இலங்கையிலுள்ள பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் காலாவதியான முகப்பூச்சுக்களை (கிறீம்) விற்பனை செய்த இருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அழகு கலை நிலையம், கிறீம் விற்பனை நிலையம் ஒன்று நடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலவதியான கிறீம்களில் திகதிகள் மாற்றப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்து வந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குருகாரமுள்ள பகுதியில் நேற்று நீர்க்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து காலாவதியான கிறீம்கள், அழகு சாதன பொருட்கள் , அவற்றை பொதி செய்ய பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காலாவதியான கிறீம்களை கொள்வனவு செய்து அவற்றை புதிய பெட்டிகளுக்குள் அடைத்து , அதன் காலாவதி தினங்களையும் மாற்றி வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய அழகு சாதனப் பொருட்களாக விநியோகம் செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகினை ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்தும் கிறீம்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சானர் ருவன் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அன்று வீடில்லாமல் சாலையில் வசித்தேன்.. என் மீது சிறுநீர் கழித்தார்கள்.. இன்று சோதனையை சாதனையாக்கிய இளம்பெண்!!

சோதனையை சாதனையாக்கிய இளம்பெண்

வேல்ஸை சேர்ந்த பெண் வீடில்லாமல் சாலையில் வசித்து பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையில் இன்று லண்டன் தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார்.

சப்ரினா கோஹின் ஹட்டன் என்ற பெண் தனது பெற்றோருடன் சிறுவயதில் இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் 15 வயதில் அவருக்கு சோதனை ஏற்பட்டது. சப்ரினாவின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில் சப்ரினாவுக்கும், அவர் தாய்க்கும் அந்த நிகழ்வு பேரிடியாக அமைந்தது.

அதன்பின்னர் பல்வேறு துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்து இன்று தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக சப்ரினா உயர்ந்துள்ளார். இது குறித்து சப்ரினா கூறுகையில், என் 15 வயதில் தந்தையை பறிகொடுத்தேன், இதன்பின்னர் நாங்கள் வசித்து வந்த வீட்டை இழந்து சாலைக்கு வந்தோம்.

அந்த கடினமான சூழ்நிலையிலும் நான் கல்வி கற்பதை நிறுத்தவில்லை. ஒரு சமயம் ஆட்கள் இல்லாத பாழடைந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். காலை தூங்கி எழுந்த போது யாரோ என் மீது சிறுநீர் கழித்தார்கள். வீடில்லாத சூழலால் இது போல பல மோசமான விடயங்களை சந்தித்தேன்.

அப்போது தான் பிரச்சனையில் சிக்குபவர்களுக்கு உதவும் பணியை செய்ய வேண்டும் என உறுதி எடுத்து கொண்டேன், அதன்படி 18 வயதில் தீயணைப்பு துறையில் வேலைக்கு சேர்ந்தேன்.

உடன் பட்டப்படிப்பும் படித்து வந்தேன், கடினமான முயற்சியின் காரணமாக பிஎச்டி படிப்பையும் முடித்துள்ளேன். தற்போது தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக உள்ளேன்.

தீயணைப்பு துறையிலேயே பணிபுரியும் ஒரு நபருடன் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.

துரோகம் செய்த காதலன் : திருமணத்தன்று மணமகள் கொடுத்த வித்தியாசமான தண்டனை!!

வித்தியாசமான தண்டனை

அவுஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் தனக்கு துரோகம் செய்த காதலனுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அளித்துள்ளார். நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யும் ஆசையிலிருந்த கேசி திருமணத்திற்கு முந்தைய தினத்தை தனது தோழிகளுடன் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது, அவரது மொபைலுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன.

மொபைலை எடுத்துப் பார்த்த கேசியின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. அதில் ஒரு ஆண் தனது காதலிக்கு அனுப்பிய மிகவும் அந்தரங்கமான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன.
அவற்றை அனுப்பியவர் கேசி மறுநாள் திருமணம் செய்ய இருக்கும் அவரது காதலர் அலெக்ஸ்.

அலெக்ஸ் வேறு யாரோ ஒரு பெண்ணுடன் நீண்ட நாள் தொடர்பிலிருந்தது அந்த குறுஞ்செய்திகளிலிருந்தும் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களிலிருந்தும் தெரியவந்தது.

இறுதியில், நானாக இருந்தால் அவனை திருமணம் செய்யமாட்டேன், நீ? என்ற அந்த பெண்ணின் கேள்வியுடன் குறுஞ்செய்திகள் முடிவடைந்திருந்தன. அப்படியே கேசி உட்கார்ந்து விட, அவரது தோழிகள் இப்போதே அந்த மணமகனை ஒரு வழி செய்து விடலாம் என துடித்தார்கள்.

அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன கேசி வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். மறுநாள் மணமகளின் ஆடைகளை உடுத்திக் கொண்ட கேசி, மணமேடைக்கு வந்தார்.

அனைவரும் ஆவலுடன் திருமணத்தைக் காண காத்திருக்க, தனது முகத்திரையை விலக்கிய கேசி, இந்த திருமணம் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தார். விருந்தினர்கள் கலவரமடைய, தனக்கு வந்த குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தார் கேசி.

அந்த பெண்ணின் உடலை வர்ணித்தது முதல், எனது காதலி உன் அளவில் பாதி கூட என்னை படுக்கையில் திருப்தி படுத்த முடியுமா என்று தெரியவில்லை என்பது வரை அலெக்ஸ் இன்னொரு பெண்ணுக்கு அனுப்பியிருந்த அந்தரங்க செய்திகள் முதல் ஆபாச செய்திகள் வரை நிறுத்தி நிதானமாக வாசித்தார் கேசி.

தனது உறவினர்கள் முன் அவமானத்துடன் தலை குனிந்தவாறே அலெக்ஸ் அங்கிருந்து நகர, மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. யாரும் போக வேண்டாம் என்ற கேசி, நாம் நேர்மையையும், உண்மையான அன்பை கண்டுபிடிப்பதையும் கொண்டாடுவோம் என்று கூற, அங்கு ஒரு பார்ட்டி தொடங்கியது.

முடிவுக்கு வராத இளம்பெண் கொலை வழக்கு : மேலும் ஒரு திருப்பம்!!

இளம்பெண் கொலை வழக்கு

கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர் அதற்குப்பின் வீடு திரும்பவில்லை. பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பொலிசார், மே மாதம் 10ஆம் திகதி கிரண்தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவரைக் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53) கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார். தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹர்ஜோத் சிங் டியோவின் சகோதரியும் Manjit Kaur Deoவின் மகளுமான Inderdeep Kaur Deo, (23). இத்துடன் இந்த வழக்கு முடிவடைவதாக தெரியவில்லை, காரணம் பொலிசார் இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் தானாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசியின் கொலையுடன் தொடர்புடையதாக தாங்கள் கருதும், சாம்பல் நிற கார்கள் இரண்டின் உரிமையாளர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காதலிக்காக திருடினேன் : ஆசையால் வந்த வினை : வசமாக சிக்கிய காதலன்!!

வசமாக சிக்கிய காதலன்

இந்தியாவில் காதலி கோபித்து கொண்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக காதலன் செயல் செயல் கடைசியில் அவரை பொலிசில் சிக்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் நிர்வாகியாக இருக்கும் பெரோஸ் ஆலம் என்பவரின் காதலி எம்.பி.ஏ பயின்று வந்துள்ளார்.

அவர் பெரோசிடம் அலிகார் பல்கலைக்கழக எம்.பி.ஏ கேள்வித்தாள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று கூறி முதலில் பழைய வினாத்தாள்களை அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டுபிடித்த அவரின் காதலி கோபித்துக் கொண்டு அவரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால், தன் காதலியைச் சாமதானப்படுத்தும் முனைப்பில் அந்தக் கேள்வித்தாளைப் பெற முயற்சி செய்திருக்கிறார் பெரோஸ். இதற்கு அவர், தன் நண்பர் ஹைதருடன் இணைந்து அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் இர்ஷாத் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

கேள்வித்தாளை எடுத்துத் தந்தால், அந்தப் பல்கலைக்கழகத்தில் இர்ஷாத்-தை பணி நிரந்தரம் செய்வதாகவும் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்.

அதன் படி கேள்வித்தாளை பெற்ற அவர்கள் முதலில் பெரோஸின் காதலிக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின் இதை அப்படியே விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்ற ஆசையில், அந்த வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து வினாத்தாள் ஒன்று 2,000 ரூபாய் வீதம் விற்றுள்ளனர்.

இதற்காக வாட்ஸ் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் பிரத்யேகமாக பேசி வந்துள்ளனர். இறுதியில் இந்த விவகாரம் பொலிசாருக்கு எப்படியோ தெரியவர, இதையடுத்து, அந்தக் கேள்வித்தாளைப் பெற்ற அவர்கள், ஃபெரோஸின் காதலிக்குக் கொடுத்திருக்கிறார்கள். பெரோஸ், ஹைதர் மற்றும் இர்ஷாத் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அலிகார் பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம், கேள்வித்தாளை வெளிவிட்டதை ஒப்புக்கொண்ட பெரோஸிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அன்று திருமணத்தினால் படிப்பை விட்ட தாய்… இன்று அவர் சாதித்தது என்ன? குவியும் வாழ்த்து!!

இந்தியாவில் தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 36 வயது தாய் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதால், பசந்தி தன் படிப்பை அப்போது கைவிட்டுள்ளார்.

இதனால் பசந்தியின் படிப்பு அத்தோடு தடைபட்டது. குழந்தைகள் பிறந்தாலும் கூட பசந்திக்கு 10-ஆம் வகுப்பை முழுமையாக முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துள்ளது.

இந்நிலையில் தான் அவருடைய மகன் 10-ஆம் வகுப்பிற்கு சென்றதால், மகனுடன் சேர்ந்து தானும் படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.

அதன் படி மகனும் அவருக்கு உதவியுள்ளார். அதாவது பள்ளியில் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதை அப்படியே வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு சொல்லி கொடுத்து வந்துள்ளார். இதனால் பசந்தி மற்றும் அவரது மகன் என இருவருமே 10-ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பசந்திக்கு 203 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவரது மகன் 340 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த பசந்தி, மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இனி வேலையிலும் பதவி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பசந்தியின் வெற்றி குறித்து அவரது கணவர் கூறும்போது, அவரது மனைவி மேற்கொண்டு படிப்பை தொடர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் வீடியோ!!

கண்கலங்க வைக்கும் வீடியோ

இந்தியாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உணவளிக்க 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோப்பால் பகுதியை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (6). இவரின் தாய் மதுவுக்கு அடிமையான நிலையில் அதன் காரணமாக நோய் வாய்ப்பட்டார்.

இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன் தாய்க்கு தேவையான நேரத்தில் உணவளிக்க பாக்யஸ்ரீயிடம் கையில் காசு இல்லாத சூழல் நிலவியது.

இதனால் பிச்சை எடுக்க ஆரம்பித்தார் பாக்யஸ்ரீ. அந்த காசு மூலம் உணவு வாங்கி அதனை தாய்க்கு ஊட்டினார். இந்த சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்தது. இந்த விடயம் வெளியே தெரிய வர பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இருவரையும் சந்தித்து பேசியதோடு அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

தூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற மனைவி : அலறியடித்து ஓடிய கணவன்!!

அலறியடித்து ஓடிய கணவன்

தமிழகத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரியாவுக்கும், மல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம் ராஜூவுக்கும் தொடர்பு இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், முருகேசனை கொலை செய்ய பிரியாவும், கௌதம் ராஜூவும் திட்டமிட்டனர்.

அதன்படி முருகேசனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த பிரியா கணவரை தாக்கியதோடு அவரை கொல்லவும் முயன்றார். எனினும், அங்கிருந்து பலத்த காயத்துடன் தப்பியோடிய முருகேசன் இது குறித்து பொலிஸ் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் பிரியா மற்றும் கெளதமை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த கத்தி, கையுறை மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.

கனேடிய கிரிக்கெட் அணிக்காக சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்!!

சாதனை படைத்த  தமிழ் இளைஞன்

ஈழத் தமிழ் மக்களுக்கான பெருமையின் அடையாளமாக இன்றைய இளம் சமூகத்தினர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்கள். உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள இளையோர்களோடு, பெரும் போட்டிக்கும் மத்தியில் தங்களின் தனித் திறமைகளை அடையாளப்படுத்தி, தங்களின் தாய்த் தேசத்திற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.

இந்நிலையில் கனேடிய இளையோர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். கனேடிய 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரனாக காவியன் நரேஸ் விளங்குகிறார். கடந்த 21ம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் சிறந்த பெறுபேறுகளை காவியன் நரேஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் 4 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களை கொடுத்து இந்த 5 விக்கட்டுக்களை காவியன் நரேஸ் வீழ்த்தியுள்ளார். உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி 5 விக்கட்டுக்களை அதிகுறைந்த ஓட்டங்களுக்குள் வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.

West Indies Marry boys sports clubக்காக prison sports club உடனான TTCB national League 2019 premiership போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதேவேளை நியூசிலாந்தில் நடை பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 63 ஓட்டங்களை குவித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

கேசனா இராசரத்தினம்

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து அடையாளங்களையும் பெற்று விடுகின்றனர். அந்தவகையில் எமது பார்வையில் சிக்கிய வவுனியாவைச் சேர்ந்த கேசனா இராசரத்தினம் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் நாம் மகிழ்வடைகின்றோம்.

வவுனியாவில் வசித்து வரும் கேசனா இராசரத்தினம் சித்திரம் வரைதலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது 16 வயதில் தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் ஐந்து சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் இவர் எதேனும் ஓர் படத்தினையோ அல்லது ஒருவரையோ பார்த்து அவ்வாறே வரையும் ஆற்றல் உடையவர்.

பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் கல்விகற்ற இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் முடித்துள்ளார்.

குடும்பத்தின் சூழ்நிலைகள் காரணமாக அவரது சித்திரம் வரையும் கலையினை மேம்படுத்த முடியாமல் தனக்குள் வைத்துக்கொண்டு வர்த்தக நிலையமொன்றில்
பணிபுரிந்து வருகின்றார். தனது கலையினை அவ்வாறே விடாது தற்போதும் அவரது சித்திரம் வரையும் திறமையினால் பலரை மகிழ்வித்து வருகின்றார்.

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து பதாதைகள்!!

எச்சரிக்கை விடுத்து பதாதைகள்

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு என்று பல ஊடகங்களிலும் தெற்கு அரசியல்வாதிகளும் குற்றம் சுமத்திவரும் நிலையில் குறித்த அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் கூறி வரும் நிலையில்,

வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வீதிகளில் பதாதைகளை அமைத்துள்ளனர்

குறித்த பதாதைகளில் “வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே எச்சரிக்கை! இதற்கு மேலும் பொறுமை இல்லை.. பயங்கரவாதத்திற்கு துனை போன அமைச்சர் என கருதப்படும் ரிசாட்டிற்கு ஆதரவாக செயற்படும் எந்த உறுப்பினரும் எம் கிராமத்தில் நுழைய முடியாது, குட்செட் வீதி இளைஞர்கள், பொதுமக்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை வவுனியாவில் பல பகுதிகளில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கு எதிரான பதாதைகளை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தாம் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கு எதிராகவே வாக்களிப்போம் என ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திலிருந்து நீக்குமாறு கோரி பதாதைகளை!!

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பதாதைகள்

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இவ்வாறான நிலையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகே இன்று (28.05.2019) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கட்டப்பட்டுள்ளன.

குறித்த பதாதையில் “மதவாதி தேசதுரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்த்திலிருந்து நீக்கவும்” வன்னி தமிழ் மக்கள் என எழுதப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் ரிசாத்துக்கு எதிராக மக்கள் பாரியளவிலான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்காக மதம் மாறிய மோனிகா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை மோனிகா

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா. தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. இவரது இயற் பெயர் மாருதி ராஜ் என்ற பெயரை சினிமாவிற்கு மோனிகா என்று மாற்றிக்கொண்டார்.

பின்பு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்துவாக இருந்த மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இஸ்லாம் மதத்தை 2010ம் ஆண்டிலிருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர்.

நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் அணிய இருந்தது என்று கூறியிருந்தார். பின்னர் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாலிக்கை திருமணம் செய்து கொள்ளத்தான் நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று பின்னர் தான் தெரிய வந்தது. திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தியது மட்டுமின்றி சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதை கூட நிறுத்தி விட்டார்.

பாடசாலை கூட்டத்தில் தாயார்… வயிற்று வலியால் துடித்த சிறுமி : மருத்துவமனையில் தெரியவந்த உண்மை!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருக்கும்போது அவரது மகளுக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தூரி பகுதியில் குடியிருக்கும் அந்த தாயாரின் 4 வயது மகளுக்கே பாடசாலையில் வைத்து இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த தாயார் தமது மகள் படிக்கும் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ள தமது மகளுடன் சென்றுள்ளார்.

பின்னர் கூட்டம் முடிந்து, மகளுடன் குடியிருப்புக்கும் திரும்பியுள்ளார். இந்த நிலையில் தமக்கு வயிற்றில் வலி இருப்பதாக அந்த தாயாரிடம் சிறுமி முறையிட்டுள்ளார். சாப்பிட்ட உணவு காரணமாக இருக்கலாம் என கருதி, அந்த தாயார் மகளை ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

ஆனால் அடுத்த நாள் காலையிலும் வலி இருப்பதாக சிறுமி கூறவே பதறிய அவர், சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளார். மருத்துவமனையில் நடந்த சோதனையில் தான் உண்மை என்னவென தெரியவந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியிடம் விசாரிக்கையில், பாடசாலையில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருந்தபோது சிறுமி அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பாடசாலையில் வேலை செய்யும் நபர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இந்த விவரங்கள் தெரியவரவும் சிறுமியின் உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பாடசாலை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அழுகிய நிலையில் கிடந்த சடலம்… கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

அழுகிய நிலையில் கிடந்த சடலம்

தமிழகத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மனைவி சிவகாமி. ரமேஷுக்கும், சிவகாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில காலமாக கணவரை பிரிந்து சிவகாமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டை விட்டு சிவகாமி வெளியே வராத நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிவகாமி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிசார் பார்த்த போது, சிவகாமியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது கை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் உடல் கிடந்தது.

விசாரணையில், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என என்பது தெரியவந்தது. பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகாமியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!

சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்

கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55) திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இறுதியாக இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிச்சயம் செய்யப்பட்டது. கடைசி மகளின் திருமணம் என்பதால் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடைபெற்ற வேளையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில் விஷ்ணுபிரசாத் நன்றாக பாடகூடியவர் என்பதால் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறி அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்துள்ளார்.

இதனால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றும் தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார். இதனை கண்ட உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறிய நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பினனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாந் த் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்பதாலும் அதன் மூலம் விஷ்ணுபிரசாத் தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதாலும் அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர்.

தனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால் அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர். இறுதியாக ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு ஆர்ச்சா கதறி அழுது உள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.