வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

நாளை இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தகௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும். அத்தோடு இலங்கையின் முதல்தர ஒலி ஒளி அமைப்பாளர்களான கலிபோனியா சவுண்ட்ஸ் நிறுவனத்தினரின் அதிரடி ஒலி ஒளி மற்றும் கண்கவர் மின்விளக்குகளுடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

காதலியை கொன்ற காதலன் : சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம் : நடந்தது என்ன?

இந்தியாவில் காதலியை கொன்று விட்டு மூன்று நாட்கள் சடலத்துடனேயே வாழ்ந்த வந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் ஷிவம் ப்ரிடி(வயது 26) மற்றும் ஜோதி வெர்மா(வயது 22) இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக வசித்து வந்துள்ளனர்.

ஜோதி வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாக வீடு திரும்புவது வழக்கம், இதனால் சந்தேகமடைந்த ஷிவம், ஜோதியை கண்காணிக்க முடிவு செய்தார்.

இதன்படி ஜோதியின் போன் மெசேஜ்களை பார்க்க முயல்கையில், லாக் ஆகி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் மேலும் அதிகரிக்க கடந்த 9ம் திகதி இரவு இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளது.

கோபத்தில் ஜோதியை கழுத்தை நெறித்து வாயை பொத்தி ஷிவம் கொலை செய்துள்ளார், தொடர்ந்து மூன்று நாட்கள் சடலத்துடன் வசித்த நிலையில், 12ம் திகதி இரவு கார் புக் செய்துள்ளார்.

13ம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் காருக்குள் ஜோதியின் உடலை சூட்கேஸில் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

கெட்ட வாடை வர உடனடியாக அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர், உணவுப் பொட்டலங்கள் என ஷிவம் சமாளிக்க முயன்றாலும், சந்தேகம் இருந்ததால் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

இதனை தெரிந்து கொண்ட தப்பி ஓட முயன்ற ஷிவத்தை பிடித்து பொலிசிடம் ஒப்படைத்தனர், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷிவத்தை பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

என் மகனை கருணைக் கொலை செய்து விடலாம் : பேரறிவாளனின் தாயார் கண்ணீர்!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெகு நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தனது நேர்காணல் வழங்கியுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் கூறுவதாவது,

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாகக் கூறியுள்ளார்.

திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே வேளை பேரறிவாளனை “விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் ”என்று உருக்கமாக அற்புதம்மாள் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பத்து பேரால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞன் : துடிதுடிக்க பலியான பரிதாபம்!!

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 53). இவருக்கு அப்புன், மணிபாரதி, விவேக், அரவிந்தன் 24, ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கும் அதே பகுதியை சார்ந்த மஞ்சுளா என்பருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாகவும், இதன்காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் மகன் ஆகஷ்ய் 22 என்பவரை, அப்புன் மற்றும் அரவிந்தன், விவேக் சேர்ந்து கொலை செய்ய முயன்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதனால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவை ரவியின் மூத்த மகன் அப்புன் தலையை வெட்டியதாக கூறப்படுகிறது.

இது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கொலைமுயற்சிக்கு பழிவாங்கும் விதமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த அரவிந்தனை, பத்து பேர் கொண்ட கும்பல் அதே இடத்தில் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தனர்.

அரவிந்தனுடன் படுத்திருந்த குடியரசன் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலியே துடிதுடிக்க பரிதாபகமாக பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் விக்கி, ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கொலுசுக்காக காலையே வெட்டிய கொடூரம் : பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு பாதங்களை கொடூரமாக வெட்டி வீசப்பட்டதால், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள எரகடா பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை சிலர் தாக்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் இரண்டு பாதங்களை அந்த நபர்கள் வெட்டி மருத்துவமனையின் கூரையின் மேலே வீசியுள்ளனர்.

இதனால் அந்த பெண்ணிற்கு ரத்தம் அதிக வெளியேறிதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலே பகுதிக்கு வந்துவிட்டோம். அதன் பின் மருத்துவமனை முழுவதும் தேடினோம். ஆனால் சந்தேகப்படும் நபர் யாரும் இல்லை.

மருத்துவமனையானது 56 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 10 ஏக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், அவர்கள் சில நேரங்களில் நோயாளிகளை தாக்குவதும் உண்டு,

தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் கால் கொலுசுக்காகவே வெட்டி வீசியுள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அவர் பாலியல்துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

கமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!!

கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாகிவிட்டதால் பிக்பாஸ் 2 – வில் அரசியல் குறித்து அவர் அதிகம் பேசுவார் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்

பிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் 1 – இல் போட்டியாளராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.

பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கேன். போன வருஷம் என்னை வெச்சு செஞ்சாங்க. இந்த முறை யாரையெல்லாம் செய்யப்போறாங்கன்னு தெரியலை, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.

மேலும், சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு கமல் சார் வாக்குறுதி கொடுத்தார். என்னைப்போல பல போட்டியாளர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் சொன்னார்.

அதில் எதையுமே அவர் செய்யலை. அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எங்களைக் கூப்பிட்டுப் பேசவேயில்லை. அந்த நிகழ்ச்சியால் நிறைய பேர் மனரீதியாக பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்காகவும் அவர் எதுவும் செய்யலை.

சொன்னதுபோல அவர் நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை. இப்பவோ அரசியல்வாதியாகவும் ஆகிட்டார். அதனால், நிச்சயம் அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும்.

போட்டியாளர்களும், பார்வையாளர்களுடன் தான் பலியாடுகள் என கூறியுள்ளார், மேலும் இதனை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரை அண்டிய பகுதிகளான தேக்கவத்தை, வெளிவட்ட வீதி, கற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் இருந்துவருவதை பூச்சியியலாளர்கள் ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் நுளம்புக் குடம்பிகளை இல்லாதொழிப்பதற்கு பொது சகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தமது இருப்பிடங்களை சுத்தப்படுத்தி சிரமதானம் மேற்கொள்ளுமாறும் குறித்த பகுதிகளில் இனிவரும் காலங்களில் இவ்வாறான டெங்கு நுளம்புக்குடம்பிகள் இனங்காணப்பட்டால் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு குறித்த பகுதிகளிலிருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரையொதுங்கிய சகோதரர்களின் சடலங்கள் : மரணத்திலும் இணைபிரியாத சோகம்!!

யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இருவரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

தலைமன்னார் கடற்பகுதியில் கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினர்.

பின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சடலங்களும் அவர்களது சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

சடலங்கள் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தலை மன்னார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மரணத்தில் கூட இணை பிரியாமல் இறந்த இரு சகோதரர்களுடைய நல்லடக்கத்தில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

உலகை மிரளவைக்க வரும் இலங்கைப் பெண் விமானிகள் : தெற்காசியாவில் சரித்திரம்!!

இலங்கை விமான படையில் முதன்முறையாக பெண் விமானிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் இலங்கை விமானப்படைக்கு முதல் முறையாக பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்தி தீவிர பயிற்சி பெற்ற ஜயனி தத்சரனி ஹேவாவித்தாரன, பவித்ரா லக்ஷானி குணரத்ன, பியுமி நிமல்கி ஜயரத்ன மற்றும் ரஞ்கனா வீரவர்தன ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

விமானம் ஒன்றை ஓட்டுவதென்றால், மிகப்பெரிய பொறுப்பான தொழிலாகும். விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிர்கள் விமானிகளின் கையில் உள்ளன.

இவ்வாறான நிலையில் சவால்களை வென்ற முதல் பெண் தன்னார்வ விமானிகளாக இவர்கள் இலங்கை விமானப்படை வரலாற்றின் இடம்பிடித்தனர்.

குறித்த விமானிகள் தற்போது திருகோணமலை சீன துறைமுகத்தில் விமான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

பயிற்சியின் இறுதி உலக விமானப்படை விமானிகளை கொண்ட நாடுகளில் இலங்கையும் இணையவுள்ளது.

பெண் விமானிகளை இணைத்து கொள்ளும் நாடுகள் பட்டியலில் தெற்காசியாவில் இலங்கை முன்னணி இடம் வகிக்கிறது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் இலங்கையில் நிலவிய போர் நிலைமை காரணமாக பெண் விமானிகளை இணைத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

குறித்த பெண் விமானிகளுக்கு 2 வருட பயிற்சிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!(வீடியோ & படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் சிவபூசைக் கைலைக் காட்சியும், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கைலைக் காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும், நடைபெறும்.

27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பூங்காவனம், தெப்போற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

 

 

வவுனியாவில் சொகுசு வாகனத்தில் புதையல் தோண்டுவதற்கு சென்ற நால்வர் கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (15.06.2018) காலை 7.30 மணியளவில் மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து வவுனியாவிற்கு வந்த நால்வர் சொகுசு வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக முறையில் வவுனியா நகரில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து குறித்த சொகுசு வாகனத்தினை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறித்துள்ளனர். இதன் போது வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.

வாகனத்தினை இரு மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே அவர்களை மடக்கிப்பிடித்து வாகனத்தினை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன் போது வாகனத்திலிருந்து ஒரு ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியதுடன் குருநாகல், கம்பகா போன்ற பகுதிகளை சேர்ந்த 31, 39 , 42 , 44 , வயதுடைய நால்வரையும் அவர்கள் பயணித்த வாகனத்தினையும் கைப்பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆயர்படுத்தியுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (15.06.2018) காலை 9.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காலி நோக்கி இ.போ.ச பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமான முறையில் நின்ற நபரின் பயணப் பொதியினை சோதனையிட்ட சமயத்தில் அவரின் பயணப் பையிலிருந்து 1கிலோ 752கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் அளுத்கம பிரதேசத்தினை சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வறியவர்களுக்கு உதவிகளை வழங்கும் வெளிச்சம் அறக்கட்டளை!!

 

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் கிராமத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கும் அன்றாடம் தங்களுடைய பணிகளை செய்து வாழ முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதி நேற்று முன்தினம் (13.06.2018) வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரனால் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2018 ) அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதியும் சிறு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் சமூக நலன் விரும்பி ஜெகன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் விஜயகுமார் மற்றும் றஜுவ் , சுரேஷ் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா நேற்று(14.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 7 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10 மணிக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றமையைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுடன் அம்பிகை வீதியுலாவும் இடம்பெற்றது.

முதலாம் நாள் திருவிழாவின் போது அம்பிகை இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.

இலங்கையில் இளம் நடிகையின் செயற்பாடு : வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!

இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர் வளர்த்து வருகிறார்.

மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளம் தொலைகாட்சி நடிகையான சகுந்தலா என்பவரே இந்த சேவை செய்து வருகின்றார்.

அவர் தனது சகோதரன் மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். மிருகங்களுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வரும் ஒருவராகும்.

37 நாய், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அவர் தனது வீட்டில் வளர்த்து வருகின்றார். இதற்கு மேலதிகமாக அவரால் காப்பாற்றப்பட்ட 4 மாடுகளை 4 வீடுகளுக்கு அவர் வழங்கியுள்ளதுடன், அதனையும் அவர் பாதுகாத்து வருகின்றார். 7 நாய்களையும் இதேபோன்று 7 வீடுகளுக்கு வழங்கியுள்ளார்.

தனது வீட்டில் உள்ள பிராணிகளை மாத்திரமின்ற வீதிகளில் உள்ள நாய், பூனைகளுக்கு அவர் உணவு வழங்குகின்றார்.

இந்த நாய், பூனைகளுக்காக அவர் 4 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளார். அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் வளர்த்து வருகின்றது. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன.

அனைத்து மிருகங்களுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெயர் சொல்லி அழைத்தவுடன் அனைத்து மிருகங்களும் அருகில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் எனவும், தனது வீட்டில் இடவசதி உள்ளது, எனினும் தனது வங்கி கணக்கில் 500 ரூபாயேனும் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்காக ஒன்றையும் சேர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பெண் வாழ்ந்து வருகின்றார் என பலர் அவரை பாராட்டியுள்ளனர்.

யாழில் சிறுமிகள் மீது பாலியல் சேட்டை : சந்தேகத்தில் ஆசிரியர் கைது!!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதான ஆசிரியர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றார் என்று சங்கானைப் பிரதேச செயலகத்துக்கு அநாமதேய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையில் ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆசிரியர் பாடசாலை மாணவிகளை தனியார் கல்வி நிலையத்துக்கு ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கு அழைத்துள்ளமையும், அவர்களிடம் பாலியல் ரீதியான தொல்லை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தகவலை வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வெளியில் தெரியப்படுத்தினால் பெற்றோரைக் கொலைசெய்துவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியமையும், பாதிக்கப்பட்ட தரப்புகள் தயங்கியமைக்கு காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இருப்பினும், ஒருசில மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக ஆசிரியர் நேற்று முன்தினம் மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.