வவுனியா பாவற்குளம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11 மாணவர்கள் உள்ளனர். குறித்த மாணவர்களுக்கு அரசினால் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையிலேயே சமைத்த உணவுகள் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலையில் சமையல் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு அழுகிய நிலையில் இருந்த கிழங்குகள் ,வெங்காயம், பழுதடைந்த அரிசி போன்ற சமையல் பொருட்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த நபர் இது தொடர்பாக பாடசாலையின் பொறுப்பாசிரியர் ஒருவரிடம் வினாவிய பொழுது குறித்த சமையல் பொருட்கள் இன்று மாணவர்கட்கான உணவு சமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் என தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் நடக்கும் இந்த மோசடிகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்று முன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று குறித்த சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை அவரது சகோதரியான 7 வயதான சரனிக்கா எனும் சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(18.06) காலை உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் தனது ஏழு வயதில் இதே நோயினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது
ஒரே குடும்பத்தில் தொடர்ந்து சிறார்களின் உயிரிழப்பு நடந்தமை வவுனியாவை அதிர வைத்ததுள்ளதுடன் முழு வவுனியாவையும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் பெருந்தொகை எண்ணெய் கலந்துள்ளமையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது.
வத்தளை, எலகந்த, உஸ்வெட்டகெய்யா கடற்கரையில் இருந்து முத்துராஜவெல பகுதியில் எண்ணெய் குழாய் ஒன்று உடைத்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் 50 டன் கடலுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. எண்ணெய் குழாய் உடைந்து கடலில் கலந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகும் வரை, அது தொடர்பில் கூட்டுத்தாபன அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை.
சுமார் நான்கு மணித்தியாலங்களாக எண்ணெய் கடலில் கலந்துள்ளது. எண்ணெய் குழாயில் 200 அடிப்பகுதி கடல் நீரில் கரைந்து சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்த அனர்த்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் குழு மோதல் நடந்தது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று சம்பவம் நடைபெற்றவுடன் தகவல்கள் வெளியாகின.
சம்பவ இடத்தில் பெரும் பதற்ற நிலைமை காணப்பட்டால் நடந்த விடயங்களை உடனடியாக சேகரிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.
மல்லாகம் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
அங்கு போராட்டம் நடத்திய மக்களுடனும் கலந்துரையாடினார். அங்கு சற்றுப் பதற்றம் குறைவடைந்தது.
மல்லாகம் சகாய மாதா ஆலயத்தி பெருநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஆலயத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை அங்கிருந்து அகற்றி குழப்பத்தைத் தடுக்க முனைந்தார். அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குழப்பத்தைத் தடுக்க முயன்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின்போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
“ஆலயத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டது உண்மைதான். இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் வந்தார். அவரை நான்கு இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் (உயிரிழந்தவர்) கம்பியுடன் வந்தவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற முயன்றார். அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இது நடந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பொலிஸார் வந்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. மோதலைத் தவிர்க்க வந்த இளைஞர் நெஞ்சில் குண்டடி பட்டு நிலத்தில் கிடந்து சத்தமிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என்று சம்பவத்தின் போது நின்றவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, சில நாள்களாக மல்லாகத்தில் இரு தரப்பினரிடையே முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
அங்கு குழு மோதல் நடந்தமை தொடர்பில் முரண்பட்ட தகவல்களே தெரிவிக்கப்படுகின்றன.
பலர் ஒருவரைத் துரத்தி வந்தனர் என்ற தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.
துரத்தப்பட்டு வந்தவர் ஆலயத்துக்குள் சென்று மறைந்துவிட்டார் என்று கூறப்படுகின்றது.
எனினும் துரப்பட்டு வந்தவர் தொடர்பிலும் ஆயுதங்களுடன் துரத்தி வந்தவர்கள் தொடர்பிலும் அங்கிருந்தவர்களும் முரணான தகவல்களையே கூறுகின்றனர்.
யார் என்று தெரியாது என்று கூறுகின்றனர்.
மல்லாகம் மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
வீதியை மறித்துப் போராட்டம் நடத்திய மக்களுடன் பேசினார். விசாரணைகள் நடக்கும்போது வீதித் தடை ஏற்படுத்திப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிக்காத துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
வீதியில் கிடந்த கம்பிகள், தகரங்களை மீட்டு அந்தப் பகுதியில் மோதல் நடந்துள்ளது என்று, அவற்றைத் தடயப் பொருள்களாகப் பொலிஸார் நீதிபதியிடம் காண்பித்தனர்.
பொதுமக்களிடையே இருந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். அவர்களை நீதிபதி எச்சரித்தார்.
சம்பவ இடத்தில் ஒளிப்படங்கள் எடுத்தவர்களைத் தடுத்த சிலர் கமராக்களை வாங்கி ஒளிப்படங்களை அழிந்ததையும் காண முடிந்தது.
இரு தரப்பிக்களிடையே மோதல் நடந்தது. அதைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனால் பொலிஸார் சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.. இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
அரசாங்க பணியில் உள்ள இந்திக்க மற்றும் தில்ருக்ஷி என்ற தம்பதிக்கே இந்த வித்தியாசமான திருமணம் நடைபெற்றுள்ளது. முழுமையாக மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
மணமகனின் நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு ஸ்டண்ட்களை மேற்கொண்டு வீதியை அலங்கரித்திருந்தனர்.
அத்துடன் மணமகன் மற்றும் மணமகள் மோட்டார் சைக்கிள்களில் திருமணத்திற்காக அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடத்தப்பட்ட வித்தியாசமான திருமணங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டையில் உள்ள தனியார் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரினால் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கமைய நேற்று முன்தினம் குறித்த ஆசிரியருக்கு சொந்தமான வகுப்பறைக்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
தீயினால் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியரினால் மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவரது வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 3 மணியளவில் வந்தடைந்தது.
தொடர்ந்து இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கிய மாபெரும் இன்னிசை நிகழ்வும இடம்பெற்றது.
எழும் அதிரடி ஒலி ஒளி மற்றும் கண்கவர் மின்விளக்குகளுடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் எமது இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மிகச்சிறப்பாக செய்தனர்.
தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக வவுனியா வவுனியாநெற் இணையதளக் குழுவினர் ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 2.30 மணியளவில் வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தகௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறையும் நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் பகல் மற்றும் இரவு நேர நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
மும்பையில் ஒரே காதலனுக்காக இரு பெண்கள் செல்போன் திருடியது தெரிய வந்துள்ளது. மும்பையில் மின்சார ரயில் பயணங்களில் செல்போன் தொலைவது அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக பெண் பயணிகள்தான் இதில் குறிவைக்கப்பட்டனர்.
இந்த திருட்டு தொடர்பாக ரயில்வே பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதனை அடுத்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இந்த செல்போன் திருட்டுகள் அதிகமாக நடந்துள்ளதாக ரயில்வே குற்ற புலனாய்வு துறையினர் கண்டுபிடித்தனர்.
போரிவாளி மற்றும் சாண்டாகுருஸ் எனும் இடத்தில் தான் இந்த் திருட்டுகள் நடைபெற்றன. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பெண் போலீஸ் ஒருவர் கடந்த 30ஆம் திகதி போரிவாளி ரயில் நிலையத்தில் ஏறினார்.
அப்போது ட்விங்கிள் சோனா என்கிற 20 வயது பெண்ணும் டினா என்கிற 19 வயது பெண்ணும் பிடிபட்டனர். அவர்களை விசாரித்ததலில் இது போன்ற திருட்டு செல்போன்களை ராகுல் என்பவரிடம் விற்று 3 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியது தெரிய வந்தது. அதன்பின் ராகுலையும் கைது செய்துள்ளது பொலிஸ் .
மேலும் விசாரித்ததில் இவ்விருவரும் ஹ்ருஷி சிங் எனும் சக கல்லூரி மாணவனை காதலித்ததாகவும் அவனுக்கு செலவு செய்வதற்காகவே இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கல்லூரியில் படித்த படி காதலனுக்காக பார்ட் டைம் திருட்டு வேலை பார்த்த இவ்விரு பெண்களையும் பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனு, 17 நாட்கள் கழித்து கல்லூரிக்கு கம்பீரமாக புறப்பட்டுள்ளார்.
நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர். கெவின் ஜோசப் கொலை செய்யப்பட்டு 17 நாள்களுக்குப் பிறகு, நீனு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.
கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது நீனுவின் லட்சியம்.
ஹட்டன் – மஸ்கெலியா மொக்காத்தோட்டத்தில் எட்டுக்கால்களும், இரண்டு தலைகளையும் கொண்ட அதிசய கன்று குட்டியொன்று பிறந்துள்ளது.
மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்க்கப்பட்ட பசுவே இன்று மாலை குறித்த கன்றுக் குட்டியினை ஈன்றுள்ளது.
எட்டுக்கால்கள் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு வால்களுடன் பிறந்த இக்கன்று குட்டி ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்து விட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞருக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் உயர்தர மாணவன் கடந்த எட்டாம் திகதி, தாமரைக் கோபுரத்தின் 16 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.
தாமரைக் கோபுரத்தில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்த பகுதிக்குள் சென்ற நிலையிலேயே கீழே வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் உயிரிழந்த இளைஞனுக்கு காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக மூன்று மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளனர்.
குறித்த பணத்தை உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைக்காக கடந்த 13ஆம் திகதி கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 26 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் மூலம் அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர் கித்துல்கல பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்றுள்ள போதிலும், தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட யுவதி கித்துல்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுற்றுலா நிமித்தம் குறித்த பகுதிக்கு சென்றிருந்த சுவிஸ் நாட்டு யுவதி, அந்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், 23 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுங்கள் என அண்மையில் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் நிதர்சனனின் பெற்றோர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றார். இதன்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார்.
இதனை எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினர் தன்னுடைய அரசியலாக்க முற்பட்டார், நாம் அதற்கு இடம்கொடுக்கவில்லை,
இந்த நிலையில், அவர் தனது முகநூல் மூலம் எங்களைப் பற்றியும், எங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அழைத்துச் சென்ற போதகர் பற்றியும் அவதூறு செய்து வருகின்றார், தயவு செய்து எமது மகனின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
எமது மகனின் மரணத்தில் இனவாதத்தைத் தூண்ட இவர்கள் முயற்சி செய்கின்றார்கள், அதனை நாம் விரும்பவில்லை, மகனின் உடலை கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டு வருவதிலும் கூட இவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
எரிபொருள் மாத்திரம் வழங்குமாறு தெரிவித்தனர், இதன் பின்னர் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னர் முப்பதாயிரம் எனத் தெரிவித்து பணத்தை பெற்றுக் கொண்டனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.