நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
குறைந்தளவு வேகமான 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலைக்கு பொறுப்பான பொறியிலாளர் சசித் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு ஒன்று அதிவேக நெடுஞ்சாலையிலும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு அவசர சந்தர்ப்பத்தில் அதிவேக வீதியில் வாகனத்தை நிறுத்தினால் இரட்டை மின்குமிழ்களை ஒளிர செய்யுமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ நுழையும் வீதியில் வெலிமை மற்றும் கனங்கே நோக்கி பயணிக்கும் வீதி தற்போது வரையில் நீரில் மூழ்கியுள்ளது.
அந்த வீதிகளில் 4 அடி வரை நீர் நிரம்பி காணப்படுவதாக அதிவேக நெடுஞ்சாலைக்கு பொறுப்பான பொறியிலாளர் சசித் முனசிங்க தெரிவித்துள்ளார்.
“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.” இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதனால் அங்கு நேற்று பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் – சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இதில் நான் பெரிது – நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம். நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் பிக்குகள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும்” என்றார்.
நாடாளவிய ரீதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆமர் பாபர் சந்தி, கொட்டாஞ்சேனையில் உள்ள ஜிந்துபிட்டி, ஜோர்ஜ் ஆர் சில்வா சந்தி, ஜீதாவன வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி, பேஸ்லைன் வீதி மற்றும் தெமட்டகொடயில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கட்டுநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அதற்கமைய கட்டுநாயக்கவில் 219.1 மில்லிமீற்றர் மழையும், வதுரப பிரதேசத்தில் 175.0 மில்லிமீற்றர் மழையும், ஹியாரா பிரதேசத்தில் 172.5 மில்லிமீற்றர் மழையும், ஹிக்கடுவ பிரதேசத்தில் 164.5 மில்லிமீற்றர் மழையும், யக்கமுல்ல பிரதேசத்தில் 162.5 மில்லி மீற்றர்மழையும், மினுவாங்கொடயில் 161.0 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பேருந்தொன்று குடை சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் ப லத்த கா யங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த விபத்து அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு ம ரண வீடொன்றுக்கு சென்று விட்டு மீண்டும் கந்தளாய் சென்றவர்கள் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவத்தில் ப லத்த கா யங்களுக்கு உள்ளான மூன்று சிறுவர்கள் அ திதீவிர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழையும், வேகமுமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“இ றந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் நேற்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி – நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.
கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் – இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.
இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றார்.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று மாலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள காலநிலை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இன்றிரவு மற்றும் காலை வரை அடைமழை அதிகரிக்கும் என திணைக்களத்தின் அதிகாரி அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார். கிங்கங்கை, நில்வளா கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை பகுதியில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 340 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்படக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ள ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதெனவும், கீழ் மட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அவதானத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் காலி, மாத்தறை மாவட்டங்களின் தாழ்நில பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்அறிவித்துள்ளது.382 குடும்பங்கள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர் 10 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 365 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
எதிர்வரும் 24 மணித்தியாலங்கள்பற்றி எச்சரிக்கையாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
களுத்துறை, காலி, கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் பல்வேறு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. நாகொட, பத்தேகம, இமதுவ, நெலுவ, தவலம ,ஹிக்கடுவ, யக்கலமுல்ல ஆகிய பிரதேசங்களில் நிலசறுக்கல்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாக இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் கடற்பகுதிகளில் காற்று வீசும் திசையில் மாற்றம், நீரோட்ட ஏற்பட்டுள்ள திசை மாற்றம் மற்றும் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக அதிக குளிர்ச்சியாக காணப்படும் தன்மை என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் நிலையில் காணப்படுவதும் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நெளுக்குளம் பகுதியில் நிறுவனக்கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
க.சிவசிதம்பரம் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவசக் கல்வி நிறுவனத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.09.2019) காலை நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
நிறுவனத்தின் பெயர்ப் பலகையினை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் கட்டிடத்தினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜா நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்.
அத்துடன் கணணி அறையினை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கல்வி நிறுவனத்தினுடாக கா.பொ .த சாதாரண தரம், உயர்தர கல்வியினை நிறைவு செய்த மாணவர்கள், கல்வியினை இடைநடுவில் கைவிட்ட மாணவர்கள், வறுமைக்கோட்டிக்குட்பட்ட ஆகிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் மற்றும் சிங்கள வகுப்புக்கள் மற்றும் கணிணி வகுப்புக்களை வழங்கவுள்ளோம்.
இதற்கான நிதி முற்றும் முழுதான எனது தனிப்பட்ட நிதியாகும். இலவசமாக வகுப்புக்களை நடாத்தும் எமது நிறுவனக்கல்வி நிலையத்தில் கற்கைநெறி வகுப்புகளை கற்கவுள்ள மாணவர்கள் அனுமதியை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் தெரிவித்தார்.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மழை பெய்யும் வேளைகளில் ஆங்காங்கே இடிமுழக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதால்
மின் உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் வயல் நிலங்களில் தொழிலில் ஈடுபடுதல், மரங்களுக்கு அருகில் ஒதுங்கியிருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அழகுக்கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை தன்வசப்படுத்திய இலங்கை அணி அமோக வரவேற்புக்கு மத்தியில் தாயகம் வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த இந்த குழுவிற்கு, அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சர்வதேச அழகுக்கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை கடந்த 16ஆம் திகதி பெரிஸில் நடைபெற்ற சர்வதேச அழகுக்கலை முக ஒப்பனை போட்டியிலேயே இலங்கை தன்வசப்படுத்தியது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று போட்டியாளர்கள், இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர். கயல்விழி, மயூரி மற்றும் தீக்ஸினி ஆகியோரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர். மூன்று போட்டியாளர்களில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.
கொழும்பைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் யுவதியாவார். மாத்தறையைச் சேர்ந்த மயூரி மற்றும் காலியைச் சேர்ந்த தீக்ஸினி ஆகியோரும் இந்த போட்டியில் பங்குப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஓ.எம்.சி சிகை அலங்கார உலகக் கிண்ணம் 2019 பெரிஸில் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்காக சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து வவுனியாவில் தீவிர பிரச்சார நடவடிக்கைகள் நேற்று(23.09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் பூவரசன்குளம், கோயில் மோட்டை, சிவன்நகர், புலவனூர் ஆகிய கிராமங்களில் இப் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன தலைமையிலான, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவையும் மீறி தமிழ் மக்களைப் பொலிஸார் தடுக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பில் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த தேரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வரை சடலத்தைப் புதைக்கவோ தகனம் செய்யவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் சார்பாக, சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இரு தரப்பும் தமது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஆலய வளாகத்துக்கு வெளியில் பிக்குவின் உடலைப் புதைப்பதற்கு ஆட்சேபனையுள்ளதா என பிள்ளையார் ஆலய நிர்வாகத்திடம் நீதிவான் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் ஆலோசித்து பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கினார்.
சிறிய இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஆலய வளாகத்தில், சூழலில் பிக்குவின் உடலைப் புதைப்பதைத் தாம் எதிர்ப்பதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உடலை அடக்கம் செய்வற்கு உரிய இடங்களிலேயே அடக்கம் செய்வதே பொதுவிதி என்பதையும் சுட்டிக்காட்டி, உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யும்படி கோரினர்.
நீண்ட விசாரணையின் பின்னர் ஆலயத்துக்கு அப்பால் உள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
எனினும், இந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
குறித்த இடத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தவேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு ஞானசார தேரர் தலைமையிலான குழுவினருக்குப் பாதுகாப்பும் வழங்கினர். இது தமிழ் மக்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்த ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு எதிராக சட்டத்தரணிகளும், தமிழ் மக்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் இன்றயதினம் ஈடுபட்டிருந்தது.
அரச நிர்வாக அமைச்சினால் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டுவருகிறது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 18 தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் இன்றயதினம் வேலை நிறுத்தபோராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்டசெயலகம், மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றய தினம் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்திருந்தனர். இதேவேளை வாகன அனுமதிப் பத்திரம் மற்றும் ஒரு சில சேவைகள் மாத்திரம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மாடியிலிருந்து இளம்பெண் கீழே குதித்து த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவர் கால் தவறி விழுந்து இ றந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ் (24). மென்பொறியாளரான இவர் சென்னை வந்து அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். முதல் நாளாக நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்த அவர், இரவில் அந்த நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இ றந்தார்.
3வது மாடியில் வேலை செய்யும் அவர், 8வது மாடிக்கு சென்றது ஏன் என சந்தேகம் எழுந்தது. எனவே அவர் கீழே குதித்து த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் டேனிதா உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் த ற்கொ லை செய்து கொண்டாரா?, அல்லது தவறி விழுந்தாரா? எனவும் விசாரித்தனர். இது குறித்து அவர் பெற்றோரிடமும் விசாரிக்கப்பட்டது.
அப்போது டேனிதா மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களை பெற்றோர் காட்டினர்.
மேலும் டேனிதா தனது உ டலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவதால் எங்கு சென்றாலும் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இரவு பணி முடிந்த பிறகு டேனிதா நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கியமான திருநங்கைகள் உரிமை ஆர்வலர்களில் ஒருவரான திருநங்கை அக்கை பத்மசாலி குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
திருநங்கை சமூகத்திற்கான அதிகாரமளிப்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் அக்கை. குழந்தை ஒன்றை அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்த நாட்டின் முதல் திருநங்கையில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருபவர் திருநங்கை அக்கை பத்மசாலி. இவருக்கும் வாசுதேவ் என்ற சமூக செயற்பாட்டாளருக்கும் கடந்த ஜனவரி 20ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். திருமணமான அக்கை மற்றும் அவரது கணவர் வாசுதேவ், இப்போது ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கை கூறியதாவது, நாங்கள் குழந்தைக்கு அவின் என்று பெயரிட்டுள்ளோம், நான் எப்போதும் ஒரு தாயாக மாற விரும்பினேன்,இது என் கனவு மற்றும் விருப்பம்.
எங்கள் குடும்பங்கள் குழந்தையை ஏற்றுக்கொண்டன. குழந்தை என் அம்மாவின் மடியில் விளையாடுவதைப் பார்ப்பது என் மனதைக் கவர்ந்தது. அவின் வளரும்போது எந்தவிதமான பாகுபாட்டையும் சமூக களங்கத்தையும் எதிர்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக அக்கை கூறினார். இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை அக்கை பத்மசாலி என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினரின் தம்பி மகள், ஆண் நண்பருடன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரக்கூடிய விஜய் குமார் என்பவரின் தம்பி மகள் ரியா, நேற்றைய தினம் ஆண் நண்பருடன் இ றந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ரியா மற்றும் ஆசிப் என்கிற அவருடைய ஆண் நண்பர் துப்பாக்கி தோட்டா பாய்ந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இருவரின் உ டல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
ரியா ராஜஸ்தானில் படித்துக்கொண்டிருந்த போது 25 வயதான ஆசிப் என்கிற இளைஞரின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். இதுகுறித்து ரியாவும் தன்னுடைய அம்மாவிடம் கூறியிருந்துள்ளார்.
அங்கு படிப்பை முடிந்த பின்பு ரியா டெல்லியில் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த 9ம் திகதியன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிப் வருகை தந்துள்ளார்.
இதனை அறிந்த ரியா, நேற்று இரவு 7 மணியளவில் நண்பரை வீட்டிற்கு அழைத்து வர செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய தாய், செல்போனுக்கு முயற்சித்துள்ளார்.
பின்னர் சில இடங்களில் தேடிபார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது தான் இருவரும் ச டலமாக கிடப்பதை பொலிஸார் கண்டறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை த ற்கொ லை என காவல்துறை கண்காணிப்பாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஆசிப் முதலில் ரியாவின் தலையில் துப்பாக்கியால் சு ட்டுக்கொ லை செய்துள்ளார். அதன்பிறகு ஆசிப் த ற்கொ லை செய்துள்ளார்.
இதுதொடர்பகா ஆசிப்பின் நண்பர் டேனிஷ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தான் ஆசிஃபுக்கு கைத்துப்பாக்கி வழங்கியதாக கூறப்படுகிறது. இறந்தவரின் இரண்டு சுற்று புல்லட் மற்றும் மொபைல் போன்கள் (ரியா மற்றும் ஆசிப்) டேனிஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
த ற்கொ லைக்கு சாத்தியமான காரணம் தோல்வியுற்ற காதல் விவகாரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.