கனடாவில் து ப்பாக்கி கு ண்டுக்கு இரையான இலங்கை இளைஞருக்கு இரங்கல் கூட்டம் : கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்!!

சாரங்கன் சந்திரகாந்தன்

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் து ப்பாக்கிச் சூ ட்டில் ப லியான இலங்கை இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தனுக்கு புதனன்று அஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கடந்த வாரம் இளைஞர் ஒருவரால் து ப்பாக்கியால் சு ட்டு கொ ல்லப்பட்ட 25 வயது சாரங்கன் சந்திரகாந்தனுக்கு இரங்கல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது நண்பர்களும் உறவினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணியளவில் மிடில்ஃபீல்ட் சாலைக்கு அருகிலுள்ள மெக்னிகால் அவென்யூ பகுதியில் து ப்பாக்கி கு ண்டு கா யங்களுடன் குற்றுயிராக சாரங்கன் சந்திரகாந்தன் மீட்கப்பட்டார்.

இரண்டு கு ண்டு கா யங்களுடன் வாகனம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அவர், மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்தும் பலனின்றி சம்பவயிடத்திலேயே ம ரணமடைந்தார். இச்சம்பவத்தில் இன்னொரு இளைஞரும் து ப்பாக்கி கு ண்டு கா யங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் புதனன்று இரவு நடத்தப்பட்ட அஞ்சலி பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தனை நினைவு கூர்ந்துள்ளனர். கைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட சந்திரகாந்தன், சம்பவம் நடப்பதற்கு முன்னர் நண்பர்களுடன் நேரம் செலவிட்ட பின்னரே சென்றுள்ளார் என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுமானத்துறையில் விருப்பம் கொண்ட சந்திரகாந்தன், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததாக அவரது நண்பர் கோபி நினைவு கூர்ந்துள்ளார். நண்பர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்ட சந்திரகாந்தன், பிரச்னைகளில் சிக்குபவரல்ல எனவும், எவரையும் பகைத்துக் கொள்ளும் சுபாவம் கொண்டவரல்ல சந்திரகாந்தன் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொ லை தொடர்பில் Stoufville பகுதியில் குடியிருக்கும் 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவரை பொலிசார் திங்களன்று கைது செய்துள்ளனர். அவர் மீது கொ லை மற்றும் கொ லைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்!!

திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (26.09.2019) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

அ நீதிக்கும், அ டக்குமுறைக்கு எதிரான அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்னால் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தியாகதீபம் திலீபனின் நினைவு உருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிக்கிய அதிசயம் : வர்த்தகருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!!

இலங்கையில் சி க்கிய அ திசயம்

இலங்கையில் அதிசயிக்கத்தக்க வகையில் க ருங்கல் கு வாரியில் இ ரத்தின க ற்கள் அடங்கிய க ல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொட நகரை அண்மித்த பகுதியிலுள்ள க ருங்கல் கு வாரியில் உ டைந்து வந்த பகுதி ஒன்றில் அபரேஸ் ரக 1200 இ ரத்தின கற்கள் ஒ ட்டப்பட்டிருந்த கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 12 வருடங்களாக இ ரத்தின கல் விற்பனையில் ஈடுபடும் ஜோர்ஜ் என்பவருக்கு இந்த இ ரத்தின கல் கிடைத்துள்ளது. இந்தக் கல் 456 கிராம் நிறையுடையது. மிகவும் அழகானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக க ங்கைகள் மற்றும் சு ரங்கங்களிலேயே இ ரத்தின க ற்களை மீட்க முடியும். எனினும் பா ரிய க ருங்கல் கு வாரியில் இவ்வாறான கல் ஒன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இ ரத்தன கற்கள் அடங்கிய கல்லின் அடுத்த பக்கத்தில் க ருங்கல் து ண்டு ஒன்றே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் உயிரிழந்த தமிழ் இளைஞன் அடையாளம் காணப்பட்டார்!!

தமிழ் இளைஞன்

கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உ யிரிழந்த தமிழ் இளைஞன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் விபத்துக்குள்ளானார். உ யிரிழந்த இளைஞர் 17 வயது வயதான சாமுவேல் டேன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய 18 பொதிகள்!!

18 பொதிகள்

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் 18 பொதிகளைக்கொண்ட பீ டி சுற்றும் இலைகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 18 மூடைகள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 840 கிலோ கிராம் பீ டி இலைகள் காணப்பட்டுள்ளது.

கடற்கடையினரின் குறித்த இந்த சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட பீ டி இலைகள் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமையை வெ டி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெ டி கொழுத்தி கொண்டாடினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பம் நீடித்த நிலையில் இன்று மாலை அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரின் மரக்கறி மொத்த விற்பனை நிலையம் முன்பாகவும், வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாகவும் வெ டி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது எங்கள் ஜனாதிபதி சஜித் அவர்களே வாழ்க என ஆதரவாளர்கள் கோசம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தபாலகத்தை முற்றுகையிட்ட அதிபர், ஆசிரியர்கள்!!

அதிபர், ஆசிரியர்கள்..

நாடாளவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போ ராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் தமது விடுமுறையை அறிவிக்கும் பொருட்டு தந்தி அனுப்புவதற்காக வவுனியா தபாலகத்திற்கு சென்றமையால் அங்கு நெ ருக்கடி நிலை ஏற்பட்டது.

வவுனியா பிரதான தபாலகத்தில் அதிகளவிலான அதிபர், ஆசிரியர்கள் குவிந்தமையால் நெ ருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி சேவையினை விரிவுபடுத்தி அஞ்சல் அலுவலகத்தின் நிலையினை வழமைக்கு கொண்டுவரும் பொருட்டு மேலதிகமாக மூன்று உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தி தந்தி அனுப்புவதற்காக சேவைகள் வழங்கப்படுகின்றது.

வவுனியாவில் பௌத்த பிக்குகளின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம்!!

வவுனியாவில்..

செம்மலை, நீராவியடி ஆலயத்தில் பௌத்த பிக்குகள் நீதிமன்ற தீர்ப்பை மீறி மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (26.09.2019) கவனயீர்ப்புப் போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் ஜனானுஜன் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீராவியடி எங்கள் பூமி, இலங்கையில் தேரர்களுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா, காவி உடையில் காடையர்களா, இனங்களுக்கிடையில் முறுகலை தூண்டாதே, ஞானசார தேரரை கைது செய், பௌத்தம் போதிக்கும் தர்மத்தை சிதைக்காதே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

அத்துடன் தேரர்களுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன், பிக்குகளின் அடாவடியை வெளிப்படுத்திய பதாதைகளையும் தீயிட்டு எரித்தனர்.

குறித்த ஆ ர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், எம்.பி.நடராஜா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம், நகரசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுயாதீன இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா செட்டிகுளத்தில் பௌத்த பிக்குகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

வவுனியா செட்டிகுளத்தில்..

நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளி பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தீர்த்தக்கரைக்கு அருகாமையில் பௌத்த துறவியின் உடலை தகனம் செய்தமையினை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமையினை எதிர்த்து வவுனியா செட்டிக்குளத்தில் இன்று (26.09.2019) கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று இடம்பெற்றது.

செட்டிகுளம் பொதுமக்களின் ஏற்பாட்டில் செட்டிகுளம் சமூர்த்தி அலுவலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது செட்டிக்குளம் – மன்னார் வீதி பிரதான வீதியூடாக செட்டிகுளம் பேரூந்து நிலையத்தினை சென்றடைந்து பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே நீதித்துறையின் நம்பகத்தன்மையினை நிரூபி, ஒடுக்காதே ஒடுக்காதே தமிழர்களை ஒடுக்காதே , போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இவ் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோனி, வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் வெறிச்சோடிய பாடசாலைகள் : அதிபர், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

வெறிச்சோடிய பாடசாலைகள்

வவுனியா மாவட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போ ராட்டம் காரணமாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

சம்பள முரண்பாடுகள், நிலுவைச்சம்பளத்தை வழங்காமை, மாணவர்களின் ஒழுக்கத்தை பேணும் ஆசிரியர்களை பாதுகாக்காமை, ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை.

சில பாடசாலைகள் திறந்திருக்கின்ற போதும் ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, குறித்த சுகயீன லீவுப் போராட்டத்திற்கு 30 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் சிரமம்!!

புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால்..

நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் இன்று (26.09.2019) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை உட்பட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா புகையிரத நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், முற்பதிவுகளை மேற்கொண்டவர்கள், பயணிகள் எனப் பலரும் புகையிரத நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் இராணுவத்தினர், பொலிசார் புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் வவுனியாவிலேயே தரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை!!

திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன், இந்த கண்காணிப்பு விஜயமானது உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன், அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மருந்தகங்களுக்கான பரிசோதனையின் போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், மருந்தாளர்கள் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தங்கியிருந்த யாழ்ப்பாணப் பெண் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணப் பெண் மாயம்

கொழும்பில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கா ணாமல்போயுள்ளார் எனவும், அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சிவதர்சினி என்பவர், உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காக கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளை, கடந்த சனிக்கிழமை அன்று இராணுவப் புலனாய்வாளர்கள் என அடையாளம் காட்டப்பட்ட சிலரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதன்பின்னர், அவர் என்ன ஆனார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கா ணாமல்போன குறித்த பெண் முன்னாள் போராளி எனவும், அவரது கணவர் (அன்புச்சோதிலிங்கம் அன்பு) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது உ யிரிழந்தார் எனவும் உறவினர்கள் மேலும் கூறினர்.

மன்னாரில் பாரிய மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்!!

மன்னாரில்..

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று நேற்று முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட வாகனங்கள் அனைத்தும் சுமார் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக இசைமாலைதாழ்வு கிராம சேவையாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இரண்டு மாணித்தியாளங்களுக்கு மேலாக வருகை தரவில்லை என சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அறிந்து கொண்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்டாலின் உடனடியாக தனது சொந்த முயற்சியில் குறித்த பாரிய மரத்தினை தனது ஊழியர்களை கொண்டு அகற்றி போக்கு வரத்து நெரிசலை சரிசெய்துள்ளார்.

றம்பாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

அனுராதபுரம் – றம்பாவ பகுதியில்..

அனுராதபுரம் – றம்பாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் றம்பாவ பகுதியை சேர்ந்த பந்துல எனப்படும் 43 வயதுடைய நபரே உ யிரிழந்துள்ளார்.

ஏ-9 வீதியில் றம்பாவ சந்திக்கு அருகாமையில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, யாழில் இருந்து சென்ற கெப் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் அவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை றம்பாவே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நுகர்வோர் சேவை அதிகார சபை இதுவரையில் அதனை செயற்படுத்தவில்லை.

இவ்வாறு விலை குறைப்பதாக வெளியான செய்திகள் காரணமாக எரிவாயு சிலிண்டர் தொகையை வர்த்தகர்கள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல நகரங்களில் பல நாட்களாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தங்களுக்கு எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நுகர்வோர் சேவை அதிகார சபை இதுவரையில் அதனை செயற்படுத்தவில்லை.

இவ்வாறு விலை குறைப்பதாக வெளியான செய்திகள் காரணமாக எரிவாயு சிலிண்டர் தொகையை வர்த்தகர்கள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல நகரங்களில் பல நாட்களாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தங்களுக்கு எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.