வவுனியா பாடசாலையில் மாணவி பா லியல் து ஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு? : கிளர்ந்தெழுந்த கிராம மக்கள்!!

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில்..

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் தனது மகள் பா லியல் து ஸ்பிரயோகத்திற்குள்ளதானதாக தெரிவித்து குறித்த மாணவியின் தந்தையால் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று கடந்தவாரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதேவளை குறித்த சம்பவத்தில் மாணவியின் தந்தையால் இருவர் தா க்கப்பட்டதுடன், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கபட்டமைக்கு அமைவாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

குறித்த தந்தையின் செயற்பாட்டிற்கு எ திர்ப்பு தெரிவித்தும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில், மாணவியின் தந்தை பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான பொய் பரப்புரையை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பகுதியை சேர்ந்த நூற்றுகணக்கான பொதுமக்கள் இன்று (25.09.2019) காலை ஆ ர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆ ர்ப்பாட்டம் காலை 8.30 மணிக்கு வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா வடக்கு பிரதேசெயலகம் வரை சென்றுபிரதேச செயலாளரிடம் மகஜர் கொடுக்கபட்டிருந்தது.

ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிகெட்டு நடப்பவனுக்கு மன்னிப்பு கொடுக்காதே, மாணவர்களின் கல்வி வளர்சியை சீ ரழிக்காதே, முகநூலில் வந்தது பொய்யான கு ற்றச்சாட்டு என்ற வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஒரே விமானத்தின் விமானிகளாக தந்தையும், மகனும் : வரலாற்றில் முதல் சம்பவம்!!

ஒரே விமானத்தின்..

இலங்கை விமான வரலாற்றில் முதன்முறையாக ஒரே விமானத்தில் வி மானிகளாக தந்தையும், மகனும் பணியாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எயார் ஏஷியா ஏ.கே.047 என்ற விமானத்திலேயே குறித்த தந்தையும், மகனும் வி மானிகளாக செயற்பட்டுள்ளனர்.

இந்த விமானமானது நேற்று இரவு மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒரே விமானத்தில் பணியாற்றி திரும்பிய தனது கணவனையும், மகனையும் வரவேற்கும் நோக்கில் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பில் தந்தையான விமானி உதித்த தன்வத்த கூறுகையில், எனக்கு இந்த விமான பயணம் மிகவும் விசேடமான ஒன்றாகும். நான் என்னுடைய மகனுடன் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை எயார் ஏசியா விமானத்தை செலுத்தி வந்தேன்.

இதன்போது விமானத்தில் எனக்கு உதவி வி மானியாக செயற்பட்டது எனது அன்புக்குரிய மகனே. இது நாம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு கனவு. எனக்கும், மகனுக்கும் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இலங்கையர்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடையலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மகனான வி மானி கவீஷ தன்வத்த குறிப்பிடுகையில், சிறுவயதில் இருந்தே இது என்னுடைய கனவு. தற்போது 22 ஆவது வயதில் இந்த கனவு சாத்தியமாகியுள்ளது. நான் இந்த நிலைக்கு வர உதவிய எனது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி  மாணவர்கள் ஆக்கத்திறன் போட்டியில் முதலிடம்!

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கிடையிலான ஆக்கத் திறன் போட்டிகளை வருடாவருடம் நடத்திவருகிறது.

கலை மன்றங்களின் அங்கத்துவம்  வகிக்கும் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் ஆக்கத் திறனை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை வழங்கல், திறமைகளைப் பாராட்டுதல் மூலமாக ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆக்கத்திறன் போட்டிகளில் மாகாண மட்ட போட்டிகள் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி அரங்கில் கடந்த 21.09.2019  22.09.2019 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இப்போட்டிகளில் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அனுசரணையில் இயங்கும் அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி  மாணவர்கள் பங்கு பற்றி
# வடமோடி கூத்து – சிறியோர் பிரிவு
# வடமோடி கூத்து – பெரியோர் பிரிவு
# தென்மோடி கூத்து – சிறியோர் பிரிவு
# நாடகம் – சாபவிமோட்ஷனம்
அகியவற்றில் அனைத்து பிரிவுகளிலும் #முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டது.

 

வவுனியாவில் விறகு வெட்ட சென்றவர்களுக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் விறகு வெட்ட சென்ற இருவர் கரடியின் தா க்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பாலமோட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பற்றை ஒன்றுக்குள் மறைந்திருந்த கரடியே இருவரையும் தா க்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவருகிறது. இதனையடுத்து குறித்த நபர்களும் கரடியின் மீது தா க்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீரையா கலைஞானம் (வயது 42), விஜயகுமார் பிரசாந் (வயது 31) ஆகியோரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகல் வேளையில் இரவாக மாறிய கொழும்பு நகரம்!!

கொழும்பு நகரம்

கொழும்பு நகரம் நேற்றைய தினம் பகல் வேளையில் இரவு போன்றதாக காட்சியளித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணரமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பின் பல பகுதிகளில் இரு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வானம் இருண்ட நிலையில் காணப்பட்டதுடன், பகல் வேளையில் இருள் சூழ்ந்துள்ளது.

பகல் நேரத்தில் வீதியில் பயணித்த வாகனங்கள் விளக்குகளை ஒளிர வைத்துக் கொண்டே பயணித்துள்ளன. கொழும்பின் பிரதான வீதிகளில் பல நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்தில் சிறுமியொருவர் பலி!!

வாகன விபத்தில்..

மட்டக்களப்பு, கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ப லியாகியுள்ளதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தோப்பூருக்கு சென்ற கார் ஒன்றும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற விவசாய திணைக்களத்திற்க்கு சொந்தாமான கெப் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தோப்பூரை சேர்ந்த பாத்திமா பஹ்மிதா வயது (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கெப்ரக வாகனத்தில் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு ஜனாதிபதி நிதியுதவி!!

ஜனாதிபதி நிதியுதவி

பாரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்த பிரதேசத்தைச் சேர்ந்த முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்சம் ரூபா நிதி உதவியும்,

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம்.துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்சம் ரூபா நிதி உதவியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை : நகரில் 5 டெங்கு நோயாளர்கள் : 103 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை!!

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா நகரப்பகுதியில் 5 உள்ளூர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக இணங்காணப்பட்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் தொற்று குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள மில் வீதியில் இருந்து டெங்கு நோய் தொற்று ஆரம்பித்துள்ளது. இந்த உள்ளூர் தொற்று காரணமாக வவுனியாவில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

அதற்காக பொது சுகாதார பரிசோதகர்களும், மலேரியா தடை இயக்கமும் இணைந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்துள்ளனர். சென்ற 19 ஆம் திகதியில் இருந்து இந்த நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 260 இடங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக்கூடிய நிலை காணப்பட்டதுடன், உடனடியாக அவை அழிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான தொற்று ஏற்படக் கூடிய வகையில் இடங்களை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

38 இடங்களில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டு மலேரியா தடைப் பகுதி பூச்சியியளாளரினால் ஆய்வு செய்யப்பட்டு 21 நுளம்பு மாதிரிகள் ஏஜிஎசிரைட் நுளம்பு வகை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட இடங்களுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளயப்படவுள்ளது. இந்த நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியமானது.

பொது மக்களினுடைய அக்கறையின்மை தான் இந்த நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பல தடவை அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் அவர்களது கவலையீனம் இந்த நுளம்பு உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நோயாளர்கள் உருவாகியுள்ளார்கள். எனவே தினமும் ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு, கடை என்பவற்றை சுத்தம் செய்து டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது ஒரு சமூக செயற்பாடாக கருதி செயற்பட வேண்டும். இந்த தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அதேபோல், பாடசாலைகளும் நுளம்பு அற்ற செயற்திட்டம் நாடாளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகிறது. அதனை சகல பாடசாலைகளும் ஒரு சமூக தொண்டாக கருதி செயற்பட வேண்டும்.

இந்த வகையில் வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலை வடமாகாணத்திற்கே முன்னுதாரணமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இதேபோல் ஏனைய பாடசாலைகளும் செயற்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நுளம்பு அற்ற சூழலை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்படுவதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பிய சமிஞ்சை!!

தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி..

வவுனியா – தாண்டிக்குளம் சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய ஒலி, ஒளி சமிஞ்சை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரத கடவையில் ஒலி, ஒளி சமிஞ்சை நேற்று மாலை முதல் தொடர்ந்து ஒலி எழுப்பியபடி இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வீதியூடாக பயணம் செய்த பொதுமக்கள் அச்சத்துடன் பயணத்தை தொடரவேண்டிய அசௌகரியமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்கு சென்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியதுடன், பொலிஸாருக்கும் இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் குறித்த சமிஞ்சை, தொடர்ச்சியாக ஒலி எழுப்புவது சீர்செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவளை கடந்த வாரமும் குறித்த கடவையில் இவ்வாறான கோளாறு ஏற்பட்டநிலையில் பல மணிநேரங்களுக்கு பின் சீர்செய்யபட்டுள்ளது.

அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்ற இக் கடவையில் அடிக்கடி இவ்வாறான கோளாறுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை நிரந்தரமாக சீர்செய்யவேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வவுனியாவில் பௌத்த பிக்குகளின் அடாவடியினை கண்டித்து போராட்டம்!!

வவுனியாவில்..

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தி சைவத் தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் நீதி கேட்ட சட்டத்தரணி, பொதுமக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் இன்று (24.09.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 948 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

948 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட தளத்திற்கு முன்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு தமிழர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள் இன ரீதியாகவும் , மத ரீதியாகவும் அவர்களின் வாழ்விடம் வலுக்கட்டாயமாகவும் எடுக்கப்படுகின்றது,

நேற்று இராணுவமும் காவல்துறையும் ஒரு போதும் நீதி அமைப்பிலிருந்து சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவோ பராமரிக்கவோ இல்லை, இந்த இலங்கை அமைப்பில் யார் வாழ விரும்புவார்கள்? இந்துக் கோவில் என்று அழைக்கப்படும் புனித இடத்தில் இனவாதி பிக்குவை தகனம் செய்தது ஏன்? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவனை து ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 ஆண்டு சிறை!!

30 ஆண்டு சிறை

பொது கழிவறையில் சிறுவனை பா லியல் வ ல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு கொம்பனித் தெருவை சேர்ந்த 63 வயதான நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பை சேர்ந்த 13 வயதான சிறுவனை குற்றவாளி கடந்த 2016ஆம் ஆண்டு பா லியல் வ ல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

கனடாவில் சு ட்டுக் கொ லை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : கைது செய்யப்பட்ட மற்றுமொரு தமிழர்!!

கனடாவில்..

கனடாவில் கடந்த வாரம் இலங்கை தமிழ் இளைஞன் சு ட்டுக் கொ ல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு Scarboroughவில் பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சு ட்டுக்கொ லை செய்யப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று முன்தினம் சரண்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சரண்ராஜ் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு மாவட்டங்களில் மின் விநியோக தடை!!

மின் விநியோக தடை

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சார விநியோக தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் மின்சார விநியோக தடையை மேற்கொள்வதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

காலியில் மின்சார நுகர்வோர் 1000 பேருக்கும், மாத்தறையில் மின்சார நுகர்வோர் 7000 பேருக்கும் இவ்வாறு மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் பாரிய வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்கு போராடும் மக்கள் : மீட்கும் முயற்சிகள் தீவிரம்!!

வெள்ளத்தில் மூழ்கியுள்ள..

தென்னிலங்கையில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலியின் சில பகுதியிலுள்ள மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹ ஹபுகல பொல்துவ பகுதியில் 76 குடும்பங்களும், பின்னகொல துவ பகுதியில் 28 குடும்பங்களும் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்பு குழுவினர் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஹோலுவாகொட தேவகிரி விகாரை மாவத்தை நீரில் மூழ்கியுள்ளமையினல் அங்கும் பாரிய அளவிலான மக்கள் சிக்கியுள்ளனர். சில வீதிகளில் 6 அடிக்கு மேல் நீர் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கும் பிரதேசத்தில் பாதிக்கப்படாத மக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளவிய ரீதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு!!

சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (24.09.2019) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இச் செயலமர்வு இடம்பெற்றது.

சர்வதேச சிறுவர் தினமானது இம்முறை பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு என்னும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் முகமாக இச் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கிறேட் மிசன் அமைப்பைச் சேர்ந்த சமூக பணியாளர்கள் வளவாளராக கலந்து கொண்டு தமது நாட்டின் திறன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவிப் பிரதேச செயலாளர் கமலதாசன், சிங்கப்பூர் கிறேட் மிசன் சமூக பணியாளர்கள், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன்,

மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, செட்டிகுளம் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் இளஞ்சிங்கம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், செட்டிகுளம் மகாவித்தியாலயம் மற்றும் அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்!!

பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இன்று (24.09.2019) நீதிமன்ற செயற்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் பௌத்த பிக்குகள் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தமை மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியமை என்பவற்றை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைவாக வவுனியாவிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக நீதிமன்ற வழக்குகள் விசாரணைகளின்றி திகதியிடப்பட்டன. நீதிமன்றம் வந்த மக்களும் வழக்கு விசாரணைகள் நடைபெறாமையால் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, பொலிசார் மற்றும் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட தண்டப்பணம் செலுத்தும் வழக்குகள் மட்டும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.