பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை!!

தூக்கில் தொங்கிய ஆசிரியை

பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியிக்கு சொந்தமான விடுதியில் தங்கி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 5 வருடங்களாக வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதீபா அவரை திருமணம் செய்து வைக்குமாறு தன்னுடைய பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்து அவருடைய பெற்றோர் வேகமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட பிரதீபா, ஆள் இல்லாத சமயம் பார்த்து பள்ளி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியைகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் காட்டிற்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!!

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக இன்று காலை 6 மணியளவில் சென்ற குடும்பஸ்தர் விலங்கு வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் படுகாயத்திற்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவ் இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தைக்கு யார் நெருக்கமானவர் என்ற போட்டியில் தந்தையையே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!!

தந்தையையே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

இரண்டு சகோதரிகளில் யார் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற போட்டியில் ஒரு இளம்பெண் சொந்த தந்தையுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தாயுடன் வாழ்ந்து வந்த Samantha Kershner (21)க்கு தனது தந்தை யார் என்று அறியும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. DNA பரிசோதனை மூலம் Nebraskaவைச் சேர்ந்த Travis Fieldgrove (40)தான் தனது தந்தை என்று அறிந்து கொண்டிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்குப்பின், Samanthaவுக்கும் Travisக்கும் இடையில் பாலியல் ரீதியான உறவு ஏற்பட்டுள்ளதை அறிந்த அவரது தாயார் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார். உடனே தந்தையும் மகளும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். விசாரிக்கும்போது திருமண சான்றிதழில், Samantha பெயருக்கு பின்னால், தந்தை என்ற இடத்தில் Travis Fieldgroveஇன் பெயர் இல்லை என வாதிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் நீதிமன்றம் DNA பரிசோதனைக்கு உத்தரவிட, பரிசோதனையில் Travis Fieldgroveதான் Samanthaவின் தந்தை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, பொலிசார் தந்தையையும் மகளையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் Travisஇன் மகளுக்கும் தனக்கும் யார் அவருக்கு நெருக்கமானவர் என்ற போட்டி ஏற்பட்டதாகவும், தான் தான் அவருக்கு நெருக்கமானவர் என்று நிரூபிக்கவே அவருடன் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Samantha.

இந்த மனிதரால் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை என கடினமான வார்த்தைகளால் Travisஐ விமர்சித்த நீதிபதி, அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அதன்பின் ஓராண்டு பொலிஸ் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டதோடு Samanthaவை சந்திக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். Samanthaவுக்கு இந்த மாதத்தில் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பயன்படுத்திய மொபைலை விற்ற இளைஞர்: இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்!!

இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படத்தால் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுபம் குமார். இவர் தமது பயன்படுத்திய மொபைலை விற்பனை செய்துள்ளார். இச்சம்பவமே அப்பகுதியில் நடந்த தற்கொலைக்கும் கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

தனது மொபைலை விற்பனை செய்வதற்கு முன்னர் சுபம் குமார் அதில் இருந்த தமது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழிக்க மறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபம் குமாரிடம் இருந்து மொபைலை வாங்கிய அனூஜ் பிரஜாபதி என்பவர், குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனிடையே சுபம் குமாரின் முன்னாள் காதலி தமது புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, அருகாமையில் உள்ள ஆற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தையை அப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர், ஆனால் அப்பெண் பரிதாபமாக மரணமடைந்தார்.

தற்கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதலியுடனான புகைப்படங்கள் வைரலானதும், சுபம் குமார் அனூஜ் பிரஜாபதியை சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவரும் வாக்குவாதத்தில் ஏற்படவே, இறுதியில் சுபம் குமார் அனூஜை கொலை செய்துள்ளார்.

பொலிசார், இந்த விசாரணை தொடர்பில் சுபம் குமாரை தேடி வந்த நிலையில், அனூஜ் கொலை செய்யப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பொலிசார் சுபம் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.

உடல் முழுவதும் மரம் போன்று இறுக்கமடையும் விசித்திர நோய்… உதவியின்றி பரிதவிக்கும் இளைஞர்!!

விசித்திர நோய்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் படரும் விசித்திர நோயால் அவதிப்பட்டுவருகிறார். கேரளாவின் ஆலப்புழா பகுதியில் குடியிருக்கும் பிரபுலால் என்ற இளைஞரே உலகில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த அபூர்வ நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

முகம், வயிறு மற்று மார்பு என குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் முதலில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது உடலின் 80 விழுக்காடு பகுதியிலும் வியாபித்து தீரா வலியை அளித்து வருகிறது.

வலது காது முறம் போன்று வளர்ந்து பின்னர் மரம் போன்று இறுக்கமடைந்துள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி தற்போது மரம் போன்று இறுக்கமாகவே காணப்படுகிறது.

ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் பல ஆணடுகள் சிகிச்சை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை என தெரியவந்த நிலையில், தற்போது குடியிருப்பில் வைத்தே சிகிச்சை எடுத்துக் கொள்வதாக பிரபுலாலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை : கடிதத்தில் வேதனையுடன் எழுதியிருந்த காரணம்!!

மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை

தமிழகத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான மகனால், அவருடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். மென் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்த இவருக்கு, ஆன்லைன் விளையாட்டான ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து துவக்கத்தில் சிறியை தொகையை கட்டி விளையாடிய இவர், தொடர்ந்து வெற்றி பெற்றே வந்ததால், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்துள்ளார். இதனால் விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதிக பணம் கட்டி விளையாடி வந்துள்ளார்.

ஆனால் ரம்மியோ தன்னுடைய கோர முகத்தை காட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அவர், இதற்காக பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடியுள்ளார்.
திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீட்டு விடலாம் என நினைத்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வந்த வேலையும் பறிபோனது. செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால், கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து, பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக இச்சம்பவம் அருள்வேலையும், தாய் ராஜலட்சுமியையும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் இருவரும் விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் தாய் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற கணவன்!!

மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்

மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30) என்பவர் நேற்றைக்கு முன்தினம், பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த பொலிஸாரிடம், காவல் ஆய்வாளரை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அபிஜித் தாஸை மனநலம் பாதிக்கப்பட்டவராக நினைத்த அந்த பொலிஸார் , என்ன காரணம் என கேட்டுள்ளார்.

அப்பொழுது அபிஜித் தாஸ், தான் கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து மனைவியின் தலையை வெளியில் எடுத்துள்ளார். நான் என்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன். அவருடைய தலையை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூலாக பதில் கூறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பொலிஸார், வேகமாக காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் அபிஜித் தாஸ் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி அம்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அபிஜித் தாஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவே பலரும் பதிலளித்துள்ளனர். அபிஜித் தாஸிடம் விசாரணை மேற்கொள்கையில், வரதட்சணை தான் காரணாம் என முதலில் கூறியவர், அதன்பிறகு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

பக்கத்து வீட்டை சேர்ந்த நபருடன் அம்பாவிற்கு தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கை கால்களை கட்டிப்போட்டு தலையை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 6 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் : பின்னர் நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிறுவன் ஒருவன் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய நிலையில், திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நீமூச் நகரைச் சேர்ந்தவர் ஹருன் ரஷீத் குரேஷி. இவரது 16 வயது மகனான ஃபர்கான் குரேஷிக்கு, மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று ஃபர்கான் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி வீடியோ கேமை விளையாடியுள்ளார். அப்போது திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது மகனின் இறப்பு குறித்து ஹருன் ரஷீத் குரேஷி கூறுகையில், ஃபர்கான் தனது மதிய உணவை உண்ட பின்பு தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மயக்கமடைவதற்கு முன் சுமார் 7 மணியளவில் மிகவும் பதற்றத்துடனும், ஆத்திரத்திலும் இருந்த ஃபர்கான், மற்ற ஆட்டக்காரர்களிடம் மிகவும் கூச்சலிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனுக்கு மோட்டார் சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் : கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!!

சைக்கிலில் செல்லும் 3 பெண்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் 25 நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ருதாலி படேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லண்டனுக்கு செல்லவிருக்கின்றனர். இந்த பயணத்தின் போது நேபாளம், பூடான், மியான்மர், சீனா உள்பட 25 நாடுகளை கடந்து லண்டனுக்கு செல்ல இருக்கின்றனர்.

ஜூன் 5 ஆம் திகதி வாரணாசியில் இருந்து தொடங்கும் இந்த பெண்களின் பயணத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

பைக்கிங் குயின்ஸ் என்ற குழுவை சேர்ந்த இவர்கள் பெண்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்!!

மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்

கோவை மாவட்டத்தில் டிக்டாக் ஆப்பில் அதிகமாக வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் இரும்பு கட்டுமான வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 11 வயதில் காவ்யா என்ற மகளும், 5 வயதில் அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் கூலி வேலை செய்து வந்த நந்தினி, டிக்டாக் ஆப்பில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

அதோடு அல்லாமல் செல்போனிலும் யாருடனோ அதிகமாக பேசி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நீண்ட நேரம் நந்தினியின் செல்போனுக்கு முயற்சித்த போது பிசி என வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் உடனே மனைவி வேலை செய்து வரும் தனியார் கல்லூரிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சரிந்து விழுந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தற்போது கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரன் போராட்டம்!!

வியாழேந்திரன் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவருடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் செய்த அட்டகாசம் : பெண்ணொருவர் பரிதாப மரணம்!!

தென்னிலங்கையில் கொள்ளையர்களின் அட்டகாசம் காரணமாக பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாத்தறை – தல்பாவில பிரதேசத்தில் பெண்கள் இருவரின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வீடு ஒன்றிற்குள் புகுந்த தம்பதியினால் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தம்பதியினர் வீட்டில் இருந்த பெண்களின் முகத்தில் விஷம் கலந்த கைக்குட்டை வைத்து மயக்கமடைய செய்துள்ளனர்.

குறித்த பெண்கள் மயக்கமடைந்தவுடன் அவர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் மயக்கமடைந்த இரண்டு பெண்களும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் 77 வயதான வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி வாகனத்துடன் கைது!!

சாரதி வாகனத்துடன் கைது

வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி தப்பிச் சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் வாகனசச்சாரதியை வாகனத்துடன் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா மரக்காரம்பளை வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிளை பின்னால் சென்ற கே.டி.எச் சொகுசு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் படுகாமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவ் வீதிகளுக்கு அண்மையில் இருந்த சி.சி.ரி காணொளி மூலம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் நேற்றைய தினம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்!!

இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பொலிஸ்துறையின் VPN வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், சிபொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (31) அறிவித்தார்.

இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியநேற்று(31) மாலை இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார்.

இதன்போது, “21/4 தாக்குதலை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகின்றது. எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவாக இருக்கின்றது.’’ என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“1988 ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது. பலவழிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாடே பதற்றமடைந்திருந்தது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகமே அமையும்.

நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு வரும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது டிசம்பர் 9 ஆம் திகதியை தாண்டிதாக இருக்ககூடாது.

ஆகவே, உடன் நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், காலக்கெடுவரை காத்திருந்து நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம்.’’ என்றார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்.

பொருளாதார சரிவை தடுக்க வட்டியை குறைத்தது மத்திய வங்கி!!

இலங்கை மத்திய வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்து 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

இது இலங்கையின் பொருளாதார சரிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயண முன்பதிவுகளும் இரத்து செய்யப்படுவதால் இந்தாண்டு பாரிய இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைந்து விட்ட நிலையில் இந்தாண்டு மேலும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
அதனால் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது.

இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் வாகனம், வீட்டு வசதி, தனிநபர் கடன்களுக்கான வட்டி குறையும். வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அரசு சுற்றுலா துறையை ஊக்குவிக்க ஹோட்டல்களுக்கு மானிய கடன் வழங்குகிறது.

இந்நிலையில் சர்வதேச நிதியம் இலங்கைக்கு பெருந்தொகை நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.