கடந்த இரு மாதங்களில் புகையிரதம் மோதி 67 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

67 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதையில் நடந்துசென்றவர்கள் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பாதையில் பயணிப்பதானது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் ரயில் பாதையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரும்பாலான கட்டடங்கள், தனியார் வகுப்புகள் ரயில் பாதையை அண்மித்து காணப்படுவதும், ரயில் விபத்துக்களுக்கான காரணம் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரயில் பாதையில் சென்ற இருவர் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். இதன்போது பாடசாலை மாணவர் ஒருவரும் பாடசாலை மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொழும்பு – கோட்டையிலிருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேயிலை காட்டுக்குள் சிக்கிய யாழ்ப்பாணத்திலிருந்த கொண்டுவரப்பட்ட அதிர்ஷ்டம்!!

வலம்புரி சங்கு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது 40 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி லயன் அறை ஒன்றில் உள்ள அரிசி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்து. பொதுவான நபர் ஒருவரை அனுப்பி வைத்து இந்த வலம்புரி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம்

ரயில் வீதிகளில் நுழைபவர்கள் மற்றும் அதில் பயணிப்பவர்கள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டத்தை கடுமையாக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில் வீதிகளில் பயணிப்பதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் பலியாகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றும் இரண்டு பாடசாலை மாணவர்கள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே சமிக்ஞை சட்டத்தை மீறி யாரும் செயற்பட வேண்டாம் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே சட்டத்தை சரியாக பின்பன்றினால் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் இருவர் மிகவும் பிரபலமான எல்ல பாலத்திற்கு வெளியே தொங்கிய நிலையில் முத்தம் கொடுத்த புகைப்படம் பாரிய சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் அதிக விருப்பங்களை பெற்றுக்கொள்ளும் இவ்வாறு செயற்பட்டதாக பிரித்தானியா ஊடகம் ஒன்று கடுமையாக விமர்சித்ததது. எனினும் சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்திற்கு 40000 விரும்பங்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே சட்டத்தை மேலும் கடமையாக்கும் செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். பலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் விலைமதிப்பற்ற உயிர் பரிதாபமாக இழக்கப்படுவதாக பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ரயில்வே தொடர்பில் கடுமையாக்கப்படும் சட்டம் உயிரிழப்புக்களை தவிர்க்கும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சாரதியின் பொறுப்பின்மையினால் இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

இளம்பெண் பரிதாபமாக மரணம்

கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதி இல்லாமையினால் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடபில கிராமிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நவநுவர வீதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதுண்டமையினால் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளர் காவு வண்டி தாமதம் அடைந்தமையினால் காயப்பட்டிருந்த மகள் உயிரிழந்துள்ளார்.

நோயாளர் காவு வண்டியின் சாரதி குடிபோதையில் இருந்தமையினாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தனர். எனினும் பொலிஸார் சம்பவத்திற்கு சென்று பதறத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆரம்ப பாடசாலை ஆசிரியரான 24 வயதான பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பேஸ்புக் காதல் : 55 லட்சம் பணத்தை கொள்ளையிட்ட பெண் : புலம்பெயர் தமிழருக்கு ஏற்பட்ட நிலை!!

பேஸ்புக் காதல்

பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ். வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவரின் 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பவம் குறித்து அந்த நபர் முறைப்பாடு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார். இதனை நம்பி அந்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென அந்த பெண் வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே, பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மூவாயிரம் ரூபாவிற்கு குறையாத வகையில் அதிகரிக்கும் எனவும், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டோரின் கொடுப்பனவு 1500 ரூபாவிற்கு குறையாமல் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் உயாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பத்தாயிரம் பேருக்கு புதிதாக சமுர்த்திக் கொடுப்பனவு திட்டத்தின் நலன்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக கடமையாற்றி நாடு திரும்பம் பெண்களுக்கு வீடுகளை நிர்மானிப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கும் 25 லட்சம் ரூபா வரையில் சலுகை வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 5ம் திகதி நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!

கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இந்துக் கல்லூரியின் 2019 ஆண்டு வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று கல்லூரியின் அதிபர் ரி.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் நாட்டின் தேசியக் கொடியை வவுனியா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.சுவர்ணராஜா ஏற்றி வைத்ததை தொடர்ந்து கோட்ட கொடியை வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.மரியநாயகம், பாடசாலைக் கொடியை அதிபரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து, இல்லங்களின் கொடிகளை அதற்கு பொறுப்பான ஆசிரியர்கள் ஏற்றி வைத்தனர்.

கொடியேற்றலைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வை ஜி.ரி. லிங்கநாதன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களின் அணிநடை நிகழ்வை அதிதிகள் ஏற்றுக்கொண்டனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு மாணவர்கள் சத்தியப் பிரமாணம் செய்தததை தொடர்ந்து ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

பாண்டியன் இல்லம் முதலாம் இடத்தையும், சேரன் இல்லம் இரண்டாம் இடத்தையும், சோழன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம், வர்த்தகர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வான் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக பலி!!

இளைஞர் பரிதாபமாக பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வான் ஒன்றும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் சீனக்குடா – நாச்சிகுடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!

பாலியல் துஷ்பிரயோகம்

யாழ். சுன்னாகம் பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சிறுமி மறுநாள் கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதன்போது 17 வயது இளைஞன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதே போல் கடந்த 24ஆம் திகதியும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 13 வயதுச் சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு தாமதாகி வந்துள்ளார். இந்நிலையில் தாயார் சிறுமியிடம் விசாரித்த போது 18 வயதான சுன்னாத்தை சேர்ந்த இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய 18 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதே­வேளை, குறித்த 13 வயதுடைய சிறுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 21 வயதுடைய சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழரிற்கு நேர்ந்த கதி : தவிக்கும் மனைவி, பிள்ளை!!

தமிழரிற்கு நேர்ந்த கதி

பீஜீ நாட்டிலிருந்து சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்த நபர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாரவில நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரகாஷ் என்ற வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

குறித்த பேருந்து மின்மாற்றியில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்துள்ள நிலையில் எதிர்வரும் 28ஆம் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லத் தயாராக இருந்துள்ளார்.

தந்தையின் மரணம் மிகவும் வேதனையான ஒரு விடயமாகும் என அவரது மகன் அர்ஜுன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். எனது கணவர் தீவிர கிருஷ்ண பக்தர். ஆலயங்களுக்கு செல்லும் நோக்கில் இந்தியாவுக்கு பல முறை சென்றுள்ளார். முதன்முறையாக இலங்கைக்கு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். நாடு திரும்பியவுடன் இந்தியாவில் வசிக்கும் தாத்தாவை பார்க்க செல்வோம் என கணவர் குறிப்பிட்டார் என மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்!!

வியக்கும் விஞ்ஞானிகள்

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.

சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா? செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்பதே. கிணத்தில் கிடைக்கின்ற தண்ணி செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வைத்தாலும் நல்லது. மூன்று நாளைக்கு ஒரு முறை செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா, பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம்.

அந்த காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள். தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்கால தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.

அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். எனவே தான் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன் : மட்டற்ற மகிழ்ச்சியில் பெற்றோர்!!

முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன்

உலகிலேயே சிறந்த சித்திர கலைஞராக இலங்கையை சேர்ந்த 5 வயதான சிறுவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக உணவு தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடததப்பட்ட சித்திர போட்டியில் இலங்கை சிறுவன் முதலிடத்தை பெற்றுளள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் கற்கும் தினுக டி சில்வா என்ற மாணவரே இலங்கைக்கு பெருமை தேடி தந்துள்ளார். ஐக்கிய நாடுகள் உணவு தொடர்பான அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி நடத்தப்படுகின்றது.

“எங்கள் செயற்பாடு எங்கள் எதிர்காலம்” 2030 ஆம் ஆண்டில் பசியை வெற்றி உலகை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்த சித்திர போட்டி இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற இந்த போட்டியில் 118 நாடுகளில் இருந்து 8000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 5 – 8 வயதுக்கு உட்பட 118 நாடுகளின் போட்டியாளர்களில் இலங்கை சிறுவன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பழங்கள், மரக்கறிகள் மற்றும் விதை வகைகள் முகில்கள் ஊடாக பூமிக்கு விழுவதனை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை சிறுவன் படத்தை வரைந்திருந்தார். குறித்த சிறுவன் இலங்கைக்கு பெருமை தேடித் தந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை – மாலைத்தீவு தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்ந வெற்றியை எதிர்பார்க்கவில்லை எனவும், தங்களுக்கு இது மிகப்பெரிய பெருமைக்குரிய விடயம் எனவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இந்திய தாயார் வழக்கில் அதிரடி திருப்பம்!!

வழக்கில் அதிரடி திருப்பம்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பெற்றோரால் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஷெரின் மேத்யூஸ் என்ற 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் குழந்தையின் தாயாரான சினி மேத்யூஸ் என்பவருக்கு 15 மாத சிறை தண்டனை விதித்து மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த கொலை வழக்கில் சினி மேத்யூஸ் தொடர்பில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என நிரூபணமான நிலையில் அவரை சிறையில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வெள்ளியன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சினி மேத்யூஸ் தாம் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றம் இறுதியில் ஒப்புக்கொண்டது எனவும், தமது சொந்த மகளை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் ஷெரின் மேத்யூஸ் கொலை வழக்கு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி ஷெரின் கொலை வழக்கில் சினி மேத்யூஸ் மீது பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கணவர் வெஸ்லி மேத்யூஸ் உடன் சேர்ந்து தங்களது வளர்ப்பு மகளான ஷெரினை உதாசீனம் செய்தார்களா என விசாரித்துள்ளனர்.

சினியின் கணவர் வெஸ்லி தற்போதும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த வெஸ்லி மற்றும் சினி மேத்யூஸ் தம்பதிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு அநாதை இல்லம் ஒன்றில் இருந்து குழந்தை ஷெரினை தத்தெடுத்துள்ளனர்.

2017 அக்டோபர் மாதம் ஷெரின் மாயமானதாக வெஸ்லி மேத்யூஸ் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் வெஸ்லியே தமது வளர்ப்பு மகளை கொலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலைக்கு மக்கள் பிரதிநிதிகள் விஜயம்!!

 

பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி. ஸ்ரீதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் இ.தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் இன்றயதினம் நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

காலை எழுமணியளவில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அவர்கள், ஆலயத்தின் பூசகர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் பூஜை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்பின்னர் புதிதாக மக்கள் மீள்குடியேறிய பகுதியான காஞ்சூர மோட்டைக்குசென்றதுடன் அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.

புகையிரதம் மோதி இருவர் பலி : மாணவிகளை காப்பாற்ற போராடிய போது நிகழ்ந்த சோகம்!!

புகையிரதம் மோதி இருவர் பலி

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இருவரே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி மற்றும் மாணவன் மோதுண்டுள்ளனர். நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஹர்ஷ குமார மற்றும் பாக்யா செவ்வந்தி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். உயிரிழந்த மாணவன் மாணவி ஒருவருடன் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மற்றுமொரு மாணவி அவ்விடத்தில் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார்.

இதன் போது எல்ல நோக்கி பயணித்த ரயிலை அவதானித்த மாணவன் தன்னுடன் இருந்த மாணவியை காப்பாற்றிவிட்டு மற்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை : மாணவர்கள் மகிழ்ச்சி!!

மாணவர்கள் மகிழ்ச்சி

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத்தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரணம் தவிர்ந்த ஏனைய தனியார் வகுப்பு நிலையங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக பொலிசார் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சகல தனியர் கல்வி நிலையங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது குறித்த தீர்மானம் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிசாருக்கு கடிதம் நகரசபை தலைவரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.