நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.
விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகி றேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன் என கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதநம்பிக்கை இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லை.
இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மாணவிகள் சிக்கிக்கொண்ட விடுதியில் மூன்று தளங்கள். அதில் முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்திருக்க இந்த மாணவிகள் அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனால், கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட மக்களோ ‘இவர்கள் நலமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உணவுகூடத் தராமல், உதவியாக வந்த உணவை அவர்களே சாப்பிட்டுள்ளனர். சரி இங்கிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்று எண்ணிய மாணவிகள், ஹெலிகாப்டர் அந்த வழியாக வரும்போதெல்லாம் கூச்சலிட்டுள்ளனர்.
விடுதியில் இருக்கும் பெண்களுடன் ஒரு வெறுப்பிலேயே இருந்திருக்கிறது அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் குழு.
இந்த விடுதியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மாணவிகள் கல்வி கற்றுவருகிறார்கள். எனவே இவர்கள் நமது ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது, என்பதுதான் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர்.
தற்போது தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மாணவிகள், இந்த சம்பவத்தை நினைத்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த மாணவிகள் தெரிவித்தவை அனைத்தும் உண்மையா என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பெண்கள் ஆணையம் அரசை கோரியுள்ளது.
வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.
அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும்.
44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து நோய்வாய்ப்பட்டுப் போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா? என்று கேள்விகளை வைக்கிறார்.
வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள்.
வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது என்கிறார்.
கேரளா தற்போது சந்தித்துள்ள பேரிடரில் இருந்து மீண்டு வந்தாலும், இயற்கையை பாதுகாக்க மறந்தால் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி.
இவர் இரு தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த தகவலை நடிகர் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில் ராமசாமி கடந்த 20-ஆம் திகதி இறந்ததாக கூறப்பட்டுள்ளது, ஆனால் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இறந்த ஆண்டு 2012 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி.
இந்தியாவில் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் அல்லது மாடுகளை பூட்ட பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களாவில் உள்ள சிவகங்கே மலைப்பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
ஆனந்திற்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு மிதமான மழை பொழிந்து வருவதால், வட்டிக்கு கடன் வாங்கி ஆனந்த் நிலத்தை உழும் பணியை செய்து வந்தார்.
ஆனால், நிலத்திற்கு மேலும் செலவு செய்யவும், டிராக்டர் அல்லது மாடுகளை வாங்கவும் ஆனந்திடம் பணமில்லை. இதனால் விதைகளை விதைத்து ஏரின் வலதுபுறத்தில் தனது மனைவியையும், இடதுபுறத்தில் மகனையும் பூட்டி நிலத்தை உழும் அவல நிலைக்கு ஆளானார்.
அவர்களுக்கு இடையில் கட்டையை வைத்து இந்த பணியை ஆனந்த் மேற்கொண்டார். இதுகுறித்து ஆனந்த் கூறுகையில்,
8 முதல் 10 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தரும் அளவிற்கு, 2 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இல்லாததால் குடும்பத்தை இத்தொழிலியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர், சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார்.
பின்னர் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார். இந்த பணத்தை காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கேரளாவில் பெய்த பலத்த மழை வெள்ளத்தால் பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தகவல் ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்து முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.
கடிதத்தை விஜயன் நெகிழ்ச்சியடைந்து பாராட்டியதோடு நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.
ஸ்வகா வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் 2 கோடிக்கு மேல் இருக்கும் என ரியர் எஸ்டேட் அதிபர்கள் கூறியுள்ளனர்.
நடிகர்கள் பலர் சில லட்சங்களே நிவாரண நிதிக்கு கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய நிலத்தை மாணவி கொடுத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.
வவுனியா ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலைப் பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீண்டுத்தருமாறு கோரியும் இன்று (21.08.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது
குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன. கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேனி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினருடன் கிராமமக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகளான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகான சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா, ஜி.ரீ.லிங்கநாதன், பத்மநாதன் சத்தியலிங்கம்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோதரலிங்கம், முன்னாள் வடமாகான சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பல கட்சிகளின் பிரதிநிதிகள், அகில இலங்கை சைவ மகா சபையினர் என பலரும் கலந்து கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமது மலை, இந்துக்களை அவமதிக்காதே, வழிபாட்டுச் சுதந்திரத்தில் வாலாட்டாதே, இந்துக்கள் வழிபாட்டில் இடையூறு செய்யாதே, ஆதி லிங்கேஸ்வரர் ஆக்கிரமிப்பு இந்துக்கள் அவமதிப்பு, தொல்பொருள் திணைக்களமே மலையை தோண்டி எடுக்கவா?, தெற்கின் சுதந்திரம் வடக்கில் இல்லை, வடக்கு என்றைக்குமே மாற்றான் வீட்டுப்பிள்ளை, மண்டியிடாது வடக்கின் மானம் , சைவநீதிக்கு சாவுமணி, இலங்கை அரசே எங்கே நீதி போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பினார்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து பேரூந்து மூலம் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நவநீதகிருஷ்ணன் என்பவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
நவநீதகிருஷ்ணன் யாஸ்மின் தம்பதியினருக்கு திருமணமாக ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக யாஸ்மின் கர்ப்பமாகியுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனியார் ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் யாஸ்மின் கர்ப்பமடைந்தது தெரிந்தது.
தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர், பிரசவத்திற்காக ஜூலை 1ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யாஸ்மீன் கர்ப்பமடையவில்லை என்று தெரிவித்தனர். இதனால் யாஸ்மின் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நவநீதகிருஷ்ணன் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே போர் உச்சத்தில் இருந்தபோது, அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக பெண்கள் மீதா பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.
அதுவும், யாஸிதி இன பெண்களை கடத்தி சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட Nadia Murad, 3 மாதங்கள் தீவிரவாதியின் பிடியில் இருந்துள்ளார்.
மொசூல் நகருக்கு என்னை கொண்டு சென்றார்கள், அங்கே 150க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்து வைத்தனர்.
தினமும் இரவு பகல் பாராமல் எத்தனையோ தீவிரவாதிகள் வந்து என்னை தொடர்ந்து கற்பழித்தனர்.
மூன்று மாதங்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பின், அங்கிருந்து அகதிகள் முகாமுக்கு தப்பி வந்தேன் என இவர் தனது நேர்ந்த கொடுமையான நிகழ்வு குறித்து ஐநாவில் பேசியுள்ளார்.
அதிலிருந்து மீண்டு வந்த இவர், யாஸிதி பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதற்கான விழிப்புணர்வையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தனது துயரமான காலங்களில் தனக்கு ஆதரவாக இருந்த நபரை திருமணம் செய்துகொண்டார். Abid Shamdeen என்பவரும் யாஸிதி பெண்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்.
இதன் மூலம் தான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் செய்துள்ளனர். இது எனது வாழ்வில் சிறப்பான தருணம் என Nadia கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கணவர் முன்னால் மனைவி மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் மனைவி சுசீலா (42). ரெங்கராஜும், சுசீலாவும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டிருந்ததால் பைக்கை ரெங்கராஜ் மெதுவாக ஓட்டி சென்றார்.
அப்போது எதிரில் வந்த மினிபஸ் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் சக்கரம் சுசீலாவின் மீது ஏறி இறங்கியதில், ரெங்கராஜ் கண்முன்னாலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து மனைவி உடலை பார்த்து கதறி அழுத ரெங்கராஜ், அந்த ஓட்டுனர் தான் சுசீலா இறப்புக்கு காரணம் என கண்ணீருடன் புலம்பினார். இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் மினிபஸ்ஸை அடித்து உடைத்தனர்.
தகவலறிந்து ரெங்கராஜின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் சுசீலாவின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது விபத்தை ஏற்படுத்திய மினிபஸ்சின் டிரைவரை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த சுசீலாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தரக்கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தியதோடு பஸ் டிரைவரை கைது செய்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த எலிசபெத் கல்லகரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
எலிசபெத் கல்லகர் மற்றும் அவரது பெற்றோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பியதை அடுத்து முறைப்படி விசா பெற்று அவர்கள் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டத்தில் காலை திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் எலிசபெத்தின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும், தமிழகப் பாரம்பரிய முறைப்படி, பட்டு வேட்டி, சட்டை, பட்டுப்புடவை, நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை பூ வைத்து, பங்கேற்றனர்.
பட்டுப் புடவையில் மணமேடையில் வந்து அமர்ந்த மணப்பெண்ணின் கழுத்தில் முறையாக அக்னி வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஜயர் வேதங்கள் முழங்க திருநாவுக்கரசு தாலி கட்டினார்.
மத்திய பிரதேசத்தில் காமுகர்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது வளர்ப்பு நாய் விரைந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் அருகே உள்ள கரிலா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கொசுவை விரட்டுவதற்காக வைக்கோல் தேடி 14 வயது சிறுமி வெளியில் சென்றுள்ளார்.
சிறுமி தனியாக செல்வதை பார்த்த ஐஷு அஹிர்வார் (39), புனித் அஹிர்வார் (24) என்ற இரு இளைஞர்கள் கத்தி முனையில் சிறுமியை மிரட்டி, அருகாமையில் இருந்த குடிசைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இதனையடுத்து உதவி கோரி சிறுமி கத்தியுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உடனடியாக குடிசை பகுதிக்கு ஓடிய அவரது வளர்ப்பு நாய், ஐஷுவை கடித்துள்ளது. பதிலுக்கு அவனும் கத்தியை கொண்டு நாயை தாக்க முற்பட்டுள்ளான்.
இதற்கிடையில் குடிசையிலிருந்து சிறுமி வெளியேறி தப்பி ஓடினார். ஆனால் தொடர்ச்சியாக அரக்கர்களுடன் சண்டையிட்டவரே, குரைத்துக் கொண்டிருந்ததால் நாயின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து சம்மந்தப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் நடந்தவை பற்றி சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்
கேரளாவில் வெள்ளம் வடிந்தவுடன் தங்கள் வீட்டுக்கு சென்ற மக்கள் அங்கு பாம்புகள் இருப்பதை கண்டு பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை நின்றுவிட்டதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதோடு, வீடுகளில் உள்ள களிமண்களில் பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் நல்லப்பாம்புகள் மிதக்கின்றன.
இதனால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வீடுகளில் சேர்ந்துள்ள சேற்றை மக்கள் மண்வெட்டி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாம்பு போன்ற உயிரினங்களை துரத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
அலகாபாத்தில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் அருகே துமகன்ஞ் பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குஷ்வாக- ஸ்வேதா தம்பதியினர். இவர்களுக்கு ப்ரீத்தி (8), சிவானி (6), ஸ்ரேயா (3) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
35 வயதான மனோஜ் நேற்று மாலை தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
மறுநாள் காலையில் வீட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பார்த்த பொழுது, மனோஜ் நடுவீட்டில் மின் மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரது மனைவியின் உடல் பிரிட்ஜிலும், குழந்தைகளின் உடல்கள் சூட்கேசிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டி கதவு உள்தாழிடப்பட்டிருந்ததால், மனோஜ் தான் 4 பேரையும் கொலை செய்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தான் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள வெள்ளத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இங்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர் என்று கூறப்பட்டதால், அவர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரளாவில் பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதை எல்லாம் சீரமைக்கும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக அனைவரிடமும் கேரளா தொடர்ந்து உதவி கேட்டு வருவதால், அம்மாநிலத்திற்கு உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் இந்த வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான நடிகர்கள் களத்தில் இறங்கி உதவாமல், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்துள்ளன.
இதைக் கண்ட நடிகர் துல்கர் சல்மான், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வேண்டும் என்றால் உடல் ரீதியாக நான் உதவி செய்யாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு தெரியும் நான் உதவி செய்தேனா, இல்லையா? இதை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.