உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்தமிழர்!!

ஈழத்தமிழர்

ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு முல்லைத்தீவினைச் சேர்ந்த லியோன் ராஜா தெரிவாகியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எனது பெயர் லியோன் ராஜா, எனக்கு 50 வயது, நான் இலங்கையின் முல்லைத்தீல் பிறந்தேன். நோர்வேயின் ஒஸ்லோவில் 30 ஆண்டுகளாக வாழ்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள்.

30 ஆண்டுகளாக தொழில் புரிந்து வந்த நான், எனது சகோதரனுடன் இணைந்து கிக் பொக்ஸிங் விளையாட்டை ஆரம்பித்தேன். எனினும் பின்னர் உடற்பயிற்சி சம்பந்தமாக கவனம் செலுத்தினேன். நான் எப்போதும் போட்டியில் கலந்துக்கொள்ள எண்ணியதில்லை. 2016ம் ஆண்டு நான் மன அழுத்தம் மற்றும் ம துபானம் ஆகியவற்றுடன் போராடினேன்.

ஒரு நாள் நான் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் எனக்கு உதவ ஆரம்பித்தார். நானும் என் மனநிலையில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தேன். அத்துடன் போட்டிகள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

நோர்வே சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றேன். 2018 ம் ஆண்டு டென்மார்கின் யூரோவிஷினில் master pshysique ல் முதலிடத்தை வென்றேன். இந்த வருடம் 2019 நோர்வே சம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன்.

இந்த நிலையில், ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் 2019 உலக சம்பியஷிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இவை அனைத்திற்கும் காரணம் இவரது மூத்த சகோதரன் ராஜன் எனவும் தனது வெற்றி குறித்து பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பெருந்தொகையானோர் பாதிப்பு!!

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை தாக்கங்களால் இதுவரை 80ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கடும் மழைக் காரணமாகவே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் 54ஆயிரத்து 985பேர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று என்பவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை களு, ஜின் மற்றும் நில்வள கங்கையின் நீர்மட்ட உயர்வால் மில்லகந்த, பெத்தேகம மற்றும் பனடுகம போன்ற இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இராணுவத்தில் இணைவு!!

தினேஸ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படைப் பிரிவின் அதிகாரியாக தினேஸ் சந்திமால் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவ கிரிக்கெட் அணியில் விளையாடும் நோக்கில் தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினேஸ் சந்திமால் இராணுவத்தில் இணைந்து கொண்டதாக இராணுவப் பேச்சாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வவுனியாவில் நாளை ஆர்ப்பாட்டம் : அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!!

செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக நாளை(26.09) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியா முகப்புத்தக சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

நீராவியடி ஆலய விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பினை பௌத்த பிக்குகள் அவமதித்தமை, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமை, இந்து ஆலயங்களின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது சுயாதீனமாக இளைஞர்களால் முன்னெடுக்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் பங்கெடுத்து தமிழராய் இணைந்து பலத்த எதிர்ப்பை பதிவு செய்து அழுத்தம் கொடுக்க முன்வருமாறு இளைஞர்கள் கோரியுள்ளனர்.

நடுரோட்டில் கணவனின் உயிரை பறித்த கோவில் பிரசாதம் : கவலைக்கிடமான நிலையில் மனைவி!!

சென்னையில் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட பேராசியர் நடுரோட்டில் மயங்கி விழுந்து இ றந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திக் (34) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் தன்னுடைய வேலையை இழந்தார்.

இதனையடுத்து அரசு கல்லூரியில் வேலையில் சேர்வதற்காக வேலாயுதம் (42) என்பவரிடம் 3 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் இரண்டு ஆண்டுகளை கடந்தும் கூட வேலாயுதம் அரசு வேலை எதுவும் வாங்கி தராமல் இழுத்தடித்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

நேற்று அந்த நபர், ‘அரசு வேலைக்கான பணி நியமன ஆணை’ வந்துள்ளதாக கூறியுள்ளார். உடனே கார்த்திக் தன்னுடைய மனைவி சரண்யா(29) உடன் சென்றுள்ளார். அங்கு வேலாயுதம் கோவில் பிரசாதம் எனக்கூறி ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்டுவிட்டு தம்பதியினர் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென கார்த்திக் நடுரோட்டில் ம யங்கி வி ழுந்துள்ளார்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள், கார்த்திக் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சரண்யா ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார், சரண்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் வேலாயுதம் கொடுத்த பிரசாதத்தில் வி ஷம் கலந்திருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வேலாயுதம் கொடுத்த பிரசாதத்தில் உண்மையாகவே விஷம் கலந்திருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா வீதி விபத்தில் மின்சாரசபை ஊழியர் படுகாயம்!!

வவுனியா வீதி விபத்தில்..

வவுனியா – கல்மடு பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் வண்டியில் பயணித்த இலங்கை மின்சாரசபை ஊழியரொருவர் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர் எகல்யகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மலித் என்ற இளைஞரென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீதியில் நீர்வழங்கல் வடிகால் சபையினரால் நீர்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்படும் குழிகள் நீண்ட நாட்கள் மூடப்படாமல் வீதியில் மண்குவிக்கப்பட்டுள்ளமையால் வீதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் விபத்துக்குள்ளாவதாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

டிக்-டாக் தோழியுடன் மா யமானதாக கூறப்பட்ட பெண் : பொலிசில் கூறிய அதிர்ச்சித் தகவல்!!

டிக்-டாக் தோழியுடன்..

தமிழகத்தில் பெண் தோழியுடன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மா யமானதாக கூறப்பட்ட பெண், பொலிசில் ஆஜராகி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த வினிதா(20) என்ற பெண்ணுக்கும், சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ(25) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.

டிக்-டாக்கில் வீடியோ செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வினிதாவுக்கு, அந்த செயலியின் மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் டிக்-டாக் செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து, ஒருவருக்கொருவர் அனுப்பியும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் ஆரோக்கிய லியோ, மனைவின் டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அவரை கண்டித்துள்ளார். பின்னர் அபியின் படத்தை வினிதா தனது கையில் டாட்டூவாக வரைந்து கொண்டதை வீடியோ காலில் பார்த்த ஆரோக்கிய லியோ, ஊருக்கு வந்ததும் மனைவியுடன் ச ண்டையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வினிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தான், வினிதா நகைகள் மற்றும் பணத்துடன் டிக்-டாக் தோழியுடன் மா யமாகிவிட்டதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வினிதா மற்றும் அவரது தோழி அபியை பொலிசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட வினிதா, நேற்று மாலை திடீரென சிவகங்கை நகர பொலிஸில் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். அப்போது திருவேகம்புத்தூரில் வினிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து வந்த பொலிசார் அவரை அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் வினிதா கூறுகையில்,

‘திருமணத்தின்போது எனக்கு வழங்கி நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன், கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கு தெரியும்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18ஆம் திகதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை சந்தேகப்பட்டு அ டித்தார். இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது. நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன். இந்நிலையில் தொலைக்காட்சியில், நான் டிக்-டாக் தோழியுடன் மா யமானதாக செய்திகள் வெளியானது.

இதைப் பார்த்த நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர பொலிசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ்லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்னை வரக்கூடாது என்றுதான், நான் பொலிசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

கை, கால்களை கட்டிப்போட்டு பேரனை ஆற்றில் தள்ளி கொ லை செய்த பாட்டி!!

பெங்களூரில்..

பெங்களூரில் கை, கால்களை க ட்டிப்போட்டு 10 வயது பேரனை ஆற்றில் த ள்ளி கொ லை செய்த பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரை சேர்ந்த 65 வயதான சாந்தாம்மா என்பவர் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில், தனது பேரனை கொ ன்றுவிட்டதாக கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த பொலிஸார், அவர் கொ லை செய்ததாக கூறிய ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர தேடுதல் நடத்திய பொலிஸார் மதியம் 12 மணியளவில் கை, கால்கள் க ட்டப்பட்ட நிலையில் சிறுவனின் ச டலத்தை கண்டெடுத்தனர்.

இதனையடுத்து சாந்தம்மாவை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவருடைய மகளுடன் ஏற்பட்ட த கராறு காரணமாகவே பேரனை கொ லை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. சாந்தம்மாவின் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்துவிட்டார். அவருக்கு பிறந்தவர் தான் கொ ல்லப்பட்ட 10 வயது சிறுவன் பிரஜ்வால்.

அவனை தன்னுடைய தாயின் வீட்டில் விட்டுவிட்டு அந்த பெண் மறுமணம் செய்துகொண்டு மங்களூரு சென்றுவிட்டார். கடந்த நான்கு மாதங்களாக பேரனை கவனித்துக்கொண்டிருந்த சாந்தாம்மா, மகளின் மறுமணம் குறித்து அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் வீட்டிற்கு திரும்பி வராவிட்டால் பிரஜ்வாலைக் கொ ன்றுவிடுவேன் என்று சாந்தம்மா தனது மகளை மி ரட்டியுள்ளார். இந்த நிலையில் தான் திங்கட்கிழமை மாலை பள்ளியிலிருந்துக்கு பிரஜ்வாலை வீட்டிற்கு அழைத்து வந்த சாந்தாம்மா, வழியில் இருந்த ஆற்றில் தள்ளி பேரனை கொ லை செய்துள்ளார்.

அதன்பிறகு அவரும் த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்த சிலர் அவரை காப்பாற்றி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதியில் ம ர்மமாக இ றந்து கிடந்த மாணவி : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

11ம் வகுப்பு மாணவி..

உத்திரபிரதேச மாநிலத்தில் 11ம் வகுப்பு மாணவி விடுதியில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவத்தில், பொலிஸார் கடிதம் ஒன்றினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா என்பவரின் மகள் அனுஷ்கா விடுதியில் தங்கி ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விடுதியில் இவர் மீது தி ருட்டு பட்டம் சுமத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்காக விடுதியில் பணியாற்றிய பெண் காப்பாளர், 48 மாணவிகளை வைத்து அனுஷ்காவின் க ன்னத்தில் அ றையவைத்து கொ டுமைபடுத்தியுள்ளார். அதோடு அல்லாமல் மாணவர்கள் தினமும் அவரை கே லி செய்தும், விடுதியில் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு அனுஷ்காவையே கு ற்றம் சுமத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் அனுஷ்கா அ றையில் தூ க்கில் தொ ங்கியபடியே கிடப்பதை பார்த்த மாணவிகள் பள்ளி தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து வேகமாக மாணவியின் உ டல் மீ ட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் மருத்துவமனைக்கு சென்றிருந்த மாணவியின் உறவினர் ஒருவர், ச டலத்தை பார்த்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு தான் மகள் த ற்கொ லை செய்துகொண்டு இ றந்திருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மகளின் உ டலில் ஆங்காங்கே சில கா யங்கள் இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவமானது மாநிலம் முழுவதும் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பள்ளி மாணவர்கள் பலரும் ட்விட்டரில், அனுஷ்கா திட்டமிட்டு கொ லை செய்யப்பட்டிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அனுஷ்காவின் தந்தை, தன்னுடைய மகள் பா லியல் து ஸ்பிர யோகம் செய்யப்பட்டு கொ ல்லப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நீண்ட நாட்களாகவே பள்ளியின் அதிபர் சுஷ்மா சாகர் தனது மகளை ம னரீதியாக து ன்புறுத்தி வந்ததாகவும், அதற்கு விடுதி காப்பாளர் மற்றும் அஜய் என்கிற பள்ளி மாணவர் உடந்தையாக இருந்ததாகவும் கு ற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.

திருகோணமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு : தீவிர விசாரணைகள் ஆரம்பம்!!

புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலையில் விகாரையின் புத்தர் சிலைகள் இரண்டு உடைக்கப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவின் அபயபுர அபயாராம விகாரையில் உள்ள புத்தர் சிலைகளே உடைக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் தானம் ஒன்றிற்காக வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் உடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக விகாராதிபதி மானின்கமுவே விமலஜோதி திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட உப்புவெலி பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு சிலை உடைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு சிலை கண்ணாடி பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை ஒருவரும் நேரில் பார்க்கவில்லை. சந்தேகநபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அரச ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அரசாங்கம்!!

அரச ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க, ஜனாதிபதி நியமிக்க எஸ்.ரனுக்கே தலைமையிலான குழுவினர் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், 2020ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரி தரத்தில் இருக்கும் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 9 ஆயிரத்து 587 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்களின் சம்பளம் 23 ஆயிரத்து 975 ரூபாவினாலும் கீழ் நிலை ஊழியர்களின் சம்பளம் 3 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

இராணுவத்தினரின் பாதுகாப்பில் இலங்கை : வெளியானது புதிய வர்த்தமானி!!

இராணுவத்தினரின் பாதுகாப்பில் இலங்கை

இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முப்படையினர் அனைவரும் நாடு முழுவதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த வர்த்தமானி கடந்த 22ஆம் திகதியில் இருந்து செயற்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கா யங்களுடன் இ றந்த நிலையில் புத்தளத்தில் கரையொதுங்கிய டொல்பின்!!

டொல்பின்

புத்தளத்தில் நேற்றைய தினம் இ றந்த நிலையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த டொல்பினானது சுமார் ஆறு அடி நீளமுடையது என தெரியவருகிறது. எனினும் அந்த டொல்பின் கரையொதுங்கிய போது பல கா யங்களுடன் இ றந்த நிலையில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த டொல்பினை அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 19 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

வழக்குத் தாக்கல்

வவுனியாவைச் சேர்ந்த 19 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை,

விலைகள் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் 19 வர்த்தக நிலையங்களில் இருந்து பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த 19 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் வர்த்தகர் மீது இருவர் தாக்குதல் : வர்த்தகர் வைத்தியசாலையில்!!

வவுனியா தோணிக்கல் பகுதியில்..

வவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது நேற்று (24.09.2019) காலை 10.30 இருவர் தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது தொழிலுக்கான களஞ்சியசாலை ஒன்றினை நடாத்தி வந்துள்ளார். குறித்த களஞ்சிய சாலை அவரது உதவியாளராக இருந்த நபரின் வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த களஞ்சியசாலைக்கான வாடகைப் பணம் கொடுக்கப்படவில்லை என வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸில் மு றைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வர்த்தகரை
பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வாடகைப் பணத்தினை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க வர்த்தகர் பணத்தினை செலுத்தியுள்ளார். இந் நிலையில் நேற்றையதினம் களஞ்சியசாலையிலிருந்து அவரது உடமைகளை அகற்றுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற சமயத்தில் குறித்த வீட்டாருக்கும் வர்த்தகருக்குமிடையே வா ய்த்தர் க்கம் ஏற்பட்டுள்ளது.

வா ய்த்தர் க்கம் மோ தலாக மாறியதில் வீட்டு உரிமையாளரின் தா க்குதலுக்கு உள்ளாகிய வர்த்தகர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வீட்டு உரிமையாளரான பெண் வர்த்தகர் தன்மீது தா க்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நீதிகோரி கறுப்புத்துணியினால் வாயை கட்டி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!!

வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்

நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உ யிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும்,

சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம் முன்பாக இன்று (25.09.2019) காலை தமது வாயினை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் தா க்குதல் சம்பவத்திற்கு தமது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.

இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும். இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போ ராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.