வெயில் காலம் முடிவதற்குள் சோமாலியாவில் வறட்சியால் 20 லட்சம் மக்கள் பசியால் பலியாகப் போகிறார்கள் என ஐநா தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க நாாடுகளுள் ஒன்றான சோமாலியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. கடுமையான வறட்சி காரணமாக வெயில் காலம் முடியும் முன்பே பசியால் 20லட்சம் மக்கள் பலியாக கூடும் என்று ஐநாவின் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.
கால்நடைகள் பயிர்கள் கூட அழிந்து வரும் சூழலில் மீட்புபணிக்கே சுமார் 70மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்கிறார் ஐநா துணை செயலாளர் மார்க்லோலாக்.
உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டும் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளுக்கு ஐநா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.
கொமர்சல் வங்கி சமூகப்பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புடன் கொமர்சல் வங்கி வவுனியா கிளை மூலமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம் நேற்று(06.06.2019) “உலகிற்கு உயிரூட்டும் மரத்திற்கு உயிரூட்டுவோம்” எனும் தலைப்பில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா கொமர்சல் வங்கி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்குபற்றினர்.
கொமர்சல் வங்கியின் இது போன்ற சமூகப்பணிகள் கடந்த காலங்களிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற Brain Camp என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாண இந்தக்கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்ப்பட்டுள்ளார்.
STEP (சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம்) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. எதிர்வரும் யூன் மாதம் 9- 15 திகதிவரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.
பத்து நாடுகள் பங்குகொள்ளும் இந்த விஞ்ஞான ஆய்வு முகாமில் முதல் முறையாக இலங்கை பங்குபற்றுகிறது. இலங்கைக்குழுவில் நான்கு பேர் அகில இலங்கை ரீதியாக தெரிவாகியுள்ளனர். ஒன்பது மாகாணங்களிலிருந்தும் விஞ்ஞானத்துறையில் தேசிய மட்டத்தில் அடைவுகளை கொண்டிருந்த மாணவர்களுக்கு பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் இவர்கள் தெரிவாகியிருந்தனர். இதில் வடமகாணத்திலிருந்து யாழ்ப்பாண இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவாகி சிங்கப்பூர் பயணமாகிறார்.
STEP (சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம்) 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அது அதன் 20 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கிறது. இதன் திட்டங்கள் சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகள், தலைமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, விளையாட்டு மற்றும் சாதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
ஆசியாவில் இளைஞர்களுக்கிடையில் நட்புப்பாலத்தை உருவாக்குதல்;, நல்லெண்ணம், மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இளைஞர் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவாக அதன் கவனத்தை கூர்மைப்படுத்தி வருகின்றது.
வெவ்வேறு கலாச்சாரங்கள் தமக்கிடையே தொடர்புகளை வளர்த்துக் கொள்வது , பரஸ்பரக் கற்றல் மற்றும் புரிதல், பரிமாற்றம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, சமூக மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதனூடாக சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை வளர்க்க முயற்சிக்கிறது. ‘மூளை முகாம்’ இளைஞர்களை ஒரு பொது சமூகமாக இணைக்க மற்றும் பொது நலன்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் நேற்று (06.06) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது 25) என்ற இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.
பட்டா ரக வாகனம் சரியான பாதையூடாக மன்னார் நோக்கி பயணித்த போது, பாதையூடாக நேர் எதிரே மோட்டார் சைக்கில் பயணித்த போது விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்த நபர் மன்னார் பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் காணொளிகளை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
குறித்த நபர் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2010ம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற குமார் என்ற இலங்கை அகதியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு செலும் போது அவருக்கு 27 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ள நிலையில், அண்மையில் விலாவூட் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று தெரிவித்துள்ளதாவது,
“ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. இந்நிலையில், குறித்த தமிழ் அகதி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அத்துடன், அவரிற்கு இழப்பீடு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் எனவும்” ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை – ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.”
இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஆனால், இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.
ஆட்சி மாற்றம் வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்களான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி” – என்றார்.
கண்டி – ஹீரஸ்ஸகல தொடரூந்து கடவைக்கு அருகில் சிற்றூர்தியொன்று தொடரூந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் சிற்றூர்தியில் பயணித்த இருவரும் தொடரூந்து கடவையின் காவலாளியுமே காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
விபத்து இடம்பெறும் போது தொடரூந்து கடவை ஒழுங்காக மூடப்படாமல் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பண்டாரவளை – வெலிமடை வீதியில் திகனதென்ன பாலத்திற்கு அருகில் சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல் பண்டாரவளையில் இருந்து வெலிமடை திசை நோக்கி பயணித்த சிற்றூத்தியே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்படும் போது சிற்றூர்தியில் சாரதி மாத்திரே இருந்துள்ள நிலையில், அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் சிற்றூர்திக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வீதியில் காணப்படும் வழுக்கல் தன்மை காரணமாக சிற்றூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு ட்விங்கிள் சர்மா (3) என்ற மகள் உள்ளார். கடந்த 31-ம் திகதி ட்விங்கிள் திடீரென காணாமல் போன நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொலிஸ் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அலிகார் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த துப்புறவு தொழிலாளர்கள் அங்கு சோதனை செய்த போது ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ட்விங்கிளின் உறவினர்கள், சடலத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். விசாரணையில், யாரோ ட்விங்கிளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் குழந்தை மயங்கியுள்ளது.
பின்னர், ட்விங்கிளின் ஒரு கையை வெட்டியதோடு, ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துள்ளனர். இறுதியாக, குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க அவள் உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்து குப்பையில் வீசியது தெரியவந்தது.
இது பற்றிப் பேசிய ட்விங்கிள் தாத்தா, எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஸாகித் என்பவரின் மீது தான் சந்தேகமாக உள்ளது. நாங்கள் அவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். இது தொடர்பாக அவர் எங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கூறினார்.
இதன் அடிப்படையில், ஸாகித் மற்றும் அவருக்கு உதவி செய்த அஸ்லாம் என இருவரை கைது செய்த பொலிசார் அவர்களை விசாரித்தனர். அப்போது இருவரும் ட்விங்களை கொன்றதை ஒப்பு கொண்டனர்.
இதனிடையில் நாங்கள் புகார் அளித்த உடனேயே குழந்தையைத் தேடியிருந்தால், தற்போது என் மகள் இறந்திருக்க மாட்டாள். காவல் துறையினரின் அலட்சியம் இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டுவிட்டரில் #JusticeForTwinkle என்ற டேக்கில் குழந்தையின் சாவுக்கு பலரும் நீதி கேட்டு வருகின்றனர்.
இதே விடயத்தை சில நடிகர், நடிகைகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை மருத்துவ தாதி துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
அங்கு மருந்து ஏற்றுவதற்காக குழந்தையின் கையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அதை மருத்துவ தாதி ஒருவர் பிரித்தார். அப்போது குழந்தையின் கட்டை விரலை அவர் தவறுதலாக துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் விரலை மீண்டும் சேர்த்து விட்டது.
எனினும் அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெறுமா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை வேறு நவீன மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக குறித்த மருத்துவ தாதி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மலாவி நாட்டில் 64 வயது முதியவரை 17 வயது சிறுமி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மலாவியின் மிகின்ஜி மாகாணத்தை சேர்ந்தவர் தேக்ஸ்டர் பிரி (64). இவரும் 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதலுக்கு சிறுமியின் பெற்றோர் ஆதரவு கொடுத்ததோடு சட்ட பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக தங்கள் மகளுக்கு 18 வயதாகிவிட்டது, அதனால் அவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என பொய் கூறியுள்ளனர்.
இதையடுத்து முதியவர் பிரி, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சிறுமி கூறுகையில், நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன், மரணத்தை தவிர வேறு ஏதும் எங்களை பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.
சிறுமியும் அவர் பெற்றோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் முதியவரின் சொத்து மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடன் திருமணம் நடந்ததா என கேள்வி எழுந்துள்ளது.
42 வயது வித்தியாசம் உள்ள ஒரு நபரை மணம் செய்து கொண்டுள்ள ஒரு இளம்பெண், உடற்பயிற்சி நிலையத்தில் அவரைக் கண்டதும் காதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.
முதன்முதலில் உடற்பயிற்சி மையத்தில் சந்தித்த டெக்சாஸை சேர்ந்த Courtney Roman (23)ம் Robert (65)ம் 12 மாதங்கள் பழகிய நிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் உறவின் அடையாளமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறது இந்த ஜோடி. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தாலும், பொது இடங்களுக்கு செல்லும்போது மற்றவர்கள் தன்னை Robertஇன் மனைவியாக பார்க்க மாட்டேன்கிறார்கள் என்கிறார் Courtney.
தங்களுடையது, பணத்திற்காக வயதில் மூத்த ஆண்களுடன் பழகும் sugar daddy உறவு என்று கூட மக்கள் நினைப்பதாக தெரிவிக்கிறார் Courtney. அப்படி இல்லை, தாங்கள் கணவனும் மனைவியும் என்று தெரிய வந்தாலும், பணத்திற்காக, தான் Robertஐ மணந்து கொண்டதாக நினைக்கிறார்கள் என்று கூறும் Courtney, தனக்கு பணத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்கிறார்.
கேரளாவில் மார்பக புற்றுநோய் இல்லாத பெண்ணுக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இதில் தொடர்புடைய ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரஜனி. இவருக்கு மார்பகத்தில் கட்டி இருப்பதாக தெரியவந்த நிலையில், அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
நோயை உறுதிசெய்வதற்காகத் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கும், தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் முடிவு வர தாமதமான சூழலில் தனியார் ஆய்வகம் அளித்த முடிவில் அது புற்றுநோய் கட்டி எனத் தெரிவிக்கப்பட்டது.
உடனே மருத்துவர்களும் ரஜனிக்கு புற்றுநோய்க்கான முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளின் வீரியத்தால் தலைமுடி அனைத்தும் உதிர்தல், வாந்தி, உடல் பலவீனம் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்கான நாள் குறித்த சமயத்தில் அரசு மருத்துவமனை ஆய்வக முடிவு வந்தது. அதில் ரஞ்சனியின் மார்பகத்திலிருந்தது புற்றுநோய் கட்டி இல்லை என கூறப்பட்டதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரஜனிக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்த தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான வாய்ப்பு இல்லை என்று கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதாவது தனியார் ஆய்வகத்திற்குப் பெண்ணின் திசுக்களை அனுப்பியது மருத்துவ கல்லூரியின் தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும் கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் இது தொடர்பான நடவடிக்கை சாத்தியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருமணமான 3 மாதங்களில் புதுமண தம்பதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவருக்கும் ஆர்யா (21) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் ஆர்யா குடும்பத்தினர் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் ஆர்யா தனது கணவர் விஷ்ணுவுடன் அவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவர் பெற்றோர் மகளை காண விஷ்ணு வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் வந்தனர்.
அப்போது அவர்களின் படுக்கையறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் விஷ்ணுவின் தந்தையும் வீட்டில் இருந்தார். இதையடுத்து ஆர்யா குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஷ்ணுவும், ஆர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
அவர்களை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். தம்பதியின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்காவில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்திருப்பது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவினாஷ் குணா (32) என்பவர் நியூ ஜெர்சியில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள அவர் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது.
இது குறித்து பேசிய குணாவின் குடும்ப நண்பர் பிரசாத், குணா மிக சிறப்பாக நிச்சல் அடிப்பார், அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுவதை எங்களால் நம்பமுடியவில்லை. குறித்த ஏரியில் நீரின் அளவு 7 அடிக்கு குறைவாக இருப்பதாக எண்ணி அவர் அதில் குதித்திருக்கலாம், மேலும் சேற்றில் சிக்கி குணா இறந்துள்ளார்.
குணாவின் தாய் ஜனார்தனம்மா மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகனின் இறப்பு குறித்து அவருக்கு இன்னும் தெரியாது என கூறியுள்ளார். குணா கடைசியாக அவரின் பிறந்தநாளின் போது குடும்பத்தாருடன் போனில் பேசியுள்ளார்.
அப்போது சில மாதங்களில் சொந்த ஊருக்கு வருவேன் என கூறியிருக்கிறார். இதனிடையில் குணாவின் சடலத்தை அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.