பகல் வேளையிலேயே இருளில் மூழ்கிய நாடுகள் : இலங்கை மக்களுக்கு கிடைக்காமல் போன அரிய வாய்ப்பு!!

இருளில் மூழ்கிய நாடுகள்

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நேற்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்பட்டிருந்தது. எனினும் இந்த அரிய நிகழ்வினை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களுக்கு கிட்டாமல் போயிருந்தது.

இந்த சூரிய கிரகணமானது நம் நாட்டு நேரப்படி இரவு 10:24 மணிக்கு நிகழ்ந்தமையே அதற்கு காரணமாகும். எனினும் பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு பகல் வேளையிலேயே இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்தமையால் தெளிவாக தென்பட்டுள்ளது.

இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன் சிலி நாட்டின், லா செரீனா எனும் இடத்தில் அந்த நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணி முதல் மாலை 5:46 மணிவரை கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் சிலி நாட்டிலிருந்து சூரிய கிரகணமானது நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா-2019

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும்

07.07.2019 ஞாயிற்றுக்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள்  இடம்பெறவுள்ளது.

12.07.2019 வெள்ளிக்கிழமை 6ம் நாள் உற்சவம் இரவு – மாம்பழத்திருவிழாவும்,

13.07.2019 சனிக்கிழமை 7ம் நாள் உற்சவம் – வேட்டைத்திருவிழாவும் கிராம ஊர்வலமும் இடம்பெறும்,

13.07.2019 ஞாயிற்க்கிழமை 09ம் நாள் உற்சவம் காலை – புதிதாக அமைக்கப்பட்ட 11.30 மணியளவில் சித்திரதர் வெள்ளோட்ட பெருவிழாவும்,
இரவு – சப்பறத திருவிழாவும்,

14.07.2019 திங்கக்கிழமை 10ம் நாள் காலை_ பஞ்சமுக விநாயகர் 09.30 மணியளவில் விநாயகர் ரதரரோகணம் ( புதிய சித்திரதேரில் எழுந்தருளி வெளிவீதியுழா இடம்பெற்று தொடர்ந்து தேரடி அர்ச்சனையை தொடர்ந்து பஞ்சமுக விநாயகருக்கு பச்சை சர்த்தப்பட்டு பஞ்சமுக அர்ச்சனை, பிராச்சித்த அபிசேகம் இடம்பெறும். #இரவு –தேரடி உற்சவம்,

15.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 11 நாள் உற்சவம் – தீர்த்தத் திருவிழா,
இரவு – துவஜாவரோகணம் (கொடியிறக்கம்),

17.07.2019 புதன்கிழமை காலை – சங்கபிஷேகமும் திருவிழாவுடன் இரவு-பூங்காவனத்துடன் நிறைவுபெறும்.

18.07.2019 மாலை வைரவர்சந்தியுடன் நிறைவு பெறும்

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கொடி![?]

வவுனியா தோணிக்கல்  ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று  02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பிகையின் கொடியேற்றம்![?][?]

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று  02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

வவுனியாவில் தேசிய மொழிகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு!!

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் ஜூலை 1 முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் அவர்களின் நெறியாள்கையின் கீழ் வவுனியா சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு பயிற்சி நிலையத்தில் தேசிய மொழிகள் தின விழிப்புணர்வு செயலமர்வு இன்று (03.07.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

செயலமர்வில் மொழி உரிமை மீறல், மொழியின் தேவை, மொழி ஏன் அவசியம் மொழி சம்பந்தமான விளக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இவ் விழிப்புணர்வு செயலமர்வில் சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா செட்டிகுளம் மாணவர்கள் போதைப்பொருளை தடைசெய்யக் கோரி ஊர்வலம்!!

போதைப் பொருள் பாவனையை தடை செய்யக் கோரி வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம் ஓன்றினை இன்று மேற்கொண்டதுடன், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஓன்றினையும் கையளித்தனர்.

செட்டிகுளம் மகாவித்தியாலத்தின் முன்றலில் ஆரம்பமான மாணவர்களின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஊர்வலம் செட்டிகுளம் மதவாச்சி வீதி வழியாக சென்று வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தை அடைந்தது.

கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மோதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன் அவர்களிடம் செட்டிகுளம் பகுதியில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு மாணவர்கள் மகஜர் ஓன்றினையும் இதன்போது கையளித்தனர்.

இவ் ஊர்வலத்தில் செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வீட்டில் தனியாக இருந்த தாய் : இரவு வேலை முடிந்து காலையில் வீட்டுக்கு வந்த மகன் கண்ட காட்சி!!

மகன் கண்ட காட்சி

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழு த்து அறு த்து கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை சில காலத்துக்கு முன்னர் பிரிந்தார்.

இதையடுத்து தனது மகன்களான உமாசங்கர் மற்றும் அபிஷேக்குடன் வசித்து வந்தார். உமாசங்கருக்கு கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார். இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார். இந்நிலையில் இரவுவேலை முடிந்து வழக்கம் போல இன்று காலை அபிஷேக் வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் கதவு எப்போதும் மூடியே இருக்கும் என்ற நிலையில் இன்று கதவு திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்தார் அபிஷேக். அப்போது உமா கழு த்து அறு பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து உமாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். முதற்கட்ட விசாரணையில் பணம், நகைக்காக உமா கொ லை செய்யப்படவில்லை என தெரியவந்தது.

பொலிசார் கூறுகையில், வீட்டினுள் பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. இந்நிலையில், வீட்டில் உமா தனியாக இருப்பதை அறிந்து கொ லையாளி வந்திருக்கக்கூடும். அவர் உமாவுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். அதனால்தான் உமா கதவைத் திறந்திருக்கலாம்.

சமையல் அறையில் உமாவின் கழு த்தை அறுத்து, பின்னர் படுக்கையறையில் படுக்க வைத்துள்ளனர். சமையல் அறை மற்றும் படுக்கை அறையில் ரத் தக் கறை உள்ளது. கொ லை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறோம் என கூறியுள்ளனர்.

சொந்த தாயாரே என்னை 5 முறை துப்பாக்கியால் சுட்டார் : மனம் திறக்கும் இளம்பெண்!!

மனம் திறக்கும் இளம்பெண்

சுவிட்சர்லாந்தின் Lausanne பகுதியில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர், தமது இந்த நிலைக்கு காரணம் தாயாரால் 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதே என தெரிவித்துள்ளார். சொந்த தாயாரே தம்மை துப்பாக்கியால் சுட்டதன் காரணம் குறித்து இதுவரை தமக்கு தெரியாது என கூறும் 29 வயதான பாட்ரிசியா மோரி, ஆனால் தமது தாயார் அன்று தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார். 5 முறை சுடப்பட்டதில் ஒரே ஒரு குண்டு மட்டும் அவரது வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்டது. அச்சம்பவத்திற்கு பின்னர் மோரி இதுநாள் வரை சக்கர நாற்காலியிலேயே காலம் தள்ளுகிறார்.

பல முறை தமது தாயார் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறும் மோரி, ஆனால் அன்று அவர் அதை செயல்படுத்தினார் என்றார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இரண்டுமுறை சுயநினைவை இழந்ததாக கூறும் மோரி ஒருமுறை மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவர் தமது நெஞ்சைப் பிளந்து, உள்ளே சிக்கியிருந்த தோட்டா ஒன்றை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து 3 நாட்கள் கோமா நிலையில் வைக்கப்பட்டார் மோரி. பூரண குணமடையாத நிலையில் 6 மாத காலம் கீழங்கவாதம் தொடர்பான சிகிச்சையில் இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த தோட்டா ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், மோரியின் 63 வயது தாயாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் இருக்கும் இந்த நிலையில் தமது தாயார் ஒருமுறை கூட தம்மை சந்திக்கவில்லை என கூறும் மோரி,

தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது மிக அதிகம் எனவும், அவரது உடல் நிலையை கருத்தில் கொள்ளாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தண்டனை காலம் முடிந்த பின்னர் அவரை தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கூறும் மோரி, இனிமேல் ஒரு தாய் மகள் உறவு தங்களுக்குள் இருக்குமா என தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஒரு நல்ல வாழ்க்கையை இருவரும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதற்கான நிதி திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் மோரி தெரிவித்துள்ளார்.

இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல : நாங்கள் செய்து முடிப்போம் : இலங்கை அணி வீரர் சவால்!!

இலங்கை அணி வீரர் சவால்

இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை 8 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி, 3 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

அடுத்ததாக ஹெடிங்லியில் நடக்க இருக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட இலங்கை அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் தனஞ்செய டி சில்வா இந்தியாவுடனான போட்டி குறித்து கூறுகையில், ‘இந்திய அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி அல்ல. கடந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்திய அணியை வென்றிருக்கிறோம்.

ஐ.சி.சி போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிகமான நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்று போட்டியை உயர்ந்த இடத்தில், அதாவது முடிப்போம்.

இந்திய அணியை எங்களால் வெல்ல முடியும். ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்காகவே முயற்சித்து வருகிறோம். இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால், உலகக்கோப்பைத் தொடரில் 5வது இடத்துக்கு உயர்வோம்’ என தெரிவித்துள்ளார். இலங்கை அணி கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளுக்கு செல்லும் பள்ளிப்படிப்பை தாண்டாத தமிழ்ப்பெண் : கோடிகளில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!

தமிழ்ப்பெண்

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார்.

தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் சகீலா பரூக். பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்பதன் மூலம் தற்போது ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.

சகீலா கூறுகையில், பள்ளியில் படிக்கும் போது ரசனையாக ஓவியம் வரைவேன், ஆனால் அதற்காக எதுவும் பயிற்சி எடுக்கவில்லை. அதனுடன் வீட்டின் அருகில் உள்ளவர்களின் கிழிந்த துணிகளைத் தைத்து கொடுத்து பணம் சம்பாதிப்பேன். பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. பின்பு மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்கலாம் என முடிவெடுத்தேன்.

13 வருடத்துக்கு முன்பு விற்பனைக்காக எகிப்து நாட்டுக்கு போன போது என அதிர்ச்சி காத்திருந்தது. நான் அங்கு 1,000 டொலர்களை தான் கொண்டு போனேன். அப்போது கார் ஓட்டுனர் 100 டொலரை வாங்கி ஏமாற்றிவிட்டார்.

இதோடு நான் எடுத்து கொண்டு போன மண்பாண்டப் பொருள்களும் பெரிதாக விற்பனையாகவில்லை. பின்னர் தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ள தொடங்கினேன்.
உள்ளூரிலேயே விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என முடிவு செய்து கடுமையாக உழைக்க தொடங்கினேன்.

தொழிலை நடத்தி கொண்டே என் பொண்ணுங்க இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன். தொழில் பயணமா துபாய், எகிப்து, சீனா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகளுக்குப் நான் சென்றுளேன் என கூறியுள்ளார். சகீலா விரைவில் அமெரிக்காவிலும் தனது விற்பனையகத்தை தொடங்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!!

திருகோணமலை – கிண்ணியாவில் சிறுமி ஒருவரை துஷ் பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பினி யாக்கிய நபரொருவருக்கு இரண்டு வருடம் கட்டாய சிறைதண் டனையும், நஷ்டஈடும் விதித்து திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு இரண்டு வருடம் கட்டாய சிறைதண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், மூன்று வருட சிறைதண்டனையும்,பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மணியரசம்குளம்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய, முகமது சரீப் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிண்ணியா – மணிராசம்குளம் பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ் பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப் பிணியாக்கிய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கெதிராக வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் குற்றத்தினை புரிந்துள்ளார் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு குற்றவாளிக்கு சிறை தண்டனை, நஷ்டஈடும் விதித்து திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள் : கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம்!!

களுத்துறை கடற்கரையில் இளம் காதலர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த 26ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் கடல் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

21 மற்றும் 18 வயதான காவிந்த சில்வா, ஸ்ரீமாலி என்பவர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் நாரம்மல மற்றும் பயாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த இருவரது சடலமும் வேறு வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகின் மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இலங்கை!!

முதலிடம் பிடித்த இலங்கை

உலகின் மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக உலக புகழ் பெற்ற லோன்லி ப்லெனட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த வருடத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் மிக சிறந்த நாடுகளில் இலங்கை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் மிக சிறந்த சுற்றுலா வழிக்காட்டி புத்தகமாக கருதப்படும் லோன்லி ப்லெனட் சஞ்சிகை, கடந்த வருடம், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா தளமாக இலங்கை அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இலங்கை இந்த பட்டியலில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் மீண்டும் இலங்கை இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக லோன்லி ப்லெனட் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜேர்மனும், மூன்றாம் இடம் சிம்பாபேவிற்கும் கிடைத்துள்ளது. அடுத்த இடங்களில், பனாமா, கிர்கிஸ்தான், ஜோர்தான், இந்தோனேசியா, பெலரெஸ், சாப் டோம், பின்சிபே மற்றும் பேலிஸ் ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

வவுனியாவில் பெண்களின் தங்குமிடத்திற்கு தொல்லை கொடுத்தவர் கைது!!

தொல்லை கொடுத்தவர் கைது

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஓன்றிற்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஓன்றில் நகரில் அரசாங்க வேலை செய்யும் பெண்கள் சிலர் வாடகைக்கு தங்கியுள்ளனர். இதையறிந்த சிலர் குறித்த வீட்டிற்கு இரவு வேளைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டு உரிமையாளரான வயது முதிர்ந்த பெண் இதனை அப்பகுதி இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இளைஞர்கள் குறித்த நபர்களை மடக்கி பிடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நபர் ஓருவர் குறித்த வீட்டிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குறித்த நபரை ஓப்படைத்துள்ளனர். இதன்பின் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் குறித்த நபரை எச்சரித்து நேற்று (02.07) பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் வித்துவம் சஞ்சிகை வெளியீடும், பரிசளிப்பு விழாவும் இன்று (02.07.2019) இடம்பெற்றது.

படசாலையின் அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி, விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

முதலாவது வித்துவம் சஞ்சிகையை வவுனியா மாவட்டச் செயலர் ஐ.எம்.கனீபா வெளியீடடு வைத்தார்.

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள்!!

வவுனியாவில் நகர்ப் பகுதி உட்பட பல இடங்களில் ஊழியர் நலன்புரியினை உடன் தீர்க்குக, அரச வங்கியின் ஓய்வூதிய பிரச்சினையினை உடன் தீர்க்குக என்ற வசனங்களைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் தமிழ், சிங்களத்தில் விளம்பரப்பலகையில் பரவலாக பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இத் துண்டுப்பிரசுரங்களுக்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உரிமை கோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.