கமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!!

கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாகிவிட்டதால் பிக்பாஸ் 2 – வில் அரசியல் குறித்து அவர் அதிகம் பேசுவார் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்

பிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் 1 – இல் போட்டியாளராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.

பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கேன். போன வருஷம் என்னை வெச்சு செஞ்சாங்க. இந்த முறை யாரையெல்லாம் செய்யப்போறாங்கன்னு தெரியலை, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.

மேலும், சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு கமல் சார் வாக்குறுதி கொடுத்தார். என்னைப்போல பல போட்டியாளர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் சொன்னார்.

அதில் எதையுமே அவர் செய்யலை. அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எங்களைக் கூப்பிட்டுப் பேசவேயில்லை. அந்த நிகழ்ச்சியால் நிறைய பேர் மனரீதியாக பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்காகவும் அவர் எதுவும் செய்யலை.

சொன்னதுபோல அவர் நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை. இப்பவோ அரசியல்வாதியாகவும் ஆகிட்டார். அதனால், நிச்சயம் அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும்.

போட்டியாளர்களும், பார்வையாளர்களுடன் தான் பலியாடுகள் என கூறியுள்ளார், மேலும் இதனை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரை அண்டிய பகுதிகளான தேக்கவத்தை, வெளிவட்ட வீதி, கற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் இருந்துவருவதை பூச்சியியலாளர்கள் ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் நுளம்புக் குடம்பிகளை இல்லாதொழிப்பதற்கு பொது சகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தமது இருப்பிடங்களை சுத்தப்படுத்தி சிரமதானம் மேற்கொள்ளுமாறும் குறித்த பகுதிகளில் இனிவரும் காலங்களில் இவ்வாறான டெங்கு நுளம்புக்குடம்பிகள் இனங்காணப்பட்டால் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு குறித்த பகுதிகளிலிருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரையொதுங்கிய சகோதரர்களின் சடலங்கள் : மரணத்திலும் இணைபிரியாத சோகம்!!

யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இருவரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

தலைமன்னார் கடற்பகுதியில் கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினர்.

பின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சடலங்களும் அவர்களது சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

சடலங்கள் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தலை மன்னார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மரணத்தில் கூட இணை பிரியாமல் இறந்த இரு சகோதரர்களுடைய நல்லடக்கத்தில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

உலகை மிரளவைக்க வரும் இலங்கைப் பெண் விமானிகள் : தெற்காசியாவில் சரித்திரம்!!

இலங்கை விமான படையில் முதன்முறையாக பெண் விமானிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் இலங்கை விமானப்படைக்கு முதல் முறையாக பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்தி தீவிர பயிற்சி பெற்ற ஜயனி தத்சரனி ஹேவாவித்தாரன, பவித்ரா லக்ஷானி குணரத்ன, பியுமி நிமல்கி ஜயரத்ன மற்றும் ரஞ்கனா வீரவர்தன ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

விமானம் ஒன்றை ஓட்டுவதென்றால், மிகப்பெரிய பொறுப்பான தொழிலாகும். விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிர்கள் விமானிகளின் கையில் உள்ளன.

இவ்வாறான நிலையில் சவால்களை வென்ற முதல் பெண் தன்னார்வ விமானிகளாக இவர்கள் இலங்கை விமானப்படை வரலாற்றின் இடம்பிடித்தனர்.

குறித்த விமானிகள் தற்போது திருகோணமலை சீன துறைமுகத்தில் விமான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

பயிற்சியின் இறுதி உலக விமானப்படை விமானிகளை கொண்ட நாடுகளில் இலங்கையும் இணையவுள்ளது.

பெண் விமானிகளை இணைத்து கொள்ளும் நாடுகள் பட்டியலில் தெற்காசியாவில் இலங்கை முன்னணி இடம் வகிக்கிறது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் இலங்கையில் நிலவிய போர் நிலைமை காரணமாக பெண் விமானிகளை இணைத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

குறித்த பெண் விமானிகளுக்கு 2 வருட பயிற்சிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!(வீடியோ & படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் சிவபூசைக் கைலைக் காட்சியும், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கைலைக் காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும், நடைபெறும்.

27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பூங்காவனம், தெப்போற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

 

 

வவுனியாவில் சொகுசு வாகனத்தில் புதையல் தோண்டுவதற்கு சென்ற நால்வர் கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (15.06.2018) காலை 7.30 மணியளவில் மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து வவுனியாவிற்கு வந்த நால்வர் சொகுசு வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக முறையில் வவுனியா நகரில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து குறித்த சொகுசு வாகனத்தினை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறித்துள்ளனர். இதன் போது வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.

வாகனத்தினை இரு மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே அவர்களை மடக்கிப்பிடித்து வாகனத்தினை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன் போது வாகனத்திலிருந்து ஒரு ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியதுடன் குருநாகல், கம்பகா போன்ற பகுதிகளை சேர்ந்த 31, 39 , 42 , 44 , வயதுடைய நால்வரையும் அவர்கள் பயணித்த வாகனத்தினையும் கைப்பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆயர்படுத்தியுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (15.06.2018) காலை 9.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காலி நோக்கி இ.போ.ச பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமான முறையில் நின்ற நபரின் பயணப் பொதியினை சோதனையிட்ட சமயத்தில் அவரின் பயணப் பையிலிருந்து 1கிலோ 752கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் அளுத்கம பிரதேசத்தினை சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வறியவர்களுக்கு உதவிகளை வழங்கும் வெளிச்சம் அறக்கட்டளை!!

 

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் கிராமத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கும் அன்றாடம் தங்களுடைய பணிகளை செய்து வாழ முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதி நேற்று முன்தினம் (13.06.2018) வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரனால் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2018 ) அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதியும் சிறு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் சமூக நலன் விரும்பி ஜெகன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் விஜயகுமார் மற்றும் றஜுவ் , சுரேஷ் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா நேற்று(14.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 7 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10 மணிக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றமையைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுடன் அம்பிகை வீதியுலாவும் இடம்பெற்றது.

முதலாம் நாள் திருவிழாவின் போது அம்பிகை இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.

இலங்கையில் இளம் நடிகையின் செயற்பாடு : வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!

இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர் வளர்த்து வருகிறார்.

மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளம் தொலைகாட்சி நடிகையான சகுந்தலா என்பவரே இந்த சேவை செய்து வருகின்றார்.

அவர் தனது சகோதரன் மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். மிருகங்களுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வரும் ஒருவராகும்.

37 நாய், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அவர் தனது வீட்டில் வளர்த்து வருகின்றார். இதற்கு மேலதிகமாக அவரால் காப்பாற்றப்பட்ட 4 மாடுகளை 4 வீடுகளுக்கு அவர் வழங்கியுள்ளதுடன், அதனையும் அவர் பாதுகாத்து வருகின்றார். 7 நாய்களையும் இதேபோன்று 7 வீடுகளுக்கு வழங்கியுள்ளார்.

தனது வீட்டில் உள்ள பிராணிகளை மாத்திரமின்ற வீதிகளில் உள்ள நாய், பூனைகளுக்கு அவர் உணவு வழங்குகின்றார்.

இந்த நாய், பூனைகளுக்காக அவர் 4 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளார். அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் வளர்த்து வருகின்றது. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன.

அனைத்து மிருகங்களுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெயர் சொல்லி அழைத்தவுடன் அனைத்து மிருகங்களும் அருகில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் எனவும், தனது வீட்டில் இடவசதி உள்ளது, எனினும் தனது வங்கி கணக்கில் 500 ரூபாயேனும் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்காக ஒன்றையும் சேர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பெண் வாழ்ந்து வருகின்றார் என பலர் அவரை பாராட்டியுள்ளனர்.

யாழில் சிறுமிகள் மீது பாலியல் சேட்டை : சந்தேகத்தில் ஆசிரியர் கைது!!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதான ஆசிரியர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றார் என்று சங்கானைப் பிரதேச செயலகத்துக்கு அநாமதேய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையில் ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆசிரியர் பாடசாலை மாணவிகளை தனியார் கல்வி நிலையத்துக்கு ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கு அழைத்துள்ளமையும், அவர்களிடம் பாலியல் ரீதியான தொல்லை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தகவலை வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வெளியில் தெரியப்படுத்தினால் பெற்றோரைக் கொலைசெய்துவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியமையும், பாதிக்கப்பட்ட தரப்புகள் தயங்கியமைக்கு காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இருப்பினும், ஒருசில மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக ஆசிரியர் நேற்று முன்தினம் மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை!!

நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் பெறப்பட்ட உழவு இயந்திரத்திற்கு கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் உரிமையாளரிடம் இருந்து நிதி நிறுவனத்தால் கொண்டு சென்ற உழவு இயந்திரத்தின் பாகங்களை அகற்றி வேறு பழைய பாகங்களை பூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் மற்றும் உரிமையாளரால் பிடிக்கப்பட்ட சம்பவம் வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நிதிநிறுவனம் ஒன்றில் இருந்து உழவு இயந்திரம் ஒன்றினை மாதாந்த கடனடிப்படையில் (லீசிங்) கொள்வனவு செய்த வவுனியா நொச்சிமோட்டையை சேர்ந்த ஒருவர், கடந்த சில மாதங்களாக மாதாந்த கட்டுப்பணத்தினை செலுத்த தவறியமையினால் குறித்த நிதி நிறுவனத்தினால் கடந்த ஐந்து நாட்களிற்கு முன் குறித்த உழவு இயந்திரம் மீள எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உழவு இயந்திரத்தை மீள் கொண்டு சென்றவர்களால் உழவு இயந்திரத்தை நிதிநிறுவனத்திற்கு கொண்டு செல்லாமல் தாண்டிக்குளம் சந்திக்கருகில் உழவு இயந்திர பாகங்களை பிரித்து பழைய பாகங்களை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையறிந்த உரிமையாளர் அவ்விடம் சென்று அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்குள்ளவர்களும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடம் விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த உழவு இயந்திரம் மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளிலும் வவுனியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்!!

நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்ட பேரணியினை ஒளிப்பதிவு செய்த, நுண்கடன் நிதி நிறுவனம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்கவும் முற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும், நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண் நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண் நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19,000 பேர் கைது!!

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் இதில் கைதாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் விசா பெற்று, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி முறையான விசாவில் வேலை செய்தாலும் முந்தைய நிறுவனம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் குடிவரவுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என எச்சரித்திருக்கிறார் இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி.

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நடவடிக்கையின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் மாதம் 4000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.

இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர்.

இறுதியில் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.

வடக்கில் இருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழன்!!

யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008 A/L), ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக 3 வருடங்களின் பின் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முதலாவது வீரனாக இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவாகியிருந்தார்.

2011 தொடக்கம் 2014 வரை தொடர்ந்து 4 வருடங்கள் ( 2011, 2012, 2013, 2014 ) இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார். மீண்டும் 3 வருங்களின் பின் இவ் ஆண்டு (2018) இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்காக தெரிவாகியுள்ளார்.

இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு கூடைப்பந்தாட்ட வீரன் வாகீசன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் 25ம் திகதி வங்களாதேசத்தில் நடைபெற இருக்கும் தென்னாசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணியோடு வாகீசனும் விரைவில் வங்களாதேசம் பயணமாகின்றார்.

எங்களை தொல்லை செய்யாதீர்கள் : மஹேல ஜயவர்தன ஆதங்கம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்க தெரிவு குழு விடுத்த கோரிக்கையை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

முன்னர் தாம் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமக்கு அந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

தெரிவுக் குழு மீதும், விளையாட்டுத்துறை அமைச்சர் மீதும் கொண்ட மரியாதை நிமித்தம் ஓராண்டு தெரிவு குழுவிலும், 6 மாதங்கள் சிறப்பு ஆலோசனை குழுவிலும் பணியாற்றியுள்ளேன்.

ஆனால் இதுவரை எந்த பரிந்துரைகளையும் செயல்படுத்தவில்லை என அவர் தமது நிலையை சுட்டிக்காட்டியுள்ளார். இனிமேலும் வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் மஹேல கேட்டுக்கொண்டுள்ளார்.