சினிமாவில் அண்மைகாலமாக Me Too இயக்கத்தின் கீழ் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசிவந்தனர். இதில் சில பிரபலங்கள் சிக்கினர். மலையாள சினிமாவிலும் இது தொடர்ந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் இளம் நடிகை திவ்யா 60 வயதுள்ள நடிகர் அலான்சியர் லே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். மேலும் தன்னிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை அந்த நடிகர் மறுத்ததோடு, மழுப்பலாக பேசிவந்தார். இதனால் சம்மந்தப்பட்ட நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இந்நிலையில் அலான்சியர் லே அண்மையில் ஒரு நாளிதழ் மூலம் நடிகை திவ்யாவிடமும், மேலும் சிலரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்துடன் இணைய முயற்சித்தவர் தாடி பாலாஜி.
நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் அவர் இணைய வேண்டும் என்று மக்களே ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் தன் மனைவி நித்யா மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்திருக்கிறார் தாடி பாலாஜி.
இதுகுறித்து காவல் நிலையத்திலும் நித்யா புகார் அளித்துள்ளார். அதில், சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர் என்று மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் அளித்துள்ளார்.
மும்பையில் 15 ரூபாய்க்கு கூலித்தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்த சுதீப் தாத்தா தனது கடின உழைப்பால் 1,685 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் அதிபதி ஆகியுள்ளார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சுதீப் உத்வேமாக திகழ்கிறார்.
சுதீப்பின் தந்தை ஒரு இராணுவ வீரர் ஆவார், வங்கதேசத்தில் போரின் போது குண்டடிபட்டு இறந்துவிட்டார், மூத்த சகோதரரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதையடுத்து, சுதீபின் தாய் மற்றும் நான்கு சகோதரிகளை காப்பாற்றும் பொறுப்பு சுதீபிற்கு வந்தது.
பொறியியல் படிப்பை படிக்க வேண்டும் என்பது சுதீப்பின் ஆசையாக இருந்துள்ளது, ஆனால் தந்தை மற்றும் மூத்த சகோதரை இழந்த காரணத்தால் தனது படிப்பை தொடர முடியாமல் மும்பையில் ஒரு பேகிஜிங் தொழிற்சாலையில் தொழிலாளராக பணியில் சேர்ந்தார். ஒரு நாளைக்கு அவரது சம்பளம் 15 ரூபாயாக இருந்தது.
தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு நடந்தே சென்றார் சுதீப். போக்குவரத்து செலவை குறைத்து அந்த பணத்தை ஊரில் உள்ள தன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த தொழிற்சாலை நஷ்டத்தில் போனதால் அதை மூட அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். ஆனால் சுதீப் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு,16000 ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் அளித்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
அதில் லாபம் ஏற்பட்டால் அதை பங்கு கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் சுதீப்.
வளர்ந்து வரும் துறையான ஃபார்மா துறையை இலக்காக கொண்டு சுதீப் தங்களது பேகேஜிங் பணிகளை அதனை நோக்கி செயல்படுத்தினார். இது பற்றி அவர் லைவ் மிண்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில்,
Ess Dee நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வது மட்டும் என் இலக்கு அல்ல, இதை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கி, சர்வதேச நிறுவனங்களான யூனிலீவர், P&G போல் உயரிய இடத்தில் கொண்டு செல்லவேண்டும்,” என்றார். நவம்பர் 2008 இல் சுதீப், இந்தியா பாயில்ஸ் நிறுவனத்தை வேதாந்தாவிடம் இருந்து 130 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தினார்.
இன்று சுதீப், தன் நிறுவனத்தை நிலையாக வளர்த்து, 1,685 கோடி ரூபாய் மதிப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பேகேஜிங் முறைகளை இவரது நிறுவனம் கையாண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே குறைந்த வயதுடைய விமானியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த 8 வயது சிறுவன் ரிமோட்டால் இயங்கும் RC ரக சர்வதேச விமான சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.
நசீர் அகமது என்ற 8 வயது சிறுவன் விரைவில் நடக்கவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் RC சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதில் 20 நாடுகளை சேர்ந்த 70 விமானிகள் கலந்து கொள்கின்றனர். ஆனால் எல்லோரும் வயதிலும், அனுபவத்திலும் நசீரை விட மிக மூத்தவர்கள் ஆவார்கள்.
நசீரின் தந்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக RC விமானங்களை இயக்குவதில் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார்.
தந்தையை பார்த்து நசீருக்கு 5 வயதிலேயே விமானத்தை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இது குறித்து சிறுவன் நசீர் கூறுகையில், என் தந்தை RC தயார் செய்வதை பார்க்கும் போது எனக்கும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், ஒருநாள் பெரிய விமானத்தின் விமானியாக வேண்டும் என்பதே என் கனவு.
நசீர் இயக்க போகும் விமானம் பொம்மை விமானம் கிடையாது, சில மாதங்களாக நசீரும் அவர் தந்தையும் சேர்ந்து RC விமானத்தை தயார் செய்துள்ளனர்.
இதில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இந்த விமானமானது ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மாணவர் ஒருவர் காதலி முத்தம் தருவதாக கூறியதால் பர்தா அணிந்து சென்ற காதலனை திருடன் என நினைத்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்ததையடுத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டுள்ளார்.
ஐ.டி.ஐ. மாணவரான சக்திவேல் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் தினத்தன்று இவர் தனது காதலியிடம் ஒரு முத்தம் கேட்டுள்ளார். ஆனால், காதலி ஒரு நிபந்தனை விதித்துள்ளார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக கூறியுள்ளார்.
முத்தத்துக்கு ஆசைப்பட்ட காதலனும் பர்தா அணிந்துகொண்டு சென்றுள்ளார். காலில் செருப்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள் திருட வந்துள்ளான் என நினைத்து பிடித்து பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நடந்தவற்றை பொலிசிடம் காதலன் விளக்கியதையடுத்து எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார்.
பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது.
தற்போது அவுஸ்திரேலியா கடுமையான சட்டங்களையும் பாதுகாப்பையும் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்கடத்தல்காரர்களின் பார்வை பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ளது. இலங்கையிலுள்ள பலர் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவை நோக்கில் செல்ல முயற்சிப்பதாக, குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் சட்டவிரோதமாக 4 படகுகளில் இலங்கையர்களை ரீயூனியன் தீவிற்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்களின் இரண்டு குழுக்களை பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள், அந்த நாட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் பிரான்ஸ் செல்வதற்கு ஆயத்தமாக இருந்த குழுக்கள் இரண்டு கடந்த வாரம் சியம்பலாண்டுவ மற்றும் கிரின்ந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரதான நபர் தொடர்பான தகவல்களை குற்ற விசாரணை திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார்.
பிரதான சந்தேக நபர் ரீயூனியன் தீவில் இருந்து ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரீயூனியன் தீவிற்கு சென்றிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டகாசம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான ரொரன்டோ, ஒன்டாரியா, மொன்றியல், ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்கையர் கைவரிசையை காட்டியுள்ளனர்.
நாடோடி கும்பம் ஒன்று கொள்ளைச் சம்பவங்களை நடத்தி விட்டு தப்பிச் செல்வதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாரும் இல்லாத வீடுகளை இலக்கு வைத்து இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. வீட்டு உரிமையாளர்களை வெளியில் அவதானிக்கும் இந்த கும்பல், வீடுகளை உடைத்து பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் கொள்ளையிடுகின்றனர்.
அநேகமான வீட்டு உரிமையாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலான காலப் பகுதியில் அதிகளாவன கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கனடாவில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரின் வீடுகளும் கொள்ளையர்களின் உடைக்கப்பட்ட கொள்ளையிடப்பட்டுள்ளது. ரொரன்டோவில் கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
தாம் வெளியில் சென்றிருந்த சமயத்தில் வீட்டின் கதவினை நுட்பமான முறையில் உடைந்த திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். அனைத்து அறைகளையும் சல்லடை போட்ட கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 30000 டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனினும் விரைவில் கண்டுபிடித்து தருவாக பொலிஸார் நம்பிக்கை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தை சில பெண்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்திகளை அடுத்து இலங்கை அழிந்து போனதாக கூறப்படும் காட்டில் வாழும் குள்ள மனிதர்கள் சம்பந்தமாக மீண்டும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. மஹாவிளச்சி – எத்தக்கல்ல பிரதேசத்தில் குள்ள மனித தன்னை கீறி விட்டு சென்றதாக பெண்ணொருவர் கூறியுள்ளார். மேலும் சில பெண்கள் இதே அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மிகவும் சிறிய உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மரபு வழி கதைகளில் கூறப்படுகிறது. இந்த குள்ள மனிதனை சில தினங்கள் நேரில் பார்த்ததாக அம்பாறை – தமண தொட்டம பிரதேசத்தை சேர்ந்த சேனை பயிர் செய்கை விவசாயிகள் சிலர் கூறியிருந்தனர். குள்ள மனிதன் பாதச்சுவடுகளும் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.
அம்பாறை – தொட்டம பகுதியில் குள்ள மனிதன் தென்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்த குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகில் இவர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குள்ள மனிதர்கள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை சரியான பௌதீக சாட்சியங்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், குள்ள மனிதர்கள் எனக் கூறப்படுவது மனிதனை போன்று இரண்டு கால்களில் நடந்துச் செல்லும் விலங்கின் முகமும் உடலில் ரோமங்கள் நிறைந்த மற்றும் நீண்ட நகங்களை கொண்ட உயிரினம் என சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த மனிதர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக வேடுவ மக்கள், அவர்களை படுகொலை செய்ததாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 62 வயது முதியவரை 19 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்த நிலையில் குழந்தை பெற முயற்சித்து வருவதாக அப்பெண் கூறியுள்ளார். Arkansas மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா சிம்சன் (19). கல்லூரி மாணவியான இவருக்கு ஜே.ஆர் (62) என்பவருடன் கடந்த 2017-ல் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து தன்னை விட 43 வயது அதிகமானவர் என்பதையும் மீறி ஜே.ஆருடன் சமந்தா காதல் வயப்பட்டார்.
இந்த காதலுக்கு சமந்தாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி சமந்தாவும், ஜே.ஆரும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் வயதானவரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் சமந்தாவை மோசமாக விமர்சிப்பதாக அவர் வருத்தம் கொள்கிறார். சமந்தா கூறுகையில், தினமும் யாராவது போன் செய்தோ அல்லது நேரிலோ, எங்களை பற்றி மோசமாக பேசுகிறார்கள்.
நானும், என் கணவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். எங்களை விமர்சிப்பவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். என் கணவர் ஜே.ஆரை முதல்முறையாக பார்த்த போதே அவரின் தோற்றம் மற்றும் பண்புகள் என்னை ஈர்த்தது. இதுவே பின்னர் காதலாக மாறியது
என்னை அவர் மகாராணி போல கவனித்து கொள்கிறார். நாங்கள் குழந்தை பெற்று கொள்ள முயற்சி செய்து வருகிறோம். ஜே.ஆருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என ஆசைப்படுகிறோம்.
அதனால் கர்ப்பமாக முயன்று வருகிறேன், எங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் பின்னர் எங்களை யாரும் விமர்சிக்கவோ, தவறாக பேசவோ மாட்டார்கள் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் தங்களை பள்ளிக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவரை காண வந்த பள்ளி குழந்தைகள் அங்கிள் எழுந்திருச்சு கண் திறந்து பாருங்க என்று கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சுங்காந்திடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பள்ளிக் குழந்தைகளை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பத்திராக அழைத்துச் சென்று, மீண்டும் மாலை நேரத்தில் பத்திரமாக கொண்டு வந்து விடுவார்.
மற்ற ஆட்டோ டிரைவர்களைப் போன்று பணத்திற்காக அதிகமாக குழந்தைகளை அழைத்துச் செல்லாமல், போதுமான அளவிலான குழந்தைகளையே அழைத்துச் செல்வார். மற்ற டிரைவர்கள் யாரேனும் அப்படி அழைத்துச் சென்றால், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர், பள்ளிக்கு வராமல் ஒரு சில குழந்தைகள் அடம் பிடிக்கும் என்பதால், எப்போதும் தன் கையில் சாக்லேட் வைத்திருப்பார். அப்படி குழந்தைகள் அழுதால் சாக்லெட் கொடுத்து அழைத்துச் செல்வார். இதன் காரணமாகவே குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளுக்கு கதிர்வேலை மிகவும் பிடித்து போயிருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கதிருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மாற்று டிரைவர் சென்று வந்துள்ளார். ஆனால் கதிரின் சிகிச்சையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், கடந்த 19-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் பள்ளிக்கு சென்று மாலையில் வீட்டிற்கு கூட செல்லாமல், அதே சீறுடையில் கதிரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது அதிலிருந்த மாணவி ஒருவர் அங்கிள் கண்னை திறந்து பாருங்க, நாங்கள் வந்திருக்கோம் , இனிமேல் நீங்க ஆட்டோ ஓட்ட வரமாட்டீங்களா என்று கண்கலங்கிய நிலையில் கேட்க, அங்கிருந்த கதிரின் குடும்பத்தினர் சிறுமி சொன்ன வார்த்தையை கேட்டு கதறி அழுதுள்ளனர்.
சிறுமிகளுடன் அவர்களின் பெற்றோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் கூட சிலர் வராமல் இருந்த நிலையில், இந்த பள்ளிக் குழந்தைகள் வந்திருப்பது எங்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்று அங்கு வந்திருந்த உறவினர்கள் கூறியுள்ளனர்.
அனுராதபுர காவற்துறை, நியாயமற்ற முறையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து கணவர் மனைவி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவற்துறை நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மரம் ஒன்றில் ஏறி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கணவர் மற்றும் மனைவி அனுராதபுரம் ஷாவத்திபுர – மொரகொட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுகம – அளுத்கம பிரதான வீதி பதுகம பொது மயானத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 25 மற்றும் 30 வயதுடைய இருவர் படுகாயமடைந்து வென்னேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.
பொது மயானத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மந்திரவாதியை தேடிச் சென்ற நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நானுஓய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதி ஒருவரினால் வழங்கப்பட்ட இளநீரை குடித்தமையினால் 64 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த நபர் நுவரெலியா பொலிஸ் பிரிவில் வசிக்கும் தோமஸ் மூதியப்பன் என்பவர், மந்திரவாதியை சந்திந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாரதியாக அவர் பணியாற்றுகின்றார். அவர் தனக்கு ஏற்பட்ட நோய் தொடர்பில் மந்திரவாதி ஒருவரை சந்திப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார். குறித்த நபர் 5 இளநீர் வெட்டி முழுமையாக குடிக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கமைய குடிக்க ஆரம்பித்த நபர் 3வது இளநீர் குடிக்கும் போதே கழிப்பறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவர் அதனை குடித்த போது மயங்கி விழுந்து நுவரெலியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
வவுனியாவில் மதுபோதை, வாகன வரி அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 15500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
வவுனியா வீதிப் போக்குவரத்துப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளின் சாரதி மதுபோதை, வாகன வரி அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம்,
புகைச்சிட்டை என்பன தம்வசம் வைத்திருக்காமல் மோட்டார் சைக்கிளினை செலுத்திய குற்றத்திற்காக நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிசார் குற்றச்சாட்டினை மன்றில் ஏற்றுக்கொண்ட நபருக்கு 15500 ரூபா நீதிமன்றத்தால் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் செயலகம் இணைந்து நடாத்திய “இலட்சியங்களை விதைப்போம்” எனும் தொனிப்பொருளிலான முன்பள்ளி பருவ சிறார்களிற்கான சமூக கலாசார பேரணி ஒன்று நேற்றய தினம் காலை 9 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து நகரசபை கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.
மேலதிக அர சஅதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசஅதிபர் எம். ஹனீபா கலந்துகொண்டார். விசேடவிருந்தினராக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் திருமதி நயனா சேனாரட்னவும், வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் யெயா தம்பையாவும் கலந்துகொண்டனர்.
பேரணியானது மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக சென்று நகரசபை மண்டபத்தை அடைந்தது. நிகழ்வுகள் அனைத்தும் நகரசபைகலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வில் பெற்றோர்கள் பெண்கள் அமைப்புகள், மாவட்டசெயலக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சொந்தக் காணிகளில் இருந்து நாங்கள் வெளியேறி இன்றுடன் 11 வருடங்கள் ஆன போதும் நாம் இன்று வரையிலும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என கேப்பாப்புலவில் தாய் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் மீள கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 700 நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது இரண்டரை ஏக்கர் காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் போதும் அதனை அவர்கள் மீள கையளிக்கவில்லை என கேப்பாப்புலவை சேர்ந்த பாலகிருஸ்னன் யோகஸ்வரி என்பவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
தனது சொந்த நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எனது தாயார் சென்ற ஆண்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த காணி தற்பொழுதும் வளமுடன் வருமானம் தரக்கூடியாத உள்ளது. எனினும் நான் வாடகை வீடு ஒன்றில் குடியிருக்கின்றேன்.
தொடர்ச்சியாக வீதியோரத்தில் இருக்க இயலாது எம்மால் முடியாது. எமது சொந்த நிலத்தை படையினர் மீள கையளிக்க வேண்டும் என உருக்கமான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.