அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அலவ்வ போரமடல பகுதியை சேர்ந்த 14 வயதான இனோகா சச்சினி மற்றும் 11 வயதான திரோஸா ஜிமேஷிகா என்ற இரண்டு சிறுமிகளே நேற்று முன்தினம் மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தனது தந்தையுடன் அவர்கள் இருவரும் நீராட சென்ற போது நீரில் மூழ்கியுள்ளனர். பின்னர் பிரதேசவாசிகள் குறித்த இருவரையும் மீட்டு பொல்காவில மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை நெலுவ லெல்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்து நெலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
தேயிலை தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சிற்றூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சிற்றூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்து குறித்து நெலுவ காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் தென் புளோரிடாவில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் 17 அடி நீளம், 63 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மியாமி என்னும் பகுதியில் 7,29,000 ஏக்கரில் மரங்கள், வனவிலங்குகள் என இயற்கையைப் பாதுகாக்கும் Big Cypress National Preserve என்ற சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய உயிரினங்களை தென்கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட பர்மீஸ் என்ற ராட்சத மலைப்பாம்புகள் தொடர்ந்து வேட்டையாடி வந்துள்ளன. இதனால் அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக, ஆண் மலைப்பாம்புகளின் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்தி பெண் ராட்சத மலைப்பாம்பினை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஆண் மலைப்பாம்புகள் இனப்பெருக்கத்துக்காகப் பெண் மலைப்பாம்புகளைத் தேடிச் செல்லும் அந்தச் சமயத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் சிக்னல் வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த ராட்சத மலைப்பாம்பு 17 அடி நீளம் மற்றும் 63 கிலோ எடை கொண்டது.
மேலும், பாம்பின் வயிற்றில் இருந்து 73 முட்டைகள் அகற்றப்பட்டுள்ளன. சரணாலயத்தின் ஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த செய்தியை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். புளோரிடா சரணாலயத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளிலேயே இதுதான் மிகப்பெரிய பாம்பு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் கவுதமி தனது வீட்டில் சடலமாக கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் கவுதமி சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுப்பிடித்தனர்.
இதனிடையில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராஜேஷை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானது தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் தனது காதலி கலைவாணி (30) வீட்டில் பதுங்கியிருந்த ராஜேஷை பொலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் கவுதமியை கொன்றதை ராஜேஷ் ஒப்பு கொண்டார். இதற்கு உறுதுணையாக இருந்த கலைவாணியும் கைது செய்யப்பட்டார். அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கலைவாணிக்கும் ராஜேஷுக்கு வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து கலைவாணியை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராஜேஷிடம் இது குறித்து அறிந்த அவர் மனைவி கவுதமி சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜேஷ் மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தன் மனைவிக்கு தெரியாமல் மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த ஒரு தந்தை கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.
சின்னக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்த பிரித்தானியாவைச் சேர்ந்த சோனியாவின் தந்தையாக வந்தார் இஜாஸ். தந்தையின் அன்புக்கு ஏங்கிய சோனியா இஜாஸை தந்தையாக ஏற்றுக் கொண்டு அவர் மீது பாசத்தைப் பொழிந்து வந்தார்.
இதற்கிடையில் சோனியாவின் தாய் மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தன் தந்தையின் அன்பு குறையவில்லை என்றே உணர்ந்திருக்கிறார் சோனியா. சோனியாவுக்கு 13 வயதாகும்போது, அவரது பாட்டி இறந்து போக, சோனியாவின் தந்தையைத் தவிர அனைவரும் அவரது இறுதிச் சடங்கிற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கின்றனர்.
தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள இயலாத சோனியாவின் தாய் மரியம் பாகிஸ்தானிலேயே தொடர்ந்து தங்கிவிட, பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் பிரித்தானியாவுக்கு திரும்பியிருக்கிறார் சோனியா.
ஆனால் அவர் பிரித்தானியாவுக்கு திரும்பியதிலிருந்தே, அவரது தாயின் கணவரான இஜாஸின் பார்வை சரியில்லை என்பதை கவனித்திருக்கிறார் சோனியா. அவர் தனது மார்பகங்களையே பார்ப்பதை கவனித்த சோனியா, அசௌகரியமாக உணர்ந்திருக்கிறார்.
சோனியா பள்ளி சென்று திரும்பியதும் தனக்கு மஸாஜ் செய்து விடச் சொல்லியிருக்கிறார் இஜாஸ். தந்தையின் திடீர் மாற்றம் ஏதோ செய்ய, அவருக்கு மஸாஜ் செய்திருக்கிறார் சோனியா.
13 வயதுக்கு உன் மார்பகங்கள் மிக பெரிதாக இருக்கின்றன என்று கூறி, சட்டென தனது மார்பகங்களைப் பிடித்து இஜாஸ் அழுத்த, அதிர்ந்து போயிருக்கிறார் சோனியா. அன்று இரவே அந்த கோர சம்பவம் நடந்தது, இஜாஸ் சோனியாவை வன்புணர்ந்திருக்கிறார்.
13 வயதில் பயந்து நடுங்கிப்போன சோனியா, அதுவும் அப்பா, அப்பா என தான் அழைக்கும் ஒரு நபர் இப்படி செய்ததால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார். ஆனால் தினமும் இந்த கொடுமை தொடர்ந்திருக்கிறது.
இதற்கிடையில் பாகிஸ்தானிலிருந்து சோனியாவின் தாய் மரியம் பிரித்தானியா திரும்பிவிட, அவரிடம் ஏதாவது கூறினால் உன் தாய் உன்னை வெறுத்துவிடுவார் என்று இஜாஸ் மிரட்டியிருகிறார்.
தன்னை ஒவ்வொரு முறை இஜாஸ் வன்புணரும்போதும், அது முடிந்தால் போதும் என பல்லைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பேன் என்று கூறுகிறார் சோனியா. ஒருநாள் தண்ணீர் எடுத்துக்கொண்டு மாடிக்கு வருமாறு சோனியாவிடம் கூறியிருக்கிறார் இஜாஸ். தனது படுக்கையறைக்கு சோனியாவை அழைத்து வழக்கம்போல துஷ்பிரயோகம் செய்ய, கண்ணை மூடிக்கொண்டு படுத்திருக்கிறார் சோனியா.
திடீரென இஜாஸ் தன்னை விட்டு விலக, கண்ணை திறந்து பார்த்தால், அங்கே அவரது தாய் மரியம் நின்றிருக்கிறார். நடந்ததை உணர்ந்துகொண்டு சோனியாவை தேற்றிய மரியம், பொலிசாரிடம் புகாரளிக்க தூண்டியிருக்கிறார். பொலிசார் வழக்கு பதிவு செய்து கொண்டு சோனியாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப, அவரது பெண்ணுறுப்பின் உள்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்தது தெரியவந்துள்ளது.
13 வயது சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்த இஜாஸுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். தைரியமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தனக்கு நடந்த கொடுமைகளை வெளியுலகுக்கு சொல்ல முன்வந்திருக்கிறார் சோனியா.
வவுனியா ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாகவும், தங்களை தாக்கியவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை என தெரிவித்தும் சின்னப்புதுக்குளம் மக்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன் திரண்டு அமைதியான முறையில் முற்றுகையிட்டனர்.
இன்று மாலை வவுனியா ஏ9 வீதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் பிரதான வாயில் முன் ஒன்றுகூடிய சின்னப்புதுக்குளம் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரினர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, சின்னப் புதுக்குளம் கிராம மக்களுக்கும், நொச்சிமோட்டைப் பகுதி மக்களுக்கும் இடையில் கிராம ரீதியாக நீண்ட நாட்களாக முரண்பாடு இருந்து வருகின்றது. சாதியத்தின் அடிப்படையில் எழுந்த இம்முரண்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அடிதடியில் சென்றிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர், கிராம அலுவலர், பொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள் இணைந்து இரு பகுதியினருடனும் கலந்துரையாடி நிலமையை சீர் செய்திருந்தனர். இருப்பினும் இரு பகுதியினருக்கும் இடையில் இதன் பின்னும் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஓமந்தை சின்னப்புதுக்குளம் வீதியில் அக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இம் மோதல் காரணமாக இரு மோட்டர் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரை ஓமந்தைப் பொலிசார் கைது செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் சின்னப் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஓமந்தைப் பொலிசார் தாம் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் தமது கருத்துகளை கேட்காது தம்மீது தாக்குதல் நடத்தி தமது சொத்துக்களை சேதப்படுத்தி அழித்தவர்களை கைது செய்யாது, அந்த கிராமத்திற்கு சார்பாக நடப்பதுடன், தமக்கு எதிராக செயற்படுகின்றனர் என அக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பொலிசாரின் இந்தநிலை காரணமாகவே இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓமந்தைப் பொலிசார் மீது எமக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்தே சின்னப் புதுக்குளம் கிராம மக்கள் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் அலுவலக வாயில் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
இதன்போது இம் மக்கள் சார்பாக சிலரை அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் இப்பிரச்சனை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், சின்னப்புதுக்குளம் கிராமத்திற்குரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தையடுத்து, அதனையேற்று அக் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
டிப்பர் ஹன்ரர் ரக வாகனம், பிக்கப் என்பவற்றில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாது அந்தக் கிராமத்தைச் சோந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் வறட்சியான காலநிலை நீடித்து வருகின்ற நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய கிராமங்களில் 225 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன. இம் மக்களுக்கு நாள் தோறும் 4000 லீற்றர் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரு கிராமங்களிலும் 4 நீர்தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேசத்தில் காஞ்சுரமோட்டைப் பகுதியில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வறட்சியினால் 39 பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து அவர்களுக்கான குடிநீரை விநியோகித்து வருகின்றது.
டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்றைய தினம் திடீர் என தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள இவர் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலுக்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அங்காய் என்ற மூன்று பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்கு பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய காந்தரூபி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
உயிரிழந்த பெண்ணின் கணவரான சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதிக ஒலி எழுப்பும் ஒலியெழுப்பிகளை கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவினது தலைமையில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறித்த கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வாகன சட்டத்திட்டங்களை மீறுதல் மற்றும் டெஸிபல் 105க்கு அதிகமான ஹோர்ன் தொடர்பாக தேவையான சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வலிறுத்தப்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சூழல் மாசடைதலின் ஒரு அம்சமான ஒலி மாசடைதலை தடுக்கவும் எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த ஒழுக்கமான நாட்டை உருவாக்கவும் எடுக்க வேண்டிய குறுகிய கால நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.
இது தவிர நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்கள், அனைத்து பயணிகள் மற்றும் சாரதிகளை இணைத்து அமைதியான தினமொன்றை பிரகடனப்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகவும் உயர்ந்த கோபுரமாக வர்ணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் பாரிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்படவிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாமரை கோபுரம் திறக்கப்படவிருந்தது. இந்த நிலையில் அதன் நீர் குழாய் உடைந்தமையினால், நிர்மாணிப்பு குழுவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
தாமரை கோபுரத்தின் பணிகளை அதன் ஒப்பந்த நிறுவனம் முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும் அதனை உத்தியோகபூர்வமாக திறக்கும் வரை, பூட்டு போட்டு மூடி வைத்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் நேற்று பாரிய நீர் குழாய் ஒன்று வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் தகவல் ஆராய்வதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அங்கு சென்ற போதிலும் பாதுகாப்பு பிரிவினால் அவரை தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் அங்குள்ள ஊழியர்கள் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் வெடித்துள்ளதனை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் அதனுள் மேலும் சில பகுதிகளில் இவ்வாறான பாதிப்புகள் காணப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த திட்டத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போதிலும் அவர் தகவல் வெளியிடுவதனை புறக்கணித்துள்ளார்.
திருமணமான 9 மாதத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் அப்பெண்ணை கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீகாந்த் திருமணத்துக்கு பின்னர் மனைவியை அழைத்து கொண்டு அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீகாந்தின் தந்தை ராஜேஷ்வரராவ், சந்தியாவின் தந்தை மகேந்தருக்கு போன் செய்து உங்கள் மகள் சந்தியா இறந்துவிட்டதாக கூறியுள்ளார். சந்தியா அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கழுத்தில் ஆழமான வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவர் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து சந்தியாவை கொன்றுவிட்டதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் தந்தை மகேந்தர் கூறுகையில், திருமணமான முதல் 6 மாதம் சந்தியாவுக்கு கணவர் குடும்பத்தினரால் பிரச்சனை எதுவும் வரவில்லை.
பின்னர் தான் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடன் வசிக்கும் அவர் தாய் விஜயா ஆகியோ வரதட்சணை கேட்டு சந்தியாவை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். ரூ 1 கோடி வரதட்சணை கேட்பதாக என்னிடம் சந்தியா கூறினார், இதை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று அவர் மிரட்டப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையில் சந்தியாவின் கணவர் ஸ்ரீகாந்த், மாமனார், மாமியார், உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு இளம் பொறியாளர் ஒருவர், கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 குளங்களை தூர்வாரி புனரமைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர் மாவட்டத்திலுள்ள கிரேட்டர் நொய்டாவில் ஏராளமான சிறிய அளவிலான குளங்கள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுகள் தேங்கும் குட்டைகளாக மாறியுள்ளன.
கிராம மக்களின் குடிநீர் பிரச்னை தீராத ஒன்றாக நீடிக்கவே, அப்பகுதியை சேர்ந்த ராம்வீர் தன்வார் குளங்களை தூர்வார முன்வந்துள்ளார். கிராம மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட அவர், சமூக வலைதளங்கள் மூலமாக தன்னார்வலர்கள் பலரை உடன் சேர்த்து கொண்டு வசூலாகும் நிதியைக் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளார்.
5 ஆண்டுகளில் 10 குளங்களை தூர்வாரியுள்ள 26 வயதான ராம்வீர், பன்னாட்டு நிறுவனத்தில் லட்சகணக்கணக்கான சம்பளத்தில் வேலை செய்து வந்த நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு, முழுமூச்சாக இந்த பணியில் இறங்கியுள்ளார். பணத்தேவைக்காக மாலை நேரங்களில் டியூஷன் நடத்தியபடி சமூக சேவை ஆற்றும் ராம்வீருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பார்வையை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா பகுதியில் குடியிருக்கும் சதேந்தர் சிங் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வில் ஒட்டுமொத்த இந்தியாவில் 714 ஆம் இடத்தை எட்டியுள்ளார்.
சதேந்தரின் வாழ்க்கை கரடு முரடானது என அவரது நண்பர்களே தெரிவிக்கின்றனர். ஆனாலும் உள்ளத் தூய்மை கொண்ட சதேந்தர் அதை எல்லாம் புன்னகையுடன் எதிர்கொண்டு தற்போது சிகரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளார்.
சதேந்தருக்கு ஒன்றரை வயது இருக்கும்போது நியூமோனியா காச்சல் பிடிபட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். விதி அங்கே விளையாடியது. சந்தேந்தருக்கு அளித்த ஊசி மருந்து மாறியதால், அதன் தாக்கம் காரணமாக பார்வை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.
அது படிப்படியாக சந்தேந்தரை பார்வை இழந்தவராக மாற்றியுள்ளது. தட்டுத்தடுமாறி கல்லூரியில் இணைந்த சந்தேந்தருக்கு இன்னொரு சவால் காத்திருந்தது. கிராமப்பகுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றதால் ஆங்கில மொழி பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் தடுமாறியுள்ளார்.
இதனால் அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி செய்துள்ளனர். மட்டுமின்றி மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி சாதாரண மக்கள் வாசிப்பது போன்று அவரும் கல்லூரி பாடங்களை கற்று வந்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைந்து அங்கும் தமது திறைமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்துகொண்ட சதேந்தர் மூன்றாவது முயற்சியில் தற்போது வெற்றிபெற்றுள்ளார். சதேந்தரின் இந்த வெற்றியை அவரது உறவினர்கள் மட்டுமின்றி அவரது கிராம மக்களே கொண்டாடி வருகின்றனர்.
தனது கணவரால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 21-ந் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் 2 கால்கள், ஒரு கையும், பிப்ரவரி மாதம் 6-ந் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.
சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை ஆகியவற்றை பெருங்குடி குப்பை கிடங்கில் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், உடலை தேடும் பணியை பொலிசார் கைவிட்டனர். தவறான நடத்தை காரணமாக தனது மனைவியை கொலை செய்த சந்தியாவின் கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தங்கள் மகள் சந்தியாவுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டி இருப்பதால், பொலிசார் இதுவரை கண்டெடுத்த சந்தியாவின் உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தாய் பிரசன்னகுமாரி, தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளிக்கரணை மனு கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைத்து இருந்த சந்தியாவின் உடல் பாகங்களை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்ததற்கான காரணத்தை குற்றவாளி சதீஷ்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்கிற 20 வயது மாணவி, கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 5ம் திகதியன்று அவருடைய அம்மாவிற்கு போன் செய்து விடுமுறையில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீடு வந்த சேராத பிரகதி, நேற்று மாலை சாலையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். அவரை பற்றி மேற்கொண்ட விசாரணையில், சதீஷ்குமார் பிரகதியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குற்றவாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு அதனை வெளியிட்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், நானும் பிரகதியும் சிறுவயது முதலே காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நேரத்தில், என்னுடைய விருப்பம் இல்லாமலேயே என்னுடைய பெற்றோர் வேறு பெண்ணுடன் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகி வந்தேன். எனக்கு குழந்தை பிறந்ததும் பேச்சை வார்த்தையை சிறிது குறைத்துக்கொண்டேன். இந்த நிலையில் தான் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் அவர் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று தான் நினைத்திருந்தேன்.
ஆனால் எனக்கு போன் செய்து என்னுடன் தான் வாழ்வேன் என்றும், திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறினார். மேலும் அவருடன் பழகிய நாட்களில் பணம், நகை ஆகியவற்றை கொடுத்து அதிக கடனாளியானேன்.
இந்த நிலையில் மீண்டும் என்னிடம் பணம், நகை கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். என்னுடன் தான் வாழ்வேன் என்றும் தொந்தரவு செய்ததாலே, திட்டமிட்டு அவரை அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.