பல வருட காதலை பிரிக்க நினைத்த பெற்றோர் : இ றப்பில் ஒன்று சேர்ந்த இளம்ஜோடி!!

இளம்ஜோடி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் தங்களுடைய காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்ததால், இளம் காதல் ஜோடி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காகுலோட் கோபி (22) என்பவர் தன்னுடைய நெருங்கிய உறவினரான லாவுத்யா சிந்து (21)-வை பல வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து தங்களுடைய வீடுகளில் காதல் பற்றி எடுத்துக்கூறி, திருமணத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், இருவரையும் பிரித்து வைக்க முடிவெடுத்தனர்.

இதனால் ம னமுடைந்த இருவரும், தங்களுடைய உ யிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து பூ ச்சிக்கொ ல்லி மருந்தை கு டித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், விவசாய நிலைத்தில் கிடந்த இருவரின் உ டல்களையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி!!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்..

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கொ லை செய்து இரண்டு நாட்களுக்கு பின் ச டலத்தை எ ரித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் யாதவ்(24). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ த்திரமடைந்த அவருடைய மனைவி குல்தீப்பை கொ லை செய்து அவருடைய ச டலத்தை படுக்கை பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார்.

அன்றைய தினமே கணவர் கா ணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து தேடிவிட்டு இரண்டு நாட்களுக்கு பின் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் படுக்கை பெட்டிக்குள் இருந்த ச டலம் து ர்நாற்றம் வீசியதால், அறைக்கு தீவை த்து ச டலத்தையும் சேர்த்து எ ரித்துள்ளார். பின்னர் எரிந்து நாசமான குப்பைகளை பண்ணை தோட்டத்தில் வீசிவிட்டு வருமாறு மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அங்கு சென்ற மகன் குப்பையை வீசியபோது உள்ளே முடி மற்றும் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளான்.

இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நிஷா கொ லை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞன் செய்த அ திர்ச்சி செயல்!!

இளைஞன் செய்த அ திர்ச்சி செயல்

தமிழகத்தில் உரிமையாளரின் கண்முன்னே பல லட்சம் ரூபாய் பணத்துடன் காரை ஓட்டுனர் க டத்தி சென்ற சம்பவத்தில், அந்த நபர் உ ல்லாச வாழ்க்கைக்காக தான் இப்படி செய்தேன் என்று அ திர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

கோயமுத்தூர் மாவட்டம் நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 4-ஆம் திகதி தோட்டத்தை விற்று 40 லட்சம் பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது பணப்பையை எடுத்து வருமாறு ஓட்டுனர் கிஷோரிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார்.

ஆனால் ஓட்டுனர் கிஷோர் திடீரென்று பணத்துடன் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

பணத்துடன் சென்ற கிஷோர் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் 15 நாட்களாக புதுச்சேரி, பெங்களூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணத்தை செலவு செய்து சுற்றி திரிந்துள்ளார் என்பது பொலிசாருக்கு தெரியவந்ததால், இரண்டு பேரையும் கையும், களவுமாக பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் பொலிசார், திருடிய பணத்தில் அவர்கள் வாங்கிய நகை, செல்போன் மற்றும் 35 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடமிருந்த காரையும் கைப்பற்றினர். கிஷோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உல்லாசமாக பணம் செலவழித்து வாழ்வை மகிழ வேண்டும் என்பது தனது ஆசை என்பதால், இப்படி பணத்தை கொ ள்ளையடித்து சென்றதாக கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தர்ஷிகா ஜெகன்னாதன் கொ லை வழக்கு : இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்!!

தர்ஷிகா ஜெகன்னாதன்

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான தர்ஷிகா ஜெகன்னாதனை நடு ரோட்டில் பட்டப்பகலில் வெ ட்டிக் கொ ன்ற அவரது முன்னாள் கணவர், ஏற்கனவே அவரை கொ ன்றுவிடுவதாக மி ரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்ஷிகாவை கொ லை செய்வதற்கு இரண்டு வாரங்கள் முன்பே, சசிகரன் தர்ஷிகாவின் சகோதரனிடம் அவரை கொ ன்றுவிடப்போகிறேன் என்று மி ரட்டியிருப்பதாக பிரபல கனேடிய பத்திரிகை ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அலுவலகம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்ஷிகா பேருந்து நிலையத்திலிருந்து Meadowvale சாலையிலுள்ள தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவரை கொ லை செய்வதற்காக வழியில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார் சசிகரன்.

பின்னர் க த்தியால் தர்ஷிகாவை வெ ட்டிய சசிகரன், அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் மிருகத்தனமாக வெ ட்டியிருக்கிறார். தர்ஷிகா வெ ட்டுப்பட்டு உ யிரிழந்து தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் தொடர்ந்து வெ ட்டியதாக அதே கனேடிய பத்திரிகை தெரிவிக்கிறது.

சசிகரன் தர்ஷிகாவை வெ ட்டும்போது உ யிர் பயத்தில் தர்ஷிகா ஓட, அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்திருக்கிறது அவரது மரண ஓலம். இந்த வ ன்முறையை காட்டும் வீடியோக்களை சேகரித்துக்கொண்டிருகிறார்கள் பொலிசார்.

சம்பவம் நடந்த நீண்ட தெருவில் இருந்த பல வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கமெராக்கள் முன்னும் பின்னுமாய் அந்த கோரக்காட்சிகளை பதிவு செய்திருக்கக்கூடும். அத்துடன் ஒரு எட்டு வயது குழந்தையும் அந்த சம்பவத்தின் ஒரு பகுதியை கண்ணால் கண்டதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

கொ லை செய்யப்பட்டவரே பொலிசாரை அழைத்த சோகமும் இந்த சம்பவத்தில் நடைபெற்றதோடு, அதில் பதிவாகியிருக்கும் ம ரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

கொ லை செய்துவிட்டு தப்பியோடின சசிகரன், இரத்தம் தோய்ந்த உடையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடையும்போதும் கடுமையான போ தையிலிருந்ததாகவும், தன்னை கைது செய்ய முயன்ற பொலிசார் ஒருவரை கு த்த முயன்றதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தர்ஷிகாவின் தந்தை மேலும் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். 2015இல் சசிகரனுக்கும் தர்ஷிகாவுக்கும் திருமணம் நடந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் திகதிதான் கனடாவிலுள்ள சசிகரன் வீட்டுக்கு சென்றுள்ளார் தர்ஷிகா.

அங்கு சென்றபின், யாழ்ப்பாணத்திலிருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கு சசிகரன் அனுமதிக்காதது தர்ஷிகாவை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. அத்துடன் அவரது பாஸ்போர்ட் மற்றும் பிற பயண ஆவணங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார் சசிகரன்.

பின்னர் சசிகரன் போ தைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்ற விடயமும் அவர் மன நோய்க்காக சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களும் தர்ஷிகாவின் கையில் சிக்கியுள்ளன.

அத்துடன் போ தைப்பொருட்களும் சசிகரனின் வீட்டில் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு சசிகரனின் அண்ணனை அழைத்த தர்ஷிகா, அது குறித்து விசாரிக்க, அவரோ, சசிகரனுக்கு சில பிரச்னைகள் இருந்தது உண்மைதான், ஆனால் அவர் தற்போது குணமாகிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இது தொடர்பாக வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி ச ண்டை ஏற்பட, ஒரு முறை சசிகரன் தர்ஷிகாவை அ டிக்கும்போது, உடனடியாக யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது தந்தையை தொலைபேசியில் அழைத்துள்ளார் தர்ஷிகா.

அவர் யாழ்ப்பாணத்திலிருந்தே பொலிசாருக்கு தகவலளிக்க, அவர்கள் வந்து சசிகரனை கைது செய்துள்ளார்கள். தர்ஷிகாவை சந்திக்கக்கூடாது என்று நீதிமன்றம் உததரவிட்டதையும் மீறி மீண்டும் மீண்டும் அவரை சந்தித்துள்ளார் சசிகரன்.

அப்படி 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருமுறை தர்ஷிகாவை சந்தித்தபோது, இரண்டு நாட்களில் உன்னைக் கொ லை செய்துவிடுவேன் என்று சசிகரன் மிரட்டியதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடைசியாக நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டு 29 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டபின் பிணையில் விடுவிக்கப்பட்ட சசிகரனுக்கு, தர்ஷிகா இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தொலைவுக்குள் வரக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

அதையும் மீறித்தான் தர்ஷிகாவை கொ லை செய்திருக்கிறார் சசிகரன். இன்னும் சில நாட்களில் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வந்துவிடும், இனியாவது மகள் நிம்மதியாக வாழலாம் என தர்ஷிகாவின் பெற்றோர் நம்பியிருந்த நிலையில்தான் அவரை கொ ன்றிருக்கிறார் சசிகரன்.

வேலைக்கு சேர்ந்த மறுதினமே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் வேலைக்கு சேர்ந்த மறுதினமே 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் டானிடா ஜூலியஸ் என்கிற 24 வயது இளம்பெண் நேற்றைக்கு முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

நேற்றைய தினம் வேலைக்கு சென்ற அவர் காலை 10 மணி முதல் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 6.45 மணியளவில் 8வது மாடிக்கு வேகமாக சென்ற டானிடா திடீரென அவசர கால வெளியேறும் வழியின் மூலம் வெளியில் குதித்துள்ளார்.

முதல் மாடியில் இருந்த இரும்புக்கம்பியில் அவருடைய தலை மோதி இ ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், டானிடாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொ லையா? அல்லது த ற்கொ லையா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : நண்பன் வெளியிட்ட முக்கிய தகவல்கள்!!

கனடாவில்..

கனடா Scarborough பகுதியில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் கொ லை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் நண்பர் ஒருவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இளைஞன் தனது நண்பர்களுடன் கைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு திடீரென வந்தவர்கள் அவர் மீது து ப்பாக்கி பி ரயோகம் மேற்கொண்டுள்ளனர். து ப்பாக்கி சூ ட்டில் படுகாயமடைந்த சாரங்கன் பரிதாபமாக உ யிரிழந்தார். இந்த ம ரணம் தொடர்பில் அவரது உயிர் நண்பன் சது ஸ்ரீ தகவல் வெளியிட்டுள்ளார்.

13 வருட உயிர் நண்பரை தேடி சென்ற போது அவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். இளம் வயதில் எங்களை விட்டுச் சென்றுள்ளார். எனது நண்பனுக்கு மெழுகுத்திரி வைத்து அஞ்சலி செய்ய வேண்டிய நிலைமை வரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சாரங்கன் மிகவும் எளிமையான, கடின உழைப்பாளி, அவரது குடும்பத்தை நன்கு கவனித்துக் கொண்டவர். அவர் கட்டுமானத்துறையிலும் அச்சிடும் தொழிலிலும் பணியாற்றினார் என நண்பன் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் தனது சகோதரிகளையும் தனது குடும்பத்தை நேசித்தார். அவர் தனது உறவினர்களை நேசித்தார். அவர் தனது உடன்பிறப்புகளைப் போலவே நம் அனைவரையும் நடத்தினார். அவரது ம ரணம் பலரை காயப்படுத்தியுள்ளது” என சாரங்கனின் உறவினர் திஷானி ராஜ் தெரிவித்துள்ளார்.

சந்திரகாந்தன் ஒருபோதும் எந்தவொரு குழுவினருடன் இணைந்து செயற்படவில்லை. இதனால் அவர் ஏன் கொ லை செய்யப்பட்டார் என எங்களுக்கு புரியவில்லை என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரகாந்தனை 20 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்த குடும்ப நண்பர் பிரகாஷ் சோமா, அவர் ஒரு நல்ல மனிதர் எனவும், எந்தவொரு பிரச்சினைக்கும் செல்ல மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை!!

எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்துள்ள நாடாக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இந்த விடயத்தை பா லியல் சார்ந்த நோய்கள், எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான சான்றிதழ் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக அமைப்பின் பிரதி பணிப்பாளர் லிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

379770

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் கர்ப்பமடைந்திருந்தால், அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு அந்த வைரஸ் பரவாமல் மருந்துகள் மூலம் தடுக்கும் முறையை இலங்கை மருத்துவத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

திருமணம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் கோர விபத்தில் பலி!!

கோர விபத்தில்..

வெல்லவாய மொனராகலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த போது,

எதிராக வந்த மோட்டார் வாகனத்துடன் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெல்லவாய, ஆனபல்லம பிரதேசத்தை சேர்ந்த அம்பான விதானகே திசர ஷாலிக என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இளைஞர்களின் மகத்தான கண்டுபிடிப்பு!!

மகத்தான கண்டுபிடிப்பு

இலங்கையில் ஏரிகளை சுத்தம் செய்வதற்காக இரண்டு இளைஞர்கள் இணைந்து இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் சர்வதேச போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றிற்கு தெரிவாகியுள்ளனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிறுவன MIT (Massachusetts Institute of Technology)யினால் புதிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

MIT Solve Challenge 2019 என்ற போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை இளைஞர்கள் தெரிவாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் பங்குப்பற்றிய இந்த போட்டியின் இறுதி 60 பேரில் இலங்கை இளைஞர்களும் தெரிவாகி உள்ளனர்.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள், வர்த்தகர்கள் தலைவர்களின் பங்களிப்புடன் இறுதி போட்டி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ளது.

பேருந்தில் மோதுண்டு நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு இளைஞன் பலி!!

பேருந்தில் மோதுண்டு..

அனுராதபுரத்தில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலாவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், எப்பாவெல பிரதேசத்தில் தலாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேருக்கு மோதியுள்ளது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளை 300 மீற்றருக்கும் அதிக தூரம் இழுத்து சென்றே பேருந்து நின்றுள்ளது. பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தையடுத்து சாரதி மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எப்பாவெல பொலிஸாார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!!

உதைபந்தாட்டப் போட்டிகள்

வவுனியா மாவட்ட பாடசாலைகள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (21.09) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைப்பாந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 12 வயது பிரிவு ஆண், பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பமாகியது.

25 பாடசாலைகள் பங்குபற்றிய குறித்த போட்டியானது விறுவிறுப்பாக இடம்பெற்றது. இவ் உதைப்பந்தாட்ட போட்டியை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கமலதாசன், சமூக சேவையாளர்கள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் பாதையினை கடக்க முற்பட்டவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

விபத்து

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (22.09.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டு சந்தியில் பாதையின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பாதையினை கடக்க முற்பட்ட 40வயது மதிக்கத்தக்க திருநாவற்குளத்தினை சேர்ந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும் பாதையினை கடக்க முற்பட்ட நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது வீதியினூடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட சமயத்திலிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெடுங்கேணியில் 8 வயது மாணவி து ஸ்பிரயோக முயற்சி : இருவர் கைது!!

வவுனியா நெடுங்கேணியில்..

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவரை பா லியல் து ஸ்பி ரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் நேற்று (21.09) பாடசாலையில் மேலதிக வகுப்பு நிறைவடைந்த பின் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த போது குறித்த பாடசாலையில் கட்டட நிர்மாண வேலைகளை செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் குறித்த சிறுமியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ய முயற்சித்ததாக தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நெடுக்கேணி பொலிசாரால் இருவர் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செயள்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் செப்டம்பர்-23 இல் சுகவீன லீவு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு! 

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் செப்டம்பர்-23 இல் ஒருநாள் சுகவீன லீவு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில்

23.09.2019 ஆந் திகதிய ஒரு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தல்

நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் படியாக ரூபா 50,000/= இனை வழங்குவதற்கு 24.09.2019 ஆந் திகதியில் அமைச்சரவை அனுமதி வழங்கப்படவுள்ளது, அரச சேவையில் பல்வேறு சேவைகளில் உள்ள அலுவலர்கள் பணிபுரிகின்ற போதிலும் குறிப்பிட்ட சில சேவையாளர்களின் கோரிக்கைகள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

நிறைவேற்றுதர சேவைக்கு மேற்படி படியை வழங்கும் போது ஏனைய சேவைகளின் சம்பளத்தில் பாரிய முரண்பாடுகள் ஏற்படவுள்ளது. இதனால் ஏனைய சேவையாளருக்கும் பொருத்தமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படாதவிடத்து  அநீதி இழைக்கப்படவுள்ளது.

இந்த அநீதிக்கு எதிராக எதிர்வரும் 23.09.2019 ஆந் திகதி திங்கட்கிழமையன்று ஒரு நாள் சுகவீன லீவை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பல்வேறு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கங்கள், அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் சங்கம், இணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, கிராம உத்தியோகத்தர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை முன்னேற்ற ஆசிரியர் சங்கம் உட்பட்ட 19க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்   கூட்டாக இணைந்துள்ளன.இத்  தொழிற்சங்க நடவடிக்கைக்கு  வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் தனது பூரண ஆதரவினை  தெரிவிப்பதுடன் அனைத்து அபிவிருத்தி  உத்தியோகத்தர்களும் 23.09.2019 ஆந் திகதி திங்கட்கிழமை அன்று ஒரு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து ஒத்துழைப்பு வழங்கி  எமது பலத்தை வெளிக்கொணர்வதற்கு ஒன்றிணையுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

 வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் எதிர்வரும் 23.09.2019 (எதிர்வரும் திங்கட்கிழமை) அன்று இடம்பெறும் அரச உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். எனவே வட மாகாணத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் மாகாண சேவையினைச் சேர்ந்த அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – பயிலுனர் தரத்தினைச் அனைத்து உத்தியோகத்தர்களையும் இப் போராட்டம் பூரண வெற்றி பெற முழுமையான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்.

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்களால் பதற்றநிலை!!

பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தை..

வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை நேற்று (20.09) இரவு முற்றுகையிட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் தன்னை தா க்கியதாக தெரிவித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்கியதாக தெரிவித்த முறைப்பாடு பொய் எனவும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்ககோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த என்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

இதேவேளை இளைஞரை தா க்கிய பிரதேசசபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்க சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தா க்கியதாக தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிசார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியை கைது செய்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன், முறைப்பாடளித்த பிரதேசசபை உறுப்பினர் மற்றும் தா க்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் மக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை ஆரம்பம்!!

பனை விதைகளை நடும் நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இன்று (20.09.2019) ஐநூறு பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளக்கரை அண்டிய பகுதிகளில் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களால் இரண்டாம் கட்டமாக பனை விதைகளை விதைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் குளக்கரை அண்டிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.