்து எ ரித்து கொண்டுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள நட்டாஷா, ”எனது அம்மா த ற்கொ லை செய்துகொண்டார். தீயில் க ருகி உ யிரிழந்ததை என் கண்களால் பார்த்தேன். அந்தச் சம்பவம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
அந்தக் காட்சிகள் எப்போதும் என கண்களைவிட்டு மறையாது. அந்த நினைவுகளை அ ழிக்க நினைத்தால், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். என் தாயின் ம ரணத்துக்கு நான் காரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்கவில்லை. என் தாயின் ம ரணத்துக்கு என்னை நானே கு ற்றம் சுமத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின், நட்டாஷாவின் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. 7வயதில் ஒருவரால் பா லியல் வ ன்கொடு மைக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் 15வயது வரை உறவினர்கள் பலரும் பா லியல் ரீதியாக து ன்புறு த்தியுள்ளனர்.
அந்நாட்களில், உலகமே தன்னை வெ றுப்பதாக நட்டாஷா நினைத்து கொண்டுள்ளார். தன்மீதே தனக்கு வெ றுப்புணர்வு ஏற்பட்டு யாரையும் நம்ப அவர் தயாராகவும் இல்லை என்று பகிர்ந்துள்ளார்.
நடனம் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், 17 வயதில் அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட வி பத்தால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவர் நடனமாடச் சென்றார். ஏனென்றால், ஓய்வு என்பதை வெ றுப்பை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் எவ்வளவு கா யங்கள் ஏற்பட்டாலும் ஒருபோது நட்டாஷா நம்பிக்கையை மட்டு இழக்கவில்லை. தன்னை மா ய்த்துக்கொள்வதாலோ கா யப்படுத்தி கொள்வதாலோ எந்த தீர்வும் கிடைக்கபோவதில்லை என்பதில் தெளிவாக இருந்துள்ளார்.
இப்படி ஏற்பட்ட கா யங்களுக்கு அவரே தேடிய மருந்து யோகா. அது நட்டாஷாவின் வாழ்வை மாற்றியுள்ளது. தற்போது பல கலைகளின் சொந்தகாரியாக வலம்வருகிறார் நட்டாஷா.
மட்டக்களப்பில் பெண்ணொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு – வாகரை, பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியில் இன்று குறித்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள உவர்மலையைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை யோகாம்பிகை என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள தனது மகளின் வீட்டிலிருந்து, ஆலயம் செல்லவதாகக் கூறி வெளியேறியுள்ளார்.
பின்னர் அவர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி திருகோணமலைக்கு பயணச்சீட்டுப் பெற்றிருந்த நிலையில் இடை வழியில் பனிச்சங்கேணி வாவிப் பாலத்தடியில் இறங்கியுள்ளார். இதன்போது அவர் கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த வேளை, சி.சி.ரிவி கமெராவில் பெண் வாவியில் கு திக்கும் காட்சி பதிவாயிருந்ததாக பிரதேச சடுதி ம ரண வி சாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் மேலதிக வி சாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் படுகொ லை செய்யப்பட்ட மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உ யிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இரத்ததான நிகழ்வு ஒன்று விவசாயக் கல்லுரி மாணவர்களால் நடத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு 11 மாதம் 18ஆம் திகதி வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் சங்கரலிங்கம் கிந்துஜன், சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான், சுந்தரலிங்கம் ஜங்கரன், திருநாமம் சிந்துஜன் ஆகியோர் படுகொ லை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவு கூறும் முகமாகவே இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக தலவாக்கலையில் பா துகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் உட்பட நகரவாசிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டுக்காக தனது நிறைவேற்று அதிகாரத்தை தான் கட்டாயம் உபயோகிப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் வைத்து இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில், சிங்கள மக்களின் வாக்குகளின் அடிப்படையில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் எனக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தேன்.
ஆனால் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் நான் உங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனவே நான் உங்களிடம் மீண்டும் ஒருமுறை, நாட்டை கட்டியெழுப்ப உங்களது ஒத்துழைப்பையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஒரு சிங்கள பௌத்தர். எனவே நான் சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பேன். கலாச்சாரத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். தேர்தலின் போது எனது வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றியை தெரிவித்து கொள்வதுடன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் எனது நன்றி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எமக்கு ஆதரவு வழங்கினார்கள். அது குறித்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அனைத்து ரீதியிலும் எமது வெற்றிக்காக பாடுபட்ட அனவைருக்கும் அதேபோல வெளிநாடுகளில் இருந்த வந்து எமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
இந்த நாட்டின் ஒற்றுமையையும் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் கடமை என்னுடையது. எனது அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடு நாட்டின் பாதுகாப்பு என்பதே என உறுதி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பௌத்தர்களின் புனித பூமியான சரித்திரம் வாய்ந்த அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோத்தாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெற்றது.
பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களான ருவன்வெலி மகாசாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகாசாய விளங்குகின்றது. புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது.
இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகாசாய ஆகிய விஹாரைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன.
இந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.
ருவன்வெலி மகாசாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோத்தாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிகப் பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகாசாயவிலிருந்து பதவிப் பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.